Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனோஸ்மியா (Anosmia) எனப்படும் மோப்ப உணர்வின்மைக்கான சிகிச்சை

Featured Replies

உலகம் முழுவதும் பெப்ரவரி 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மைக்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது.

உலகில் மிகவும் அரிதாக இருக்கும் பாதிப்புகளில் மோப்ப உணர்வின்மை என்ற பாதிப்பும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டுமென்றால், அண்மையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான அருவம் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசாவிற்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக இயக்குநர் சித்தரித்திருப்பார்.

தலையில் எதிர்பார விதமாக அடிபடுதல் அல்லது தீவிர வைரஸ் கிருமியின் தொற்று ஆகியவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அனோஸ்மியா எனப்படும் இத்தகைய பாதிப்பில் பல்வேறு நிலைகளையும் வைத்தியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்தவகையில் ஹைபோஸ்மியா, பாராஸ்மியா, பாண்டன்ஸ்மியா என மோப்ப உணர்வின்மை பாதிப்பைப் பொறுத்து மூன்று வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு வாழ்வியல் நடைமுறை, வைத்திய சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் இதற்கான முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மை பாதிப்பிற்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/76732

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பக்கமும் மூளையை நோக்கி போகும் மண நுகர்வு நரம்புகள்  பாதிக்கப்பட்டால் மணக்கும் சக்தி இல்லாமல் போய்விடும். உள்மூக்கின் கூரையில் இருக்கும் நரம்புகள் மீண்டும் வளரும். zinc  சத்து குறைந்தாலும் மனா நுகர்ச்சி குறையும். இதை பற்றி நான் ஒரு ஆய்வு செய்து சாதாரணாமாக மணக்கும் அளவில் இருந்து 7 , 8 மடங்கு அதிகமாக்க ஒரு முறையை கண்டு பிடித்துள்ளோம். இந்த முறை anosmia வையும் தீர்க்க உதவலாம் https://academic.oup.com/chemse/article/34/7/547/340383

  • தொடங்கியவர்
31 minutes ago, nilmini said:

இரண்டு பக்கமும் மூளையை நோக்கி போகும் மண நுகர்வு நரம்புகள்  பாதிக்கப்பட்டால் மணக்கும் சக்தி இல்லாமல் போய்விடும். உள்மூக்கின் கூரையில் இருக்கும் நரம்புகள் மீண்டும் வளரும். zinc  சத்து குறைந்தாலும் மனா நுகர்ச்சி குறையும். இதை பற்றி நான் ஒரு ஆய்வு செய்து சாதாரணாமாக மணக்கும் அளவில் இருந்து 7 , 8 மடங்கு அதிகமாக்க ஒரு முறையை கண்டு பிடித்துள்ளோம். இந்த முறை anosmia வையும் தீர்க்க உதவலாம் https://academic.oup.com/chemse/article/34/7/547/340383

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். 
இந்த ஆய்வு 10 வருடமாக நடக்கின்றது. இவை எப்.டி.ஏ. (FDA) யால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு மருந்து நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படல் வேண்டுமா?  
 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .  இந்த கண்டுபிடிப்பை patent  எடுத்து எமது பல்கலை கழகத்தில் இருந்து ஒரு research and development company இப்போது வாங்கி உள்ளது. அவர்கள் தான் FDA  அனுமதி பெற்று உணவு மற்றும் perfume இல் பாவிக்க இருக்கிறார்கள் ( வாசனையை அதிகரிக்க). அதே முறை மண  நுகர்ச்சி குறைந்தவர்களுக்கு பாவிக்கலாம். இன்னும் முயற்சிக்கவில்லை. அத்துடன் எமது முறை ZINC  particles பாவித்து செய்வது. இது எமது உடலில் ஏற்கனவே உள்ளது. அதனால் FDA அனுமதி எடுப்பது சுலபமாக இருக்கலாம் 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2020 at 4:46 AM, nilmini said:

இரண்டு பக்கமும் மூளையை நோக்கி போகும் மண நுகர்வு நரம்புகள்  பாதிக்கப்பட்டால் மணக்கும் சக்தி இல்லாமல் போய்விடும். உள்மூக்கின் கூரையில் இருக்கும் நரம்புகள் மீண்டும் வளரும். zinc  சத்து குறைந்தாலும் மனா நுகர்ச்சி குறையும். இதை பற்றி நான் ஒரு ஆய்வு செய்து சாதாரணாமாக மணக்கும் அளவில் இருந்து 7 , 8 மடங்கு அதிகமாக்க ஒரு முறையை கண்டு பிடித்துள்ளோம். இந்த முறை anosmia வையும் தீர்க்க உதவலாம் https://academic.oup.com/chemse/article/34/7/547/340383

நில்மினி.... உங்களிடம், ஒரு சிறிய வேண்டுகோள்.

நீங்கள்... யாழ். களத்தில்  உள்ளவர்களின்,  மருத்துவ சம்பந்தமான... கேள்விகளுக்கு,
பதில் அளிக்கும் விதமான, கருத்துக்களை பகிர....ஒரு தலைப்பை,
 "யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" என்ற பகுதியில் ஆரம்பியுங்களேன்.

நிச்சயம்... இது, பலருக்கும் பயனுள்ளதாகவும், ஒரு சேவையாகவும் இருக்கும்.
நல்ல பதிலை.... தாருங்களேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை சிறி. நிச்சயமாக தொடங்குகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nilmini said:

நல்ல யோசனை சிறி. நிச்சயமாக தொடங்குகிறேன் 

மிக்க... நன்றி, நில்மினி.
தாமதிக்காமல்.... உடனே ஆரம்பியுங்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

"நில்மினியின்,  மருத்துவ  ஆலோசனைகள்".
என்ற தலைப்பை.... போட்டால்,  நல்லது. என நினைக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு . மிகவும் நன்றி சிறி . எப்படி துடங்குவது எண்டு விளங்கவில்லை என்றால் கேட்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி முடிந்தால் எப்படி "நில்மினியின்,  மருத்துவ  ஆலோசனைகள்" பகுதியை துடங்குவது என்று கொஞ்சம் உதவி செய்யவும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

சிறி முடிந்தால் எப்படி "நில்மினியின்,  மருத்துவ  ஆலோசனைகள்" பகுதியை துடங்குவது என்று கொஞ்சம் உதவி செய்யவும். 

யாழ்.களத்தை...  நீங்கள், திறந்து உள்ளே செல்லும் போது... 
முதலில்  Forums என்ற பகுதியில்... யாழ் அரிச்சுவடி,  யாழ் முரசம், ஊர்ப் புதினம், உலக நடப்பு என்று....
பல பகுதிகள் தென்படும். அப்படியே... உங்கள்   "மௌவுசை" கீழே கொண்டு போக...
யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் என்ற பகுதி வரும்.

இப்போ...அதனை, கிளிக் பண்ணினால்...
அதில் 11 பேர் அளவில் தற்போது சுய ஆக்கங்களை இணைத்திருப்பது தெரியும்.
நீங்கள் அந்தப் பகுதியின் மேல் பக்க வலது மூலையில்  Start new topic. என்ற பச்சை சதுர பெட்டி தெரியும்.

நீங்கள் அந்தப் பெட்டியை... கிளிக் பண்ணும் போது...
உங்களது... தலைப்பை ஆரம்பிக்க வேண்டிய பகுதி திறக்கும்.
அதில் Title REQUIRED    என்ற மேல் உள்ள பெட்டியில், உங்களது  "நில்மினியின்,  மருத்துவ  ஆலோசனைகள்"   என்ற  தலைப்பையும்...

கீழே    REQUIRED    என்ற பெரிய பெட்டி உள்ள  பகுதியில்.....
நீங்களோ... உங்களது மருத்துவ குழுவோ கண்டு பிடித்த மருத்துவ சம்பந்தமான பதிவுகளை பதிந்து விட்டு..
இறுதியில்..... இது சம்பந்தமான கேள்விகள் வரவேற்கப் படுகின்றன  என எழுதுங்கள்.

அந்தப் பகுதில்... முக்கிய எழுத்துக்களுக்கு வண்ணம் தீட்டியும்,
சிமைலிகளை பதியவும், எழுத்துக்களை தடிப்பாக காட்டவும்.... மேல் பகுதியில் சில தெரிவுகள் உள்ளன.
அப்படி செய்யும் போது... வாசிப்பவர்களை அந்தத் தலைப்பு கவரும்.

எல்லாம் எழுதி முடிந்து... எழுத்துப் பிழைகளை சரி பார்த்தபின்...
உங்களுக்கு  எல்லாம்,  திருப்தியாக இருந்தால்...
கீழே.... Supmit Topic   என்ற பகுதியை... அழுத்தினால், உங்கள் தலைப்பு பதியப் பட்டு விடும்.
அப்படி பதிந்த உங்களது தலைப்பில், சிறிய மாற்றங்களை செய்ய வேண்டுமானால் 
நீங்கள் பதிந்த 12 மணித்தியாலத்துக்குள் அந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.

அதன்பின் மாற்றங்கள் செய்ய முடியாது.

நில்மினி.  மேலதிக உதவி தேவை... என்றால், தாராளமாக கேளுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி சிறி . பதிவு ஒன்று போட்டுள்ளேன்

Edited by nilmini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.