Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா., எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா., எச்சரிக்கை

fpn02mz0.jpg

புதுடில்லி: புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாக்கின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நுõற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் இந்தியாவிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி தகவலைப் பகிர்ந்து கொண்டதுக்கு கிறீன் பிரிகேட் சார்பில் நன்றிகள். எதிர்காலத்தில் இவ்வாறான செய்திகளை கிறீன் பிரிகேட் என்ற தலைப்பின் கீழ் வைத்தன் மூலம் தகவல் தொடர்ச்சியைப் பேணலாம் என்று எண்ணுகின்றோம். உங்கள் ஒத்துழைப்பும் தாழ்மையுடன் கோரப்படுகிறது. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்ஸ் இனி வரும் காலங்களில் பதிந்தே விடுறேன். சரியா நெ டு க் ஸ் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி தகவலைப் பகிர்ந்து கொண்டதுக்கு கிறீன் பிரிகேட் சார்பில் நன்றிகள். எதிர்காலத்தில் இவ்வாறான செய்திகளை கிறீன் பிரிகேட் என்ற தலைப்பின் கீழ் வைத்தன் மூலம் தகவல் தொடர்ச்சியைப் பேணலாம் என்று எண்ணுகின்றோம். உங்கள் ஒத்துழைப்பும் தாழ்மையுடன் கோரப்படுகிறது. :lol:

தமிழ் களத்தில் தயவு செய்து தமிழில் எழுதவும் :lol::lol::(

தமிழ் களத்தில் தயவு செய்து தமிழில் எழுதவும் :lol::lol::lol:

:angry: :angry: :angry:

பூமியின் இறுதிக்காலம்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாகம் செய்து இதை நிற்பாட்டமுடியாதோ

:lol:

யாகம் செய்து இதை நிற்பாட்டமுடியாதோ

:lol:

ஓஓ நிப்பாட்டலாம்.. அப்படியே தூக்கு காவடி எடுத்து.. டென்மார்க் அம்மனுக்கு

நேர்த்திக்கடன் வையுங்கோ..... :angry: :angry: :angry:

யாகம் செய்து இதை நிற்பாட்டமுடியாதோ

:lol:

இடையில சுருட்டுற ஐடியாவ.........? யாகத்தில வார சூட்டுக்கு என்னும் ஏறிடும்

ஓஓ நிப்பாட்டலாம்.. அப்படியே தூக்கு காவடி எடுத்து.. டென்மார்க் அம்மனுக்கு

நேர்த்திக்கடன் வையுங்கோ..... :angry:

அது வேறையா? :angry:

எங்க வீட்டீல் குளிர் சாதன பெட்டி இருக்கிறது.

அதிலிருந்து பனிக்கட்டி கிடைக்கும். அதைவைத்து வெப்பத்தை கூறைக்க முடியுமா? <_<:lol::lol::D

எங்க வீட்டீல் குளிர் சாதன பெட்டி இருக்கிறது.

அதிலிருந்து பனிக்கட்டி கிடைக்கும். அதைவைத்து வெப்பத்தை கூறைக்க முடியுமா? <_<:lol::lol::D

தாத்தாவின்ட அறிவை பாருங்கோ

:angry:

எங்க வீட்டீல் குளிர் சாதன பெட்டி இருக்கிறது.

அதிலிருந்து பனிக்கட்டி கிடைக்கும். அதைவைத்து வெப்பத்தை கூறைக்க முடியுமா? <_<:lol::lol::D

அடடடா என்ன ஒரு அறிவுக்கடல், அந்த ஐஸ்கட்டிய எடுத்து உங்க தலையில வச்சு 2 தேசிக்கய தேயுங்கோ எல்லாம் சரியாகிடும்

தாத்தாவின்ட அறிவை பாருங்கோ

:angry:

சிட்னி சின்னப்புட சிஷ்யனா சேக்கலாம் :P

அடடடா என்ன ஒரு அறிவுக்கடல், அந்த ஐஸ்கட்டிய எடுத்து உங்க தலையில வச்சு 2 தேசிக்கய தேயுங்கோ எல்லாம் சரியாகிடும்
:angry: :angry:

முன் அனுபவமோ. இருந்தாலும் தலை போல வருமா!!!! :rolleyes:

எங்க தலை நீங்க தான்.

உங்க தலையிலதான் தேய்க்கனும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அதிகரிப்பால் தண்ணீர் உயரும் பட்சத்தில் யாழ்ப்பாணம் ரெம்பவே பாதிக்கப்படும். ஆனையிறவுப்பகுதி நீர் மூடி யாழ்ப்பாணம் தீவுப் பகுதியாக வரக் கூடும். அதை விட, பள்ளமான பல பகுதிகள் நீரில் அமிழக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இது பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாலைதீவு மக்கள் இப்போது அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர ஆரம்பித்துவிட்டார்கள்.

:angry: :angry:

முன் அனுபவமோ. இருந்தாலும் தலை போல வருமா!!!! :lol:

எங்க தலை நீங்க தான்.

உங்க தலையிலதான் தேய்க்கனும். :lol::rolleyes:

எனக்கு மம்மி 3வயசில 3வருஷம் முன்னாடியே இதெல்லாம் பண்ணிட்டா சின்ன பையன் , வெங்கட் தாத்த கூட எல்லாம் சேர்ந்தா அவர போல ஆகிடுவ எண்டு

மம்மி சொன்னது சரியாத்தானிருக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அதிகரிப்பால் தண்ணீர் உயரும் பட்சத்தில் யாழ்ப்பாணம் ரெம்பவே பாதிக்கப்படும். ஆனையிறவுப்பகுதி நீர் மூடி யாழ்ப்பாணம் தீவுப் பகுதியாக வரக் கூடும். அதை விட, பள்ளமான பல பகுதிகள் நீரில் அமிழக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இது பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாலைதீவு மக்கள் இப்போது அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆ.....அதுவும் எட்டு வருசத்துள்ளாகவா

எனக்கு மம்மி 3வயசில 3வருஷம் முன்னாடியே இதெல்லாம் பண்ணிட்டா சின்ன பையன் , வெங்கட் தாத்த கூட எல்லாம் சேர்ந்தா அவர போல ஆகிடுவ எண்டு

மம்மி சொன்னது சரியாத்தானிருக்கு :rolleyes:

எனக்கும் மம்மி செய்தவா தாத்தாவுக்கு அவ்ரின்ட மம்மி செய்ய இல்லை போல

:P

மன்னிக்கவும்,

நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை.

சரியான எண்ணிற்கு டயல் செய்யவும்.

:rolleyes:

மன்னிக்கவும்,

நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை.

சரியான எண்ணிற்கு டயல் செய்யவும்.

:rolleyes:

தடங்கலுக்கு வருந்துகிறோம்

:P

மன்னிக்கவும்,

நீங்கள் தொடர்பு கொண்ட எண் உபயோகத்தில் இல்லை.

சரியான எண்ணிற்கு டயல் செய்யவும்.

:rolleyes:

போனுக்கு காச போட்ட்டாத்தானே லைன் கிடைக்கும், பிச்சக்கார பசங்க போன்ல கிறடிட் இல்லாம கோல் பண்ணுறாங்க

தடங்கலுக்கு வருந்துகிறோம்

:P

:unsure:

போனுக்கு காச போட்ட்டாத்தானே லைன் கிடைக்கும், பிச்சக்கார பசங்க போன்ல கிறடிட் இல்லாம கோல் பண்ணுறாங்க

:rolleyes:

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் களத்தில் தயவு செய்து தமிழில் எழுதவும் :huh::huh::rolleyes:

தமிழில தான் சார் எழுதி இருக்குது. :huh::huh:

  • 2 months later...

சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை

உலகெங்கும் சூட்டுப் பிரளய அதிர்ச்சிகள் (ஜூலை 2007)இங்கிலாந்தில் 60 ஆண்டுகளாகக் காணாத பேய்மழை 2007 ஜூலையில் பொழிந்தது ! ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது ! இரண்டு மணிநேரத்தில் கொட்டியது ! பெரு வெள்ளத்தால் மக்கள் புலம்பெயர நேரிட்டது. 350,000 வீடுகளின் குடிநீர் பரிமாற்றம் தடைப்பட்டது ! இருபதாம் நூற்றாண்டில் மனிதர் தூண்டிய சூடேற்றத்தால் உலகில் பூகோளப் மழைப் பொழிவின் போக்கு மாறிவிட்டது என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் இங்கிலாந்தில் பெய்த பேய்மழைக்கு மனிதர் விளைவித்த பூகோளச் சூடேற்றமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்னும் கருத்தும் நிலவி வருகிறது.கடந்த வாரம் தாக்கிய அசுர வேனற்புயல் அடிப்பில் [Heat Wave] ஹங்கேரியில் சுமார் 500 பேர் மாண்டதாக ஹங்கேரிய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளார்கள் ! ருமேனியாவில் 35 பேர் மரணம்.

கிரீஸில் ஒருவர் மரிப்பு. இத்தாலியின் தென்பகுதியில் வெக்கை மிகுந்து கானகத் தீக்கள் தானாகப் பற்றி இருவர் மரணம். ருமேனியாவில் உஷ்ணம் 46 C (115 F) ஏறியது. கிரீஸில் உஷ்ணம் 45 C (113 F). செர்பியாவில் [serbia, Near Bosnia] உஷ்ணம் 43 C (109 F) ஏறி 50 காட்டுப் பகுதிகளில் தீப்பற்றி 30 பேர் மாண்டனர் ! வெப்பக் கொதிப்புத் தாங்காது செர்பியாவில் 19,000 பேர் மருத்துவ மனைகளுக்குக் கொண்டுவரப் பட்டனர். அதுபோல் 2003 ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் அடித்த வேனிற் கனல்வீச்சில் சுமார் 15,000 முதியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

f_40707261aam_c775e21.jpg

பூகோளச் சூடேற்றத்தால் உலகில் நேர்ந்த விளைவுகள்1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினா ஹாட்டெரஸ் முனையில் [Cape Hatteras, North Carolina] கட்டிய கலங்கரை விளக்கு [Light House] கடலிலிருந்து 1500 அடி கரை தூரத்தில் இருந்தது. நூறாண்டுக்குப் பிறகு (1980) கடல் வெள்ளம் பெருகிக் கலங்கரை விளக்கின் அருகே 160 அடிக்குள் வந்து விட்டது. தற்போது அது விழக்கூடா தென்று புதிய இடத்துக்கு மாற்றலாகிக் கட்டப் பட்டிருக்கிறது.1000 அடிக்கு உட்பட்டிருந்த பிளாரிடா மாநிலத்தின் வேளாண்மைப் பகுதிகளைக் கடல்நீர் தாக்கி நிலவளம் உப்புக் கலவையால் நஞ்சாகி நாசமாக்கப் பட்டிருக்கிறது.

1915-1950 ஆண்டுகளில் ஏறிய கடல் மட்ட உயரத்தால் தென் அமெரிக்காவில் பிரேஸின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் [Region of Recife] ஆண்டுக்கு 6 அடி வீதம் குறைந்து கொண்டு வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1985-1995) கடல் மட்ட உயர்ச்சி விரைவாகி ஆண்டுக்கு 8 அடி வீதம் கடற்கரைப் பகுதிகள் சிறுத்து வருகின்றன.

1997 இல் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் ஓஹையோ நதியில் வெள்ளம் பெருகி 30 பேர் இறந்து, 500 மில்லியன் டாலர் மதிப்பளவுக் கட்டடச் சொத்துக்கள் சேதாரம் அடைந்தன.

f_40707261abm_9b69e49.jpg

1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் 50 ஆண்டுக் கோரமான நிகழ்ச்சியாக வேனிற்கால வெப்பக்கனல் அடிப்பில் 2500 பேருக்கு மேலாக மாண்டு போயினர் !

1998 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் தொடர்ந்து 29 நாட்கள் அடித்த 38.5 C (100 F) உஷ்ணக் கனலில் பயிர் வளர்ச்சி அனைத்தும் வரட்சியால் நாசமாயின.

1999 செப்டம்பர் மாதத்தில் ஹர்ரிக்கேன் ·பிளாய்டு [Hurricane Floyd] தாக்கி பேய்மழையும், மணிக்கு 130 மைல் வேகத்தில் பெரும் புயலும் அடித்து அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப் பட்டு 77 பேர் மடிந்தார். ஆயிரக் கணக்கான நபர் வீடிழந்தனர்.

அண்டார்க்டிகா பனித்தளப் பகுதிகள் சூடாகிக் கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வேனிற்காலப் பனியுருக்க நாட்கள் ஓர் ஆண்டில் மூன்று வாரங்கள் கூடி யிருக்கின்றன.

American CNN.Com News Message (July 24, 2007)

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

f_40707191abm_70f11f4.jpg

ஈரோப்பில் மாந்தரைக் கொல்லும் வேனிற் காலப்புயல்2007 ஜூலை 24 ஆம் தேதி தாக்கிய அசுர வேனற்கனல் அடிப்பில் [Heat Wave] 42 டிகிரி C [107 F] ஹங்கேரியில் மட்டும் சுமார் 500 பேர் மாண்டதாக அறியப் படுகிறது ! பிரிட்டனில் சில பகுதிகள் ஜூலை 25 ஆம் தேதி உச்ச உஷ்ண அளவை 36 C [96.6 F] அடைந்தன. ஏர் கன்டிஷன் இல்லாத லண்டன் அடித்தள ரயில்கள் ஓடும் குகைகளில் இருந்த உஷ்ணம் 117 டிகிரி F. ஸ்பெயினில் உஷ்ணம் 104 டிகிரி F ஏறி இருவர் இறந்ததாக அறியப்படுகிறது. பிரான்ஸில் பல நாட்களாக வரட்சி நிலை ஏற்பட்டு, உஷ்ணம் 102 டிகிரி Fஏறி 80 வயதான இருவர் மாண்டதாகத் தெரிகிறது. அதுபோல் பெர்லினில் உஷ்ணம் 95 F, பிரஸெல்ஸில் 94 F, டச் நகரம் யுட்ரெச்சத்தில் உஷ்ணம்: 95.5 F. நெதர்லாந்தில் நான்கு நாட்கள் வெப்பம் கொளுத்தி இருவர் மாண்டனர். 30 பேர் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டனர் .

f_40707261agm_acc57b2.jpg

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

f_40707261adm_985aa79.jpg

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.