Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 102 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்.

அதேவேளை நோய் தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் 255 பேர் உள்ளார்கள்.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்புக்கள் எதுவும் இலங்கையில் பதிவாகவில்லை என்பதுடன் இருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்

https://www.virakesari.lk/article/78691

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

தனிமைப்படுத்தலில் வெளிநாடு சென்று திரும்பிய 3 குழந்தைகள்"

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்து அண்மையில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் தலைமையகத்தினால் கோரப்பட்டது.

எனினும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களில் முதலாம் இலக்கமிடப்பட்டிருந்த Bethany Nihinsa Somapalage  இரண்டாம் இலக்கமிடப்பட்டிருந்த Martina Hakmana Vidana Arachchige மற்றும் மூன்றாம் இலக்கமிடப்பட்டிருந்த Shenol Abaheesha Vindiv Hewage என்ற குழந்தைகள் மூவரும் அவர்களது பெற்றோருடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட குழந்தைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தோடு இது தொடர்பில் குறித்த குழந்தைகளுடைய பெற்றோர் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கவலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/78688

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 104 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 48 மணி நேரங்கள் இலங்கையில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் அடையாங்காணப்பாத நிலையில், சற்று முன்னர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78710

Link to comment
Share on other sites

மூவரின் நிலைமை கவலைக்கிடம்..!: 48 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளங் காணப்படவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் இன்று இரவு 7.00 மணியுடன் நிறைவுற்ற 48 மணி நேர காலப்பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எந்த தொற்றாளரும் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் இரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் 4 ஆய்வு கூடங்களில் பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் எவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்தது.

எவ்வாறாயினும் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 95 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் 84 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விட மேலும் 10 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே நாடளாவிய ரீதியில், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 237 பேர் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த 237 பேரில் ஐந்து பேர் வெளிநாட்டவர்களாவர். சந்தேகத்தில் சிகிச்சைப் பெறும் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெறும் நிலையில் அங்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்னிக்கை 100 ஆகும். இதனைவிட விஷேடமாக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 25 பேரும் ஹோமாகம வைத்தியசாலையில் 17 பேரும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் 15 பேரும் ராகமவில் 11 பேரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் 10 பேரும் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இதனிடையே கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்கள் என கூறப்படுகின்றது.

சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரும், பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம்  தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் கொரோனா தொற்று அறிகுறியுடன் உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

எனினும் அவ்விருவரும் கொரோனா தொற்று காரணமாகத்தான் உயிரிழந்தார்களா என்பதை வெளிவிவகார அமைச்சினால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாகவும், சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதனிடையே உலகில் 195 நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்னிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 36 ஆகும். அதில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 228 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதுடன் 21 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78708

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களுக்கு மக்கள் சுய கட்டுப்பாடடுடன் செயற்பட வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கமானது உலகளாவிய ரீதியில் பாரியளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது இலங்கையிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் வடக்கை பொருத்தவரைக்கும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதி இந்தப் பகுதி ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதி எனவே இந்த கொரோனா வைரஸ் தாக்கமானது வடபகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துமேயானால் மீண்டும் தமிழினம் பாரிய அழிவினை சந்திக்க நேரிடும் எனவே வடக்கு மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்

அரசாங்கத்தினால் எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது வடக்கை பொறுத்தவரை பொது மக்கள் அன்றாட கடமைகளை சுய கட்டுப்பாடுடன் மேற்கொள்வதன் மூலம் வைரஸில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் அத்தோடு உலக நாடுகளில் வல்லரசு நாடுகளில் கூட இந்த கொரோனாவைரஸ் தாக்கமானது பாரியஅளவு தாக்கத்தை செலுத்தியுள்ளது எனவே வடக்கு மக்கள் இதனை கருத்தில் கொண்டு சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளில் தங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.

பொதுவாக வெளியில் நடமாடும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் அத்தோடு தற்பொழுது உங்கள் வீடுகளுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீடுகளைத் தேடி வர உள்ளன எனவே நீங்கள் வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லை அனாவசியமான வேலைகளை தவிர்த்து சுய கட்டுப்பாடுடன் செயற்பட்டு கொள்வதன் மூலம் நாம் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்

அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது வடக்கில் ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாம் மீண்டும் கொரோனாவுக்கு பலியாவதை தவிர்த்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வெளியிலும் நாம் ஒன்றுகூடி பொருட்களை வாங்குவதிலும் அவதானமாக இருக்க வேண்டும்.


Mrs Vijayakala Maheswaran

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139896

Link to comment
Share on other sites

"மாஸ்க் போடுறன்டா ஒரிஜினல் N95 யோ/ ஒரிஜினல் 3லேயர் சேர்ஜிகல்மாஸ்க்கயோ போடுங்க. இல்லை என்றால் சும்மா இருங்க." Dr. Arshad Ahamed

பச்சைக் கலர், நீலக் கலர் சீலைகளை மாஸ்க் மாதிரி செய்து கட்டுவதாலோ, அல்லது அதில் N95 என்று பிரிண்ட் பண்ணி இருப்பதாலோ, கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது.

ஏனெனில் இவைகளையெல்லாம் ஒரிஜினல் மாஸ்க் என்று நம்பி உங்களை தொற்றாமல் இருக்க கொரோனா ஒன்றும் முட்டாள் கிடையாது. அதுபோல கொரோனா வைரஸுக்கு இன்னும் எழுதப்படிக்கத் தெரியாது, அதற்கு கண் பார்வையும் கிடையாது. எனவே உங்கள் முகத்தில் மாஸ்க் போன்ற ஏதோ என்று இருப்பதோ அல்லது அதில் N95 என்று பொறித்து இருப்பதோ கொரோனாவை ஏமாற்றி விடாது. நீங்கள் முகத்தில் கட்டியிருக்கிற பப்ளின் சீலையில் ஆமிக்காரர்கள் வேண்டுமென்றால் மயங்கலாம், கொரோனா ம்ஹும் மயங்கவே மயங்காது.

ஆகவே தூர நில்லுங்கள். தனிமையில் இருங்கள்.கைகளை நன்கு கழுவிக்கொள்ளுங்கள்.

பிற குறிப்பு-
1. ஒரிஜினல் சேர்ஜிகல் மாஸ்க், ஒரிஜினல் N95 போன்ற முகக் கவசங்களுக்கு இப்பவே நமது ஹொஸ்பிடல்களில் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதையும் கவனத்தில் கொள்க

2.நான் இப்போதும் ஹொஸ்பிடலுக்கு மாஸ்க் போடமலேயே போய் வருகிறேன். அது போலத்தான் நிறைய வைத்தியர்களும். தேவை ஏற்படும் போது மட்டுமே நாங்கள் இந்த வகை மாஸ்க்கை பாவிக்கிறோம்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
Link to comment
Share on other sites

 

தயவு செய்து முடிந்தளவு வீட்டில் இருங்கள் !!!!!

 

 

Link to comment
Share on other sites

இடைவெளியை பேண வேண்டி நிறுவனங்கள் தமது சின்னத்தில் மாற்றத்தை கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன 

200326121014-20200326-social-distancing-corporate-logos-split-gfx-exlarge-169.jpg

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு...!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 106 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம்(26.03.2020) நான்கு பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/78719

Link to comment
Share on other sites

இலங்கையில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதி ஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/139914?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்...!

கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும், நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இதேநேரம், குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

அந்த பிரதேசங்களில், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம். பிற்பகல் 2 மணிக்கு அந்தப் பகுதிகளில் மீள அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை

மேற்கொள்ளுபவர்களுக்கும், சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊடக சேவைகளை முன்னெக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்களும், விற்பனை நிலையங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் மெனிங் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.'

எனினும் குறித்த சந்தையில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/sooriyanfmnews/237297/அதிக-விலையில்-விற்பனை-செய்யப்பட்ட-அத்தியாவசிய-பொருட்கள்

Link to comment
Share on other sites

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து!

In இலங்கை     March 27, 2020 2:20 am GMT     0 Comments     1027     by : Benitlas

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அனைத்து-பொலிஸ்-உத்தியோகத/

Link to comment
Share on other sites

யாழில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் ஒருவர் அடையாளம்!

யாழ்.தீவகனம் அனலைதீவுப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனலதீவு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் ரஸ்ய நாட்டிற்கு சென்று வந்த நிலையிலேயே அவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபரை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

இதற்காக காங்கேசன்துறை கடற்படையினருடைய உதவி கோரப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த உதவி கோரப்பட்டு 3 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கடற்படையினர் அங்கு இதுவரை செல்லவில்லை.

இதனால் குறித்த நபர் சுகாதார துறையினருடைய கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/78747

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவுகிறது - சுகாதார பணிப்பகம்

(ஆர்.யசி)

கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட கொரோனா தொற்று குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும், ஆகவே அடுத்த இரண்டு வாரங்களில் மிகக்கடுமையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் குறித்து வினவியபோதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலமாக நாம் மிகவும் கவனமாக கொரோனா தொற்றுப்பரவல் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வரையில் இலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ள காரணத்தினால் கொரோனா வைரஸ் நோய் பரவல் குறைவடைந்துள்ளதாகவோ அல்லது முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாகவோ ஒருபோதும் கருத முடியாது.

இப்போது எவரும் அடையாளம் காணப்படாத போதிலும் கூட எரிமைலை ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது. எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை கையாள வேண்டும், சுகாதாரத்துறை வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றி செயற்பட வேண்டும். ஒரு சிலர் தூரநோக்கு சிந்தனையின்றி செயற்படுவது ஒட்டுமொத்த நாட்டினையும் பாதிக்கும். ஒவ்வொரு நபரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

உலக நாடுகளில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் நாம் முன்கூட்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. ஆகவே சுகாதாரத்துறையினர் அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எமக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/78748

Link to comment
Share on other sites

விழிப்புதான் அனைத்து நெருக்குவாரங்களிலிருந்தும் வெளிவருதற்கு முதற்படி. மக்கள் விழிப்படைந்து வருகின்றார்கள். என்பதற்ககான சில பதிவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், பலர் நடக்கின்றனர், காலணிகள் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 8 வரை இலங்கைக்கு தீர்மானம் மிக்க காலம் : ஒவ்வொரு தனிநபரும் ஒத்துழைக்க வேண்டும் - வைத்தியர் வாசன்

கொரோனா ஆபத்திலிருந்து இலங்கை மீள்வதற்கு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை தீர்க்கமான காலமாகும், கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையின் ஒவ்வொரு தனி நபரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அவ்வாறு கொரேனாவை கட்டுப்படுத்தினால் நாம் உலகிற்கு முன்னுதாரணமான நாடாக திகழ முடியுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையின் செயலாளரும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடுசெய்த கொவிட் - 19 அறிக்கையிடல் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில் காணொளி மூலமான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வைத்திய வாசன் ரத்தினசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது வைத்தியர் வாசன் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதிவரை மிகவும் தீர்மானமிக்க காலம். ஏனெனில் இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி அடையாம் காணப்பட்டது மார்ச் மாதம் 11 ஆம் திகதி. ஆகவே அன்றிலிருந்துஇன்றுவரை 16 நாட்கள் ஆகின்றது.

ஒரு கொரேனா தொற்றாளர் குறைந்தது 8 பேருக்காவது நோய்த் தொற்றை பரப்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது அவ்வாறு நோக்குகையில் இலங்கையில் 106 தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பலர் சமூகங்களுக்குள் இருந்துள்ளனர். இதனால் சமூகங்களுக்குள் குறைந்தது 550 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மறைந்தே அல்லது இனங்காணப்படாமலோ உள்ளனர். அவர்களில் இருந்து குறைந்தது 19 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம். அவ்வாறானவர்கள் சமூகத்திற்குள்ளும் , தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் இருக்கலாம்.

எனவே தான் இலங்கைக்கு ஏப்ரல் 8 வரையான காலம் மிகவும் தீர்மானம் மிக்க காலமாக உள்ளது.

இந்தநிலையில் அரசாங்கம், சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் நடவடிக்கையைவிட  மக்களின் ஒத்துழைப்பு குறிப்பாக ஒரு தனிநபரின் பங்களிப்பு 100 சதவீதம் அவசியமாக காணப்படுகின்றது. மக்கள் ஒத்துழைத்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிறந்த ஒரு நிலையை அடையலாம். அதற்காகத்தான் இந்த ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் யுத்தகாலத்தில் போட்டப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை விட முற்றிலும் வேறுபட்டது. எனவே மக்கள் அனைவரும் இதற்கு பங்களிப்பு செய்வதற்கு வீடுகளில் இருந்து சுகாதாரத் துறையினரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த தீர்மானம் மிக்க இக்காலப்பகுதியை நாம் சரியான முறையில் கையாளாவிட்டால் பாதிப்பு எமக்கே. ஆகவே சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக இருப்போம் வீடுகளில் இருப்போம்.

இதேவேளை, கொவிட் - 19 இல் இருந்து வேகமாக மீண்ட நாடு சிங்கப்பூர். அந்நாடு மேற்கொண்ட வழிமுறைகளே நாங்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றி நாம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது உலகிற்கு முன்மாதிரியான நாடாக திகழ முடியும்.

இப்போது சமூக இடைவெளியை பேணினால், ஏனைய நாடுகளைப் போல் ஆபத்தை சந்திக்காமல் தாக்கத்தை தவிர்க்க முடியும். சமூக இடைவெளி நகர்ப்புறங்களில் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் அதை காண முடியவில்லை. இந்நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் செயற்படுவது அவசியம். பாதுகாப்பு கவசமின்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் தாக்கத்திற்கு உள்ளானவருக்கு அருகில் செல்ல வேண்டாம்.

முகக்கவசம் அணிபவர்கள், கிருமிநீக்கி முகக்கவசங்களை அணியுங்கள். சாதாரண முகக்கவசங்கள் மற்றும் துணிகள் எவ்வித நன்மையும் அளிக்காது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை அல்ககோல் செறிவு 60 முதல் 70 வீதம் கொண்ட சனிடைசரால் துடையுங்கள். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் அவ்வவாறு துடையுங்கள்.

தேவையேற்பட்டால் மாத்திரம் வெளியில் சென்றுவந்தால் முதலில் கைகளை சவர்க்காரமிட்டு கழுவி, உபகரணங்களை தூய்மைபடுத்தி, நீங்களும் குளித்து, உடைகளை கழுவி சூரிய வெளிச்சத்தில் போடுங்கள். காலநிலை இந்த வைரஸ் தாக்கத்திற்கு பெரும் சாதகத்தையோ பாதகத்தையோ ஏற்படுத்தாது. 60 பாகை வெப்பம் உள்ளபோதே இந்த வைரஸை அழிக்க முடியும்.

குறிப்பாக இந்த நோயை அநேகர் மறைக்கின்றனர். இது மறைப்பதற்கு பாலியல் ரீதியான நோயல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும. இந்நோயினால் உயிரழப்பு ஏற்பட்டால் தகனம் செய்வதே ஆகச் சிறந்த வழிமுறையாகும்.

கொரோனாவின் ஆபத்தான பிடியில் இருந்து நாம் இலங்கையை மீட்டெடுப்பதற்கு அனைத்து மக்களும் ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து செயற்பட்டு சமூக இடைவெளிகளை முன்னெடுத்து வீடுகளில் இருந்து பங்களிப்பு செய்வது மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/78783

Link to comment
Share on other sites

கொரோனாவிலிருந்து மீண்ட சுற்றுலா வழிகாட்டியின் இரத்த மாதிரி ஆய்வுக்கு: தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு அவரது இரத்தை ஏற்றமுடியுமென வைத்தியர் நம்பிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 2 ஆவது கொரோனா தொற்றாளரான சுற்றுலா வழிகாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவரது இரத்தத்தை கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளர்களுக்கு அவசர சந்தர்பத்தில் ஏற்ற முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக குறித்த சுற்றுலா வழிகாட்டியின் இரத்த மாதிரி ஆய்வுக்காக பெறப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுலா வழிகாட்டி 2 ஆவது தொற்றாளராக நாட்டில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனாவால் அவர் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் குறுகிய நாட்களில் அவரால் அதிலிருந்து மீள முடிந்தது. அதற்கு அவரது குருதியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் வீதம் அதிகம் என்பதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்களுக்கு குருதி தேவைப்படும் போது அதற்கு மிகப் பொருத்தமான குருதியாக, குணமடைந்த சுற்றுலா வழிகாட்டியின் குருதியை வைத்தியர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படியே, நேற்று முன்தினம் மத்தேகொடையில் உள்ள அவரது வீட்டுக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் சென்ற தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை அதிகாரிகள் அவரை களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று,  இது குறித்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கான இரத்தமாதிரியைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78782

Link to comment
Share on other sites

அபாயத்தை நெறுங்கியுள்ள கொழும்பு..!: மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 50 தொற்றாளர்கள் அடையாளம்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 50 தொற்றாளர்கள்: ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை: சிவப்பு பள்ளிவாசல் ஜும் ஆ தொழுகை, ரோயல் - தோமஸ் கிரிக்கட் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டோருக்கு சுய தனிமைப்பட தொடர்ந்தும் ஆலோசனை கொரோனா தொற்று பரவல் நிலைமையின் அடிப்படையில் கொழும்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

பொதுமக்கள் அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளாது, செயற்பட்டு வருவதன் காரணமாக கொழும்புக்குள்ளும் மேல் மாகாணத்தின் கம்பஹா, களுத்துறையிலும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அடுத்த இரு வாரங்களுக்கு பாரிய அபாயம் உள்ளதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுவரை இலங்கையில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 106 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 50 பேர் மேல் மாகாணத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 48 மணி நேரத்துக்கு பின்னர், நேற்று 4 கொரோனா தொற்றாளர்கள் சுகாதார துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.

அதில் இருவர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்களும் களுத்துறையில் 15 தொற்றாளர்களும் கம்பஹாவில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்த நிலைமையானது கொரோனா பரவலுக்கான சூழலை மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் சுகாதாரத் துறையினர், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மக்களை முழுமையாக வீடுகளுக்குள் இருந்து வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.

;ஒன்று கூடல்கள் தடுக்கப்பட முன்னரேயே, கடந்த 13 ஆம் திகதி புறக்கோட்டையில் சிவப்பு பள்ளிவாசல் என அரியப்படும் பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகைக்கு சென்ற தந்தை, மகனுக்கு கொரோனா தொற்றிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றோர் தத்தமது வீடுகளில் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், அவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

இதனைவிட இதே கோரிக்கை கொழும்பு - ரோயல் கல்லூரி - கல்கிசை புனித தோமஸ் கல்லூரி கிரிக்கெட் போட்டியின் போது அங்கு சென்ற கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள விமானியுடன் இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இரு தரப்பினருக்குமான நோய் அறிகுறி தென்படும் காலம், நாளையும்(28.03.2020) நாளை மறுதினமும்(29.03.2020) நிறைவடையும் நிலையில் மிகக் கவனமாக செயற்படுமாறு பாதுகாப்புத் தரப்பினரும் சுகாதார துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/78784

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது!!

இரண்டாம் இணைப்பு

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 107 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 106 ஆக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்திருக்கிறது.

இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் பொது மக்கள் விழிப்பாகவும் சுகாதாரத்துடனும் செயல்படுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி   இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/tamil-iyyar-fell-off-in-toronto-in-tamil-event-1731068969
    • பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெண் கொசுவுடனும் உறவில் ஈடுபடவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். பெண் கொசுக்கள் தான், மக்களுக்கு நோய்களை பரப்பக் கூடியவை. அந்த கொசுக்களை முட்டை இடாமல் தடுப்பதன் மூலம், அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும். செவித்திறனை நீக்கியதால் கொசுக்களின் இனச் சேர்க்கையில் பாதிப்பு ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் எஜிப்டய் (Aedes aegypti) எனும் கொசுக்களைப் பற்றி இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொசுக்களின் இனச் சேர்க்கை பழக்கங்களை ஆய்வு செய்தார்கள். இதன் கால அளவு சில நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே இருந்தது. பிறகு தான் மரபணுக்களை கொண்டு எப்படி இதை தடுப்பது என்று கண்டுபிடித்தனர். டி.ஆர்.பி.வி.எ. (trpVa) என்ற புரதத்தை அவர்கள் குறிவைத்தனர். இந்த புரதம் தான் கொசுக்களின் செவித்திறனுக்கு முக்கியமானது. மரபணு மாற்றம் பெற்ற கொசுக்கள், அவற்றின் இணையின் இறக்கை சத்தத்திற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. அந்த சத்தம் கேட்கமுடியாத அவற்றின் காதுகளில் விழுந்தது. இதற்கு மாறாக, மரபணு மாற்றம் பெறாத கொசுக்கள் பல்வேறு முறை உடலுறவில் ஈடுபட்டு அந்த கூண்டில் இருந்த அனைத்து பெண் கொசுக்களையும் கருத்தரிக்க செய்தன. பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட்ட கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மரபணு மாற்றம் ஏற்படுத்திய செவித்திறன் நீக்கம், கொசுக்களின் இனச்சேர்க்கையை முற்றிலுமாக தடுத்து விட்டது என்று கூறினார்கள்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஸ் எஜிப்டய் கொசுக்கள் ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்புகின்றன உணவுச் சங்கிலியில் கொசுக்களின் பங்கு ஜெர்மனியிலுள்ள ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோர்க் ஆல்பர்ட், கொசுக்களின் இனப்பெருக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர். அவரிடம் இந்த ஆய்வை பற்றி நான் கேட்டேன். “கொசுக்களின் செவித்திறனை அழிப்பது கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் இதில் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.” என்று அவர் கூறினார். “இந்த ஆய்வில் வழங்கப்பட்ட முதல் நேரடி மூலக்கூறு சோதனையின் முடிவில், கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு செவித்திறன் முக்கியமானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட என்பதைக் காட்டுகிறது.” என்றார். “ஆண் கொசுக்களின் செவித்திறன் மட்டுப்படுத்தப்பட்டாலோ, அவை சத்தத்தினை கேட்டு ஈர்க்கப்படவில்லை என்றாலோ கொசுக்களின் இனமே அழிந்துவிடும்.” என்றும் ஆல்பர்ட் கூறுகிறார். கொசுக்களை கட்டுப்படுத்த மற்றொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதாவது கொசுக்களால் அதிகம் நோய்கள் பரவும் இடங்களில் மலட்டு ஆண் கொசுக்களை நாம் விட்டுப் பார்க்கலாம். என்னதான் கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், இவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சில வகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew2097719zo
    • சச்சியருக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் "மதமாற்றிகள்". அதே போல இங்கே யாழிலும் கத்தோலிக்கர், அங்கிலிக்கன், யெஹோவா எல்லாரும் மதமாற்றிகள் என்று நம்புவோர்  இருக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ சபைகளிடையேயான வேறு பாடு தெரியாத அறியாமை தான் முதன்மைக் காரணம்.
    • அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்கிறது...... ஆமாம் பல நூறு ஆண்டுகளாக நாம் அடிமையானவர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்து வரும் தமிழர் இன கூட்டத்தை சாட்டையால் அடித்து,  நீ பெருமைமிகு தமிழ் இனத்தின் மகன் என்றும்.... உன் தாய்மொழி உலகில் ஆக சிறந்தது என்றும்........ நீ நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவன் என்றும்..... உன் முன்னோர்கள் அறத்திலும் வீரத்திலும் மாண்பிலும் ஆகப்பெறும் தலைவர்கள் என்று உணர்த்தி இருக்கிறாய்... அந்த நன்றி கடனோடு உன்னை வாழ்த்துவதில் மகிழ்வே... தமிழர் வரலாற்றில் நீயும் பேசப்படுவாய்... வாழ்த்துக்கள் சீமான் அண்ணா💐💐💐 குகன் அருமைநாட்டார்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.