Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!

TNA-logo.jpg 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

1. மாவை.சேனாதிராஜா

2. ஆபிரகாம் சுமந்திரன்

3. ஈஸ்வரபாதம் சரவணபவான்

4. சிவாஞானம் சிறீதரன்

5. சசிகலா ரவிராஜ்

6. மிதுலை செல்வி

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

8. தர்மலிங்கம் சித்தாத்தன்

9. ப.கஜதீபன்

10. சுரேந்திரன்

http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/

டிஸ்கி :

ஆர் வெற்றி பெறுவார்கள்.. ஆருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ரெல் மீ..? 👍

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

🙄

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

10. சுரேந்திரன்

முன்னாள் ஆளுநர் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!

TNA-logo.jpg 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

1. மாவை.சேனாதிராஜா

2. ஆபிரகாம் சுமந்திரன்

3. ஈஸ்வரபாதம் சரவணபவான்

4. சிவாஞானம் சிறீதரன்

5. சசிகலா ரவிராஜ்

6. மிதுலை செல்வி

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

8. தர்மலிங்கம் சித்தாத்தன்

9. ப.கஜதீபன்

10. சுரேந்திரன்

http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/

டிஸ்கி :

ஆர் வெற்றி பெறுவார்கள்.. ஆருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ரெல் மீ..? 👍

1. ஆரப்பா அது ஆபிரகாம் சுமந்திரன்😂 சும்மின் பெயர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன். ஆனால் அவரை கிறீஸ்தவர் என இனம் காட்டுவதற்காய் ஆபிரகாம் சுமந்திரன் என எழுதிகிறார்கள்😂. இதை ஆங்கிலத்தில் dog whistle racism என்பர். சும்மின் அரசியல் மீது எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், ஆனால் அவரை கிறீஸ்தவர் என்பதற்காக தாக்குவது சரியில்லை. சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை. 

2. பட்டியலில் 4 அல்ல 5 பேர் முன்னாள் பாஉக்கள்.

3. புதுமுக வேட்பாளரில் ரவிராஜ் மனைவி களம் இறங்குகிறார். தென்மராட்சியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

4. கஜதீபன் முன்னாள் யாழ் பல்கலை மாணவர் மன்றம்?

எனது கணிப்பு

1. மாவை, சும், சிறிதரன், சித்தர் வெல்லுவார்கள்.

2. சசிகலா, சரவணபவன் தொத்து பறியில் வெல்லலாம், தோற்கலாம்.

4. டக்லஸ்சுக்கு ஒரு ஆசனம் கரண்டி. இன்னொன்றும் கிடைக்கலாம்.

3. கூட்டமைப்பை நோக்கி பெரும் அலை அடித்தால் மட்டுமே 8 ஆசனங்கள் சாத்தியம்.

எனது இப்போதைய கணிப்பின் படி யாழில் வெல்பவர்கள். விருப்பு வாக்கு அடிப்படையில்.

1. விக்னேஸ்வரன் (தேர்தலில் நின்றால்)

2. சுமந்திரன்

3. டக்லஸ்

4. சிறிதரன்

5. மாவை

6. சித்தார்தன்

7. சரா/சசிகலா

8. சசிகலா/அல்லது சுரேஸ் 

9. ஈபிடிபி/அல்லது சுரேஸ்

கூட்டமைப்பு 5 கூடினால் 7

ஈபிடிபி 1 கூடினால் 2

விக்கி அணி 1 கூடினால் 2

கஜே கஜேஸ் - பூச்சியம்

1 hour ago, ampanai said:

🙄

முன்னாள் ஆளுநர் ?

நான் நினக்கவில்லை அவர் என்று

4 minutes ago, goshan_che said:

நான் நினக்கவில்லை அவர் என்று

10 minutes ago, goshan_che said:

1. ஆரப்பா அது ஆபிரகாம் சுமந்திரன்😂 சும்மின் பெயர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன். ஆனால் அவரை கிறீஸ்தவர் என இனம் காட்டுவதற்காய் ஆபிரகாம் சுமந்திரன் என எழுதிகிறார்கள்😂. இதை ஆங்கிலத்தில் dog whistle racism என்பர். சும்மின் அரசியல் மீது எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், ஆனால் அவரை கிறீஸ்தவர் என்பதற்காக தாக்குவது சரியில்லை. சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

ஏன் தேவையற்றது?

கிறீஸ்தவ-இந்து முறுகல் ஏற்படுவதும் அதை இட்டு வாதப் பிரதிவாதங்கள் எழுவதும் வேறு.

ஆனால் ஒரு சகதமிழனை, கிறீஸ்தவன் என்று குறிகாட்டி ஓரம் கட்டுவது மாவீரகளின் நினவுக்கு செய்யும் வஞ்சனையே.

நாம் எல்லோரும் தமிழர்கள், நமக்குள் அரசியல் செய்யும் உரிமை எல்லாருக்கும் உள்ளது என்ற உயரிய நம்பிக்கையில்தானே சீலனும், விக்டரும் போராடினார்கள்? வீரச்சாவடைந்தார்கள்? இந்த விழுமியங்களை தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் கைக்கொள்ளும், கிறீஸ்தவர்களை ஒதுக்காது என அவர்கள் நம்பித்தானே கண்மூடினார்கள்?

இப்படி இருக்கையில் - சுமந்திரனை கிறீஸ்தவன் என பெட்டிகட்டுவது, அந்த மாவீரர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் அன்றி வேறென்ன?

சுமந்திரனை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள், கைகூலி, கால்தூசி, பின்கதவு, முன் யன்னல், துரோகி, என்ன வேணுமானாலும் ஆனால் கிறீஸ்தவன் என பெட்டி கட்டாதீர்கள்.

பிகு: சுரேன் ராகவன் பற்றிய தகவலுக்கு நன்றி. அரசியலில் நிரந்த நண்பரும், பகைவரும் இல்லை, நிர்ந்தர நலன்கள் மட்டுமே 😂.

ஆனால் இவருக்கும் கணிசமான மக்கள் செல்வாக்கு உண்டு.

1 minute ago, goshan_che said:

ஏன் தேவையற்றது?

கிறீஸ்தவ-இந்து முறுகல் ஏற்படுவதும் அதை இட்டு வாதப் பிரதிவாதங்கள் எழுவதும் வேறு.

ஆனால் ஒரு சகதமிழனை, கிறீஸ்தவன் என்று குறிகாட்டி ஓரம் கட்டுவது மாவீரகளின் நினவுக்கு செய்யும் வஞ்சனையே.

நாம் எல்லோரும் தமிழர்கள், நமக்குள் அரசியல் செய்யும் உரிமை எல்லாருக்கும் உள்ளது என்ற உயரிய நம்பிக்கையில்தானே சீலனும், விக்டரும் போராடினார்கள்? வீரச்சாவடைந்தார்கள்? இந்த விழுமியங்களை தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் கைக்கொள்ளும், கிறீஸ்தவர்களை ஒதுக்காது என அவர்கள் நம்பித்தானே கண்மூடினார்கள்?

இப்படி இருக்கையில் - சுமந்திரனை கிறீஸ்தவன் என பெட்டிகட்டுவது, அந்த மாவீரர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் அன்றி வேறென்ன?

சுமந்திரனை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள், கைகூலி, கால்தூசி, பின்கதவு, முன் யன்னல், துரோகி, என்ன வேணுமானாலும் ஆனால் கிறீஸ்தவன் என பெட்டி கட்டாதீர்கள்

நிச்சயம் தேவையற்றது: சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை

#1: http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/ என்ற இணையத்தளம் இதை வெளியிட்டது. அதில் செய்தியாளர்  பூங்குன்றன் தெரிந்தோ இல்லை தெரியாமலே இல்லை வேறு கார்மோ இருக்கலாம்.

#2: தமிழ் தேசியம் என்பதும் மாவீரர்கள் என்பதும் இந்த செய்திக்கும் செய்யாளர்க்கும் அப்பாற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

நிச்சயமாக இல்லை. எமது அரசியல் எந்த வடிவில் உரு மாறினாலும், பல்லாயிரம் மனிதர்கள் தம் உயிரை கொடையாக தந்து கட்டி எழுப்பிய சில சித்தாந்தங்களை விட்டு கொடுக்காமல் நகர வேண்டும்.

அப்படி பட்ட சித்தாந்தங்களில் ஒன்று தனிநாட்டு கோரிக்கை. இன்னொன்று இந்து-கிறீஸ்தவ மதச்சாபின்மை.

சித்தாந்தம் ஒன்றை கைவிடும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சித்தாந்தம் ரெண்டை கைவிட வேண்டிய அவசியம் இல்லை.

தமது சின்ன சின்ன அரசியல் ஆதாயத்துக்கா, மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் அரசியல் நிச்சயமாக, தமிழர் எல்லாரும் ஒரே இனம் என்ற நம்பிக்கையோடு கண்மூடியவர்களின் ஆன்மாவை அவமதிக்கும் செயலே.

இங்கே அலசப்படுவது இலங்கையின் தமிழ் தேசிய அரசியல். இதில் சம்பந்தபடாமல், வேறு எதில் தமிழ் தேசியமும், மாவீரர்களும் சம்பந்தபடும்?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த சீவிகே சிவஞானத்துக்கு இந்த முறையும் பல்ப்பா?😂

8 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை. எமது அரசியல் எந்த வடிவில் உரு மாறினாலும், பல்லாயிரம் மனிதர்கள் தம் உயிரை கொடையாக தந்து கட்டி எழுப்பிய சில சித்தாந்தங்களை விட்டு கொடுக்காமல் நகர வேண்டும்.

அப்படி பட்ட சித்தாந்தங்களில் ஒன்று தனிநாட்டு கோரிக்கை. இன்னொன்று இந்து-கிறீஸ்தவ மதச்சாபின்மை.

சித்தாந்தம் ஒன்றை கைவிடும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சித்தாந்தம் ரெண்டை கைவிட வேண்டிய அவசியம் இல்லை.

தமது சின்ன சின்ன அரசியல் ஆதாயத்துக்கா, மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் அரசியல் நிச்சயமாக, தமிழர் எல்லாரும் ஒரே இனம் என்ற நம்பிக்கையோடு கண்மூடியவர்களின் ஆன்மாவை அவமதிக்கும் செயலே.

இங்கே அலசப்படுவது இலங்கையின் தமிழ் தேசிய அரசியல். இதில் சம்பந்தபடாமல், வேறு எதில் தமிழ் தேசியமும், மாவீரர்களும் சம்பந்தபடும்?

இவ்வாறு தமிழ் தேசியத்தையும், மதச்சார்பற்று முன்னெடுக்கப்பட்ட ஈழ விடுதலையையும் இணைப்பது மூலம் அந்த பத்திரிகைக்கு தேவையற்ற அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.

சுமந்திரன் அவர்களின் பெயரை வேண்டுமென்றோ இல்லை தெரியாமலோ அந்த பத்திரிக்கை பிரசுரித்திருக்கலாம். அது தவறு என்றும், இவ்வாறான பத்திரிகைகளை மக்களுக்கு  அடையாளம் காட்டுவதே சரியான விடயம்.

ஆனால், எடுத்ததற்கெல்லாம் தேசியம், மாவீரர்கள் என்பது தேவையற்றது. அந்த சொற்களுக்கு ஒரு இடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

ஏன் தேவையற்றது ? தற்போதுள்ள சூழலை காரணமாக கூறுகிறீர்களா அல்லது அப்படிக் கூறக் கூடாது என்கிறீர்களா அல்லது அப்படி ஒரு விடயமே இல்லை என்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. இதனால் அந்த பத்திரிகைக்கு ஒரு அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவர்களின் சுயரூபம் தோலுரிக்கப்படவே செய்யும்.

இங்கேமட்டுமல்ல, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனை தாக்க இப்போ பலரும் பரவலாக கையில் எடுப்பது அவரின் மதத்தையே.

இதுவரை எம் ஏ சுமந்திரன் என எழுதியவர்கள் எல்லாம் கடந்த இரண்டரை வருடங்களா ஆபிரகாம் சுமந்திரன் என எழுதுவதன் உள்நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி.

செல்வநாயகத்தை ஏன் எல்லாரும் தந்தை செல்வா அல்லது எஸ் ஜேவி செல்வநாயகம் என எழுதுகிறார்கள்? 
சாமுவேல் ஜேம்ஸ் வேலுபிள்ளை செல்வநாயகம் என்று எழுதுவதில்லை?

சுமந்திரனை எப்படியாவது விழுத்தி விடவேண்டும் அதற்க்காக, தமிழர் மத்தியில் கிறீஸ்தவ-இந்து பாகுபாடு என்ற நஞ்சை விதைத்தாலும் பரவாயில்லை என்ற மனோநிலையே இது.

இந்த அணுகுமுறைக்கும் RSS BJP இந்தியாவில் கடைப்பிடிக்கும் அரசியலுக்கும் வேறுபாடில்லை.

பிஜேபி அரசியல் காந்தியின் மதச்சார்பின்மையை அவமதிக்கிறது. 

இவர்களின் அரசியல் பிரபாவின் மதச்சார்பின்மையை அவமதிக்கிறது.

2 hours ago, Kapithan said:

ஏன் தேவையற்றது ? தற்போதுள்ள சூழலை காரணமாக கூறுகிறீர்களா அல்லது அப்படிக் கூறக் கூடாது என்கிறீர்களா அல்லது அப்படி ஒரு விடயமே இல்லை என்கிறீர்களா ?

இங்கே விவாதிக்கப்பட எடுத்துக்கொண்ட விடயம் சுமந்திரனின் பெயரில் அவரின் ஒரு பெயர் விடப்பட்டதாக ஒரு உண்மை சொல்லப்படுகின்றது. பின்னர், கடைசி வசனம் தேசியத்தையும் 'கிறிஸ்தவ மாவீரர்கள்' எனவும் கூறியதை தேவையில்லாத விடயம் என்றேன்.

குறிப்பாக மாவீரர்களை மதத்தால் பிரிப்பது தவறான விடயம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

நன்றி.  தமிழ்த் தேசியத்தை விரும்புபவர்கள் ஒருபோதும் மதத்தால் பிரித்து  மாவீரரை அவமதிக்கப் போவதில்லை. அது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

சைவத் தமிழ்த் தேசியத்தை மட்டும் விரும்புபவர்கள் நிச்சயமாக மதத்தை முன்னிறுத்தி மாவீரரை இழிவு படுத்துவர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

இங்கே விவாதிக்கப்பட எடுத்துக்கொண்ட விடயம் சுமந்திரனின் பெயரில் அவரின் ஒரு பெயர் விடப்பட்டதாக ஒரு உண்மை சொல்லப்படுகின்றது. பின்னர், கடைசி வசனம் தேசியத்தையும் 'கிறிஸ்தவ மாவீரர்கள்' எனவும் கூறியதை தேவையில்லாத விடயம் என்றேன்.

குறிப்பாக மாவீரர்களை மதத்தால் பிரிப்பது தவறான விடயம்.  

மாவீர்களுக்கான மரியாதை தனியே படத்தை வைத்து வணங்கி போவதில் மட்டும் இல்லை.

அவர்கள் எந்த நம்பிக்கையில் கண்மூடினார்களோ அந்த நம்பிக்கையை தக்க வைக்க முயல்வதே அவர்களுக்கான அதிகூடிய கெளரவம். 

ஒவ்வொரு முறை சாதியத்தை தமிழ் தேசியம் கையில் எடுக்கும் போதும் - அது தமிழ்செல்வனின் (அவரை போல பலருக்கு) நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை. 

ஒவ்வொரு முறை பிரதேசவாதத்தை தமிழ்தேசியம் கையில் எடுக்கும் போது அது கெளசல்யனின் நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை.

ஒவ்வொரு முறை தமிழ்தேசியம் மதவாதத்தை கையில் எடுக்கும் போது அது விக்டரின் நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை.

மத, சாதி, பிரதேச ஏற்றத்தாழ்வற்ற தனிநாடு என்ற உயரிய இலட்சியதுக்காகவே அவர்கள் போராடினார்கள்.

தனிநாடு என்ற இலட்சியம்தான் எட்டாக்கனியாகி விட்டது, குறைந்தபட்சம் நம்மால் ஒரு மத, சாதி, பிரதேச ஏற்றத்தாழ்வற்ற சமூகமாகவாவது வாழ முடியாதா?

இல்லை என்றால் அது அவர்களின் நினைவுக்கு, நம்பிக்கைக்கு செய்யும் அவமரியாதையே.

பிகு: தென்னிலங்கை மக்களோ, டக்லசோ, கருணாவோ, சங்கரியோ கூட “ஆபிரகாம்” அரசியல் செய்வதில்லை. தமிழ் தேசிய அரசியல் செய்வதாக சொல்பவர்களும் அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் மட்டுமே இந்த அற்ப வேலை செய்கிறன.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.