Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

நுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு - சற்றுமுன் வெளியான அறிவித்தல்

நுவரெலியா மாவட்டத்திற்கு 24 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை சற்றுமுன் விடுத்துள்ளது.

உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144282?ref=imp-news

  • Replies 111
  • Views 9.8k
  • Created
  • Last Reply

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை

In இலங்கை     May 31, 2020 10:36 am GMT     0 Comments     1025     by : Jeyachandran Vithushan

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படலாம் என்றும் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தை-முழுமைய/

ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும்.

அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது.

நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைப்படுத்த அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/144365

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

In இலங்கை     May 31, 2020 11:21 am GMT     0 Comments     1046     by : Jeyachandran Vithushan

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாவை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் அமைச்சிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/ஜூன்-01-முதல்-ஹோட்டல்களில்/

அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது விடுமுறை

எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது அரசாங்கம்.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு பூராகவும் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144527

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்?

நாடு முழுவதும் வார இறுதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்த அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144520

  • தொடங்கியவர்

சனிக் கிழமை முதல்..... ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல்

ஜுன் 6 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு பத்து மணிக்கு அமுலாகும் ஊரடங்குச்சட்டமானது, நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144548?ref=home-imp-parsely

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குச் சட்டமா?

தற்போதுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை இரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நாளையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4மணிவரையில் ஊரடங்குச்சட்டம் அமுல்செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதுவொருபுறமிருக்க நாளையிலிருந்து ஊரடங்குச் சட்டமானது முழுமையாக நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான தகவல்களை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144669

ஊரடங்குச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து 4 மணி வரையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை இயக்குவதில் கொரோனா தடுப்பு சுகாதார பரிந்துரைகளை முடிந்தவரை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144696

  • 3 weeks later...

ஊரடங்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா, நீக்குவதா என்பது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டம் கட்டமாக மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் வரையில் நாட்டில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ள போதிலும் இந்த தொற்று மக்கள் மத்தியில் பரவுகின்றமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145823

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்!

இலங்கையில் இன்று (28) முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் அமுலாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் முறையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஜுன் மாதம் 13ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/145988

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஊரடங்கு தொடர்பில் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிட் -19 நோயாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்புகள், பி.சி.ஆர் சோதனைகளுக்கு தொடர்புகளை உட்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/146962

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.