Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கையின் கடற்படையே பொறுப்பு : சீனா

Featured Replies

ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா  இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

china.jpg

'இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் சீனா பெரிதும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

இலங்கை அரசாங்கத்தினதும், அதன் கடற்படையினதும் கைகளிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றுமுழுதாக இருக்கும். இந்தத் துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டதாக இருக்காது' என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்வகிப்பது தொடர்பில் சீனக்கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட 2017 உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சம் பற்றியே தான் கவலைப்படுவதாகவும், அந்தப் பாதுகாப்பு அம்சத்தை ஆராய்ந்து 2 அல்லது 3 பிரிவுகளை உடன்படிக்கையில் சேர்ப்பதற்கு உத்தேசிப்பதாக வியாழனன்று மாலை கொழும்பிலுள்ள வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ கூறியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கையை சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கிறது.

துறைமுகத்திற்குக் கப்பல்கள் வருவதும், பின்னர் வெளியேறுவதும் தொடர்பிலான கட்டுப்பாடு இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதையே விரும்புவதாகவும், ஏனென்றால் எல்லைக்கட்டுப்பாடு என்பது அரசாங்கத்தின் தற்துணிவின் இன்றியமையாத அங்கமாகும் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

அத்துடன் சி.எம் போர்ட் என்ற சீனக்கம்பனியுடனான அம்பாந்தோட்டைத் துறைமுக 99 வருடக் குத்தகை உட்பட 2017 உடன்படிக்கையின் வர்த்தக ரீதியான அம்சத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதில்லை என்பதையும் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

சீன வெளியுறவு அமைச்சரின் விசேட தூதுவராக சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த இராஜதந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது அம்பாந்தோட்டைத் துறைமுக குத்தகை உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சம் பற்றிய அக்கறையை வெளிப்படுத்தியிருந்ததாகவும், அவற்றை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

சீனத்தூதரக அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு:

இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா மீண்டுமொரு தடவை வலியுறுத்துகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் கடற்படையினதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இல்ஙகையின் வேறு துறைமுகங்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டதாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருக்கப்போவதில்லை.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களைக் கடந்த 19 ஆம் திகதி சந்தித்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதில்லை என்பதையும், கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கை ஆட்சிமாற்றத்தின் விளைவாக மாற்றியமைக்கப்படப் போவதில்லை என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் கருத்துக்களைப் பெரிதும் மெச்சுகின்ற சீனா உடன்படிக்கையின் நடைமுறைப்படுத்தலைத் துரிதப்படுத்துவதற்கும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் இலங்கைத் தரப்புடன் சேர்ந்து பணியாற்றுமாறு சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்களுக்கு வழிகாட்டலை வழங்கத் தயாராக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/71508

 

Hambantota Port - China glad agreement won’t be reviewed

The Chinese Embassy today lauded President Gotabaya Rajapaksa’s remarks that the Sri Lankan Government will not renegotiate the existing agreement on the Hambantota Port and the commercial contract that was signed would not be changed amid a change of government.

It said the Chinese side highly appreciated the remarks and was willing to guide relevant enterprises to work with the Sri Lankan side to expedite implementing the established agreement and further promote the prosperity and development of the Hambantota Port.

“China reiterates once again that it highly respects the sovereignty and territorial integrity of Sri Lanka. The security and control of Hambantota Port are entirely in the hands of the Sri Lankan Government and Navy, which is no any different from other ports in Sri Lanka,” the Embassy said.

http://www.dailymirror.lk/breaking_news/Hambantota-Port-China-glad-agreement-wont-be-reviewed/108-179948

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா  இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

இந்திய புலனாய்வு வல்லுனர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இந்த நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை ... வேறு வழிமுறைகளும் இல்லை 😎

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.... பலாலி துறைமுகம்,  இந்தியாவின் பொறுப்பில் வர வேண்டுமே....
நல்ல போட்டி....  அம்பிட்டிவர்கள், மீண்டும்  நாங்கள் தான்.

சம்பந்தன், சுமந்திரனின்.... முட்டாள்   அரசியலால்,
முழுத் தமிழ் இனமும்... பாழும்  கிணத்தில், விழுந்து விட்டது. 😡

  • தொடங்கியவர்

அமரிக்காவின் 480 மில்லியன்கள் மிலேனியம் உதவியையும் இந்த சிங்கள அரசு வேண்டாது. எல்லாம் சீனாவே பார்த்துக்கொள்ளும் ... இறுதியில் கடனில் மூழும்.  நாடு இராணுவ சீன மயமாகிவிடும் 

சீனாவின் இரண்டாவது விமான தாங்கி கப்பல் அமெரிக்கா மற்றும் இந்திய இராணுமையங்களை சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் பசுபிக் பிராந்தி கடற்படை தளபதி இது சவாலான வளர்ச்சி என கூறியுள்ளார். 

இந்த நிலையில் சிங்கள கடற்படை பாதுகாப்பாம்  🙂 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிக்கு மங்கள சமர வீர நாட்டை விட்டு ஓடியிட்டாராம் சிங்களவனே கோத்தாவை கண்டு தெறிச்சு ஓடி துலையுறாங்கள்  எங்கடையல்  கொஞ்சம் கோத்தாவுக்கு வெள்ளையடிக்கினம் . 

2 hours ago, ampanai said:

இந்திய புலனாய்வு வல்லுனர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இந்த நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை ... வேறு வழிமுறைகளும் இல்லை 😎

அவனுகளுக்கு பின்கதவு வழியா ஏதாவது சம்திங் கிடைச்சா சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டி போல சொறிலங்கா அரசுக்கு தொடர்ந்து முண்டு கொடுத்துக் கொண்டிருப்பாங்கள். 🤣

16 hours ago, ampanai said:

 அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கையின் கடற்படையே பொறுப்பு : சீனா

இலங்கை கடற்படையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு சீனாவாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.