Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம்

Featured Replies

திங்கள் 21-05-2007 06:27 மணி தமிழீழம் [தாயகன்]

மீனவச் சிறுவனின் அதிரடிச் செவ்வியால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ள இந்திய உளவுப் பிரிவு

தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 11பேர் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, மார்ச் மாத இறுதிப் பகுதியில் கன்னியாகுமரி, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் கடலில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இவை தவிர, கடற்றொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும், படுகாயப்படுத்தப்பட்டும் வந்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் விடுதலைப் புலிகளே காரணம் என, தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பதிகாரி முகர்ஜி அண்மையில் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இது ஊடகங்களில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறை, தமிழ்நாடு அரசு என்பன இணைந்து விடுதலைப் புலிகள் மீது வேண்டுமென்றே சுமத்திய பழியும், கபட நாடகமும் கடத்தப்பட்டவர்களுள் ஒருவரான சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஊடகங்களுக்கு நேற்று கருத்துக்கூறிய அனித்தன் என்ற இந்தச் சிறுவன், சிறீலங்கா கடற் படையினரே தம்மைக் கடத்தியதாகவும், வீடு ஒன்றில் தங்க வைத்து மிரட்டியதாகவும், நடந்த சம்பவங்களை விபரமாக விளக்கியுள்ளார்.

சிறுவனின் இந்த வாக்குமூலத்திற்கு தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான தமிழ்நாடு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருப்பதால், இந்திய உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறை, தமிழ்நாடு அரசு என்பன சங்கடத்தில் ஆழ்ந்துள்ளன.

12 கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை உடனடியாக அழைத்துச்சென்ற கியூ பிரிவு காவல்துறையினரும், உளவுப் பிரிவினரும் ஊடகங்களுக்கு உண்மையைக் கூறக்கூடாதென எச்சரிக்கை விடுத்திருந்ததும் தற்பொழுது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாடு திரும்பிய கடத்தப்பட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்த தமிழ்நாட்டின் முதல்வர் மு. கருணாநிதி, தமிழ்நாடு - தமிழீழ மக்களின் உறவு நிலையை உணர்ந்து, நடந்த உண்மையை முறையாக வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தவறி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாக்கு நீரிணையில் கூட்டுக் கடற் கண்காணிப்பிற்கு இந்தியாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக் கொன்றதுடன், தாக்குதலும் மேற்கொண்டிருந்தனர். ஆத்துடன், கடத்திச்சென்று தடுத்தும் வைத்திருந்தனர்.

ஆனால் இவற்றை விடுதலைப் புலிகளே செய்ததாக சிறீலங்கா அரசு கூறி வந்தது. சிறீலங்கா அரசின் பரப்புரைக்கு ஆதரவாக தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, இந்திய - தமிழ்நாடு அரசுகளும், உளவுப் பிரிவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pathivu

  • தொடங்கியவர்

மதிப்பிற்குரிய சிறிலங்கா கடற்படைக்கு

அடுத்த முறை நமது மீனவர்களை கடத்தும் போது சிறுவர்கள் இடம் பெறாது பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் நமக்குச் சிக்கல்களாக உள்ளது. அப்படியும் சிறுவர்களை கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்.. உங்களுக்கு சொல்லியா தரவேண்டும். சுட்டுத் தள்ளி விடுங்கள். புலிகள் அவர்களை தமது இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும் பிறகு ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும் நாம் எழுதிக் கொள்கிறோம். வேண்டுமானால் இறப்பதற்கு இருநாட்களுக்கு முன்னர் நாம் அவர்களோடு சட்டர்லைட் போனில் பேசியதாகவும் சொல்ல முடியும். அடுத்த முறை அதிகம் பேரைப் பிடித்துச் சென்று நாம் சொல்லும் திகதிகளில் விடுதலை செய்யவும்.உங்களால் முடியாவிட்டால் நமது கடற்படையே அதை செய்வதை விட வேறு வழியில்லை.

முகர்ஜி

தமிழக காவல்துறை தலைவ்வர்

மீனவர்களை ரெடி பண்ணின காவல்துறை சிறுவனை கணக்கிலெடுக்காமல் விட்டுட்டினம் போல கிடக்கு அதுதான் சிறுவன் போட்டுடைச்சிட்டான். :(

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்குக் காலம், "றோவினர், சிறிலங்கா அரசோடு சேர்ந்து நின்று நாடகம் நடத்துகின்றனர் என்பது வெளிப்படையானது. அதை இப்போதும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வடயம் அவதானித்தோமானால், இந்த நாடகத்தை எவ்வளவு தூரம் செயற்படுத்தியுள்ளார்கள் என்பது புலனாகும்.

காவல்துறை அதிகாரி நேரடியாகப் புலிகளைச் சாடினால் வெறுப்பினால் தான் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார் என்று மக்கள் நினைப்பார்கள் என்று, புலிகளைத் நேரடியாகத் தப்பாகப் பேசாமல், புலிகளுக்கு மீனவரகளைக் கொல்லவேண்டிய தேவை வந்ததால் தான் கொன்றார்கள் என்பது போல கதையை இயற்றினார்.

அது போல, 12 மீனவர்கள் கடத்தின விடயத்தில் தொடக்கத்தில் புலிகள் மீது சந்தேகத்தைப் பட்டும் படாமலும் கதைத்தார். பின்னர் தாங்கள் தொடர்பு கொண்டதாகவும், இருப்பது உண்மை என்றும் நம்ப வைக்க கதைத்தார். பிற்பாடு புலிகள் தான் விடுதலை செய்தது போலவும் உருவாக்கினார். ஆனால் அந்த மாயை உடைக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

ஒவ்வொரு தடவையும் ஈழத்தவரைப் பிரிக்க வைக்க செய்கின்ற ஒவ்வொரு சதிகளும் பிரமாண்டமாக திட்டமிடப்படுகின்றன என்பதை அனைத்து தமிழக மக்களும் புரிந்து கொண்டாலே எல்லாத் தடையையும் வெற்றி கொள்ள இலகுவாக இருக்கும்.

பா.ம.கவி.ன் தமிழோசையில் வெளிவந்த செய்தி

TamilOsai_21May2007.jpg

பதிவு இடையிடையே தெளிவற்று உள்ளதென்றாலும் இப்போதைக்கு

http://www.yarl.com/videoclips/view_video....076b1c5722a46aa

எங்கப்பா பெருமைப்படுர இந்தியன காணோம்???

நாங்கள்தான் பெரிதாக கூச்சல் போடுகிறோமே தவிர, வேறு எந்த சர்வதேச ஊடகங்களிலும் இது வெளியாகவில்லை. தமிழ்நெற்றில் கூட வெளியாகவில்லை.

குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலுள்ள சில பிரபலமன ஊடகங்களில் இச் செய்தி வெளிவந்தால் வெற்றியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கப்பா பெருமைப்படுர இந்தியன காணோம்???

அவர் தினமலரும் துக்ளக்கும் படிக்கிறாரம்? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு நிறய தண்ணி ஓடினாளும்

நாய் நக்கித்தான் குடிக்குமாம்

நிறய = நிறைய

ஓடினாளும் = ஓடினாலும்

தமிழை சரிவரப் பழகுவோம் /பழக்குவோம்

  • தொடங்கியவர்

கடத்தியது இலங்கை கடற் படையே;

மீண்ட சிறுவன் பரபரப்பு தகவல்!

மே 22, 2007

ராமேஸ்வரம்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களைக் கடத்தியது இலங்கை கடற்படைதான் என்று விடுதலையாகி சொந்த ஊர் திரும்பியுள்ள மீனவ சிறுவன் அனிஸ்டன் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சைமன் என்கிற மீனவர் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்கள் உள்பட 12 பேர் 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக டிஜிபி முகர்ஜி தெரிவித்தார்.

அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 14 வயது சிறுவன் அனிஸ்டன் உள்ளிட்ட 11 பேரும் ராமேஸ்வரம் அருகே விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்தது. முதல்வரையும் அவர்கள் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் அனிஸ்டனை நிருபர்கள் சந்தித்துப் பேசியபோது, அவன் பரபரப்பு தகவலை வெளியிட்டான். அனிஸ்டன் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, முகமூடி அணிந்த சிலர் பிடித்து சென்றனர்.

இலங்கைக்கு கொண்டு சென்ற அவர்கள் அடுத்த நாள் விடுவிப்பதாக கூறினர். ஆனால் 68 நாட்களாக அடைத்து வைத்தனர். நாங்களே சமைத்து சாப்பிட்டோம்.

வெள்ளிக்கிழமை சிலர் எங்களை இலங்கை கடற் படை படகில் ஏற்றினர். அந்த படகில் முதலில் எங்களை கடத்தி சென்ற முகமூடி ஆட்களும் இருந்தனர்.

ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, இலங்கை படையினர் துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது எங்கள் படகில் இருந்தவர்கள் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு நாங்களும் இலங்கை படையினர்தான், மீனவர்களை விடுவிக்க செல்கிறோம் என கூறினர்.

அதன்பிறகு அந்த கப்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளான் அனிஸ்டன். அனிஸ்டன் உண்மைகளைக் கூற ஆரம்பித்தவுடன் அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவனை தொடர்ந்து பேச விடாமல் தடுத்து விட்டனர்.

விடுதலைப் புலிகள்தான் கடத்தினர் என்று தமிழக காவல்துறை திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் இலங்கை கடற்படைதான் தங்களைக் கடத்திச் சென்றதாக அனிஸ்டன் கூறியுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மொத்தத்தில் இந்த மீனவர் கடத்தல் மற்றும் விடுதலை பெரும் மர்மக் கதையாகவே உள்ளது.

http://thatstamil.oneindia.in

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையும் இந்தியா தேவையில்லாமல் சிங்களப்படைகளால் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றது.

சிங்களப்படையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப்புலிகளின் மீது குற்றத்தைச் சுமத்தி, உண்மையை மறைக்க முயன்று பிடிபட்டவுடன், இப்போது பார்த்தால் சிறிலங்காப் படையினர் இதற்குச் சம்பந்தமில்லாவர் போலக் காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் இந்தியா பொய்யைச் சொல்லித் தன்னைக் குற்றவாளியாக இனம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களப்படைகளின் இராஜதந்திரங்களில் இந்தியவால் ஈடுகொடுக்க முடியாமல் போன மற்றுமொரு சறுக்கல்களில் இதுவுமொன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது.

இந்தியாவிற்கு சிங்களத்தின் மேல் அப்படியொரு காதல்

  • தொடங்கியவர்

மாலத்தீவுகள் விசாரணையில் இந்திய, இலங்கை அதிகாரிகள் உதவி

மாலத்தீவுகள் கடற்பரப்பில் அந்த நாட்டு கடலோரக் காவல் துறையினரால் அண்மையில் பிடிக்கப்பட்ட படகில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் இப்போது இலங்கை மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகள் உதவுவதாக மாலத்தீவுகள் அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமது படையினரால் பிடிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் மலையாளி என்றும் ஆனால் ஏனைய நான்கு பேரும் தமிழ் பேசுகின்ற போதிலும் இதுவரை அவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் மொஹமட் ஹூசைன் ஷெரிப் என்னும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்தவிசாரணையின் முடிவில் விரைவில் அது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழோசைக்கு வழங்கி செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

மாலத்தீவுகள் விசாரணையில் இந்திய, இலங்கை அதிகாரிகள் உதவி

மாலத்தீவுகள் கடற்பரப்பில் அந்த நாட்டு கடலோரக் காவல் துறையினரால் அண்மையில் பிடிக்கப்பட்ட படகில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் இப்போது இலங்கை மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகள் உதவுவதாக மாலத்தீவுகள் அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமது படையினரால் பிடிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் மலையாளி என்றும் ஆனால் ஏனைய நான்கு பேரும் தமிழ் பேசுகின்ற போதிலும் இதுவரை அவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் மொஹமட் ஹூசைன் ஷெரிப் என்னும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்தவிசாரணையின் முடிவில் விரைவில் அது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழோசைக்கு வழங்கி செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

சதிவலை பின்னிய இருதரப்பு வந்து சேர்ந்திருக்கு மாலைதீவுக்கு எனக்கு சில சந்தெகங்கள்

1.இலங்கை அரசின் பேச்சாலர் மூழ்கடிகப்பட கப்பல் சிறி கிறிஸ்னா என உடனே இன்னும் உறுதிப்படுத்தமுன் அறிக்கை விட்டது எவ்வாறு

2.இலங்கை தன் விசாரனை குழுவை உடனே மாலைதீவுக்கு அனுப்பியது ஏன்? பிடிபட்டவர் மலையாளத்தவர் என சொன்னபோதும்?

3.இந்திய அரசு உடனே போனது ஏன் இப்படித்தான் றோவின் திரைக்கதையில் புளட் மாலைதீவு புரட்சியின் போது பிசகினவுடன் உடனடியாக வேறு நாட்டின் தலையீட்டின் முன் தலையிட்டது?

4.பிடிபட்டது புலிகள் என வைத்தாலும் ஏன் 3வது நாட்டின் கடற்பரப்பில் சர்வதேச கடற்பரப்பு இருக்கையில் வீணாக மாட்டியது வழிதவறி போனது என்றூ சொல்லமுடியாது ஏன் எனின் சாதாரண புலிகளின் விநயோகப்படகில்கூட நவீன ராடர்களும் செய்மதி தொலைபேசிகளும் இருகின்றன

5.மாலைதீவில் இந்தபடகு மூழ்கடிக்கபட்டவுடன் சில மணித்தியாளங்களில் 11 மீனவர்களும் கரை சேர்ந்தது எவ்வாறு?

6.புலிகள் ஆயுதம் கடத்தியதாக இருந்தால் ஏன் பல லட்சம் பெறுமதியான ஆயுதங்களை ஆபத்தான வழியால் நகர்தி இருப்பார்கள்?அத்துடன் புலிகள் ஆயுதங்களை நகர்த்த பல பெரிய கப்பல்கள் இருக்கையில் எவ்வாறு மாலைதீவு கடலால் ஆயுதங்களை நகர்த்த வேண்டி ஏற்பட்டது?

இவை எல்லாம் இடிக்குது இதுக்கு எல்லாம் மகுடம் வைத்தது போல மீனவ சிறுவன் தம்மை கடத்தியது புலிகள் அல்ல இலங்கை நேவி என சொல்லிவிட்டான் ஆக மாலைதீவில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதுக்கும்,மன

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகம

தமிழக மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடுவதாக அகில இந்திய மீனவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஜி. அன்டன் கோமஸ் தெரிவித்ததாவது.

கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 மீனவர்கள் தாயகம் திரும்பிய செய்தி ஆறுதல் அளிக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த மீனவர் மாலைத்தீவு கடற்படையால் கைது செய் யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் வேதனை அளிக்கிறது. இதேபோல் கேரள மீனவர் சைமனை மீட்க தொடர்ந்து செயல்பட அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

மீனவர்களை மீட்கும் பொறுப்பும் கடமையும் உள்ள மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை.

மீனவர்களை மீட்க இரு அரசுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீனவர்களை மீட்பதில் இடையூறாக இருந்தன.

கடத்தியது யார் என்பதைவிடஇ கடத்தப்பட்டது யார் என்பதை முதன்மைப்படுத்தி 12 பேர் உயிர்ப் பிரச்சினை என்பதை கருத்தில் கொண்டு செயல்படாமல் மத்தியஇ மாநில அரசுகள் அரசியல் நாடகமாடியது துரதிஷ்டவசமானது.

எப்படியோ தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல இதயம் கொண் டோரின் நல்ல முயற்சியால் 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இனியும் மீனவர்கள் கடத்தப்படுவதை யும் சுடப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர உறுதியான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடுவதாக அகில இந்திய மீன வர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஜி. அன்டன் கோமஸ் தெ?வித்ததாவது.

கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 மீனவர் கள் தாயகம் திரும்பிய செய்தி ஆறுதல் அளிக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த மீனவர் மாலைத்தீவு கடற்படையால் கைது செய் யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் வேத னை அளிக்கிறது.இதேபோல் கேரள மீன வர் சைமனை மீட்க தொடர்ந்து செயல்பட அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

மீனவர்களை மீட்கும் பொறுப்பும் கட மையும் உள்ள மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை.

மீனவர்களை மீட்க இரு அரசுகளும் எந்த ?யற்சியும் எடுக்கவில்லை. மாறாக மத் திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீனவர்களை மீட்பதில் இடையூறாக இருந் தன.

கடத்தியது யார் என்பதைவிடஇ கடத்தப் பட்டது யார் என்பதை ?தன்மைப்படுத்தி 12 பேர் உயிர்ப் பிரச்சினை என்பதை கருத் தில் கொண்டு செயல்படாமல் மத்தியஇ மா நில அரசுகள் அரசியல் நாடகமாடியது துர திஷ்டவசமானது.

எப்படியோ தமிழக மக்களின் உணர்வுக ளுக்கு மதிப்பளித்து நல்ல இதயம் கொண் டோரின் நல்ல முயற்சியால் 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இனியும் மீனவர்கள் கடத்தப்படுவதையும் சுடப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வர உறுதியான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றார் அவர்.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.