Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று 2,759 பேருக்கு கொரோனா தொற்று

 

இலங்கையில் மேலும் 527 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2,759ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 218,893-ஆக உயர்ந்துள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-2-759-பேருக்கு-கொரோனா-தொற்று/175-273925

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

https://athavannews.com/2021/1222541

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் ஆன குடும்பஸ்தர் உப்பட மேலும் 6 கொரோனா மரணங்கள்! மேலும் 165 பேருக்கு கொரோனா!

 
india%2Bcorona%2Bdeath.jpg


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று (15) ஒரு இளவயது குடும்பஸ்தர் உட்பட மூன்று பெண்கள் அடங்களாக 6 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஏறாவூரில் இரண்டு பெண்களும் , ஒரு ஆணும், காத்தான்குடியில் 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரும், ஒரு பெண்ணும், களுவாஞ்சிகுடியில் ஒரு ஆணுமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளம் குடும்பஸ்த்தர் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் என தெரிய வருகின்றது.

இதே வேளை நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில், 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தகப்பட்டுள்ளது..

மேலும் கோரளைப்பற்று மத்தி 56பேருக்கும், மட்டக்களப்பு நகர் 24 பேருக்கும், களுவாஞ்சிக்குடி 32 பேருக்கும், வாழைச்சேனை 06பேருக்கும், காத்தான்குடி 23 பேருக்கும், ஓட்டமாவடி 05 பேருக்கும், ஏறாவூர் 10 பேருக்கும், வவுணதீவு 04 பேருக்கும், வெல்லாவெளி 02 பேருக்கும், ஆரையம்பதி 01 பேருக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலை 02 பேருக்கும் தொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

http://www.battinews.com/2021/06/6-165.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே நாளில் அதிகளவானர்கள் கைது

 

 

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர், கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றைய தினமே இவ்வாறு அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதிகமானோர் குளியாப்பிட்டி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 36,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://www.tamilmirror.lk/செய்திகள்/ஒர-நளல-அதகளவனரகள-கத/175-274328

  • கருத்துக்கள உறவுகள்
Posted

28 பெண்களும் 31 ஆண்களும் மரணம்

 

image_025baec8d4.jpg

 

 

 

 

நாட்டில் நேற்று முன்தினம் (15) கொரோனா வைரஸ் தொற்றால்  59  மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

28 பெண்களும் 31 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.https://www.tamilmirror.lk/செய்திகள்/28-பணகளம-31-ஆணகளம-மரணம/175-274330

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருகோணமலை மாவட்டத்தில்  ஒரே நாளில் 3 பேர் மரணம்-  22 பேருக்கு கோவிட்19 தொற்று

 
1-4-696x475.jpg
 17 Views

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 பேர் மரணம் 22 பேருக்கு கொரோனா தொற்று என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள்  தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 98 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட்-19 தொற்று இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 3900 பேருக்கு கோவிட்-19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை 475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=52594

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் அறிகுறிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், உரிய வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோய் மேலும் அதிகரிக்குமெனவும் வைத்தியர் அநுர ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது பொது மக்களின் பொறுப்பாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1223325

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மணமக்கள் குடும்பத்தினரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினர் உட்படுத்தியுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.(15)

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் அதிக ஆபத்தான பகுதிகள் எவை? வெளியானது அறிவிப்பு

இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் எவை என்ற விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடம் ஜூன் 06 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது.

21-60ccdad19e47a.jpeg?6bfec1&6bfec1

 

https://www.meenagam.com/இலங்கையில்-அதிக-ஆபத்தான/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டின் கொவிட் நிலை தொடர்பில் வழங்கப்படும் தகவல்களில் நம்பிக்கையில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் நம்ப முடியாத நிலை உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவின்த டி சொய்சா தெரிவித்தார்.

கொரேனா தொடர்பில் தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு தற்போது சமர்ப்பிக்கும் தரவுகள் சரியான தரவுகள் அல்ல. கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் பிழையான  தரவுகளே சமர்ப்பிக்கப்படுகின்றன. 

அதனால் தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு பிரதானி உட்பட அதன் முன்னணியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு, செயற்திறமையான அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.

மேலும் நாட்டில் கொவிட் தொற்று நிலைமை எவ்வாறு என்ற சரியான தரவுகள் நாட்டு மக்களுக்கு தெரியாத நிலைமையிலயே நாளை பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

சரியான தரவுகள் இல்லாமல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் எவ்வாறான நிலை தோன்றும் என்பதை எங்களால் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.
 

https://www.virakesari.lk/article/107902

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் பொறுப்புடன் நடக்கவும் மருத்துவர்கள் சங்கம் அறிவுரை

 

பயணத்தடை நீக்கப்படும் நிலையில் பொறுப்புடன் நடந்துகொள்வது முக்கியம் என அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய காரணங்களுக்காகவன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என்றும் குறித்த சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மிக வேகமாகப் பரவக்கூடியதும் ஆபத்தானதும் மரணங்களை அதிகரிக்கக் கூடியதுமான இந்திய டெல்டா திரிபு கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள சூழ்நிலையில் மேற்படி சங்கம் நாட்டு மக்களை பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் டாக்டர் பிரசாத் கொலம்பகே நேற்று ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்ததாவது,

சில வாரங்கள் நாட்டை முடக்கியதாலேயே வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது. இதற்கிணங்க நாட்டில் பயணத் தடை தளர்த்தப்படும் நிலையில் மக்கள் செயற்படும் விதத்தை வைத்தே அதன் பிரதிபலனை எதிர்வரும் இரண்டு வார காலங்களில் கணிப்பிட முடியும்.

நம் ஆரம்பக்கட்டத்தில் நாட்டில் தினமும் ஒரு மரணம் தொடர்பிலேயே பேசினோம். பின்னர் அது ஒரு தினத்திற்கு இரண்டு மூன்று என்று அதிகரித்து பிறகு பத்து பதினைந்து என மாறியது. தற்போது அது 50 இற்கும் அதிகமாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்படா விட்டால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களை சந்திக்க நேரும். அவ்வாறு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

சில வாரங்கள் நாட்டை மூடி வைத்திருந்ததால் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டே தற்போது பயணத்தடை தளர்த்தப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
https://newuthayan.com/மக்கள்-பொறுப்புடன்-நடக்க/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு

June 23, 2021

spacer.png

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விருமார் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் வடக்கு விருமார் கோயில் பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வு 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளனர்.

சுகாதார பகுதியினரின் அனுமதிகள் எதுவும் பெறப்படாது இவ்வாறு அதிக அளவான எண்ணிக்கையில் பக்தர்களை ஒன்று கூட்டி கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏதுவான நிலையைத் தோற்றுவித்தமை தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதர மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்களும் பருத்தித்துறை காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு காரணமாயிருந்த கோயில் நிர்வாகியும் அதனோடு இணைந்து செயல்பட்ட ஏனைய 30 பேரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தப்பட்டபர்.

அத்துடன் ஆலய நிர்வாகி மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்களதும் காவல்துறையினரதும் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவர் தொடர்பான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை கொண்டு அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக ஒன்றுகூடல்களை மேற்கொள்வதால் அதிகளவான நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு தேவையற்ற இழப்புகளை சமூகம் எதிர்நோக்க வேண்டிவரும் என சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://globaltamilnews.net/2021/162650

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னாரில் 759 பேர் கொரோனாவால் பாதிப்பு – 5 பேர் இது வரையில் பலி

 
Share
625.500.560.350.160.300.053.800.900.160.
 16 Views

தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.

IMG-20210625-WA0001.jpg?resize=696%2C522

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (25) வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் புதிதாக 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இம்மாதம் வரை 252 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது” என்றார்.

 

https://www.ilakku.org/?p=53343

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர், சிகிச்சைப் பலனின்றி  நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரின் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1225249

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று; 21 பேர் பெண்கள்

 

CORONA-TEST.png?resize=696%2C348&ssl=1சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெண்கள் 21 பேர் உட்பட மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று 244 பேருக்கு மேற் கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் இவ்வாறு சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 239 பேரின் மாதிரிகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அப்பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் 21 பேர் மற்றும் ஆண்கள் 18 பேர் என மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/coronainfection-chandilippai-health-unit-21women/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

கொரோனாவால் மேலும் 45 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 573 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 25 பெண்களும் 20 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 236ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 65 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 29 ஆயிரத்து 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

https://athavannews.com/2021/1226689

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவலூர் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா; பலர் தனிமைப்படுத்தல்

 

யாழ். ஊர்காவற்துறைப் பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பதிவுத் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ஊர்காவற்துறை, பருத்தியடைப்புப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

அதையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தபோது, குறித்த பெண் தனது வீட்டுக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதையடுத்து பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

 

https://www.ilakku.org/காவலூர்-திருமணத்தில்-கலந/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் 12 -15 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!

அஸ்ட்ரா செனகாவின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனெகாவின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கொழும்பு -1 இருந்து கொழும்பு -15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி வழங்கப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1227092

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெரிவில் 23 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெரிவில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்துடன் மேலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று சனிக்கிழமை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், 2ஆம் குறுக்குத் தெருவில் 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.குறித்த பரிசோதனையிலேயே 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-பருத்தித்த-2/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

மொத்த சனத்தொகையில்... 36 சதவீதமானோருக்கு, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், மொத்த சனத்தொகையில் 13 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீதமானோருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 56 சதவீதமானோருக்கும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1228619

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று மேலும் 40 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை- வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
 

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-வல்வெட்டித/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றிரவு முதல் முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரப் பகுதி

 

pointpedro 1 நேற்றிரவு முதல் முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரப் பகுதி

பருத்தித்துறை நகரத்தின் இதய பகுதி என்று அழைக்கப்படும் – ஜே/401 கிராம சேவகர் பகுதி நேற்று மாலை முதல் முடக்கப் பட்டது. இந்தப் பகுதியில் நேற்றும் – நேற்று முன் தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்.

அத்துடன், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் பலர் அதனை மீறி வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றையடுத்தே இந்தப் பகுதி சுகாதாரப் பகுதியினரால் முடக்கப் பட்டது.

முடக்கப் பட்ட பகுதியில் தும்பளை வீதியில் 3ஆம் குறுக்குத் தெரு தொடக்கம் மெத்தை கடைச் சந்தி, ஓடக் கரை வீதி, பருத்தித்துறை பஸ் நிலைய நுழை வாயில், பத்திரகாளி அம்மன் ஒழுங்கை, விநாயகர் முதலியார் (வி.எம்.) ஒழுங்கை, துறைமுகப் பகுதி – மூன்றாம் குறுக்குத் தெரு கடற்கரை பகுதி அடங்குகின்றன.

இதனால், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம், மரக்கறி சந்தை, மீன் சந்தை, வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் வங்கிகள் என்பனவும் முடங்கியுள்ளன.

பருத்தித்துறை பஸ் நிலையம் முடக்கப்பட்ட போதும் மருதடி பகுதியிலுள்ள இ.போ.ச. சாலையிலிருந்து வழமை போன்று பஸ் சேவைகள் இடம் பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று, வல்வெட்டித்துறை – ஆதி கோயிலடி பகுதியும் நேற்று அதிகாலை 4 மணி முதல் முடக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று முன் தினமும் 88 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டனர். இதையடுத்தே, மக்கள் செறிந்து வாழும் இந்தப் பகுதி நேற்று அதிகாலை முதல் முடக்கப்பட்டது.

காவலில் படையினர் முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரம், வல்வெட்டித்துறை – ஆதி கோவிலடி பகுதிகளில் பெருமளவான இராணுவத்தினர் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்.

 

https://www.ilakku.org/citypointpedrodisabled-lastnight/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (63 வயது) பெண் ஒருவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

https://athavannews.com/2021/1229298

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்வெட்டித்துறை தீருவில் 13 பேருக்கு கொரோனா தொற்று

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாவலடி மற்றும் தீருவில் ஆகிய கிராமங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/வல்வெட்டித்துறை-தீருவில/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தொகையில் 8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளில் மட்டும் நம்பிக்கை வைப்பதன் மூலம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

டெல்டா வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது என்றும் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நான்காவது அலையைத் தடுக்கவும் பொதுமக்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2021/1229710




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.