Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 killed in crane mishap at Kamal Haasans Indian-2 shooting spot

இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

3 killed in crane mishap at Kamal Haasans Indian-2 shooting spot

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

3 killed in crane mishap at Kamal Haasans Indian-2 shooting spot

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/3-killed-in-crane-mishap-at-kamal-haasan-s-indian-2-shooting-spot-377592.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்!

72.jpg

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களை நமது மின்னம்பலம் தினசரியில் முந்நூறு - மூவாயிரம் - முப்பதாயிரம்: கமல் - ஷங்கரின் பிரமாண்டம்! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். பல நூறு குதிரைகள், வீரர்கள் சேர்ந்து பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளை தனித்தனியாகப் படமாக்கி வந்தனர். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிலர் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்புக்கு இடையே பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இண்டஸ்ட்ரியல் கிரேன் எனப்படும் மிகப்பெரிய கிரேனைப் பயன்படுத்தி அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. கிரேன் முழுமையாக நகர்த்தப்பட்டதன் பின்னரே அதனை மேலே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் கிரேனை கீழே இறக்கி, அதனை நகர்த்தி பின்னர் மீண்டும் மேலே ஏற்றுவது என்பது படப்பிடிப்புக்கு அதிக சிரமமான வேலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 19) ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அறிவுறுத்தலையும் மீறி 150 அடி உயரத்தில் கிரேன் மேலே இருக்கும் நிலையிலேயே அதனை நகர்த்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

72a.jpg

ஆனால், அதிக பாரம் கொண்ட கிரேன் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது. அதில் கீழே பலருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஒரு உதவி இயக்குநர், புரொடக்‌ஷன் டீமில் வேலை பார்க்கும் ஒருவர், ஒரு செட் அசிஸ்டன்ட் என மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 4 அடி தொலைவில் இருந்த கமல்ஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசனை உடனடியாக அவரது வீட்டிற்கு செல்ல அனைவரும் வற்புறுத்தினர். ஆனால் அவர் அங்கிருந்து செல்வதற்கு மறுத்துவிட்டார். மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான கமல்ஹாசன் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார்.

 

இந்த சம்பவம் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

 

https://minnambalam.com/entertainment/2020/02/19/72/accident-in-indian-2-shooting-spot

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியன் 2Twitter

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

"நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியன் 2Twitter

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கும் படங்களை எடுக்கும்போது கேமரா மேன் பெரிய லைட்கள் வைத்து காட்சியமைக்க நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, கிரேனில் லைட்களை கட்டச் சொல்லி ஒளிப்பதிவு செய்கிறார்கள். நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலும் அதுதான் நடந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த வகை கிரேன்கள் ஓரளவிற்கு தான் எடையைத் தாங்கும். இன்னும் லைட் வையுங்கள் என்று சொல்லும் போது லைட் மேன் என்ன செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். 

"அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதே கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்துள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஷூட்டிங்கிற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள். கிரேன் ஆப்ரேட் செய்பவர் இதற்கு மேல் எடை அதிகமானால் கிரேன் விழுந்துவிடும் என எச்சரித்ததாக அங்கே பணியில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன என்பது அங்கே இருந்தவர்களுக்குத் தான் தெரியும்."

சித்தரிப்புப் படம்Getty Images சித்தரிப்புப் படம்

இது முதல்முறை அல்ல 

சென்னை புறநகரிலுள்ள இந்த படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருவதாக செந்தில் குமார் குற்றஞ்சாட்டுகிறார். 

"எங்களுடைய லைட் மேன் ராமராஜனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிரேன் கால் மேல் விழுந்துள்ளது. இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் தான் அவர் இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவை லைக்கா நிறுவனம் தான் செய்கிறது. லைட் மேன் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. இனி அவருடைய வாழ்வாதாரம் என்னவாகும் என்பதே கேள்விக்குறி தான்" என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல என்றும், பெரும்பாலான சமயங்களில் இதுபோன்ற விபத்துகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போய்விடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?Twitter

"சமீபத்தில் பிகில் படப்பிடிப்பின் போது, இதே மாதிரி அதிக அளவில் லைட் அமைக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரோப் அறுந்து விழுந்து எலக்ட்ரீஷியன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பிரபலமான நபர் இறந்திருந்தால் அந்த செய்தி பெரிய அளவில் வெளியில் பேசப்பட்டிருக்கும். தொழிலாளி இறந்துள்ளதால் அது வெளியே தெரியவில்லை. பிகில் படத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடாக என்ன செய்தார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை."

"கிட்டத்தட்ட 20 கிரேன் ஆப்ரேட்டர்கள் தற்போது விபத்து நடந்த இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொல்கிற வேலையை செய்வது தான் தொழிலாளர்களின் வேலை. காலையில் 5 மணிக்கெல்லாம் கிளம்பி ஷூட்டிங்கிற்கு லைட் கொண்டு சென்று மாலை ஷூட்டிங் முடியும் வரை இருந்துவிட்டு வரும் லைட் மேனிற்கு 850 ரூபாய் தான் சம்பளம். அந்த சம்பளம் கூட முழுவதுமாக வந்து சேரவில்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் லைட் மேன்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது" என்று செந்தில் குமார் மேலும் கூறுகிறார்.
 

https://www.bbc.com/tamil/india-51568475

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூடாரம் என்ன

மேலே நிழல் தெரிந்தது.. வெளியே ஓடினேன்.. சப்பையான இருக்கை.. இந்தியன் 2 விபத்தை விளக்கிய கமல்!

இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார்.

நேற்று முதல் நாள் இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார். அதன்படி, சரியாக இந்த விபத்து நடந்த போது கமல் விபத்து நடந்த பகுதியில்தான் இருந்திருக்கிறார். அப்போது சரியாக கிரேன் ஆடும் சத்தம் கேட்டு இருக்கிறார். வெளியே இருந்த பலரும் கத்தி இருக்கிறார்கள்.

கமல் எப்படி

இதையடுத்து கமல் இருந்த கூடத்தின் மேல் பெரிய நிழல் தெரிந்துள்ளது. அவர் இருந்த கூடாரத்தை நோக்கித்தான் வேகமாக கிரேன் சரிந்துள்ளது. இந்த கூடாரத்தை பார்த்ததும் அங்கிருந்து கமல் வேகமாக வெளியே வந்து இருக்கிறார். கமலுடன் அப்போது அங்கே காஜல் அகர்வால் இருந்துள்ளார். அவரும் கூட அங்கிருந்து அப்படியே எகிறி குதித்து வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த பின்தான தெரிந்து உள்ளது, மிகப்பெரிய கிரேன் ஒன்று கீழே விழுந்தது.மொத்தமாக வேகமாக கிரேன் சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்துக்கு பின் கிரேன் விழுந்த பகுதிக்கு சென்று கமல்ஹாசன் பார்த்து இருக்கிறார். அந்த பகுதியில் அவர் இருந்த இருக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது. அவர் இருக்கையே மொத்தமாக சப்பையாகி உள்ளது.

இந்த கூடாரத்தில்தான் பலியான மூன்று பேரும் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்த காட்சிக்காக உள்ளே இருந்து சீன் எழுதிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் மீது கிரேன் மொத்தமாக விழுந்து நொறுங்கி இருக்கிறது. இந்த விபத்து தனக்கு பெரிய மனஉளைச்சலை தந்ததாக அவர் படக்குழுவிடம் பேசி இருக்கிறார்.

Read more at: https://tamil.filmibeat.com/news/indian-2-accident-kamal-haasan-explained-the-nightmare-068178.html

  • கருத்துக்கள உறவுகள்

தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் தலை உருளுது.. இருக்கும் பணத்தை வைத்து கோர்ட்டு .. கச்சேரிகளில் இருந்து வெளியில் வருவார்..👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் தலை உருளுது.. இருக்கும் பணத்தை வைத்து கோர்ட்டு .. கச்சேரிகளில் இருந்து வெளியில் வருவார்..👍

"லைக்கா" நிறுவனர் சுபாஸ்கரன்.... ஈழத்து தமிழர் என்று நினைக்கின்றேன்.
இங்கிலாந்தில் வசிப்பவர், இதற்கு... எப்படி.. நேரடி பொறுப்பாக முடியும்.

பணம்.... ஒரு, மரணத்திற்கு ஈடாகாது...என்றாலும்... 
அந்த விபத்தில், மரணம் அடைந்தவர்களுக்கு...
இரண்டு கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியிருப்பதே...
பெரிய.. விடயம் தானே....

தமிழக அரசு.... கூட, 
இப்படியான... தற்செயல் விபத்துக்களுக்கு....
ஒரு, சில லட்ச ரூபாய்களை கொடுத்து விட்டு, பேசாமல் இருந்து விடும்.
(குழாய் கிணற்றில்  விழுந்து இறந்த சிறுவனின்  பெற்றோருக்கு, 25 லட்சம்  என நினைக்கின்றேன்)

சுபாஸ்கரனுக்கு.... மட்டும், ஏன் இவ்வளவு கடுமையான வழக்குப் பதிவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

"லைக்கா" நிறுவனர் சுபாஸ்கரன்.... ஈழத்து தமிழர் என்று நினைக்கின்றேன்.
இங்கிலாந்தில் வசிப்பவர், இதற்கு... எப்படி.. நேரடி பொறுப்பாக முடியும்.

பணம்.... ஒரு, மரணத்திற்கு ஈடாகாது...என்றாலும்... 
அந்த விபத்தில், மரணம் அடைந்தவர்களுக்கு...
இரண்டு கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியிருப்பதே...
பெரிய.. விடயம் தானே....

தமிழக அரசு.... கூட, 
இப்படியான... தற்செயல் விபத்துக்களுக்கு....
ஒரு, சில லட்ச ரூபாய்களை கொடுத்து விட்டு, பேசாமல் இருந்து விடும்.
(குழாய் கிணற்றில்  விழுந்து இறந்த சிறுவனின்  பெற்றோருக்கு, 25 லட்சம்  என நினைக்கின்றேன்)

சுபாஸ்கரனுக்கு.... மட்டும், ஏன் இவ்வளவு கடுமையான வழக்குப் பதிவுகள்

இருக்கிற இடத்தில கறக்கிறதுக்குத்தான்...... வேறென்ன......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் கோரிக்கை.!

KAMAL.jpg

படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தையடுத்து கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த பின்பே படப்பிடிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் முழுப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்.

எந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என பரிசோதிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.vanakkamlondon.com/லைக்கா-நிறுவனத்திடம்-கமல/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.