Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா

Featured Replies

வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா

ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வானூர்திகள் முன்னாள் சோவியத்து ஒன்றியத்தினால் வடிவமைக்கப்பட்டவை. தரமான வான் இடைமறிப்பு தாக்குதல் வல்லமையை கொண்ட இந்த வானூர்தி 1970-களில் மிகோயன் நிறுவனத்தினால் தயாரிப்பு வேலைகள் தொடங்கப்பட்டு 1983-களில் சோவியத்தின் வான்படையில் சேர்க்கப்பட்டது.

இந்த வானூர்திகள் இந்தியா உட்பட பல நாடுகளில் பாவனையில் உண்டு.

மிக்-29 ரக வானூர்தி அமெரிக்காவின் எஃப்-15 மற்றும் எஃப்-16 வானூர்திகளின் சவால்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இதன் பிரதான பங்கு வானில் இருந்து வான் மீதான தாக்குதல் ஆகும். எனினும் மெதுவாக நகரும் வானூர்திகளுக்கு எதிராக இது எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பது ஆவலான விடயம்.

மிக்-27 ரக வானூர்திகள், சிறிலங்கா வான்படையிடம் ஏற்கனவே உள்ளன. இது முழுக்க முழுக்க தரைத்தாக்குதல் வானூர்தி ஆகும். வானில் வானூர்திகளை இடைமறித்து தாக்கும் வசதிகள் இதற்கு கிடையாது.

மிக்-29 வானூர்தியின் உலக சந்தை விலையானது 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 1980-களின் ஆரம்பத்தில் இந்தியாவும் மிக்-29 ரக வானூர்திகளின் உற்பத்தியை தொடங்கியது.

சிறிலங்காவின் அதிகாரிகள் இந்தியா, பாகிஸ்தான், சீனா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய போதும் சோவியத்திடம் இருந்தே வானூர்திகளை கொள்வனவு செய்துள்ளனர்.

மேலும் தன்வசம் உள்ள கிபீர் வானூர்திகளையும் நவீனமயப்படுத்தி அதனை வானில் இடைமறித்து தாக்கும் வானூர்தியாக வடிவமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது.

இதற்காக ராடார்கள், வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் என்பனவற்றை கிபீர் வானூர்திகளுக்கு பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்களை வான்படையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே வான்படையினர், விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு வான் தாக்குதல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு வேறுபட்ட விசாரணைக்குழுக்களை அமைத்து வருகின்றனர்.

அதில் விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலின் போது வான் கலங்கள் தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட அதிகாரிகளிடம் வழங்குவதற்கு தவறியது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதங்கள், தாழப்பறக்கும் வானூர்திகளை கண்டறிய முடியாத 2 டி ராடார்களை கொள்வனவு செய்த வான்படை அதிகாரிகள் மீதான விசாரணைகள் என பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் முடிவில் போதிய ஆதாரங்கள் கிடைக்குமாயின் அது தொடர்பான வான்படை அதிகாரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்படுவதுடன் அவர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர் கொள்ள நேரிடும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

:rolleyes: இவர்கள் புலிகளின் விமானங்களை அழிப்பதற்காகச் செலுத்தப்போகின்ற ஏவுகணைகள் தரையில் இருக்கும் அப்பாவி மக்களைத்தான் பதம்பார்க்கப்போகின்றது. :):rolleyes:

சாம்-16 ஏவுகணைகளால் முயற்சித்தும் வீழ்த்த முடியாத புலிகளின் வானூர்திகள்: சிறிலங்கா இராணுவம் கவலை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை நோக்கி இரு முறை சாம்-16 ரக ஏவுகணைகளை ஏவ முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என்று சிறிலங்கா இராணுவத்தினர் கவலையடைந்திருப்பதாக கொழும்பு வார ஏடான சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

பல இலட்சக்கணக்கான கணக்கான மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தை கண்டு கழித்துக் கொண்டிருந்தனர். தமது வீடுகளில், களியாட்ட விடுதிகளில், சமூக நலக் கூடங்களில், விடுதிகளில், மைதானங்களில் அகண்ட தொலைக்காட்சி திரைகளில் துடுப்பாட்டப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

அப்போது கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் திடீரென மின்சாரம் தடைப்பட்டதுடன் வெடி ஓசைகளும் கேட்கத் தொடங்கின. கொழும்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் பரவின. பதற்றமடைந்த மக்கள் தமது வீடுகளுக்குச் சிதறி ஓடத் தொடங்கினர்.

பல்வேறு பகுதிகளிலும் இருந்து வானை நோக்கி கண்டபடி தாக்குதல்களை நடத்திய படையினர் மக்களின் இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருந்தனர். கொழும்பு துறைமுகத்தை விடுதலைப் புலிகளின் குண்டுவீச்சில் இருந்து பாதுகாக்கும் முகமாக கடற்படைக் கப்பல்களில் இருந்தும் வானை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக வதந்திகள் பரவின.

சிறிலங்கா அரச தலைவர் மாளிகையில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் மகிந்த மாளிகை மீது வான் தாக்குதல் நிகழ்வதாக வதந்திகள் பரவ வழிவகுத்து விட்டன.

இதே போன்று இராணுவத் தலைமையகம், இரத்மலானை வான்படைத் தளம் எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக வதந்திகள் பரவின.

உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதனை பாதுகாப்புத்துறையும், இராணுவத்தினரும் குறிப்பட்டளவு நேரம் உணர முடியாதவர்களாகவே இருந்தனர்.

கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் இருந்து 101 கி.மீ தொலைவில் உள்ள பாலாவியில் இரு வான்கலங்களை அவதானித்த பின்னர் அவற்றை மத்திய ராடார்களில் அவதானிக்க முடியவில்லை.

பின்னர் உஸ்வெறிகெயாவாவில் அவற்றை கடற்படைப் படகு அவதானித்த போது இரு வானூர்திகளில் ஒன்று முத்துராஜவலப் பகுதியை நோக்கியும் மற்றொன்று கொழும்பு துறைமுகப்பகுதியை நோக்கியும் பிரிந்து செல்லத் தொடங்கின.

முதலாவது வானூர்தி முத்துராஜவலப் பகுதியில் உள்ள செல் எரிவாயு சேமிப்பு நிலையம் மீது இரு குண்டுகளை வீசியது. அதில் ஒன்று இரு சேமிப்புத் தாங்கிகளுக்கு இடையில் வீழ்ந்து வெடித்ததில் தீயணைப்பு தடுப்பு இயந்திரம் சேதமடைந்தது. இந்த மையத்தில் உள்ள கோபுரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு மின் விளக்கானது, வானோடி இலகுவாக இலக்கின் மீது குண்டை வீச உதவியதாக படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மீண்டும் திரும்பிய வானூர்தி, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு பகுதி மீதும் குண்டுகளை வீசியது.

இரண்டாவது வானூர்தி கொலன்னாவ நோக்கிச் சென்று குண்டுகளை வீசியது. முதலாவது குண்டு டீசல் சேமிப்பு தாங்கியின் அருகில் வீழ்ந்து வெடித்தது.

அங்கு வீசப்பட்ட இரண்டாவது குண்டு வெடிக்கவில்லை. அது 35 கிலோ எடையும், ஒரு மீற்றர் நீளமும், சி-4 வெடிமருந்துகளையும், இரும்பு குண்டுகளையும் கொண்ட குண்டாகும்.

மூன்றாவது குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அதனை இன்றுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதனிடையே தம்மிடம் உள்ள சாம்-16 ரக ஏவுகணையினால் விடுதலைப் புலிகளின் வானூர்தியை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று படைத்தரப்பினர் கவலையடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக இந்த ஏவுகணைகளுடன் சிறிலங்கா வான்படையினர் கொலன்னாவ பகுதியில் தயாராகவே இருந்தனர்.

அவர்களுடன் பாதுகாப்பு கட்டளை மையம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களை பரிமாறி வந்தது.

வான் படையினர் வானூர்தியின் ஒலியை தெளிவாக கேட்ட போதும் அவர்களின் சாம்-16 ஏவுகணையினால் விடுதலைப் புலிகளின் வானூர்தியை தனது தாக்குதல் இலக்கிற்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால் 15 செக்கன்களில் ஏவுகணையின் மின்கலம் செயலிழந்து விட்டது. பின்னர் மற்றுமொரு ஏவுகணையை சுடுநிலைக்கு கொண்டு வந்தனர். மிகவும் இருளாக இருந்தது. எனவே வானூர்தியை ஏவுகணையின் இலக்கிற்குள் கொண்டுவர முடியவில்லை.

கொலன்னாவையில் குண்டை வீசிய பின்னர் வானூர்தி பொரளை, நுகேகொட வழியாக இரத்மலானை நோக்கிச் சென்றது. ஆனால் அவை எப்படி வன்னிக்குச் சென்றன என்பது குறித்து தெரியவில்லை. இது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட நான்காவது வெற்றிகரமான வான் தாக்குதல் ஆகும்.

மார்ச் 26 கட்டுநாயக்கா மீதான தாக்குதல்,

ஏப்ரல் 23 பலாலித் தளம் மீதான தாக்குதல்,

ஏப்ரல் 26 கட்டுநாயக்கா மீதான தாக்குதல் முயற்சி,

ஏப்ரல் 29 கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகள்

மீதான தாக்குதல்கள் என்பன இந்த நான்கு தாக்குதல்களும் ஆகும்.

விடுதலைப் புலிகளிடம் 5 செக்கோஸ்லாவாக்கிய தயாரிப்பான Zlin-143 ரக வானூர்திகள் உள்ளதாகவும் அவையே இந்த நான்கு தாக்குதல்களிலும் பங்கு பற்றியதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளிடம் தற்போது 10 வானூர்திகள் உள்ளதாக கூறப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SA-16 GIMLET தொடர்பான சில தகவல்கள்:

சோவியத்தின் தயாரிப்பான இந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை மனிதர்களால் காவிச் செல்லக்கூடியதாகும். இது தாழ்வாகப் பறக்கும் வானூர்திகள் மற்றும் உலங்குவானூர்திகளை தாக்கி அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டது.

இது சாம்-7, சாம்-14 ஆகியவற்றின் நவீன வடிவமாகும் 1986 ஆம் ஆண்டு பாவனைக்கு வந்த இந்த ஏவுகணைகள் சாம் - 18 9M39 ஏவுகணைகளை விட தாக்கி அழிக்கும் வலிமையை அதிகம் கொண்டவை.

இது கடந்த ஊதா வழிகாட்டிகளை உடையதுடன், இரு IR மற்றும் UV என வர்ணங்களை தேடிச் செல்லக்கூடியது. இரு வர்ண வழிகாட்டிகளை கொண்டிருப்பதனால் வானூர்திகளில் இருந்து வீசப்படும் Flares ரக எதிர்ப்பு சாதனங்களின் பாதிப்புக்களை சாம்-16 குறைக்கக் கூடியது.

5000 மீற்றர் துரா வீச்சுடைய சாம்-16 ஏவுகணை 3500 மீற்றர் உயரங்களில் பறக்கும் வானூர்திகளை வீழ்த்த வல்லது.

வேகம் : ஒலியின் இரு மடங்கு

தாக்குதல் உயரம்: 3,500 மீற்றர்

தாக்குதல் தூர வீச்சு 500 - 5,000 மீற்றர்

ஏவுகணையின் தாக்கும் பகுதி: 2 கி.கிராம்

வழிகாட்டி: IR மற்றும் UV

-Puthinam-

Edited by யாழ்வினோ

A FOOL WITH A TOOL STILL A FOOL

இது இலங்கை படை கட்டுமாணத்துக்கு சாலப்பொருந்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு இலவசமாக வழங்குவதற்குதான் இந்த வேலை..

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய ஒரு ஆய்வு இதை கேளுங்கள்

இந்த மிக்29 விமானத்தை வைத்து புலிகளின் விமானத்தை தாக்கி அழிக்க முடியுமா?

Edited by {கரன்}

புலிகளின் விமானங்களை வானிலேயே தாக்கி அழிக்க "மிக் 29' ரக ஜெற்கள்! அவசரக் கொள்வனவில் அரசு தீவிரம்

விடுதலைப் புலிகளின் விமானங்களால் ஏற்பட்ட ஆபத்தைச் சமாளிப்பதற்காக, அந்த விமானங்களை வானில் வைத்தே தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல்கொண்ட "மிக் 29' ரக ஜெற் விமானங்களை அவசர அவசரமாகக் கொள்வனவு செய்யும் தீவிரத்தில் இலங்கை அரசு முனைப்புடன் ஈடு பட்டிருக்கின்றது.

விடயமறிந்த பாதுகாப்பு வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றன.

ஒரு மாத காலத்துக்குள் அடுத்தடுத்து மூன்று தடவைகள் விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலினால் குழம்பிப் போயிருக்கும் கொழும்பு அரசு, அந்தச் சவாலை எதிர்கொண்டு முறியடிப் பதற்கான அவசரத்திட்டங்களை விரைந்து முன்னெடுப்பதில் அதி தீவிரம் காட்டி வரு வதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை விமானப்படையிடம் தற் போது கைவசம் இருக்கும் குண்டுவீச்சு விமானங்கள் தரை இலக்குகளைத் தாக் கும் வகையறாவைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகின்றது. கடலில் அல்லது தரை யில் நிலைத்திருக்கும் அல்லது அசைந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கைத் தாக்க வல்ல தொழில்நுட்ப வசதிகளே அவற்றில் உள்ளன என்றும் கூறப்படுகின்றது.

வானில் பறந்துகொண்டிருக்கும் விமான மென்றை, வானில் பறந்தபடி சுட்டு வீழ்த்தும் தாக்குதல் வசதி அவற்றில்

இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்

புலிகளின் விமானங்கள் பறந்துகொண் டிருப்பது பற்றிய தகவல் இப்போது அரசுப் படைகளுக்கு முன்கூட்டியே கிடைத்தாலும் கூட அவற்றைக் கலைத்துச் சென்று வானில் வைத்தே தாக்கி அழிக்கும் திறமையும் வசதியும் இலங்கை விமானப் படைகளிடம் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வானில் பறக்கும் விமானத்தை, வானில் தொடர்ந்து விட்டுக் கலைத்துச் சென்றோ அல்லது வழி மறித்தோ தாக்கும் வசதிகளைக் கொண்ட விமானங்கள் பொதுவாக இரு நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின்போது மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்போதுதான் அத்தகைய தேவை எழுகிறது. ஆனால் இதுவரை காலமும் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட் டுக்கொண்டிருந்த இலங்கைக்கு அண்மைக் காலம் வரை அத்தகைய விமானங்கள் தேவைப்படவில்லை. ஆகவே தரை அல்லது கடல் இலக்குத் தாக்குதல் வசதி களைக் கொண்ட விமானங்களை மட்டுமே இலங்கை இதுவரை கொள்வனவு செய்து வந்தது.

ஆனால் இப்போது வான் புலிகளின் தாக்குதல் பேரபாயம் ஏற்பட்டிருப்ப தால், வானில் பறக்கும் எதிரியின் விமா னங்களை, வானில் பறந்தபடி வழிமறித்துத் தாக்கி அழிக்கும் வசதியை அவசரமாகத் தேடிப் பெற அரசுத் தலைமை நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இதன்படி "மிக் 29' ரக ஜெற்றுகளைக் கொள்வனவு செய்ய விமானப்படை முடிவு செய்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

இலங்கை விமானப்படையிடம் தற்போது "மிக் 27' ரக ஜெற்றுகள் உண்டு. ஆனால் எதிரியின் பறக்கும் விமானங்களைப் பறந்தபடி சுட்டு வீழ்த்தும் தாக்குதல் தொழில்நுட்பக் கருவிகள் அவற்றில் பொருத்தப்படவில்லை.

எனவே அந்த வசதி கொண்ட "மிக் 29' ரக விமானங்களில் ஐந்தை அவசர அவணளசரமாகப் பெற்றுக்கொள்ளும் முயற்சியாக இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் அரசுத் தலைமை பேச்சுகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், ரஷ்யாவிடமிருந்தே முதற்கட்டமாக ஐந்து "மிக் 29' ரக விமானங்களைக் கொள்வனவு செய்யப் பூர்வாங்கமாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்

untitledas2.jpg

MIG - 29 (Photo: Tamilnet)

Edited by யாழ்வினோ

"வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா..."

???

அப்ப விரையில் ரெண்டு, மூன்று சிறீ லங்கன் எயார் லைன்ஸ் விழும் என எதிர்பார்க்கலாம்?

வான்புலிகளை எதிர்கொள்ள அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா

ஜ திங்கட்கிழமைஇ 7 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை முறியடிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பெருமளவில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், வானூர்திகளை கௌ;வனவு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: வான்புலிகளை சமாளிப்பதற்காக சிறிலங்கா வான்படையினர் வான் எதிர்ப்பு சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதில் ராடார்களில் வானூர்திகள் கண்டறியப்பட்டாலும் ராடார்களினால் வழிநடத்தப்படும் துப்பாக்கிகள் தரையில் இல்லாவிட்டால், வழிநடத்தப்படும் ஆயுதங்கள் உள்ள எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள் இல்லாதுவிட்டால் அதில் பயனில்லை. எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துவதற்கு முன் எச்சரிக்கைகள் அவசியமானது. எம்.ஐ-24 ரக உலங்குவாணூர்திகளின் தாக்குதல் வலிமையை அதிகரிக்கும் நோக்கதுடன் அரசு ஸ்பைக் ஈஆர் (ளுpமைந நுசு) எனும் ஏவுகணைத் தொகுதியை வாங்க முயற்சி எடுத்துள்ளது. இந்த ஆயுதம் முதலில் குறிபார்த்து பின்னர் ஏவப்படுவதாகும். அதன் பின்பு இது வானோடியினால் இலக்கு நோக்கி வழிநடத்தப்படும். இந்த ஆயுதம் ஏவிவிட்டு மறந்துவிடு (குசைந யனெ குழசபநவ) என்ற ஆயுதத்தை போலவும் பயன்படுத்தலாம். அதாவது ஒருமுறை ஏவிவிட்டால் அது தனாகவே இலக்கை சென்று தாக்கி அழிக்கக்கூடியது. இந்த ஆயுதங்களை வாங்குவதன் மூலம் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் தாக்குதல் வலிமை அதிகரிப்பதுடன், அது இலகுவாக எதிரியின் வானூர்திகளை தாக்கி அழிக்கும் வலிமையையும் பெற்றுவிடும். மேலும் இந்த ஆயுதங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கடல் மற்றும் தரையில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்க முடியும். இது படையினருக்கு மிகவும் பயனுள்ளதாகும். அதேசமயம், ராடார்களினால் வழிநடத்தப்படும் புதிய துப்பாக்கிகளை வாங்குவதும் மிகவும் பயனுள்ளதாகும். இது இராணுவத்தினர் வெற்றிகரமாக விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வீழ்த்தும் சாத்தியக்கூறை அதிகரிக்கும். இந்த துப்பாக்கிகளில் உள்ள ராடார்கள் முதலில் இலக்குகளை கண்டறிந்து தமது இலக்கின் எல்லைப்புள்ளிக்குள் உள்வாங்கிய பின்னர் அது துப்பாக்கி தாக்குதலை நெறிப்படுத்தும்.

எனவே தாக்குதலில் இலக்கு சிக்குவது உறுதியானது. இந்த வகை துப்பாக்கிகளை மிகவும் முக்கியமான இலக்குகள் உள்ள பிரதேசங்களில் நிறுவ வேண்டும்.

மனிதர்களால் தோளில் வைத்து இயக்கக் கூடிய வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும் அரசு அதிகளவில் கேந்திர முக்கியத்துவமான பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையானது சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆட்சியில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்திருந்தார்.

கடந்த வருடம் சிறிலங்காவின் படைத்துறை அதிகாரி சீனாவின் பாதுகாப்புத்துறை விநியோகத்துறைக்கு சென்றிருந்தார்.

இந்த விநியோகஸ்தர் தான் சிறிலங்காவிற்கு மிகை ஒலி வானூர்திகளையும், பயிற்சி வானூர்திகளையும் வழங்கியவர். இந்த ஜெட் வானூர்திகள், வானில் இருந்து வானூர்திகள் மீது தாக்குதலையும், இரவு நேரப் பறப்புக்களையும் மேற்கொள்ளக் கூடியவை.

எனினும் தமக்கு வானூர்தி அச்சுறுத்தல்கள் இல்லை எனவும், இவை தமக்கு தேவையில்லை எனவும் அதிகாரிகள் அன்று தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது அவர்களின் தெரிவாக மிக்-29 ரக வானூர்திகள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

நிதர்சனம்.

இவற்றினால் குறைந்த வேகத்தில் செல்லும் இலக்கை லொக் பண்ணுவது கடினம்.இவற்றின் மூலம் லொக் பண்ணமுடியாமல் செய்ய தாறுமாரான பறப்புக்களை விமானப்படையினர் மேற்கொள்ளுவர்.இவ்விமானத்தின

உது என்ன ஆச்சரியம் உலகமுழுவதும் பிச்சை எடுத்து மிக் என்ன வேறு எத்தனையோ வாங்கலாம். ஆனால் காப்பாற்ற வேண்டுமே...

  • தொடங்கியவர்

வாங்கட்டும் கொண்டுவரட்டும் தங்களுடைய விமானங்களைத் தாங்களே அடித்து வீழ்த்தட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை கொள்வனவு செய்து என்ன.. அதை சரியாக பயன்படுத்த தெரியவேணுமே.. அதுதான் உவையின்ரை பலீனமே!

எரித்திரியா போராட்டத்தில் எத்திலோப்பியா விமானக்களை எரித்திரிய போராளிகள் அழித்தவுடன் இலவசமாக மிக்கை கொடுத்ததாம் ரஸ்ஸியா அதனையும் கோட்டைவிட்டுட்டு மீண்டும் இலவசத்துக்கு காத்திருக்க பணம் வைத்தால்தான் மிக் என்றதனால் தன் பயணிகள் விமானத்தை விற்று வாங்கிய மிக்குகளை இலவசமாக போராளிகளுக்கு கையளித்தது எத்திலோப்பியா அரசு போர்விமானங்கள்,ஆட்லெறிகள் என கனரக ஆயுதங்களையும் 150000 துருப்புக்களை பணயமாக பிடித்து இறுதி யுத்தத்தில் வென்றது எரித்திரியா அன்றைய எரித்திரிய நிலையின் கடைசிக்கட்டத்தில் இன்று சிறீலங்கா நிற்கின்றது அந்த பட்டறிவு எமக்கு நிச்சயம் நல்ல செய்தியை தரும்

அன்று எரித்திரிய போராளிகளால் கைப்பற்றப்பட்ட எத்திலோப்பிய விமானங்கள்

etaf_f-5a_574.jpg

etaf_an-12bp_cockpit_with_rebels.jpg

etaf_mig-23bn_er01_lilo.jpg

etaf_alouette_iii.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.