Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்.

Featured Replies

சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து நா.உ. கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டாராவினால் வெளியேற்றப்பட்டார்.

நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பாக கஜேந்திரன் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

கஜேந்திரனின் உரையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக எதிர்த்திருந்தார். கஜேந்திரனின் உரையானது நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய சபாநாயகர், கஜேந்திரனை சபையிலிருந்து வெளியேற்றினார்.

ஜே.வி.பியின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் மறைமுகத் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் நீதித்துறையினருடன் ஆலோசனை நடத்தியதாக சபாநாயகர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம், தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள போருக்கு பதிலடியாகவே விடுதலைப் புலிகளின் வான்படை அரசாங்கத்தின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளின் மீது தாக்குதலை நடத்தியதாக கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்று நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய விமல் வீரவன்ச, அதனை கடுமையாக எதிர்த்துள்ளார். அவரின் இந்த எதிர்ப்புக்கு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் ஆதரவு வழங்கியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியின் கூற்றை மறுக்காமல் இருந்தது.

இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் காலை 11.00 மணியளவில் கட்சித் தலைவர்களினது கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டம் ஆரம்பமாகிய போது கஜேந்திரனிடம் அவரது கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது.

கஜேந்திரன் தான் முன்னர் கூறியதனை மீண்டும் கூறிய போது சாபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரா கஜேந்திரனை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுமாறு பணித்தார்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

எங்கள் மக்களாள் தெரிவு செய்யப் பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதியை வெளியேற்ர இந்த சிங்கள நாய்களுக்கு என்ன வக்கு இருக்கு

அதில இருக்கிறதில எந்த்தனை மந்திகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்..............? அந்த மந்திகளே உள்ளே குந்தி இருக்கும் போது யாழ் மாவட்டத்தில் அதிகமான வாக்கு வாங்கி போன எமது பிரதிநிதியை எவன் வெளியேற்றினான்...........? லொக்கு பண்டார வீட்டுக்காரரா கஜேந்த்திரன், வெளியேற்ற...............?

  • தொடங்கியவர்

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கையிலிருந்து கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்.

நேற்று புதன்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் இடம்பெற்ற வான்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான விவாதத்ததில் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வான்புலிகளின் தாக்குதலுக்கு வாழ்த்துத் தெரிவித்து கருத்துரைத்தையடுத்து சர்சை எழுந்திருந்தது.

இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார செல்வராஜா கஜேந்திரனை நேற்றுக் கூறிய கருத்துக்களுக்குக மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது வாபஸ் வாங்க வேண்டும் எனத் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து கஜேந்திரனினால் பாராளுமன்ற நடவடிக்கையின் போது சிறப்புரிமை அடிப்படையில் எனக்கு கருத்துரைக்க சகல சுதந்திரம் இருக்கின்றது அந்த அடிப்படையில் தான் கருத்துரைத்தேன் எனத் தெரிவித்தார்.

சிறீலங்காவின் விமானங்கள் எமது மக்கள் மீது குண்டுகளைப் போட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றார்கள். என்னுடைய உறவுகளும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

கஜேந்திரனை வெளியேற்றியதால் எமக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் நாடாளுமன்றத்திலிருக்கும் சொற்ப எண்ணிக்கையான தமிழர்களில் ஒருவரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியது சிங்கள இனவாதிகளின் ஜனநாயகத்தை உலகிற்குக் காட்டுகின்றது.

துணிவுடன் தனது கருத்தைத் தெரிவித்த கஜேந்திரனுக்கு எமது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் தலை நிமிர்ந்தால் அவன் தலையை எடுக்க வேண்டும் என்றது தானே சிங்கள அரசின் வேலை!.

உண்மையை உலகமே ஏற்றுக்கொள்ளுது!! உவைக்கு உறைக்குதோ?!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைநிமிர்ந்த தமிழன் செ.கஜேந்திரன் அவர்கட்கு எனது பாராட்டுக்கள்.

பல்வேறு தடவைகளில் இவரின் உயிருக்கு இலங்கை புலனாய்வு படையும் குலிக் குழுக்களும்

வேட்டு வைத்திருந்த பொழுதும் அதில் இருந்து தப்பி பிழைத்த இவருக்கு மீண்டும் இதேயொரு அச்சம்

மீண்டும் விடப்பட்டிருக்கிறது.

தனது கருத்திலிருந்து கொள்கையிலிருந்து மாறாமல் அஞ்சாமல் கருத்து சொல்பவர் இவர்.

நல்லயொரு பேச்சாளன். இரசியல் வித்துவன். தமிழ் மக்கள் இவர் மீது பற்றில்லா பாசம் பிரியம் வைத்துள்ளனர்

இவரைது துணிவுக்கும் தேசப் பற்றுக்கும் இன்னேரம் நன்றியும் பாராட்டும் கூறுவோமாக..

இதுவே தான் நமது இன்றய கடமை. உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விஷயம். தமிழ் பா.உ க்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்திலிருந்து ஒன்றும் தமிழருக்குச் செய்ய முடியாது. எமக்கு ஜனநாயக முகம் ஒன்று இருக்கிறது, அது எமது இராணுவ முகத்தின் மறுபக்கம் என்று உலகத்திற்குக் காட்ட மட்டுமே தமிழ் பா.உ க்கள் தேவை. வேறு எந்தப் பயனும் இல்லை பாராளுமன்ற அரசியலில். கிழக்கு அகதிகழுக்கு பத்து லொறி உணவு அனுப்ப எத்தனை நாட்கள் எமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலேயே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியிருந்தது? ஆனால் இப்போது நடந்திருப்பது ஆறாம் திருத்தச்சட்டம் என்ன என்று வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தும்.சிங்கள சபையிலிருந்து வெளியேற்றப் பட்டது கஜேந்திரனுக்கு அவமானம் இல்லை. இது அவருக்குக் கிடைத்த தமிழர் நலன் சார்ந்த மகுடமே!

Edited by Justin

புலிகளின் வான்படையை புகழ்ந்து ஆற்றிய உரையால் சர்ச்சை

நாடாளுமன்றத்தில் அமளி துமளி!

கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்!!

கைதுசெய்யக்கோரி ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்;

எதிர்த்தும் ஆதரவாகவும் அமைச்சர்கள் விவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றத்திலி ருந்து இடைநடுவே வெளியேற்றப்பட்டார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் நேற்றுமுன்தினம் கஜேந் திரன் ஆற்றிய உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை மெச்சும் விதத்தில் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையையும், வாதப் பிரதிவாதங்களையும் கிளப்பிவிட்டன. இதனால் நேற்று நாடாளுமன்றம் பெரும் அமளி துமளிப்பட்டது. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது. அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமும் கூட்டப்பட்டது. கஜேந்திரனைக் கைதுசெய்யுமாறு கோரி ஜே.வி.பியினர் சபை நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசமைப்பையா, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையா மதிப்பது என்ற கோணத்தில் பலத்த வாதப் பிரதி வாதங்களும் தூள் பறந்தன. கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு கஜேந்திரன் எம்.பியை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். புலிகளைப் புகழ்ந்ததற்காக அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் அரச தரப்பு எம்.பிக்கள் விடாது வற்புறுத்தினர். மன்னிப்புக் கோர மறுத்த கஜேந்திரன் சபையிலி ருந்து வெளியேறினார்.

விடுதலைப்புலிகளின் வான் படை யைப் புகழ்ந்தமைக்காக கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமா என் பது தொடர்பில் அமைச்சர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணி பிரிந்து ஆதரவாகவும், எதிர்த்தும் வாதம் புரிந்தனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ ராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் நாடாளு மன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் ஆற்றிய உரை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை நேற்று நாடாளுமன்றத்தை சுமார் மூன்று மணி நேரங்கள் அல்லோல கல்லோலப்படுத்தி விட்டது.

நேற்றுக் காலை நாடாளுமன்றம் கூடிய போது ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ சபையில் கவன ஈர்ப்புப் பிரே ரணை ஒன்றை முன்வைத்தார்.

""நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்தும் பேசினார். விடுதலைப்புலிகளின் குண்டுவீச்சுகளையும் வான் தாக்குதல்களையும் நியாயப்படுத்தினார்.

""இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம்.

"பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ, பிரிவினைவாதத்தை ஆதரிக்கவோ, வன்முறைகளை ஆதரிக்கவோ அல்லது அவ்வாறான செயல்களில் ஈடுபடவோ பேசவோ மாட்டோம்'' என சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு இந்த சபைக்கு வந்த கஜேந்திரன் இன்று அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுள்ளார். நாட்டின் இறைமையையும், அரசமைப்பையும் உதாசீனப்படுத்தியுள்ளார்.

""இவருடைய நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் இருக்கும் சபாநாயகர் உட்பட 225 உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

""எம்மிடம் வான்படை, கடற்படை, தரைப்படை என முறையான இராணுவக் கட்டமைப்பு உண்டு.

பொதுமக்கள் மீதோ அல்லது இந்தியாவின் மீதோ தாக்குதல்களை நடத்தமாட்டோம். ஆனால் பொருளாதார மையங்கள் மற்றும் குறித்த இலக்குகள் மீதும் தான் தாக்குதல்களை நடத்துவோம் என்று இச்சபையில் எச்சரிக்கை விடுத்தார்.

""கஜேந்திரன் ஒரு சாதாரண பிரஜையாக இருந்து பொது இடம் ஒன்றில் இப்படிப் பேசி இருந்தால் அவரைப் பொஸிஸார் உடனடியாகக் கைது செய்திருப்பர்.

நாம் மௌனம் கழிக்க வேண்டுமா?

""ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதை அனுமதிக்க முடியாது.

""இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டே பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கின்றார். நாம் தொடர்ந்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க வேண்டுமா?

""சிறு வண்டுகள் போன்று இரண்டு விமானங்களை வைத்துக் கொண்டு வீராப்புப் பேசுகின்றனர். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் என்ன செய்கின்றனர்? நாட்டின் பாதுகாப்புக் கருதி கஜேந்திரகுமார் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படவேண்டும்'' என விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்தார்.

இதனை ஆதரித்து தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா உரையாற்றினார்.

""கஜேந்திரன் ஒரு புலி. அவரை இந்த சபைக்குள் இருக்கவிடக்கூடாது. அவரது எம். பி. பதவி பறிக்கப்படவேண்டும். சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும். உடனடியாக கைது செய்யப்படவேண்டும்'' என ஆக்ரோஷமாகப் பேசினார் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா.

இந்த விவகாரம் தொடர்பாக அரச தரப்பில் நாடாளுமன்ற கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சில கருத்துகளை முன்வைத்தார்.

""எல்லோரும் சத்தம் போட்டுக் கூறுவதால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யவோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவோ முடியாது.

""நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளும் சிறப்புரிமை ஏற்பாடுகளும் இதற்கு இடமளிக்காது'' என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கூற்றை நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார்.

நாடாளுமன்ற வரலாற்றில் என்றுமே இல்லாத வகையில் கஜேந்திரன் இந்த சபையில் உரையாற்றினார். இந்தியா மீது குண்டு போடமாட்டோம். இங்கு குறித்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்கிறார். இதில் உள்ள விபரீதங்களை உணரவேண்டும். சபாநாயகர் தனக்குரிய அதிகாரங்களை உபயோகித்து கஜேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். '' என வற்புறுத்தினார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர்

எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்

உங்களுடைய ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சபையில் தமது கருத்துகளை வெளிப்படுத்தலாம். சுதந்திரமாகப் பேசலாம். நிலையியல் கட்டளைகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பாதுகப்பளிக்கின்றது என்று விளக்கம் அளித்தார்.

சபாநாயகரின் கூற்றை விமல் வீரவன்ஸ நிராகரித்தார்.

தனி ஒரு மனிதரின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்காக 225 உறுப்பினர்களைப் பணயம் வைக்க முடியாது. சிறப்புரிமையை விட அரசமைப்பே உயர்வானது.

எனவே அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி கஜேந்திரன் எம். பியை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். என மீண்டும் மீண்டும் கூறினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜே. வி. பி. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கஜேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

ஐ. தே. க. சார்பில் ஜோசப் மைக்கல் பெரேரா சில கருத்துக்களை முன்வைத்தார்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு. ஆனால் நம்மில் சிலர் அதை ஏற்க மறுக்கின்றனர்.

பிரச்சினைகளைத் தீர்க்கப் பல வழிகள் இருக்கின்றன. பேசித் தீர்க்க முடியும். ஆனால் பயங்கரவாதத்தின் மூலம் தீர்த்து விட முடியாது. அதற்கு இடம் கொடுக்கவும் முடியாது.

நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது

புலிகளிடம் இப்படியான ஒரு சக்தி உண்டு என்பது இப்பொழுது வெளிச்சமாகி விட்டது.

குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவோம் என்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரே நாடு. யுத்தத்தின் மூலமோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமோ நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.

சிறப்புரிமைகளை கௌரவப்படுத்துவதற்காக அரசமைப்பை உதாசீனப் படுத்திவிடக் கூடாது.

கஜேந்திரனின் பேச்சு மிகவும் பாரதூரமானது. புலிகள் பொருளாதார மையங்கள் மீது மட்டுமின்றி பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஏன் இந்த நாடாளுமன்றின் மீதும் குண்டு போடலாம். அப்போது என்ன? எனவே சபாநாயகர் தனது அதிகாரத்தøப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசனை கூறினார் ஜோசப் மைக்கல் பெரேரா.

நிமல்

சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா மேலும் ஒரு விளக்கம் அளித்தார்.

அரசமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டத்தின்படி சத்தியம் செய்ய மறுத்தே கூட்டணி உறுப்பினர்களான அமிர்தலிங்கம் போன்றோர் இந்த நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

ஆனால் கஜேந்திரன் ஆறாவது திருத்தத்தின்படி சத்தியம் செய்துவிட்டு, இங்கே அதற்கு முரணாக நடந்துகொள்கின்றார். எனவே, இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை கூறினார்.

இதனை அமைச்சர்களான மனோ விஜேரத்ன, ஹே.மகுமார நாணயக்கார, மேர்வின் சில்வா உட்பட ஜே. வி. பியினர் அனைவரும் ஆட்சேபித்தனர். பயங்கரவாதி ஒருவர் இந்தச் சபையில் அமர்ந்துகொண்டு பிரிவினைவாதம் பேசுகின்றார். நாம் அமைதியாக இருக்க முடியாது எனக் கூச்சல் போட்டனர்.

சபையில் அமைதி ஏற்படாததினால் சபாநாயகர் சுமார் 10.45 மணிக்கு சபை அமர்வுகளை இடைநிறுத்தி கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி சபையை ஒத்திவைத்தார்.

எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் சபையில் இருக்கும் போது தனியாக ஒரு கூட்டம் தேவையில்லை. இங்கேயே தீர்மானிக்க முடியும் எனக் கூறி ஜே. வி. பியினர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார் சபாநாயகர்

சபை மீண்டும் 11 மணிக்கு கூடியபோது சபாநாயகர் ஒரு அறிவித்தலை வெளியிட்டார்.

அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் 3 ஆவது உப பிரிவின்படி எவரும் இலங்கையின் அரசமைப்பை உதாசீனப்படுத்த முடியாது.

பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமோ அல்லது வேறு ஏதாவது செயற்பாடுகளின் மூலம் நாட்டைத் துண்டாடவோ தனிநாடு ஒன்றை உருவாக்கவோ முடியாது.

மீறும் பட்சத்தில் அவர்களுக்கு ஏழு ஆண்டு காலம் அரசியல் குடியுரிமை பறிப்பதுடன் அவரதும் அவரது குடும்பத்தினரதும் உடைமைகளையும் சொத்துகளையும் பறிமுதல் செய்யமுடியும்.

மேலும் 77 ஆவது பிரிவின்படி நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கவும் இடமுண்டு. எனவே இங்கு பேசுபவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு உறுப்பினர் கஜேந்திரன் தனது பேச்சை வாபஸ் பெற்றுக்கொண்டு அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் வேண்டுகோளின்படி கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

""இலங்கையின் அரசபடைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் நேரில் கண்டவன் நான். நானும் எனது உறவுகளும் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள். இந்தப் பாதிப்புகளால் ஏற்பட்ட உத்வேகம் தான் என்னை அப்படி உணர்ச்சிவசப் படுத்திவிட்டது. தனிப்பட்ட முறையில் சிங்களவர்களையோ வேறு எவரையுமோ பாதிக்கும் வகையில் பேசவில்லை'' என்று கூறிவிட்டு கஜேந்திரன் அமர்ந்து விட்டார்.

இதனை ஜே. வி. பியினர் ஏற்கவில்லை. கஜேந்திரன் இப்போதும் கூட வருத்தம் தெரிவிக்கவோ , பேச்சை வாபஸ் பெறவோ இல்லை. எனவே உடனடியாக அவரைக் கைது செய்யவேண்டும். சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூச்சல் போட்டனர்.

வெளியேற்றும் பொறுப்பை தம்மிடம் தரக் கோரினார் மேர்வின்

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சபாநாயகரைப் பார்த்து ""ஐயா உங்களால் முடியாவிட்டால் அப் பொறுப்பை என்னிடம் தாருங்கள் நான் நடவடிக்கை எடுக்கின்றேன்'' என்று கூச்சல் போட்டார்.

சபையில் சத்தமாகப் பேசுவதாலோ கூச்சல் போடுவதாலோ ஓர் உறுப்பினரைக் கைது செய்யவோ அல்லது உறுப்புரிமையைப் பறிக்கவோ முடியாது என சபாநாயகர் பதில் அடி கொடுத்தார்.

கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்தார் மாவை

"ஐயா! கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார். கட்சியின் சார்பில் நான் ஒன்றைக் கூறுகின்றேன். அவருடைய பேச்சு எவரது மனதையும் புண்படுத்தியிருந்தால் கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றார் மாவை சேனாதிராஜா.

அதனையும் எவரும் ஏற்கவில்லை. "கஜேந்திரனைக் கைது செய்' என்று கூச்சல் போட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீல. மு. காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கஜேந்திரன் எம். பியின் கூற்றை சபைக்கு தெளிவு படுத்தினார்.அதுவும் பயன் அளிக்கவில்லை.கூச்சல் குழப்பம் . எதுவும் கேட்கவில்லை; புரியவுமில்லை.

ஐயா, கஜேந்திரன் எம். பி. தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதற்கும் மேல் என்ன செய்வது என்று புரியவில்லை என்று கூறிவிட்டார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

சபாநாயகரின் உத்தரவின் படி கஜேந்திரன் மன்னிப்புக் கேட்கவேண்டும். தனது பேச்சை வாபஸ் பெறவேண்டும் என அமைச்சர் மனோ விஜேரத்ன ஆலோசனை கூறினார்.

அப்போது தனது முந்திய நிலைப்பாட்டை மீண்டும் அடித்துக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் கஜேந்திரன் எம். பி.

இதனால், " சபாநாயகரின் உத்தரவை மீறியதாலும் அதனை நிறைவேற்றத் தவறியதாலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இன்றைய அமர்வுகளில் இருந்து (ஒருநான் மட்டும்) வெளியேறும்படி உத்தரவிடுகின்றேன்.'' என சபாநாயகர் அறிவித்தார்.

மன்னிப்புக் கேட்க மறுத்த கஜேந்திரன் எம். பி. சபையில் இருந்து வெளியேறினார்.(சி)

--Uthayan---

Edited by Kuddithambi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.