Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்

Featured Replies

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பின் பத்தரிகைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன், நேற்று (21) காலமானார்.

நேற்று காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

கதிர்காமதம்பி வாமதேவன் 1980ஆம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளில் ஊடகப் பணியை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சரஷட-ஊடகவயலளர-கலமனர/73-241387

  • கருத்துக்கள உறவுகள்

942-AAAC4-7-A71-4-CAB-8714-46598-CA8-CC9

அஞ்சலிகள் 

  • தொடங்கியவர்
a14.jpg?itok=et89GSb9

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி வாமதேவன் (ஓய்வுநிலை கிராமசேவகர், சமாதான நீதவானும்) நேற்று 922) வெள்ளிக்கிழமை தனது 69ஆவது வயதில் காலமானார்.  

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு சூர்யா லேனை வசிப்பிடமாகவும் கொண்டவர். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு சூரியா லேனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள்  

நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடம்பெறும் அமரர் வாமதேவன் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 30 வருடம் கிராமசேவகராக இருந்து சேவை புரிந்ததுடன் அக்காலத்தில் தினமணி, சிந்தாமணி, ஈழநாடு, தினமுரசு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு எழுத்தாளராகவும் தமது இறுதிக் காலம்வரை வீரகேசரி பத்திரிகையின் சித்தாண்டி பிரதேச நிருபராகவும் கடமையாற்றியவர்.இவர் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தல வரலாறுகளை பத்திரிகை வாயிலாக உலகறியச் செய்த பெருந்தகையாவார். 2015 ஆம் ஆண்டு இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கலாபூஷண விருதினையும் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

ஆரையம்பதி தினகரன் நிருபர் 

https://www.thinakaran.lk/2019/11/23/கிழக்கு/44325/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-வாமதேவன்-காலமானார்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மூத்த ஊடகவியலாளர் வாமதேவன் காலமானார்!

AdminNovember 23, 2019

மட்டக்களப்பின் ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் (வயது 69) அவர்கள் காலமானார்.

B7E61BBD-C43E-4E6D-9DCE-234EF8D0CE44.jpe

நேற்று இரவு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானதாக உறவினர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் சமூக சேவகராக நுழைந்த இவர் ஏறாவூர் வீரகேசரிக்கான மூத்த ஊடகவியவலாளராக செயற்பட்டிருந்தார்.

அவ்வேளை மறைந்த அகமது லெப்பை மாஸ்டர் என்பவரிடம் இருந்து பத்திரிகைக்கு செய்தி எழுதும் பயிற்சியை பெற்றுக்கொண்டு முதல் முதலில் அக்காலத்தில் வெளியான சுதந்திரன் எனும் பத்திரிகையின் செங்கலடி நிருபராக சேவையாற்றி வந்தார்.

இளமைக்காலத்தில் ஊடகவியலாளருக்கான பயிற்சியை பெற்று தினபதி,சிந்தாமணி ஆகிய இரு பத்திரிகைக்கும் செங்கலடி நிருபராக செயற்பட்டவர்.

இவ்வேளை சிந்தாமணி பத்திரிகையிலே வாரம் ஒரு தடவை வெளிவந்த அத்தாணி மண்டபம் பகுதியிலும் தனது எழுத்து திறமையினை வெளிக்காட்டி தனியிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

D53BE2BD-672C-4588-ACF8-AE8ACA4D7C12.jpe

பத்திரிகைத்துறையிலே தனக்கென தனியிடத்தினை பதித்திருந்த கலாபூசணம் வாமதேவன் ‘ஈழநாதம்’ உள்ளிட்ட பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் செய்தி எழுதுவதில் ஆர்வம்,அனுபவம் காரணமாக வீரகேசரி பத்திரிகைக்கு வெற்றிடமாக இருந்த பதவி வழங்கப்பட்டு மிகவும் சிறந்த ஊடகவியலாளர் சேவையில் ஈடுபட்டவராக விளங்கினார்.

அதுமாத்திரமன்றி பல்வேறு அமைப்புக்களிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விருதுகள் ,சான்றுதல்கள் ,கௌரவிப்புக்கள் என பல பராட்டுக்களை தனது சேவைக்காக பெற்றுக்கொண்ட ஒரு சிறந்த பத்திரிகையாளராக மாவட்டத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் வாமதேவன் தனது வாழ்கை காலத்திலே மக்களுக்கு சமூக சேவை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் சமாதான நீதவானாகவும் சமூக ஏற்பட்டாளராளாகவும் திகழ்ந்தவர்.இவருடைய ஊடக பணியினை பாராட்டி 2015ம் ஆண்டு இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையில் சேவையாளராக மாத்திரம் இவர் நின்று விடவில்லை அரச உத்தியோகமாகிய கிராம சேவையாளராக செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் ஒரு கடமை உணர்வுடன் இடமாற்றம் இன்றி தொடர்ந்து 30 வருடங்கள் பல மக்களுக்கு பணியாற்றிய பெருமையும் இவரைச்சாரும்.


அன்னாரின் உடலம் அஞ்சலிக்காக மட்டக்களப்பு,சூரியா வீதயில் வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.

 

http://www.errimalai.com/?p=46423

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.