Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ

கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன

ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய

மண்ணில் தான்.

1. ஹைக்கூவின் தோற்றம்

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ்,

மற்றொன்று ப்ரெஞ்ச்.

தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம்,

கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள்.

ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு

பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த

அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை

அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும்

கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.

பிரிவு 2 : ஹ¥யன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாக

சுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே

தன்கா கவிதை.

பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)

இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது

கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே போதைய

வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)

இக்காலத்தில் "நோஹ்" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்

வெளிவந்தன.

பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)

இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை

தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)

ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப்

பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.

ஹைக்கூ பெயர்க் காரணம்

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு

ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி

போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,

மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக

அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான

விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,

கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை

உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.

தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று

பொருள் தருகிறார்.

ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்

7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்

கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.

ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்

ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று

எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்

பொருந்தி வரும் விதி!)

ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை

பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்

தூற எறிந்து விட்டார்கள்.

தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த

ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)

ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி

புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல

ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)

ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப் படுகிறார்கள்.

உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)

நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)

ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள்

1. மட்சுவோ பாஸோ (1465-1553)

2. யோசா பூசன் (1716-1784)

3. இஸ்ஸா (1763-1827)

4. சிகி (1867-1902)

கொசுறுச் செய்தி :

ஜப்பானியர்கள் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணிற்கு ஆடத் தெரியுமா?

பாடத் தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்களாம்..

"பொன்னுக்கு ஹைக்கூ எழுத வருமா? அப்படின்னுதான் கேப்பாங்களாம்!

ஜப்பானிய ஹைக்கூ நால்வர்கள்

1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)

ஹைக்கூவின் கம்பர் என்றழக்கப் படும் இவர் அருமையான ரெங்கா கவிஞர் ஆவார்.

பாஸோ என்றால் வாழை மரம் என்று பொருள் .. இவர் தங்கியிருந்த குடிசை அருகே

வாழைமரம் இருந்ததால் இவர் பாஸோ என்றழைக்கப் பட்டார் .

பாஸோ தன் கவிதை சீடர்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்..

"எழுதும் பொழுது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி

இருக்கக் கூடாது .. உன் உள்மனதை நேரடியாகப் பேசு ..எண்ணங்களைக் கலைய

விடாதே , நேரடியாகச் சொல் " இது தான் ஹைக்கூ சீடர்களுக்கு பாஸோ கூறும்

அறிவுரை ..

பாஸோ சாமுராய் என்ற போர் வீரன் இனத்தைச் சார்ந்தவர் .. இந்த இனத்தவர்கள்

தன் நாட்டு மன்னருக்காக உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருப்பார்களாம் .

ஒரு வேளை மட்டுமே உண்பார்களாம் ..தனது சொந்த நாட்டிற்கே துரோகம் செய்ய

நேர்ந்தாலோ , எதிரியிடம் சிக்கிக் கொண்டாலோ , தங்களது போர் வாளை எடுத்து

தங்கள் வயிற்றைக் கிழித்து வீர மரணம் அடைவார்களாம் ..இந்த வீர மரணத்திற்கு

ஹராஹிரி (Harakiri) என்று பெயர் ..

ஜப்பானியர்கள் தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கிறார்கள் ..

பாஸோவின் கவிதைகளில் தவளைதான் கதா நாயகன்.

பழைய குளம்

தவளை குதிக்கையில்

தண்ணீரில் சப்தம்

**********************

எந்தப் பூ மரத்திலிருந்தோ ?

எனக்குத் தெரியவில்லை

ஆனால் ஆஹா நறுமணம்

*********************

மேகம் சில நேரங்களில்

நிலவை ரசிப்பவனுக்கு

ஓய்வு தருகிறது

**********************

2. யோஸா பூசன் (1716-1784)

சீன ஓவியத்தை ஜப்பானுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே.. தனது தூரிகையால்

பாஸோவின் கவிதைகளை மெருகூட்டினார் ..

பூசனின் சில ஹைக்கூ கவிதைகள்

குழந்தையின் முகத்தில்

மகிழ்ச்சி

கொசு வலைக்குள் !

********************

ஆலய மணியின் மீது

ஓய்ந்து உறங்குகிறது

வண்ணத்துப் பூச்சி !

*********************

பனி வீழ்ந்த முள் செடி

அற்புத அழகு

ஒவ்வொரு முள்ளிலும் துளி

*********************

3. இஸ்ஸா (1763-1827)

இவர் கிராமப் புரத்தில் பிறந்ததால் இவரை நாட்டுப் புறப் பூசணி என்று செல்லமாக

அழைப்பார்கள் .. இவரது வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது... இளம் வயதிலேயே

தாயாரை இழந்து , மாற்றாந்தாயின் கொடுமைக்கு உட்பட்டு வீட்டை விட்டு

விரட்டியடிக்கப்பட்டார் சிறு சிறு பூட்சிகளின் பால் மிகுந்த பரிவு காட்டினார்

இஸ்ஸாவின் கவிதைகள் சில

அரிசியைத் தூவினேன்

இதுவும் பாவச் செயலே

கோழிகளுக்குள் சண்டை

********************

பெட்டிக்கு வந்த பின்

எல்லாக் காய்களும் சமம்தான்

சதுரங்கக் காய்கள்

********************

பனியை உருக்கக் கூட

காசு தேவை

நகரத்து வாழ்க்கை

************************

4. சிகி (1867 - 1902)

இவர் ஹைக்கூ நால்வரில் இறுதியாவனவர் . இவர் ஹைக்கூவின் புரட்சிக் குயில்

என்றழைக்கப்படுகிறார் பாஸோ வின் கவிதைகள் வீரியமற்றது என்று

சாடினார் இவர் ..

சிகியின் கவிதைகள் சில

சிதைந்த மாளிகை

தளிர் விடும் மரம்

போரின் முடிவில்

*******************

வெப்பக் காற்று

ப்ளம் மலர்கள் உதிரும்

கல்லின் மீது

*************************

தத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி

தாழ்வார ஓரங்கள்

ஈரப் பாதங்கள்

***************************

ஹைக்கூ அயல் நாடுகளில் பரவியது எப்படி .. ? - மரவண்டு

மேற்கத்திய ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு முன்னேர் பிடித்தவர்களில்

முக்கியமானவர்கள் பலர். சேம்பர்லின், R.H பிளித், ஹெரால்ட் ஹெண்டெர்சன்,

கென்னத் யசூதா, எஸ்ட்ரா பவுண்ட் என்று பட்டியல் நீண்டு கொண்டே

போகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஹைக்கூ விதையை தமிழ் மண்ணில் தூவியது யார் ? வேறு யாராக இருக்க முடியும்

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! என்று சொன்ன நம்

பாட்டுப் பாட்டன் பாரதி தான் .

ஜப்பானியக் கவிதை (பாரதியார் கட்டுரை) 16-10-1916 (சுதேசமித்திரன் பத்திரிக்கை)

சமீபத்தில் “மார்டன் ரிவியூ” என்ற கல்கத்தா பத்திரிக்கையில் “உயானோ நோக்குச்சி”

என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்ன

வென்றால் “மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண்

சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம்

முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல

சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்

கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது.

தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள்

எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை

வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது." கூடை கூடையாய்

பாட்டெழுதி அச்சிட வேண்டும் " என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக்

கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே

வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி.

புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின்

பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.

கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் "பாஷோ மட்சுவோ என்னும்

புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏற்க்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக்

கொடுத்தானாம். இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக்

காப்பது தொல்லையாதலால் "வேண்டியதில்லை" என்று திருப்பிக் கொடுத்து

விட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர்

இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது. அந்தச்

செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப்

பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் .

"தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !"

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன்

இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை

நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து

போக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார்.

"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விஷேசத்

தன்மையென்று நோக்குச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு

நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது.

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" .

கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான் . தமிழ் நாட்டில்

முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது .ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை

சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று ஜப்பானிலே எல்லாப் பாடலும் "ஹொகுசி"

பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு "

கட்டுரையைப் படித்தீர்களா ? இந்தக் கட்டுரைதான் ஹைக்கூ குறித்தான

அறிமுகத்தை தமிழுக்கு முதன் முதலில் தந்தது ..

ஆனால் இந்தக் கட்டுரையில் சில பிழைகள் இருக்கின்றன

பிழை 1 : பாஷோவின்(Basho Matsuo) மாணாக்கர் ஹொகுசி என்று

குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. பாஷோவின் வாழ்க்கை 1644 க்கும் 1694 க்கும்

இடைப்பட்டது ஹொகுசியின் வாழ்க்கை 1760 க்கும் 1849 க்கும் இடைப்பட்டது

இப்படியிருக்க ஹொகுசி (Katsushika Hokusai) எப்படி பாஷோவின் மாணாக்கராக

இருந்திருக்க சாத்தியம் ?

இந்தச் சுட்டியை சொடுக்கிப் பரிசோதிக்கவும்

---------------------------------------------------

http://www.big.or.jp/~loupe/links/ehisto/ebasho.shtml

http://www.ibiblio.org/wm/paint/auth/hokusai/

குரல் கொடுத்தவர் . ப்யூஜியாமாவின் 100 காட்சிகள் (1834) , பத்தாயிரம் சித்திரங்கள்

(The Thousand Sketches 1836) புகழ் பெற்ற ஓவியங்கள்

பிழை 3 : "தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !" it has burned down !

how serene the flowers in their falling இந்தப் பாடலைப் பாடியது ஹொகுஷி என்று

குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது யார் என்று எனக்குத்

தெரியாது. இந்தக் கவிதையை யோனா நோக்குச்சி (Yone Noguchi) எழுதிய

ஜப்பானியக் கவிதையின் உயிர் (The Sprit of Japanese Poems p.27) என்ற நூலில்

மேற்க் கோள்காட்டி எழுதப் பட்டது..

மொழி பெயர்ப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் ! அல்லது நோக்குச்சி

புலவர் தவறாக எழுதி இருக்கலாம் ? ஆண்டவனுக்கே வெளிச்சம் !

கொசுறுச் செய்தி :

இந்தியாவில் தமிழுக்கு அடுத்த படியாக இந்தியில் தான் அதிகம் ஹைக்கூ

எழுதப்படுகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள். கல்கத்தாவில் சில ஹைக்கூ

கவிஞர்கள் இருந்தாலும் போதிய வரவேற்பு இல்லை என்பது சற்று வருத்தமான செய்தி.

www.tamiloviam.com

வான்வில் ஜம்முவை பற்றி ஒரு ஹைக்கூசொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பழுத்த பழத்தினுள்

ஒளிந்திருக்கிறது பிஞ்சு

ஜம்மு

பழுத்த பழத்தினுள்

ஒளிந்திருக்கிறது பிஞ்சு

ஜம்மு

அட உண்மையாவே நான் பிஞ்சு தான்

:)

  • தொடங்கியவர்

பழுத்த பழத்தினுள்

ஒளிந்திருக்கிறது பிஞ்சு

ஜம்மு

ஹீ ஹீ ஜஸ்டின் சூப்பர் :)

ஹீ ஹீ ஜஸ்டின் சூப்பர் :)

வான்வில் சூப்பரோ

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழுத்த பழத்தினுள்

ஒளிந்திருக்கிறது பிஞ்சு

ஜம்மு

ஜஸ்டின்..

உங்க கவிதையே தப்பு...

பிஞ்சுப் போர்வையில்

ஒளிந்திருப்பது பழம்

யம்மு!!!

அட உண்மையாவே நான் பிஞ்சு தான்

:lol:

ஜம்மு அக்கா..

ஜஸ்டின் தான் தப்பா ஹைக்கூ கூவிட்டார்..

அதுக்கு போய் நீங்க அவசரமா மறுக்கறதைப்பாத்தா எதோ நீங்க மறைக்கப் பாக்குறீங்க.. :):lol:

பாத்து..ஜஸ்டின் போட்டு வாங்குவதில் கில்லாடி..!! :P :P :P

தளிர் நான் பாவம் சின்னபிள்ளை ஆக்கும் இப்படி சொல்ல கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

மேகங்கள் வேலி தான்டாமல் கோடுபோடும்

இலக்குவனாய் ஜெட் விமானங்கள்.

(முதன்முதலாக வானத்தில் பறந்தபோது ஜன்னலினூடாக இன்னொரு விமானத்தைப் பார்த்ததும் மனதில் தோனறிய சிந்தனை.) :P :P

  • தொடங்கியவர்

மேகங்கள் வேலி தான்டாமல் கோடுபோடும்

இலக்குவனாய் ஜெட் விமானங்கள்.

(முதன்முதலாக வானத்தில் பறந்தபோது ஜன்னலினூடாக இன்னொரு விமானத்தைப் பார்த்ததும் மனதில் தோனறிய சிந்தனை.) :P :P

சுவி தாத்தா அழகான ஹைக்கூ

இருட்டுச்சிறையில்

குற்றவாளியாய்

நிலவு

மேகங்கள் வேலி தான்டாமல் கோடுபோடும்

இலக்குவனாய் ஜெட் விமானங்கள்.

(முதன்முதலாக வானத்தில் பறந்தபோது ஜன்னலினூடாக இன்னொரு விமானத்தைப் பார்த்ததும் மனதில் தோனறிய சிந்தனை.) :P :P

நல்லவரிகள் சுவி பெரியப்பா

:rolleyes:

நல்ல ஹைக்கூவான்வில்

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.