Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: அமித் ஷா 'பரிசீலிப்பதாக' அதிமுக தகவல்

 

palanisamy_meets_amit_shah.jpg

 

அதிமுக நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்ததின ஆண்டு கொண்டாட்ட நினைவுக்கான 2-ஆவது தேசியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பின்னா், இரவு சுமாா் 8.10 மணியளவில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழகஅமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமாா் ஆகியோரும் உடனிருந்தனா்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க சரியான நேரத்தில் சட்டத்திருத்தம் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமித் ஷா உறுதியளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இவ்விவகாரம் தொடர்பாக பரிசீலிப்பதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.