Jump to content

மெர்சிடஸ்-பென்ஸ் கார்களை தயாரிக்கும் டாய்ம்லர் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்


ampanai

Recommended Posts


மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவெடுத்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

https://www.polimernews.com/dnews/90799/மெர்சிடஸ்-பென்ஸ்-கார்களைதயாரிக்கும்-டாய்ம்லர்நிறுவனத்தில்-10,000-ஊழியர்கள்பணி-நீக்கம்
   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகளும்... அதே நிறுவனத்தில் தான்......
Mechatronik Engineer ஆக,  வேலை செய்து கொண்டு இருக்கின்றார்.

அவரின், வேலைக்கு இப்போ....  பிரச்சினை  இல்லா விட்டாலும்,
எதிர் காலத்தில் என்ன நடக்கும், என்று தெரியாது.

எனது விருப்பத்தின் பேரில்...ஒரு பெண் குழந்தை... 
மோட்டார்  கார் தொழில் உற்பத்தியில்...ஆர்வம் காட்ட விரும்பினேன். 
அதனை...  அவளும் தெரிந்து எடுத்தாள்.
 
உண்மையில்.... அவளுக்கு,  மருத்துவராக வர வேண்டும் என்று ஆசை.. இருந்தது. 
இன்று... இதனை நினைத்து, மிகவும் வேதனைப் படுகின்றேன். 

இவரின், படிப்பை பற்றிய, விவாதத்தையும்...
யாழ். களத்தில்  நடத்தினோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.