Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு விசேட நிதியம்

Featured Replies

Gotabhaya-Rajapaksa.jpg

கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்காக Covid 19 சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்’ ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன்படி கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக BOC – AC எண் 85737373 இல் ஒரு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்கனவே 100 மில்லியன் நிதியை குறித்த நிதியம் வழங்கியுள்ளது.

மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸை-எதிர்கொள்வத/

  • 1 month later...
  • தொடங்கியவர்

 

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 900 மில்லியனாக அதிகரிப்பு

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபாவை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் கையளித்தது. அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சப்ரகமுவை மாகாண சபை நிதியம் ஒரு மில்லியன் ரூபாவையும், இரத்தினபுரியை சேர்ந்த திரு.ஜானக ரணவக ஒரு லட்சம் ரூபாவையும், இரத்தினபுரி மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலைகள் மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவையினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சங்கம் 05 லட்சம் ரூபாவையும் இலங்கை டெலிகொம் பௌத்த சங்கம் 03 லட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

லங்கா சீனி தனியார் கம்பனி நேரடியாக வைப்பு செய்த 3.5மில்லியன் ரூபாவுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 900 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

http://athavannews.com/கொவிட்-19-சுகாதார-சமூக-பாது-13/

கொரோனா வைரஸ் நிதி தவறாக கையாளப்படுகின்றது – அஜித் மன்னபெரும

In இலங்கை     May 8, 2020 1:37 pm GMT     0 Comments     1275     by : Benitlas

கொரோனா வைரஸ் நிதி தவறாக கையாளப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொவிட் 19 இற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எதிர்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் வெளிநாட்டு நிதி மக்கள் மத்தியில் சென்றடைவதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது. சுனாமி நெருக்கடியின் போது இடம்பெற்றது போன்று நிதி தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து வெளிப்படைதன்மையில்லை.

நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் இந்த விடயத்திற்கு அமைதியான முறையில் தீர்வை காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயல்கின்றது. இதன் மூலம் இந்த நிதிகள் குறித்த வெளிப்படை தன்மை பற்றி விவாதிக்க முடியும்.

அரச நிதி குறித்து நாடாளுமன்றத்திலேயே விவாதிக்க முடியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட பிரதிநிதிகளே கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்புகின்றனர். எதிர்கட்சிகள் குழப்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-நிதி-தவறாக-க/

  • தொடங்கியவர்
On 9/5/2020 at 09:52, Rajesh said:

சுனாமி நெருக்கடியின் போது இடம்பெற்றது போன்று நிதி தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து வெளிப்படைதன்மையில்லை.

நியாயமான சந்தேகம்.

ஏனெனில், நெருக்கடி நிலைகளின் போதெல்லாம் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வளர்ந்தவர்கள் தான் இந்த இராஜபக்ச பயங்கரவாதிக் குடும்பத்தினர்.

  • தொடங்கியவர்

தனது 3 மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி கோட்டா

Gotabaya-Rajapaksa-1-720x450.jpg

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இட்டுகம எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் கையளித்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதி தமது மூன்று மாத சம்பளமான இரண்டு இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை இவ்வாறு வழங்கியுள்ளார்.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்திற்கு நன்கொடைகளை #207#  என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோ அல்லது www.itukama.lk என்ற இணையத்தள முகவரியை பயன்படுத்தியோ வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/தனது-3-மாத-சம்பளத்தை-வழங்க/

  • தொடங்கியவர்
47 minutes ago, போல் said:

இதன் போது ஜனாதிபதி தமது மூன்று மாத சம்பளமான இரண்டு இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை இவ்வாறு வழங்கியுள்ளார்.

போர்க்குற்றவாளி கோட்டாபய கடத்தல், கப்பம், தரகுப்பணம் மூலம் கொள்ளையிட்ட ஆயிரமாயிரம் கோடி பணத்தில் சிறு தூசுக்கு கூட இணையற்ற அளவு.

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் அறிவித்த ஸ்ரீலங்காவிற்கான கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான நிதி உதவிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளுக்காக 3000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் இன்றைய தினம் நிராகரித்துள்ளது.

கோவிட்-19 வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒழிப்பு பணிகளுக்காகவும் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கிய நிதி உதவிகளை அரசாங்கம் மறைத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மக்களுக்கான பணம் மக்களுக்குப் போய்சேராமல் அவை அரசியல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களிடம் சிக்கிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகள் இதனால் ஸ்தம்பிதமடைந்திருப்பதாகவும் எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் முற்பகலில் நடைபெற்றது.

இதன்போது, எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிதிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,

உண்மையில் கோவிட்19 வைரஸ் குறித்து நிதியமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றுவரை எந்தவொரு நாடுகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் ஒரு டொலராகிலும் ஸ்ரீலங்காவிற்குக் கிடைக்கவில்லை.

அதேபோல கடந்த நாட்களில் எதிரணியினரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். 3000 வாகனங்களை அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அது பொய்யான அறிவிப்பாகும்.

05 வருடங்களுக்கு எந்த வாகனமும் அரசியல்வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது. மருந்துகள் வெளிநாட்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/143214?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.