Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் கடற்கோள்கள் உண்மையா ??

Featured Replies

இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும்  காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். 

சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை  இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக அது பொய்யாகி விடாது. மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் நிலம், கடற்கோளினால் அமிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே ஆதாரங்களை இன்று இருக்கும் நிலப்பரப்பில் தேடுவது எந்தவிதமான நன்மையையும் கொணராது.நிற்க. 

உலகத்தில் உள்ள தொல்குடிகளிடம் எல்லாம் கடல் கோளினால் உலகம் அழிந்தது பற்றி தொன்மக் கதைகள் அல்லது இலக்கியக் குறிப்புகள் இருக்கிறது. தமிழர்களிடமும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் இருக்கிறது.

1. மற்ற தொல்குடிகள் எல்லாம் ஒரே ஒரு கடல் கோளினைப் பற்றித்தான் பேசுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மூன்று கடற்கோள்களை பற்றி பேசுகின்றோம்.
2.
மற்ற தொல்குடி கதைகளில் கடற்கோள் நடந்த காலம் பற்றி ஏதும் கிடையாது. ஆனால் நம்மிடம் மட்டும்தாம் கடற்கோள் நடந்த காலம் ஆண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடற்கோள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியக் குறிப்புகளுக்கு வருவோம்.
சிவன்
(இறையனார்) தன்னையே பாட்டுடைத் தலைவனாக வைத்து எழுதிய நூல்தான் இறையனார் அகப்பொருள் எனப்பட்டது. இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரனார், மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழில் இருந்ததையும் அவற்றின் காலத்தையும் பின்வருமாறு வரையறுக்கிறார். முதற்சங்கம் தென்மதுரையில் 4440 ஆண்டுகள் இருந்து பின் கடற்கோளினால் அழிந்தது. பின்னர் இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்து அழிவுற்றது. இறுதியாக கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை)  1850 ஆண்டுகள் இருந்தது.

 சங்கங்களில் எழுதிய நூல்களையும், அவற்றின் ஆசிரியர்களையும் சங்கம் அமைத்து போற்றிய மன்னர்களின் பெயர்களையும் நக்கீரனார் குறிப்பிடுகிறார். காலத்தின் கணிப்புகளில் கொஞ்சம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் இவை கற்பனையென முற்றிலும் புறந்தள்ள முடியாது. இடைச்சங்கத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட தொல்காப்பியம் இன்று நம்மிடம் இருக்கிறது. கடைச்சங்கத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட குறுந்தொகை, நற்றிணை இன்னும் பல நூல்கள் இன்று நம்மிடம் உள்ளன. அப்படியெனில் அவர் சொன்னவற்றில் மூன்று சங்கங்கள் இருந்தது என்பது உண்மை என்று புலப்படுகிறது.

https://ta.wikipedia.org/wiki/கடைச்சங்கம்
https://ta.wikipedia.org/wiki/கபாடபுரம்

 

அறிவியலுக்கு வருவோம். தற்பொழுது செயற்கைக்கோள் பதிவுகள், தொல்பொருள் இடங்கள் மற்றும் வண்டல் படிவுகள் ஆகியவற்றின் சான்றுகளைப் பயன்படுத்தி கடல் மட்ட உயர்வின் விகிதங்கள் மதிப்பிடப்படுகின்றன. இவ்வாய்வின்படி கடைசியாக நடந்த பனியுறைக் காலம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்து விட்டது.  அப்பொழுது கடல் மட்டம் தற்பொழுது இருந்ததைவிட 130 அடிக்கும் கீழே இருந்தது என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

 14,500 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் உருகுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பனிப்பாறைகள் வியத்தகு முறையில் உருகின. கடல் மட்டம் வேகமாக உயர்ந்தது("உருகும் நீர் துடிப்பு 1A" அல்லது "Melt Water Pulses -1A" என அழைக்கப்படுகிறது).  இந்தக் காலகட்டத்தில் கடல் மட்டம் 16 முதல் 24 மீட்டர் வரை உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்பு மீண்டும் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் குறைகிறது. சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு, காலநிலை மீண்டும் திடீரென வெப்பமடைந்தது. பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் 28 மீட்டர் வரை உயர்கிறது (MWP-1B). கடைசியாக 8,200 and 7,600 ஆண்டு வாக்கில் கடல் மட்டம் மீண்டும் உயர்கிறது.

கடல் மட்டம் மெல்ல மெல்ல குறிப்பிடும் அளவுக்கு ஏறி இறங்கியுள்ளது என்பது அறிவியலால் நிறுவப்பட்ட உண்மை. எனவே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடற்கோள்கள் என்பது உண்மையாகும். இதைப்பற்றி இன்னும் விரிவான தகவல் இருக்குமாயின் மற்றவர்கள் பதியவும்.

கீழே இணைக்கப்பட்ட படங்களை நோக்கவும்.

450px-Post-Glacial_Sea_Level.png

clip_image0021.jpg

 https://en.wikipedia.org/wiki/Past_sea_level
https://www.giss.nasa.gov/research/briefs/gornitz_09/
https://wattsupwiththat.com/2014/05/13/what-caused-a-1300-year-deep-freeze-12800-years-ago-new-pnas-paper-says-it-wasnt-an-impact/
 

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இப்பதிவு என் கண்ணுக்குப் பட்டது.

என் அறிவுக்கு எட்டியவரை கடற்கோள் என்று கூறப்படுவது உண்மையாக இருந்திருக்கலாம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதுவரை எமக்குத் தெரிய ஏற்பட்ட கடற்கோள்களில் 2004 மற்றும் 2016 கொரியாவில் ஏற்பட்ட பாரிய கடற்பெருக்கு  அல்லது கடற்கோள் எத்தனை கிலோமீற்றர் தூரம் நிலத்தை ஆக்கிரமித்து அழித்தது என்று கூற முடியுமா ??? கடல் 20, 30 மைல்கள் அல்லது கிலோமீற்றர் தூரம்வரை சென்று ஐந்தாறு கிராமங்களை நேர்கோட்டில் அழித்ததாகவேனும் செய்திகள் இருக்கின்றனவா ?? அப்படி இருந்தால் மட்டுமே பெரும் கடற்கைகோள்களில் தமிழர் நிலங்களும் மக்களும் சங்கங்களும் அழிந்தன என்று கூற இடமுண்டு. 

கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அப்படியான எதுவும் ஏற்படவில்லை என்றே சான்றுகள் கூறுகின்றன. விக்கிப்பீடியாவில் எழுதுவது எல்லாம் சரியான தக்கவர்கள் அல்ல. கற்பனை வளம் உள்ளவர்கள் எதையும் எழுதலாம். ஆனால் அறிவுபூர்வமானதாய் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கவேண்டும்.

பத்து ஆண்டுகளின் முன்னர் நடந்தவற்றையே துல்லியமாகக்கூற முடியாதபோது எப்படி  இத்தனை ஆயிரம் ஆண்டுகளை சரியாக்க கூறுகின்றனர். இறைவனே தன்னைப்பாட்டுடைத்த தலைவனாக வரித்து எழுதியது என்ற செய்திகள் நம்பமுடியாதவை.

தமிழர்கள் கற்பனையிலும்  தற்பெருமைபேசியும் வாழ்வதிலும் நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம். உண்மை வரலாறை உணர முடியாதவர்களாக.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
On 1/16/2020 at 1:56 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழர்கள் கற்பனையிலும்  தற்பெருமைபேசியும் வாழ்வதிலும் நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம். உண்மை வரலாறை உணர முடியாதவர்களாக.

  வணக்கம் சுமேரியர்.
நான் இந்தக் கட்டுரையில் இரண்டாம் பத்தியில் குறிப்பிட்ட படியே "இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை  இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விட்டீர்கள்" அதன் உண்மைத் தன்மையை கணக்கில் கொள்ளாமலே...

பல நூறு வரலாற்று ஆதாரங்கள் உலகம் முழுவதும் இலக்கியங்கள் வாயிலாகவே கண்டறியப்பட்டுளளன. அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவைகளிலிருந்து உண்மைத் தன்மையை எடுப்பதே ஆய்வாளனின் வேலை.

1. இறையனார் அகப்பொருள் உரை ஓர் இலக்கண நூல். அது இலக்கியமன்று. அவை கூறிய அனைத்தும் கற்பனை எனக் கொண்டால், அவற்றில் சொல்லப்பட்டுள்ள. இன்று நம்மிடம் உள்ள தொல்காப்பியத்தையும் கற்பனை என்று கொள்ளலாகுமா?  அகப்பொருள் உரை சொன்ன கடைச்  சங்கத்தின் கடைசி அரசனான உக்கிரப் பெருவழுதியை கற்பனை என்ற சொல்லலாமா? இரண்டுமே இன்று நம் கண்முன் இருக்கும் சான்றுகள். ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக மற்ற அனைத்து விடயங்களும் பொய்யாகி விடாது.

2. நீங்கள் கடற்கோள் என்றால் அது சுனாமியாகத்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அது அவ்வாறன்று.  இலக்கியங்களில் சொல்லப்பட்ட

"மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்" (கலித்தொகை)
       - அலைகள் ஊர்ந்து நிலப் பரப்பை ஆக்ரமித்துக் கொண்டது.
"குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" (சிலப்பதிகாரம்)
    - கொடுமையான கடல் கவர்ந்து விட்டது.

எனவே தான் நான் அது கடல் மட்ட உயர்வாகக்(Meltwater pulse) கூட இருக்கலாம் என்று எழுதினேன்.
"Melt Water Pulses -1A" and  "Melt Water Pulses -1B" என்பவை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நீங்கள் விக்கிப்பீடியாவை நம்பாவிடில் இன்னொமொரு இணைப்பையும் தருகிறேன். நீங்களும் இணையத்தில் தேடிக் கொள்ளலாம்.

https://www.researchgate.net/publication/225624983_Reconsidering_melt-water_pulses_1A_and_1B_Global_impacts_of_rapid_sea-level_rise

 

  • கருத்துக்கள உறவுகள்

1900 (?) களில் பாரிய கடல் அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அதன்போது கடலின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்தது என்றும் யாழ்க் குடாக் கடலின் நீர் மட்டம் வீதிகளைத்தாண்டி குடிமனைகளுக்குள் வந்ததாகவும் பெருந்திரளான மக்களோடு தானும் சென்று கரையோரப் பகுதியைப் பார்த்ததாக அம்மம்மா கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது.

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für 2004´ம் ஆண்டு "சுனாமி" பேரலை

2004´ம் ஆண்டு  "சுனாமி" பேரலை  வர முதல், சில மணித்தியாலங்கள்...  
தமிழ் நாட்டில், உள்ள திருச் செந்தூர் முருகன்  கோவில் கடல் உள் வாங்கியதாம். 
அந்த... நேரம்,  கடலில்... பல கட்டிடங்கள்  இருந்ததை, 
பலரும் கண்டதாக.... செய்திகளில் படித்தேன்.

அதனைப் போல... போல பல இடங்களில்,
தமிழரின்... அடையாளங்கள் தென் பட்டதை, அங்கு வசிக்கும் மக்களை தெரிவித்த போது...
மத்திய அரசும், தமிழக அரசும்... கண்டு கொள்ளவேயில்லை. என்பது வேதனையானது.

தமிழனுக்கு... ரஜனி, அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா... என்று,
விவாதம்   செய்தே... வாய் உழைஞ்சு  போட்டுது. 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.