Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

தமிழீழத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மத நம்பிக்கை,வழிபாடு இருக்கும்போது ஒருவரின்  மதத்தை பற்றி இன்னொருவருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீங்கள் கூறுங்கள் அதற்கப்புறம் அதற்கான பதிலை நான் கூறுகிறேன்.

எனக்கும் அப்பா இருக்கு,உங்களுக்கும் அப்பா  இருக்கு, என்னோட அப்பாதான் உண்மையானவர் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று   பிறர் வீடு தேடிபோய் பிரச்சாரம் செய்வதற்கு என்ன பெயர் என்று நீங்கள் கூறுங்கள் அதுக்கப்புறம் அதற்கான பதிலை நான் கூறுகிறேன்.

ஒரு தந்தையின் விந்தணுவின் அடையாளம்தான் நம்  எதிரே வரும் ஒவ்வொரு மனிதனும்.

அதுபோல்தான் மதம் கலாச்சாரம் எல்லாமே,

ஒவ்வொரு மனிதனின் பிறப்போடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை மாற்றும் முயற்சிக்கு பெயர் ஆன்மீகமா? அசிங்கமா?

எல்லோரும்போலவே பிறந்து வளர்ந்து,உண்டு உறங்கி, நோய்கள் வந்தால்வைத்தியரிடம்போய்..

பருவ காலத்தில் ஜோடிகள் சேர்ந்து பின்புகுட்டிகள்போட்டு,அந்திமகால ஓர்நாளில் செத்துபோகும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் ஒப்பீட்டளவில்  எந்த வகையில் மற்ற மதங்களில் இருப்பவர்களைவிட உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகிறோம் என்று சொல்லுங்கள் உங்களுக்கான விடையை தேடிசொல்கிறேன்.

எந்த மத நம்பிக்கையும் இன்னொருவரது நம்பிக்கைக்கு தாழ்ந்ததோ உயர்ந்ததோ அல்ல. 

பிரச்சாரம் செய்வதற்குள்ள உரிமை என்ன என்பதுதான் கேள்வி.

(மத பிரச்சாரம் என்கின்ற பெயரில் பிற மதத்தை  நம்பிக்கைகளை இழிவு படுத்துதல் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் நான் தெளிவாகவே உள்ளேன்.)

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

ஒருவரின் ஒரு கண்ணோட்டத்துடன் உடன் படுவதால் அவரின் மொத்த கொள்கைகளுடனும் உடன்படுவதாகாது.

https://www.lexico.com/definition/virgin

👆🏼இது ஆக்ஸ்போர்ட் 

நீங்கள் சொன்ன விளக்கம்

காலின்ஸ் டிக்சனரியில் கீழ கண்ட இணைப்பில் அமேரிக்க அர்த்தம் என்பதாக உளது.

https://www.collinsdictionary.com/dictionary/english/virgin

Collins dictionary யிலும், நான் சொன்ன பிரகாரம்தான் இருக்கிறது.

1. COUNTABLE NOUN

A virgin is someone who has never had sex.

அகராதிகள் அநேகமாக வேறுபடாது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

யேசு தேவகுமாரன், அவர் ஒரு அற்புதத்தின் மூலம் கன்னி மேரி வயிற்றில் உதித்தார் என்பது கத்தோலிக்கர் நம்பிக்கை (miracle birth).

இப்படி கத்தோலிக்கர்கள் மாத்திரம் நம்புவதில்லை.

எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும் இப்படித்தான் நம்புகிறார்கள்.

யூத மதத்தில் உள்ள, சில பிரிவுகளும் இப்படித்தான் நம்புகின்றன.  ஆனால், இயேசுவை தேவ குமாரன் என்று யூதர்கள் யாரும் நம்புவதில்லை.

அதேபோலத்தான், முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.  இவர்களும், இயேசுவை தேவ குமாரன் என்று நம்புவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

ஆனால் கிறீஸ்த theology, holy trinity, கத்தோலிக்கத்தில் மேரிக்கு இருக்கும் அந்தஸ்தை விளங்கி கொண்டால்- மேரி உடலுறவு இன்றி யேசுவை கருத்தரிதார் என்றே கிறீஸ்தவ மதம் சொல்கிறது என்பது புரியும்.

TRINITY  என்பது, பிதா, மகன், பரிசுத்த ஆவி மூன்றையும் குறிக்கிறது.

TRINITY,  மேரியைப்பற்றி பேசுவதில்லை.

TRINITY என்பது, பவுல் என்பவரின் கண்டுபிடிப்பு.

இயேசுவிற்கும் திரித்துவத்திற்கும் (TRINITY) எந்தவிதமான சம்பந்தமுமில்லை.

இன்னும் சொல்லப் போனால், கிறிஸ்தவத்திற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லாதவர்தான், இயேசு.

இதை, உங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

ஏனென்றால், மாக்ஸ் சொல்லி இருக்கா விட்டாலும் என் முடிவு அதுதான்.

ஆனால் கோசானின் தற்துணிபு மீண்டும், மீண்டும் உண்மையாகிறது என எழுதினால், யார் அந்த கோசான்? என்ற கே(ள்)லி க்கு பதில் சொல்லியே என் காலம் ஓடிவிடும் என்பதால் - மாக்சை இழுக்கிறேன். 😂

உங்களின் தற்துணிபை நிறுவுவதற்கு, நீங்களே உடன்படாத கால்மாக்ஸ் தத்துவங்களை இழுத்து என்ன பயன்?

 மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற கால்மாக்ஸ் தத்துவம், தங்களாலே உடன்படமுடியாமல், அடிபட்டுப் போகின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

மதங்களில் எதுவுமே புனித மதம் இல்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு.

அவனவனுக்கு, தன் மதம் புனிதமானது.

அதே நேரத்தில், தன் சிந்தனையை, பகுத்தறிவைப் பாவித்து, தன் சொந்த  மதத்தை விட்டு இன்னொன்றை நாடிச் செல்வது தப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு.

அவனவனுக்கு, தன் மதம் புனிதமானது.

அதே நேரத்தில், தன் சிந்தனையை, பகுத்தறிவைப் பாவித்து, தன் சொந்த  மதத்தை விட்டு இன்னொன்றை நாடிச் செல்வது தப்பல்ல.

ஆகா!! 🤸‍♀️ கடைசியாக, எங்கள் அழகிய மா நித்தியானந்தமயி அவர்களால் நான் நித்தியானந்தத்துக்கு மதம் மாற்றப்பட்டதை அங்கீகரித்து ஒரு பதிவு! நன்றி மாங்குயில் 🥭

நீங்களும் தினம் தினம் சத்சங்கம் கேட்டு மதம் மாறி சுவாமி நித்தியானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஸ்ரீ கைலாசா வர தகுதி பெற வாழ்த்துகிறேன்.

ஜெய் நித்தியானந்தம் :100_pray:

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நூற்றில் ஒரு வார்த்தை.

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல ஒரு விளக்கம்😎

மதங்களில் எதுவுமே புனித மதம் இல்லை.

ஐயகோ!! 😫எனது மத நம்பிக்கையை மீண்டும் மீண்டும் புண்படுத்துகிறார்களே 😩

எங்கள் அருமை மட்டுருதுனர்களே, யாராவது எங்களை பாதுகாக்க மாட்டீர்களா?

ஜெய் நித்தியானந்தம் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

கன்னிமை கழிந்தால்தான், பிள்ளை பிறக்கும் என்ற நியதி இல்லை.

ஓர் ஆணின் விந்தை, செயற்கையாக எடுத்து ஒரு கன்னிப் பெண்ணின் உடலில் கருப்பையில் வைத்தாலும், கருவாகி,  10  மாதத்தில் பிள்ளை பிறக்கும் 

உடலுறவின் மூலம்தான் பிள்ளை பிறக்கும்என்ற நியதி  தற்போது இல்லை.

11 hours ago, goshan_che said:

1. செயற்கை கருத்தரிப்பு முதல் முதலில் எத்தனையாம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது?

யேசு எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

யேசு பிறந்த காலத்தில் - பிள்ளை பெறுவதற்க்கான ஒரே வழிமுறை உடலுறவில் ஈடுபடுவது மட்டுமே.

கவனம் - பேசாப்பொருள் எழுதப் போகிறேன். 🤬

வயது குறைந்தவர்கள், பேசாப்பொருளை படிப்பதால் மனம் குழம்ப கூடியவர்கள், பேசாப்போருளால் மத நம்பிக்கை புண்படக்கூடியவர்கள் எல்லோரும் அப்படியே கண்களை 🙈இறுக மூடிக்கொள்ளுங்கள். நான் ஏற்கனேவே சொல்லவில்லை என்று பின்னர் மட்டுறுத்துனர்களிடம் முறையிடக் கூடாது.🙊

முன்னொரு காலத்தில் இலங்கையில் சிறுமி ஒருவர் கர்ப்பமானார். சிறுமிக்கு பாலியல் அறிவு துளியும் இல்லை என்று பெற்றோருக்கு தெரியும். பாலியல் வன்புணர்வும் நடக்கவில்லை. எப்படி இவள் கர்ப்பமானார் என்று வைத்தியர்களும், போலிசும் ஆராய்ந்து கடைசியாக கண்டு பிடித்து விட்டார்கள்.

அவள் தனது அண்ணன் அணிந்து இருந்த சாரத்தை குளிர் காரணாமாக தான் கட்டிக்கொண்டு படுக்க போய் இருக்கிறாள். அண்ணன் சுயஇன்பம் அனுபவித்து விந்து விழிப்பாக இருந்த சாரம் அது. படுக்கையில் அவளும் பருவம் எட்டி பார்க்க சாரத்துடன் தானும் சுயஇன்பம் அனுபவித்தாள். ஆகா! நீச்சலுக்கு திரவம் கண்ட விந்துகள் பாய்ந்து நீந்தி கர்ப்பப்பைக்குள் நுழைந்து வித்தையை காட்டி விட்டன. அண்ணனால் தங்கை கர்ப்பமானாள்.

மரியம் (ஆங்கிலத்தில் மேரி என்பார்கள்) கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி. இந்து வழக்கில் சொல்லப் போனால் தேவதாசி. கோவிலில் தேவதாசிகளுக்கு நடப்பதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும்?

இனி செயற்கை கருத்தரிப்புக்கு வருவோம். எனது மாணவ பராயத்தில் நண்பர் ஒருவர் (யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து, பின்னர் நான் படித்த இடத்தில்) இந்த செயற்கை கருத்தரிப்பு துறையில் தேர்ச்சி பெற்று அங்கேயே அதை செய்தும் கொடுத்து வந்தார். அவர் எனக்கு விபரித்தன் படி (இருவரும் ஒரு தொழில் முயற்சி பற்றி பேசினோம்), இந்த ஆண்களின் விந்துகள் பெரும்பாலும் இறந்த விந்துகள். உயிர் உள்ள ஒன்று இரண்டை அடையாளம் கண்டு (உருப்பெருக்கி காட்டும் கருவியால் பார்த்து) அதை பெண்ணில் இருந்து பெற்ற முட்டையோடு கண்ணாடி தட்டில் வைத்து சேர்த்து, பின்னர் அவை இணைத்து பலுகி பெருக ஆரம்பித்த பின் அந்த சின்ன கருக்கட்டலை பெண்ணுக்குள் செலுத்தி உருவாவதே செயற்கை கருத்தரிப்பு. இதுவும் அந்த சிங்கள பெண்ணுக்கு நடந்ததும், மரியமுக்கு நடந்த கனவும் வித்தியாசமானவை.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மாங்குயில் said:

Collins dictionary யிலும், நான் சொன்ன பிரகாரம்தான் இருக்கிறது.

1. COUNTABLE NOUN

A virgin is someone who has never had sex.

அகராதிகள் அநேகமாக வேறுபடாது.
 
மாங்குயில்,

1. நீங்கள் சொன்னீர்கள் வெர்ஜின் என்றால் திருமணமாகாதவர் என்று. நான் சொன்னேன் வேர்ஜின் என்றால் உடலுறவில் ஈடுபடாதவர் என்று. 

2. நான் மேலே காட்டிய அத்தனை அகராதிகளும் நான் கூறிய விளக்கத்தை மட்டுமே தருகிறன. கொலின்ஸ் மட்டும் நீங்கள் கூறிய விளக்கத்தை - 2ம் அர்தமாக அமேரிக்க வழக்கு என்பதாக தருகிறது. 

3. அகராதிகள் எப்போதும் ஒரே மாதிரி சொல்வதில்லை. காரணம் பல ஆங்கில சொற்களுக்கு இங்கிலாந்தில் கொடுக்கும் அர்த்தமும் அமேரிக்காவில் கொடுக்கும் அர்த்தமும் வேறு, வேறு. ஆகவேதான் வட்டார வழக்கையும் குறிப்பிடும் பழக்கம் உண்டு.

4. வேர்ஜின் என்றால் உடலுறவில் ஈடுபடாத/ கை படாத ( virgin forest ) என்பதே பொதுவான அர்த்தம். கொலின்சை தவிர ஏனைய அகராதிகள் இந்த அர்தத்தை மட்டுமே கொடுக்கிறன. 

5. எது எப்படியாயினும், கத்தோலிக்க நம்பிக்கை யாதெனில் - யோசேப்போ அல்லது வேறு எந்த மானிடனதோ விந்துவினால் அன்றி, இறைவன் அருளால் மேரியின் வயிற்றில், இறைவனின் மகனான யேசு கருவாகினார் என்பதே. தாவீது வம்சத்தில் வந்த மரியிடம் தன் மகன் சூழ் கொள்ள வேண்டும் என ஆண்டவர் விரும்பினார் என்ற விளக்கம் கூட பைபிளில் வருகிறது. இந்த அதிசயப் பிறப்பு (மிராக்கிள் பேர்த்) கொள்கையை நம்புபவர்களுக்கு, நித்தி சூரியனை நிப்பாட்டினேன் என சொல்வதை பரிகாசிக்கும் தார்மீக உரிமை இல்லை என்பதே நான் கூறியது. இதற்குள் வேர்ஜின் என்ற சொல்லின் அர்த்தம் பற்றிய வியாக்கியானங்கள் தேவையில்லாத கதைகள். நீங்கள் முதலில் சொல்லியதால் பதில் கூறும் படி ஆகி விட்டது.

10 hours ago, மாங்குயில் said:

இப்படி கத்தோலிக்கர்கள் மாத்திரம் நம்புவதில்லை.

எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும் இப்படித்தான் நம்புகிறார்கள்.

யூத மதத்தில் உள்ள, சில பிரிவுகளும் இப்படித்தான் நம்புகின்றன.  ஆனால், இயேசுவை தேவ குமாரன் என்று யூதர்கள் யாரும் நம்புவதில்லை.

அதேபோலத்தான், முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.  இவர்களும், இயேசுவை தேவ குமாரன் என்று நம்புவதில்லை.

நான் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள் எனச்சொன்னேனே ஒழிய, ஏனைய கிறீஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் என்ன நம்புகிறார்கள் எனச் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மாங்குயில் said:

TRINITY  என்பது, பிதா, மகன், பரிசுத்த ஆவி மூன்றையும் குறிக்கிறது.

TRINITY,  மேரியைப்பற்றி பேசுவதில்லை.

TRINITY என்பது, பவுல் என்பவரின் கண்டுபிடிப்பு.

இயேசுவிற்கும் திரித்துவத்திற்கும் (TRINITY) எந்தவிதமான சம்பந்தமுமில்லை.

இன்னும் சொல்லப் போனால், கிறிஸ்தவத்திற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லாதவர்தான், இயேசு.

இதை, உங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.

டிரினிடி பற்றி நான் முன்பே எழுதியதுதான். அதில் எங்கேயும் நான் மேரி டிரினிடியின் ஓர் அங்கம் என எழுதவில்லை.

ஆனால் கத்தோலிக்க நம்பிக்கையில் நான் மேலே சொன்ன மிராகிள் பேர்த் - மேரியின் அந்தஸ்தை வணக்கத்துக்கு உரியவராக உயர்துகிறது. 

அவரின் அந்திமத்தில் மேரி இறைவனால் இறப்பின் பின் கல்லறையில் இருந்து மேலே எடுக்கப் பட்டார் என்றும் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்.

ஆவே மரியா என்ற மங்களவார்த்தை செபம் கத்தோலிக்கத்தில் மேரிக்கான அந்தஸ்து பற்றி எடுத்துக்காட்டப் போதுமானது.

மேரிக்கு இந்த அந்தஸ்து கிடைக்க அடிப்படைக்காரணம் - அதிசயப் பிறப்புக் கொள்கை.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
10 hours ago, மாங்குயில் said:

உங்களின் தற்துணிபை நிறுவுவதற்கு, நீங்களே உடன்படாத கால்மாக்ஸ் தத்துவங்களை இழுத்து என்ன பயன்?

 மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற கால்மாக்ஸ் தத்துவம், தங்களாலே உடன்படமுடியாமல், அடிபட்டுப் போகின்றது. 

நான் உடன்படாத கால்மாக்சின் கொள்கைகளை இழுக்கவில்லை.

மாக்சின் பல கொள்கைகளுடன் நான் உடன் படாவிட்டாலும்- இந்த கொள்கையுடன் உடன் படுவதால், இந்த விடயத்தில் மட்டும் அவரை இழுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

கவனம் - பேசாப்பொருள் எழுதப் போகிறேன். 🤬

வயது குறைந்தவர்கள், பேசாப்பொருளை படிப்பதால் மனம் குழம்ப கூடியவர்கள், பேசாப்போருளால் மத நம்பிக்கை புண்படக்கூடியவர்கள் எல்லோரும் அப்படியே கண்களை 🙈இறுக மூடிக்கொள்ளுங்கள். நான் ஏற்கனேவே சொல்லவில்லை என்று பின்னர் மட்டுறுத்துனர்களிடம் முறையிடக் கூடாது.🙊

முன்னொரு காலத்தில் இலங்கையில் சிறுமி ஒருவர் கர்ப்பமானார். சிறுமிக்கு பாலியல் அறிவு துளியும் இல்லை என்று பெற்றோருக்கு தெரியும். பாலியல் வன்புணர்வும் நடக்கவில்லை. எப்படி இவள் கர்ப்பமானார் என்று வைத்தியர்களும், போலிசும் ஆராய்ந்து கடைசியாக கண்டு பிடித்து விட்டார்கள்.

அவள் தனது அண்ணன் அணிந்து இருந்த சாரத்தை குளிர் காரணாமாக தான் கட்டிக்கொண்டு படுக்க போய் இருக்கிறாள். அண்ணன் சுயஇன்பம் அனுபவித்து விந்து விழிப்பாக இருந்த சாரம் அது. படுக்கையில் அவளும் பருவம் எட்டி பார்க்க சாரத்துடன் தானும் சுயஇன்பம் அனுபவித்தாள். ஆகா! நீச்சலுக்கு திரவம் கண்ட விந்துகள் பாய்ந்து நீந்தி கர்ப்பப்பைக்குள் நுழைந்து வித்தையை காட்டி விட்டன. அண்ணனால் தங்கை கர்ப்பமானாள்.

மரியம் (ஆங்கிலத்தில் மேரி என்பார்கள்) கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி. இந்து வழக்கில் சொல்லப் போனால் தேவதாசி. கோவிலில் தேவதாசிகளுக்கு நடப்பதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும்?

இனி செயற்கை கருத்தரிப்புக்கு வருவோம். எனது மாணவ பராயத்தில் நண்பர் ஒருவர் (யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து, பின்னர் நான் படித்த இடத்தில்) இந்த செயற்கை கருத்தரிப்பு துறையில் தேர்ச்சி பெற்று அங்கேயே அதை செய்தும் கொடுத்து வந்தார். அவர் எனக்கு விபரித்தன் படி (இருவரும் ஒரு தொழில் முயற்சி பற்றி பேசினோம்), இந்த ஆண்களின் விந்துகள் பெரும்பாலும் இறந்த விந்துகள். உயிர் உள்ள ஒன்று இரண்டை அடையாளம் கண்டு (உருப்பெருக்கி காட்டும் கருவியால் பார்த்து) அதை பெண்ணில் இருந்து பெற்ற முட்டையோடு கண்ணாடி தட்டில் வைத்து சேர்த்து, பின்னர் அவை இணைத்து பலுகி பெருக ஆரம்பித்த பின் அந்த சின்ன கருக்கட்டலை பெண்ணுக்குள் செலுத்தி உருவாவதே செயற்கை கருத்தரிப்பு. இதுவும் அந்த சிங்கள பெண்ணுக்கு நடந்ததும், மரியமுக்கு நடந்த கனவும் வித்தியாசமானவை.

நீங்கள் இங்கே எழுதியதில் எதிலுமே எனக்கு மாற்றுக்கருத்திலை. குறிப்பாக மேரி பற்றி நீங்கள் எழுதியவை உங்கள் கொள்கை நேர்மையை காட்டுகிறன.

ஆனால் அந்த சிங்கள சிறுமி பற்றியது - நான் அறிந்தவரையில் இந்த முறையில் கர்பமாக முடியாது. விந்தணுகள் பெண்ணின் உடலில் பலத்த போராட்டத்தின் பின்னே, ஒரே ஒரு விந்து முட்டையை அடையும். குறிப்பிட்டளவு அழுத்தத்துடன் பெண்ணிற்குள் செலுத்தப்படும் விந்துக்கே இந்த நிலை என்றால் - சாரத்தில் தேங்கியதற்கெல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல 😂 

எனக்கென்னமோ அந்த அண்ணன்காரனை கூட்டி வந்து பொறி கலங்க ரெண்டு அறை விட்டிருந்தால் சூட்சுமம் வெளித்திருக்கும் என்றே படுகிறது.

ஒரு அசிங்கம் நடந்த பின் அதை ஏற்கமனமில்லாமல் - சாரத்தின் மேல் பழியை போட்டுள்ளார்கள்.

இந்த வகையில் யோசித்துப்பார்த்தாலும் மேரிக்கும், இந்த சிறுமிக்கும் நடந்ததுக்கும் அதிக வேறுபாடில்லைத்தான்.

பிகு: நல்ல வேளையாக சிங்கள சிறுமி என எழுதினீர்கள். இதையே தமிழ் சிறுமி என எழுதியிருந்தால் - தமிழ் சேனாக்கள் உங்களை குதறி இருப்பார்கள்😂

ஜெய் நித்யாநந்தம்

ரஞ்சிதா...சே....மங்களம் உண்டாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

டிரினிடி பற்றி நான் முன்பே எழுதியதுதான். அதில் எங்கேயும் நான் மேரி டிரினிடியின் ஓர் அங்கம் என எழுதவில்லை.

****ஆனால் கிறீஸ்த theology, holy trinity, கத்தோலிக்கத்தில் மேரிக்கு இருக்கும் அந்தஸ்தை விளங்கி கொண்டால்- மேரி உடலுறவு இன்றி யேசுவை கருத்தரிதார் என்றே கிறீஸ்தவ மதம் சொல்கிறது என்பது புரியும். *****
 
இது உங்கள் பின்னூட்டம்.

TRINITY என்ற கோட்பாட்டில்,  நீங்கள் குறிப்பிட்டதுபோல மேரிக்கு எந்த அந்தஸ்தும் இல்லை. 

TRINITY  என்பது - இயேசு, மகன், தூய ஆவி பற்றி பேசும் கொள்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அவரின் அந்திமத்தில் மேரி இறைவனால் இறப்பின் பின் கல்லறையில் இருந்து மேலே எடுக்கப் பட்டார் என்றும் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்.

கத்தோலிக்கர்கள் பாவிக்கும் பைபிளில்கூட, நீங்கள் குறிப்பிடுவதுபோல இல்லை.

அப்படி இருந்தால், மேற்கோள்காட்டிச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

நான் உடன்படாத கால்மாக்சின் கொள்கைகளை இழுக்கவில்லை.

மாக்சின் பல கொள்கைகளுடன் நான் உடன் படாவிட்டாலும்- இந்த கொள்கையுடன் உடன் படுவதால், இந்த விடயத்தில் மட்டும் அவரை இழுக்கிறேன்.

கால்மாக்ஸ் கொள்கை தோற்றுப்போனதுபற்றி, கவலை இல்லை என்றுசொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லையென்று சொல்கிறீர்கள்.

உங்களுக்குஉடன்பாடில்லாத மாக்ஸ் கொள்கையில், மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற வாசகம் மட்டும் உங்களுக்கு பொருந்திப் போகுதா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மாங்குயில் said:

****ஆனால் கிறீஸ்த theology, holy trinity, கத்தோலிக்கத்தில் மேரிக்கு இருக்கும் அந்தஸ்தை விளங்கி கொண்டால்- மேரி உடலுறவு இன்றி யேசுவை கருத்தரிதார் என்றே கிறீஸ்தவ மதம் சொல்கிறது என்பது புரியும். *****
 
இது உங்கள் பின்னூட்டம்.

TRINITY என்ற கோட்பாட்டில்,  நீங்கள் குறிப்பிட்டதுபோல மேரிக்கு எந்த அந்தஸ்தும் இல்லை. 

TRINITY  என்பது - இயேசு, மகன், தூய ஆவி பற்றி பேசும் கொள்கை.

இது என் பின்னோட்டம்தான் -ஆனால் இதை நீங்கள் விளங்கி கொண்ட விததுக்கு நான் பொறுப்பல்ல😂

டிரினி என்றால் மூன்று, திரித்துவம். பிதா, சுதன், பரிசுத்த ஆவி மூன்றுமே திரித்துவம்.

ஆனால் பிதாவின் (ஆண்டவர்) சுதன் (யேசு) பிறப்பிக்கப் பட்ட பெண் மேரி. அதனால் மேரிக்கு கிட்டத்தட்ட யேசுவுக்கு நிகரான அந்தஸ்தை கத்தோலிக்கம் கொடுக்கிறது.

ஏன் இந்த அந்தஸ்தை கொடுக்கிறது? ஏனென்றால் “தூய மேரி” “கன்னி மேரி” அதிசயப் பிறப்பின் கருவியாக கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்டதன் மூலம் - “ஆசீர்வதிக்கப்பட்டவர்” ஆகியுள்ளார்.

மேரியின் அதிசயப் பிள்ளைப்பேறு இல்லாமல்,  யேசு பூவுலகில் பிறந்திருக்க முடியாது. யேசு திரித்துவத்தின் ஓர் அங்கம்.

இதுதான், கத்தோலிக்கத்தில் மேரிக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தும், திரிய்துவத்துக்கும் மேரிக்கும் இடையான தொடர்பும். இதுதான் கத்தோலிக்க தியோலொஜி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

1. நீங்கள் சொன்னீர்கள் வெர்ஜின் என்றால் திருமணமாகாதவர் என்று. நான் சொன்னேன் வேர்ஜின் என்றால் உடலுறவில் ஈடுபடாதவர் என்று. 

noun

a person who has never had sexual intercourse.
an unmarried girl or woman.

VIRGIN -  என்றால், திருமணமாகாத பெண், உடலுறவு கொள்ளாத பெண் என்றும் அகராதி சொல்கிறது.

நான் எனது முதல் பின்னூட்டத்தில் ஏற்கனவே சொல்லி விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மாங்குயில் said:

கத்தோலிக்கர்கள் பாவிக்கும் பைபிளில்கூட, நீங்கள் குறிப்பிடுவதுபோல இல்லை.

அப்படி இருந்தால், மேற்கோள்காட்டிச் சொல்லுங்கள்.

ஐயா,

உங்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கும் அளவு எனக்குப் பொறுமை இல்லை. நான் ஊழியக்காரனும் இல்லை😂.

நேற்று நான் ஹோலி டிரினிடி பற்றி எழுதியதன் பின், 24 மணி நேரமாக அதை பற்றி ஆராய்ந்து அறிந்தது போல்😂, இன்றைக்கு இன்னுமொன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

Assumption of Mary என்பது என்ன என ஆராய்ந்து பாருங்கள். அல்லது அருகில் இருக்கும் திருச்சபைக்கும் போகலாம். ஒரு கோப்பியும் தந்து, விடிய, விடியச் சொல்லுவார்கள்.

10 minutes ago, மாங்குயில் said:

கால்மாக்ஸ் கொள்கை தோற்றுப்போனதுபற்றி, கவலை இல்லை என்றுசொல்கிறீர்கள்.

அந்தக் கொள்கை மீது எனக்கு உடன்பாடும் இல்லையென்று சொல்கிறீர்கள்.

உங்களுக்குஉடன்பாடில்லாத மாக்ஸ் கொள்கையில், மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற வாசகம் மட்டும் உங்களுக்கு பொருந்திப் போகுதா?

பொருந்துதே பாஸ்? என்ன செய்யச் சொல்றீங்க 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, goshan_che said:

நேற்று நான் ஹோலி டிரினிடி பற்றி எழுதியதன் பின், 24 மணி நேரமாக அதை பற்றி ஆராய்ந்து அறிந்தது போல்😂, இன்றைக்கு இன்னுமொன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

Assumption of Mary என்பது என்ன என ஆராய்ந்து பாருங்கள். அல்லது அருகில் இருக்கும் திருச்சபைக்கும் போகலாம். ஒரு கோப்பியும் தந்து, விடிய, விடியச் சொல்லுவார்கள்.

TRINITY என்பது என்னவென்று அறியாமலே,  திரித்துவத்தில் மேரியின் அந்தஸ்து பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

எழுதியபின், தான் எழுதியது சரியா, பிழையா என்பதை தீர்மானிக்க  24 மணி நேரமாக அதைப்பற்றி, Google இல் ஆராய்ந்து இருக்கிறீர்கள்.

திரித்துவத்தில், மேரியின் பங்கோ, அந்தஸ்தோ இல்லயென்று அறிந்தபின்,  Assumption of Mary என்ற கொள்கைக்குப் போய் விட்டீர்கள்.

Assumption of Mary என்றால் என்ன சாமான்?

பைபிளில் இருந்து, எழுதுங்கள். 

கூகிளில் இருந்தல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

😂 சரி. அப்படியே ஆகட்டும்🙏🏾

நன்றி வணக்கம்.

ஜெய் நித்யாநந்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

பொருந்துதே பாஸ்? என்ன செய்யச் சொல்றீங்க 😂

என்ன செய்வதற்கு?

கால்மாக்ஸ் கொள்கையில் உடன்பாடு இல்லையென்று  சொன்னதுபோல், மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற கால்மாக்ஸ் வாசகமும் உடன்பாடு இல்லையென்று சொல்லுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மாங்குயில் said:

என்ன செய்வதற்கு?

கால்மாக்ஸ் கொள்கையில் உடன்பாடு இல்லையென்று  சொன்னதுபோல், மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்ற கால்மாக்ஸ் வாசகமும் உடன்பாடு இல்லையென்று சொல்லுங்கள்.  

காசா, பணமா, ஆசை பட்டு கேக்கிறியள்,

‘மதம் கீழ்தரமான போதையே இல்லை. அப்படி கால் மார்க்ஸ் சொன்னது, பிழை, பிழை, முழுப்பிழை’.

ஒகேயா பாஸ்? 😂

ஜெய்நித்யாநந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிக்கு ஒரு தமிழனை, சிறுபான்மை மதத்தை பின்பற்றுபவரை அடிக்கும் மற்றும் அதனோடிணைந்த சம்பவங்கள் இரண்டு விடயங்களை எங்களுக்கு சொல்லுகின்றது.

சட்டம், அதிகாரம் இரண்டையும் பிக்கு தனது விருப்பம் போல் பயன்படுத்துகிறார்.

அவ்வாறு பயன்படுத்துவதற்கான துணிவை அவருக்கு வழங்கியது எது ?

உண்மையில் மேற்கூறிய இரண்டையும்தான் நாங்கள் கேள்விக்குள்ளாக்கி இருத்தல் வேண்டும்.

நாங்கள் இங்கே என்ன செய்கிறோம் ?

எங்களுக்குள் மறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவருடைய நம்பிக்கைகளை மற்றவர் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது எங்களுக்கிடையே உள்ள புரிதலின்மையையும், ஒற்ருமையின்மையையும், எம் இனத்திற்குள் உள்ள சக மதத்தின் மீதான வெறுப்பையும் காட்டுகிறது. 

இந்தப் போக்கு சரிதானா ?

ஒருவேளை எமக்கு சுய ஆட்சி கிடைத்தால் நிலைமை என்ன ஆகும் ?

நினைக்கவே வெட்கமாக , அருவருப்பாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

காசா, பணமா, ஆசை பட்டு கேக்கிறியள்,

‘மதம் கீழ்தரமான போதையே இல்லை. அப்படி கால் மார்க்ஸ் சொன்னது, பிழை, பிழை, முழுப்பிழை’.

ஒகேயா பாஸ்? 😂

ஜெய்நித்யாநந்தம்

கால்மாக்ஸ் உயிருடன் இருந்தால், மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்று சொன்னதை, எப்போதோ வாபஸ் வாங்கி இருப்பார்.

சிலர், தான் முன்னெடுத்த 'தற்துணிபை'  விடுவதற்குத் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஒரு பிக்கு ஒரு தமிழனை, சிறுபான்மை மதத்தை பின்பற்றுபவரை அடிக்கும் மற்றும் அதனோடிணைந்த சம்பவங்கள் இரண்டு விடயங்களை எங்களுக்கு சொல்லுகின்றது.

சட்டம், அதிகாரம் இரண்டையும் பிக்கு தனது விருப்பம் போல் பயன்படுத்துகிறார்.

அவ்வாறு பயன்படுத்துவதற்கான துணிவை அவருக்கு வழங்கியது எது ?

உண்மையில் மேற்கூறிய இரண்டையும்தான் நாங்கள் கேள்விக்குள்ளாக்கி இருத்தல் வேண்டும்.

நாங்கள் இங்கே என்ன செய்கிறோம் ?

எங்களுக்குள் மறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவருடைய நம்பிக்கைகளை மற்றவர் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது எங்களுக்கிடையே உள்ள புரிதலின்மையையும், ஒற்ருமையின்மையையும், எம் இனத்திற்குள் உள்ள சக மதத்தின் மீதான வெறுப்பையும் காட்டுகிறது. 

இந்தப் போக்கு சரிதானா ?

ஒருவேளை எமக்கு சுய ஆட்சி கிடைத்தால் நிலைமை என்ன ஆகும் ?

நினைக்கவே வெட்கமாக , அருவருப்பாக இருக்கிறது.

மிகவும் காத்திரமான கருத்து. 

1. இங்கே பிக்குவுக்கு இருக்கும் இந்த சுதந்திரம், துணிவு இரண்டுமே பெளத்த-சிங்கள மேலாதிக்கத்தின் மீதே கட்டி எழுப்பப் பட்டுள்ளது.

2009 ற்கு முன்னரும் இதே பிக்கு இதே மட்டகளப்பு மங்களாராமயவில்தான் இருந்தார். பல வருடமாக. ஆனால் அப்போ அவர் பேசியதெல்லாம் தமிழ்-சிங்கள மக்களின் ஒற்றுமை பற்றி😂.

2009 ற்கு பின் நல்ல வாய், நாற வாய் ஆகிவிட்டது.

2. சுயாட்சி கிடைதால் கதை அதே கதைதான். தமிழ் தலைவர்களில் பிரபா ஒருவருக்கு மட்டுமே எம் பிரதேச, சாதி, மத வாதங்களை அடக்கி ஒரு மதச்சார்பற்ற அரசை நிறுவும் இயலுமை இருந்தது. அந்த வெற்றிடம் நிரப்பப் படாமல், கிடைக்கும் சுயாட்சி - குரங்கின் கைப் பூமாலை போல் ஆகவே வாய்புகள் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.