Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடியால் அதிர வைத்த மே.இ.தீவுகள் ; 196 ஓட்டங்கள் குவிப்பு

Featured Replies

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் அதிரடித் துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகள் அணி 196 ஓட்டங்களை குவித்துள்ளது.


ESRW7PYWsAA6pyZ.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரண்டன் கிங் 33 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 14 ஓட்டங்களையும், ரஸல் 14 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களையும், பொல்லார்ட் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, சிம்மன்ஸ் 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களுடனும் பேபியன் அலென் 3 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சந்தகன், வர்னிந்து ஹசரங்க, இசுறு உதான மற்றும் லசித் மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/77103

 

Batsman How Out Bowler Runs Mins Balls 4s 6s SR
Total (20.0 overs)

196-for4wickets

 

   
Simmons not out   67 95 51 7 2 131.37
King c Hasaranga b Sandakan 33 39 25 5 1 132.00
Pooran c Avishka Fernando b Hasaranga 14 19 12 2 0 116.67
Russell   b Malinga 35 18 14 2 4 250.00
Pollard c Avishka Fernando b Udana 34 19 15 3 2 226.67
Allen not out   3 3 3 0 0 100.00
Extras 0nb 6w 2b 2lb 10  
Bowler Overs Maidens Runs Wickets Econ
Malinga 4.0 0 37 1 9.25
T Perera 3.0 0 27 0 9.00
Mathews 2.0 0 16 0 8.00
Udana 3.0 0 41 1 13.67
Sandakan 4.0 0 38 1 9.50
Hasaranga 4.0 0 33 1 8.25

 

Fall of Wicket

 

Batsman

74-1 (8.2 ovs) King
106-2 (12.3 ovs) Pooran
145-3 (15.2 ovs) Russell
190-4 (19.2 ovs) Pollard

Sri Lanka Innings

Batsman How Out Bowler Runs Mins Balls 4s 6s SR
Total (0.5 overs) 11-for0wickets    
Avishka Fernando not out   5 3 2 1 0 250.00
K Perera not out   5 3 3 1 0 166.67
Extras 0nb 1w 0b 0lb 1  
Bowler Overs Maidens Runs Wickets Econ
Cottrell 0.5 0 11 0 13.20
 

 

  • தொடங்கியவர்

தடுமாறும் சிறிலங்கா

Sri Lanka Innings

Batsman How Out Bowler Runs Mins Balls 4s 6s SR
Total (8.4 overs) 81-for5wickets    
Avishka Fernando c Pooran b Thomas 7 9 5 1 0 140.00
K Perera not out   37 47 17 4 2 217.65
S Jayasuriya c Cottrell b Thomas 0 2 1 0 0 0.00
Kusal Mendis c Pooran b Thomas 0 5 2 0 0 0.00
Mathews c Russell b Thomas 10 12 8 2 0 125.00
Shanaka   b Thomas 2 10 8 0 0 25.00
Hasaranga not out   15 11 11 2 0 136.36
Extras 0nb 8w 0b 2lb 10  
Bowler Overs Maidens Runs Wickets

 

Econ

Cottrell 2.0 0 14 0 7.00
Thomas 3.0 0 28 5 9.33
Russell 2.0 0 18 0 9.00
Pollard 1.4 0 19 0 11.40
Fall of Wicket Batsman
16-1 (1.3 ovs) Avishka Fernando
16-2 (1.4 ovs) S Jayasuriya
17-3 (1.6 ovs) Kusal Mendis
41-4 (3.6 ovs) Mathews
  • தொடங்கியவர்
Batsman How Out Bowler Runs Mins Balls 4s 6s SR
Total (19.1 overs) 171 all out    
Avishka Fernando c Pooran b Thomas 7 9 5 1 0 140.00
K Perera   b Russell 66 89 38 6 3 173.68
S Jayasuriya c Cottrell b Thomas 0 2 1 0 0 0.00
Kusal Mendis c Pooran b Thomas 0 5 2 0 0 0.00
Mathews c Russell b Thomas 10 12 8 2 0 125.00
Shanaka   b Thomas 2 10 8 0 0 25.00
Hasaranga lbw b R Powell 44 47 34 4 0 129.41
T Perera c Cottrell b R Powell 11 13 7 0 1 157.14
Udana c Pollard b Bravo 3 10 5 0 0 60.00
Malinga   b Cottrell 8 8 6 0 1 133.33
Sandakan not out   1 5 1 0 0 100.00
Extras 0nb 9w 0b 10lb 19

 

 

Bowler Overs Maidens Runs Wickets Econ
Cottrell 2.1 0 14 1 6.46
Thomas 3.0 0 28 5 9.33
Russell 4.0 0 33 1 8.25
Pollard 2.0 0 25 0 12.50
Bravo 4.0 0 30 1 7.50
R Powell 4.0 0 31 2 7.75

 

 

Fall of Wicket

 

 

Batsman

16-1 (1.3 ovs) Avishka Fernando
16-2 (1.4 ovs) S Jayasuriya
17-3 (1.6 ovs) Kusal Mendis
41-4 (3.6 ovs) Mathews
56-5 (5.6 ovs) Shanaka
143-6 (15.3 ovs) Hasaranga
151-7 (16.3 ovs) K Perera
161-8 (17.4 ovs) T Perera
168-9 (18.1 ovs) Udana
171-10 (19.1 ovs) Malinga
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ampanai said:
Batsman How Out Bowler Runs Mins Balls 4s 6s SR
Total (19.1 overs) 171 all out    
Avishka Fernando c Pooran b Thomas 7 9 5 1 0 140.00
K Perera   b Russell 66 89 38 6 3 173.68
S Jayasuriya c Cottrell b Thomas 0 2 1 0 0 0.00
Kusal Mendis c Pooran b Thomas 0 5 2 0 0 0.00
Mathews c Russell b Thomas 10 12 8 2 0 125.00
Shanaka   b Thomas 2 10 8 0 0 25.00
Hasaranga lbw b R Powell 44 47 34 4 0 129.41
T Perera c Cottrell b R Powell 11 13 7 0 1 157.14
Udana c Pollard b Bravo 3 10 5 0 0 60.00
Malinga   b Cottrell 8 8 6 0 1 133.33
Sandakan not out   1 5 1 0 0 100.00
Extras 0nb 9w 0b 10lb 19

 

 

2340.jpg

☺️..😊

  • தொடங்கியவர்

வீண் போன குசல் - ஹசரங்கவின் இணைப்பாட்டம் ; 25 ஓட்டங்களால் மே.இ.தீவுகள் வெற்றி!

இலங்கை அணியுடனான முதல் இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ESRtfmlXYAERWuf.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் சிம்மன்ஸ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை குவித்தார்.

இதன் பின்னர் 197 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக அவிஷ்க பெர்னாண்டோ 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் செஹான் ஜயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் டக்கவுட்டுடன் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூஸ் 10 ஓட்டங்களுடனும், தசூன் சானக்க இரண்டு ஓட்டங்களுடனும் முறையே ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இலங்கை அணியானது 6 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நிலைகுலைந்தது.

எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ஆரம்ப வீரராக களமிறங்கிய குசல் பெரேராவுடன் ஹசரங்க ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


அதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையானது விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்படி முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 95 ஓட்டங்களையும், 15 ஓவரில் 141 ஓட்டங்களை குவித்தது.

ESRz24hX0AAgBRg.jpg


 

இந் நிலையில் 15.3 ஆவது ஓவரில் ஹசரங்க 44 ஓட்டங்களுடன் ரோவ்மன் பவுலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற மைதானம் ‍மெளனத்தில் ஆழ்ந்தது.

இருந்தபோதும் திசர பெரேராவுடன் கைகோர்த்த குசல் பெரேரா தனது அதிரடியை தொடர்ந்தும் வெளிப்படுத்த 16.2 ஆவது ஓவரில் இலங்கை அணி 150 ஓட்டங்களை கடந்தது. எனினும் 16.3 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி 151 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது. தொடர்ந்து இசுறு உதான களமிறங்கி துடுப்பெடுத்தாட 17 ஆவது ஓவரில் இலங்கை அணி 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஒரு கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 44 ஓட்டம் என்ற நிலையிருந்தது. இருந்தபோதும் இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் உஷேன் தோமஸ் 5 விக்கெட்டுக்களையும், ரோவ்மன் பவுல் 2 விக்கெட்டுக்களையும், ரஸல், பிராவோ மற்றும் ஷெல்டன் கோர்ட்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இருபதுக்கு : 20 போட்டியானது எதிர்வரும் 06 ஆம் திகதி இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.