Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவையில் மே 10-இல் 38 இயக்கங்கள் கண்டனப் பேரணி

Featured Replies

பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவையில் மே 10-இல் 38 இயக்கங்கள் கண்டனப் பேரணி

பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் 38 இயக்கங்கள் சார்பில் பாரிய கண்டனப் பேரணி எதிர்வரும் மே 10ஆம் நாள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக புதுவை மாநில

பாட்டாளி மக்கள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள்

அம்பேத்கர் தொண்டர் படை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மீனவர் விடுதலை வேங்கைகள்

மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

பகுஜன் சமாஜ் கட்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

இராஷ்டிரிய ஜனதா தளம்

தமிழர் தேசிய இயக்கம்

தனித் தமிழ்க் கழகம்

செந்தமிழர் இயக்கம்

செம்படுகை நன்னீரகம்

புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை

மக்கள் சிவில் உரிமைக் கழகம்

தமிழினத் தொண்டியக்கம்

வெள்ளணுக்கம் இயக்கம்

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு

நண்பர்கள் தோட்டம்

மண்ணின் மைந்தர் நலவுரிமைச் சங்கம்

தனித்தமிழ் இயக்கம்

பூவுலகின் நண்பர்கள்

விடுதலை வீரர் சீனுவாசன் இயக்கம்

மக்கள் நல்வாழ்வு நற்பணி மன்றம்

இயற்கைக் கழகம்

தமிழ் எழுத்தாளர் கழகம்

இளங்கோ மன்றம்

திருவள்ளுவர் மன்றம்

நெய்தல் அரசு ஊழியர் பேஎரவை

இலக்கியப் பொழில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

சமூக நீதிப் போராட்டக் குழு

ஆதித்தமிழர் பேஎரவை

சீவரத்தினம் பேரவை

புரட்சிகர மகளிர் இயக்கம்

பெரியார் திராவிடர் கழகம்

இராவணன் பகுத்தறிவு இயக்கம்

ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். சிங்கள இனவெறி அரசின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதலால் இதுவரை ஒரு இலட்சம் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள் மீது முழுமையான பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றுக்கும் சிங்கள இனவெறி அரசு தடை விதித்துள்ளது. யாழ்ப்பாண நெடுஞ்சாலையைத் திட்டமிட்டே மூடியுள்ளது. இதனால், தமிழர்கள் பட்டினியால் தினம் தினம் செத்து மடிகின்றனர். உலகில் எந்தவொரு நாடும் உதவிட முன்வராத நிலையில் சொந்த மக்களின் ஆதரவை மட்டுமே நம்பிப் போராடி வருகின்றனர்.

சிங்கள இனவெறி அரசின் விமானத் தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுகளாலும் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களாலும் உறவுகளைப் பறிகொடுத்து படுகாயங்களடைந்து வீடுவாசல்களை இழந்து உண்ண உணவின்றி உறங்க இடமின்றி காடுகளிலும் புதர்களிலும் ஒண்டிக் கிடந்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி வருகின்றனர். இந்தச் சூழலில்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்ற உதவி மட்டுமே ஈழத்தில் துன்பத்தின் விளிம்பில் தத்தளிக்கிற தமிழர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

ஆழிப்பேரலைப் பேரழிவின் போதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் அளித்திட்ட உதவிகளை சிங்கள இனவெறி அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்காமல் ஏமாற்றிதானே எடுத்துக் கொண்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே உதவி செய்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்றினர்.

பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று பட்டினிக் கொடுமையால் நோயால் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைத்த 17 ஈழத் தமிழர்களை சிங்கள இனவெறி அரசின் பித்தலாட்டப் பரப்புரைகளை நம்பி பிரான்சு அரசு பொய் வழக்குப் புனைந்து கைது செய்துள்ளது.

சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் எனும் சனநாயகத்தின் மூலவேர் முகிழ்த்துக் கிளைத்திட்ட பிரான்சு நாட்டின் இத்தகைய மனித உரிமை மீறல் செயலானது உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் வேதனைத் தீயை மூட்டியுள்ளது.

ஈழத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்படுகிற துன்பங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் அடிப்படைக் கடமை.

தமிழினம் நாதியற்ற இனம் அல்ல என்று உலகுக்கு உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

எனவே, பிரான்சு நாட்டில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 ஈழத் தமிழர்களை

விடுதலை செய்ய வலியுறுத்தியும்

கண்டனத்தைத் தெரிவிக்கவும்

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் தூதுரக அதிகாரியிடம் மனு அளிக்க நடைபெற உள்ள கண்டனப் பேரணியில் அலை அலையாய்த் தமிழர்கள் அணிதிரள வேண்டுகிறோம்.

தமிழர்களே ஒன்றிணைவோம்! ஈழத் தமிழர்களைக் காப்போம்!

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை சிங்காரவேலர் சிறையிலிருந்து பிரெஞ்சுத் தூதரகம் வரை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"...ஈழத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்படுகிற துன்பங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் அடிப்படைக் கடமை..."

கடமையுணர்ச்சியுள்ள உங்களுக்கு எம் நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து சகோதரங்களுக்கும் மிக்க நன்றிகள்.

உங்களின் உணர்வுகளால் நாம் வாழ்்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி புதுவையில் மிகப் பிரம்மாண்ட கண்டனப் பேரணி

பிரான்சில் கைது செய்யப்பட்ட 17 ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடும் இன்றைய இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுவையில் மிகப் பிரம்மாண்டமான கண்டனப் பேரணி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

20070510001vb8.jpg

பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட 38 இயக்கங்கள் சார்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

20070510002jz8.jpg

புதுவை பேரூந்து நிலையம் அருகாமையில் உள்ள ம.சிங்காரவேலர் சிலையிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் கொளுத்தும் வெயிலில் தொடங்கிய பேரணி பிரதான வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் அண்ணா சிலை, நேரு வீதியைக் கடந்து புதுவை தலைமைச் செயலகம் அருகே உள்ள பிரான்சு தூதரகத்தை அடைந்தது.

38 இயக்கங்களின் சார்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

20070510003wu2.jpg

பேரணியில் பங்கேற்றோர் எழுப்பிய முழக்கங்கள்:

ஒன்றிணைவோம்! ஒண்றிணைவோம்!

ஈழத் தமிழர்களைக் காத்திட ஒண்றிணைவோம்!

வாழ்க! வாழ்க!

ஈழத் தமிழர் போராட்டம் வாழ்க!

இன்னுயிர் தந்து மன்னுயிர் கக்கும்

ஈழத் தமிழர் வாழ்கவே!

வெல்க வெல்க

வெல்கவே!

ஈழபோராட்டம் வெல்கவே!

வீழ்கவே! வீழ்கவே!

பேரினவாதம் வீழ்கவே!

சிங்களப் பேரினவாதம்

வீழ்கவே! வீழ்கவே!

துணை போகாதே! துணை போகாதே!

பிரான்சு அரசே! துணை போகாதே!

சிங்கள இனவெறி அரசுக்கு

துணை போகாதே! துணை போகாதே!

சுதந்திரம்! சமத்துவம்!

சகோதரத்துவ கொள்கைகளை

உலகிற்கே உணர்த்திய

எடுத்துக்காட்டிய பிரஞ்சு அரசே!

நியாயந்தானா? நியாயந்தானா?

ஆதரவு திரட்டிய

தமிழர்களை கைது செய்தது

நியாயந்தானா? நியாயந்தானா?

பிரஞ்சு அரசே!

நியாயந்தானா? நியாயந்தானா?

பட்டினியால் தினந்தினம்!

செத்துமடியும் தமிழருக்கு!

மனிதாபிமான உதவிகள்

செய்தது!

குற்றமா! குற்றமா!

விடுதலைசெய்! விடுதலை செய்!

பொய் வழக்கில் கைதான

ஈழத் தமிழர் 17 பேரை

உடனடியாக விடுதலை செய்!

வழங்கிடாதே! வழங்கிடாதே!

ஈழத் தமிழரை கொன்று குவிக்கும்

இனவெறி அரசுக்கு

ஆயுத உதவி நிதி உதவி

வழங்கிடாதே! வழங்கிடாதே!

பிரான்சு அரசே வழங்கிடாதே!

உலக நாடுகளே! வழங்கிடாதே!

மக்கள் உரிமை பேசிடும்

வன்கொடுமை எதிர்த்திடும்

மக்கள் மன்ற சாட்சியே!

உலக மன சாட்சியே!

ஈழத் தமிழர் மீதான

தமிழ்க் குழந்தைகள் மீதான

வன்கொடுமைக்கு என்ன பதில்?

ஒடுக்குமுறைக்கு என்ன பதில்?

என்ன பதில்? என்ன பதில்?

வங்கதேசத்துக்கு

ஒரு நீதி!

பாலஸ்தீனத்துக்கு

ஒரு நீதி!

இஸ்ரேலுக்கு

ஒரு நீதி!

ஈழத்துக்கு எது நீதி?

சதாமல்ல சதாமல்ல

எங்கள் தலைவர்

பிரபாகரன்

சதாமல்ல சதாமல்ல

தலையிடாதே!

தலையிடாதே

அமெரிக்காவே- பிரான்சே

தலையிடாதே!

உதவாதே! உதவாதே!

இந்திய அரசே

சிங்கள அரசுக்கு உதவாதே!

மலரட்டும் மலரட்டும்

தமிழீழம் மலரட்டும்!

தமிழர் முகவரி

தந்த

தம்பி பிரபாகரன்

வாழ்கவே!

என்பது உள்ளிட்ட எழுச்சி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுவையின் பிரதான வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள அண்ணா சாலை மற்றும் நேரு வீதிகளில் பேரணி சென்ற போது வீதிகளின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களும் வர்த்தக நிறுவனங்களிலிருந்தோம் தங்கள் பணிகளை விட்டுவிட்டு பேரணியால் சென்றோர் எழுப்பிய முழக்கங்களை உற்று நோக்கினர்.

புதுவைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், பேரணியை படம் பிடித்ததுடன் பேரணி ஏன் நடத்தப்படுவது என்பது குறித்தும் அருகாமையிலிருந்தோரிடம் கேட்டறிந்தனர்.

கண்டனப் பேரணியின் இறுதியில் புதுவைக்கான பிரான்ஸ் தூதுவரிடம் புதுவை வாழ் தமிழர்களின் முறையீட்டு மனு கையளிக்கப்பட்டது.

பேரணி முடிவில் பிரான்ஸ் தூதுவரிடம் கையளிக்கப்பட்ட மனு விவரம்:

பெறுநர்:

உயர்திரு பிரஞ்ச் தூதரக அதிகாரி அவர்கள்,

பிரஞ்ச் தூதரக அலுவலகம்

புதுச்சேரி

ஐயா

பொருள்: 17 ஈழத் தமிழர்கள் பிரான்சில் கைது செய்யப்பட்டது- விடுதலை கோருவது தொடர்பாக

சமூக ஒப்பந்தம் தத்துவம் அளித்திட்ட பிரஞ்சு தேசம், அறிஞர் ரூசோ, சிந்தனையாளர் வால்டேர் போன்ற உலகத்தின் தலைசிறந்த சமூக மாற்ற மெய்யறிவாளர்களைத் தன்னகத்தே கொண்ட பாரம்பரிய மரபுரிமை கொண்ட நாடு.

"சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம்" எனும் சனநாயகத்தின் மூல வித்து முகிழ்த்த இடம். ஐக்கிய அமெரிக்க நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கேஎ வழிகாட்டியாக விளங்கிய பாரம்பரியமிக்க நாடு. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் தேச மக்களுக்கு ஆதரவு அளித்திடும், காத்திடும், அரசியல் பண்பாடு ஊறிய தேசமாகும்.

இந்திய நாட்டின் விடுதலை வேள்விக்கு, பல வகைகளில், வழிகளில், உதவிகள் அளித்து பெருமை சேர்த்திட்ட நாடு. எனினும், அண்மைக்காலத்தில் பிரான்சு நாட்டில் 17 ஈழத் தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

சொந்த நாட்டில், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். சிங்கள இனவெறி அரசின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதலால் இதுவரை ஒரு இலட்சம் தமிழர்கள் பலியாகியுள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்கள் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மீது முழுமையான பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் யாழ்ப்பாணத் தமிழர்கள் பட்டினியால் தினம், தினம் செத்து மடிகின்றனர்.

இனவெறி அரசின் விமானத் தாக்குதல், எறிகணை வீச்சு, பீரங்கித் தாக்குதல்கள் ஆகிய பல்வேறு இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக உறவுகளைப் பறிகொடுத்து படுகாயங்கள் அடைந்து, வீடு வாசல்களை இழந்து, உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி புதர்களிலும் காடுகளிலும் ஒண்டிக்கிடந்து சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்ற உதவி மட்டுமே, ஈழத்தில் துயரத்தின் பிடியில் தத்தளிகின்ற தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்கிறது.

ஆழிப்பேரலை- கடல் கோளின்போது பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் அளித்திட்ட உதவிகளை சிங்கள இனவெறி அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்கிடாமல் ஏமாற்றித்தானே எடுத்துக் கொண்டது. இது போன்ற நிலைமையிலும் கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே உதவி செய்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்றினர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் அளித்திடும் மனிதாபிமான உதவிகள் மட்டுமே, தற்சமயம் பட்டினியால் வதையுறும் பிணியால் நலிவுறும் தமிழ் மக்களைக் காத்திட உதவுகிறது. இந்நிலைமையில்தான், 17 ஈழத் தமிழர்கள் தங்கள் நாட்டில் மனிதாபிமான உதவிகள் திரட்டி, தங்கள் தேசத்திற்கு அனுப்பி வைத்தனர். இத்தகைய முயற்சியை முரியடித்திட தொடர்ந்து பல தளங்களில் வெகுகாலமாக சிங்கள பேரினவாத அரசு பொய்யான பரப்புரைகளை புனைவுகளை நிகழ்த்தி வருகிறது. இதனை நம்பி தங்கள் பிரஞ்சு அரசாங்கம், 17 ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. தங்கள் பிரஞ்சு அரசின் இந்தச் செயல், சிங்கள இனவெறி அரசுக்கு துணை போகும் செயலெனக் கருதுகிறோம்.

ஒடுக்கும் சிங்கள அரசின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து உலகத் தமிழர்களின் வேதனையைப் போக்கிட கைது செய்யப்பட்டுள்ள 17 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்திடக் கோரி நடைபெற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட கண்டனப் போராட்டத்தின் உணர்வுகளை தங்கள் அரசுக்கு எடுத்துக் கூறி ஆவண செய்திட வேண்டுகிறோம் என்று அந்த முறைப்பாட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முறைப்பாட்டு மனுவில் கைச்சாத்திட்டோர் விவரம்:

இரா. அனந்தராமன் (புதுவை சட்டப்பேரவை உறுப்பினர்)

ந.மு. தமிழ்மணி - செந்தமிழர் இயக்கம்

மு. முத்துக்கண்ணு- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

கோ. சுகுமாரன் - மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

சீனு. தமிழ் மணி - பூவலகின் நண்பர்கள்

புதுவைத் தமிழ் நெஞ்சன் - விடுதலை வீரர் இரா. சீனுவாசன் பொதுநலத் தொண்டியக்கம்

இருதயராசு - பகுஜன்சமாஜ் கட்சி

தாமரைக்கோ- தமிழினத் தொண்டியக்கம்

அ. சந்திரசேகரன் - மறுமலர்ச்சி தி.மு.க.

கு. இராமமூர்த்தி - செம்படுகை நன்னீரகம்

கோவி. கலியபெருமாள் - தமிழ் எழுத்தாளர் கழகம்

சீனு. அரிமாப் பாண்டியன் - தனித் தமிழ்க் கழகம்

செ. இராமலிங்கன் - திருவள்ளுவர் மன்றம்

க. தமிழ்மல்லன் - தனித் தமிழ் இயக்கம்

சி. மூர்த்தி- புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை

இரா. அழகிரி - தமிழர் தேசிய இயக்கம்

சி. நாகலிங்கம் - இளங்கோ மன்றம்

பெ. பராங்குசம் - இலக்கியப் பொழில்

வீரம்மாள் - ஆதித் தமிழர் பேரவை

ச. பாவல் - வெள்ளணுக்கள் இயக்கம்

பவானி மதுரகவி - புரட்சிகர மகளிர் இயக்கம்

இரா. மங்கையர்செல்வன் - மீனவர் விடுதலை வேங்கைகள்

ம.இலெ. தங்கப்பா - இயற்கைக் கழகம்

கோ. தமிழுலகன் - தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு

லோகு. அய்யப்பன் - பெரியார் திராவிடர் கழகம்

பொ. தாமோதரன் - புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை

மு. வெற்றிவேல் - மக்கள் நல்வாழ்வு நற்பனி இயக்கம்

இரா. வீரசாமி - இராவணன் பகுத்தறிவு இயக்கம்

மங்கையர்செல்வன் - மண்ணின் மைந்தர் நலவுரிமைச் சங்கம்

ப. திருநாவுக்கரசு- நண்பர்கள் தோட்டம்

மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்- பா. சக்திவேல்

வீர. மதுரகவி- உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்

சு. பாவாணன் - விடுதலைச் சிறுத்தைகள்

வீ.சு. அன்புச்செல்வன் - தமிழர் கழகம்

எழில் இளங்கோ - தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு

உள்ளிட்ட 38 அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்முறைப்பாட்டு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

20070510004ij4.jpg

20070510005ps0.jpg

20070510006ny5.jpg

20070510007sc0.jpg

20070510008zy1.jpg

20070510009vi2.jpg

20070510010fj7.jpg

- புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60 மில்லியன் அல்லது 600 லட்சம் (60,000,000) தமிழர் வதியும் தமிழ் நாட்டில் ஈழத் தமிழனுக்கு ஆதரவாக ஆக 3,000 பேரா? அதுவும் 38 இயக்கங்களிலிருந்து?

ஈழத்தமிழனை இனி அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது! :icon_idea:

பண்டிதரே புதுவை தமிழ் நாட்டைச்சேர்ந்தது அல்ல ..... அது தனி மா நில அந்தஸ்து உள்ள ஒரு யூனியன் பிரதேசம் ..அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அது ஒரு மா நகர் போன்றது தான் அதில் 3000 பேர் திரண்டது ....அங்கு பெரிய கட்சிகளுக்கு கூடும் கூட்டம் போன்றது தான்.

பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.

இதில் பங்குபற்றியவர்கள் தாங்கிச் சென்ற சுலோக அட்டைகள் பிரெஞ்சு மொழியில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது அபிப்பிராயம்.

இது தொடரவேண்டும், பங்கெடுத்த அனைத்து உறவுகழுக்கும் தமிழீழ மக்கள் சார்பாக நன்றிகள்.

இது சிரிய போராட்டமல்ல. இப்படி செய்ய சட்டப்படி வழி உள்ளது என காட்டிய போராட்டம்.

இல்லையேல் வை.கோ விற்க்கு ஏற்பட்டதை நினைத்தே அனைவறும் பயத்துடன் இருந்திருப்பர்.

உண்மை மெல்ல வெளியே வரும்.

ஒரு விசயம். இது தமிழ் நாட்டிர்க்கும் பரவினால் தான் உண்மை நிலை அறிய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதரே புதுவை தமிழ் நாட்டைச்சேர்ந்தது அல்ல ..... அது தனி மா நில அந்தஸ்து உள்ள ஒரு யூனியன் பிரதேசம் ..அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அது ஒரு மா நகர் போன்றது தான் அதில் 3000 பேர் திரண்டது ....அங்கு பெரிய கட்சிகளுக்கு கூடும் கூட்டம் போன்றது தான்.

புதுவை என்பதை மறந்தேன்

எனது பூகோள அறிவின் மீது இடி விழ

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி வேலவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.