Sign in to follow this  
கிருபன்

களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி

Recommended Posts

 

களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி

On Apr 1, 2020

லெப்.கேணல் பரிபாலினி

சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:06.07.1973

வீரச்சாவு:01.04.2000

நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு


களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவரின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது.

“பரி… பரி… பரி…”

“பரி… பரி…”

என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள்.

1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள்.

1992 ஆரம்பகாலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்ற அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர்.

இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் ஆரம்பமாகி ஆறே ஆறு நாட்கள்.

கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது விநியோகப் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக் காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ‘கொம்பாஸ்’ தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர்.

ஆறு நாட்களே பயிற்சி எடுத்த போராளிகள், காட்டு அனுபவங்களும், சண்டை அனுபவங்களும் குறைந்தவர்கள். சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச வாகனங்களும், பீரங்கிகளும், விமானங்களும், உலங்கவானூர்திகளும், கடல் பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக்கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி. பரிபாலினியின் சந்தோசத்திற்கு அளவேயில்லை.

‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும்இ ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான்.

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது.

இரண்டரை மாதப் பயிற்சிக்காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து இராணுவத்தைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள்.

“தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் ஆரம்பகால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள்.

பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள்.

‘ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியூடாகச் செம்மலைஇ குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருக்கு உதவியாக செம்மலைஇ அளம்பில் கடல் பிரதேசங்க@டாக தரையிறக்க முனைந்த இராணுவத்தினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடல்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும்இ இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன.

மணலாற்றின் வரலாற்றுச்சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில்இ எதிரியின் கடல்வழி விநியோகத்தைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது.

அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தது. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு

‘ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல இராணுவ அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள்.

காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள்.

தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் ரோந்துவரும் இராணுவத்தினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் இராணுவம் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர்.

“மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு வருடங்களாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள்.

அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் இதயபூமி – 01 உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது.

‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை.

இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து அஞ்சலி செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு.

இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம்.

‘சிஸ்ரர் நவணி…… வோட்டர் டாங்…..’ நிரப்பும்படி சைகையில் முடிப்பாள் பரி.

பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில்.

கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை.

ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது.

அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள்.

“அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது”

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பாஇ ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர்இ சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து……

வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது.

இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள்.

மீண்டும் பரிபாலினியின் சண்டைக்களங்கள் விரியத்தொடங்கியது.

1996 இல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும்.

பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தது. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ் அணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள்.

தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி……

ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல இராணுவக் காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது.

அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார்.

“ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார்.

சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். ஆரம்பகாலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரகமந்திரமாக இருந்தது.

01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் ஆரம்பமாகி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து பிரிகேடியர் சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல.

ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்ப நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து…

தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது.

“என்ர சண்டை அனுபவங்களைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம்.

01.04.2000 நள்ளிரவு கடந்த விடிகாலை இயக்கச்சி இராணுவத்தளம் புகுந்து திரும்பாத தோழிகளுள் பரிபாலினியும் ஒருத்தியாக…

பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப பிரகாசிக்கத் தொடங்கிய ஒரு இளம் தளபதி……

அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்……

தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்……

ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள்.

நினைவுப்பகிர்வு: உலகமங்கை.

நன்றி – களத்தில் இதழ் (31.08.2000).

https://www.thaarakam.com/news/120583

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

வீரமங்கை பரிபாலினிக்கு வீர வணக்கங்கள்.......!

இணைப்புக்கு நன்றி கிருபன்.....!

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது! குருநாகல் – பொல்ஹாவெலவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் கடந்த பெப்ரவரியில் பனலிய மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களிலுள்ள இரு வீடுகளுக்குள் நுழைந்து தங்க நகைகளை திருடியுள்ளதாகவும் குறித்த நகைகளின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட நகைகளைத் தேடி பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் குற்றமொன்றுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட கேகாலையை சேர்ந்த பொலிஸ் அதிகாரியாவார் https://newuthayan.com/திருட்டில்-ஈடுபட்ட-முன்ன/
  • உலக சுற்றுச்சூழல் தினம்: இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பது ஏன்? நித்தின் ஸ்ரீவத்சவா பிபிசி AFP சென்ற ஆண்டின் குளிர் காலத்தில் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.  "விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்டர் சுற்றளவில் காணப்படுகின்றன. குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத், பிவாடி மற்றும் நொய்டா நகரங்கள் உலகிலேயே மாசுபாடு மிகுந்த நகரங்கள் பட்டியலில் உள்ளன.  2018ம் ஆண்டு கிரீன்பீஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் 30 இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவு என்று தெரிவித்துள்ளதைவிட மிகவும் அதிகமான அளவில் பி.எம்.2.5 துகள்களை உள்ளடக்கிய மாசுபாடு காற்றில் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.  AFP காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. டெல்லியை சூழ்ந்துள்ள இத்தகைய புகைமூட்டத்தால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல், புற்றுநோய் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கும்.  இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் அதனை சுற்றியும் வாழும் சுமார் மூன்று கோடி பேர் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த புகைமூட்டத்தால் அவதிப்பட்டுள்ளனர். ஆனால், இதனால் உருவாகும் பிரச்சனை டெல்லிக்கு அப்பாற்பட்டதாகும்..  இந்தியாவின் வடபகுதியில், குறிப்பாக கங்கை நதி சமவெளி பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.  மேற்கு நோக்கி வீசுகின்ற காற்று இமயமலை நோக்கி செல்கையில் இந்த தூசியும், புகைமூட்மும் இந்தியாவுக்கு அருகிலுள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.  இந்தியாவில் குறிப்பாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்றை மிகவும் மாசுபாடு உடையதாக எது மாற்றுகிறது? பயிர்களை எரித்தல் இந்தியாவின் வடபகுதியிலும், டெல்லியிலும் காற்று மாசுபாடு ஏற்பட, அறுவைடைக்கு பின் காய்ந்த பயிர்களை எரிப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  அறுவடை காலத்தில் நிலத்தில் விட்டு செல்லப்படும் காய்ந்த பயிர்களை விவசாயிகள் எரிக்கின்றனர். தங்கள் நிலத்தை அடுத்து பயிரிட தயார் செய்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற மிகவும் எளிதான முறை இதுதான்.  AFP காய்ந்த பயிர்களை எரித்து நிலங்களை அடுத்து பயன்படுத்த தயார் செய்வது இந்திய விவசாயத்தில் நீண்டகாலம் இருந்து வரும் பழக்கமாகும். மேற்கு நோக்கி வீசுகின்ற காற்று இந்த புகையை டெல்லியை நோக்கி வர செய்வதால், ஒவ்வோர் ஆண்டும் மோசமான மாசுபாடு ஏற்படுவதை காணலாம்.  இணக்கமான முயற்சிகளும், சாத்தியப்படும் மாற்று நடவடிக்கைகளும் வெற்றியடையாததால், இதனை ஒழுங்கு படுத்த அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.  இந்தியா விவசாய பொருளாதாரமாக இருக்கும் நாடாகும். காய்ந்த பயிர்களை எரித்தல் மிக பெரிய அளவில் நடைபெறுகிறது.  குறிப்பாக, உத்தர பிரதேசத்திலும், ஹரியாணாவிலும் காய்ந்த பயிர்கள் அதிகமாக எரிக்கப்படுவதால்தான், டெல்லிக்கு அருகில் அதிக மாசுபாடு மிக்கவையாக நகரங்கள் உள்ளன.  இந்த வாரத்தின் தொடக்கத்தில் காய்ந்த பயிர்களை எரிப்பதற்கு தடை விதித்த நிலையில், காற்று மாசுபாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகளை இந்திய உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.  வாகன புகை வெளியேற்றம் Getty Images டெல்லி சாலைகளில் சுமார் 30 லட்சம் வாகனங்கள் ஒரு நாளில் செல்கின்றன. மோசமான புகைமூட்டத்தால், பொது சுகாதார அவசர நிலையை இந்திய அரசு அறிவித்ததோடு, வாகன கரும்புகை வெளியேற்றத்தை தடுப்பது முதன்மை பணியாக மாறியது.  ஒவ்வொரு நாளும் 30 லட்சம் வாகனங்கள் சாலைகளில் செல்வதாக தெரிவித்துள்ள டெல்லி அரசு, நகர சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் முறையை அறிவித்துள்ளது.  தனியார் கார்களை பொறுத்தவரையில், இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், ஒற்றை எண்களை கொண்ட வாகனங்கள் அடுத்த நாளும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.  இதனால், 15 லட்சம் வாகனங்கள் சாலையில் செல்வது குறைந்துள்ளது என்று அரசு தெரிவிக்கிறது.  வாகனங்கள் பற்றிய வேறு சில புள்ளிவிவரங்கள் 2016ம் ஆண்டு இந்திய சாலைகளில் 20 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும். காய்ந்த பயிர்களை எரிப்பதுபோல, வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றமும் இத்தகை மாசுபாடு ஏற்பட முக்கிய காரணியாக இருக்கும்.  டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் நாட்டிற்கு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.  மின்சாரத்தால் இயங்குகின்ற வாகனங்களை அதிகரிக்க அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. டீசலால் இயங்கும் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் எரிவாயுவால் இயங்கும் வாகனங்களைவிட அதிக எண்ணிக்கையில் இன்றும் உள்ளன.  2015ம் ஆண்டு டீசலால் இயங்குகின்ற பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்கள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் ஒரு கோடியே ஒன்பது லட்சம் உள்ளன என்று இந்திய அரசு பதிவு செய்துள்ளது. டீசலால் இயங்குகின்ற வாடகை கார்கள் மற்றும் தனியார் கார்களும் உள்ளன.  உலக அளவில் மனிதர்களால் வெளியேற்றப்படும் மாசுபாட்டில் சாலையில் ஓடும் டீசல் வாகனங்களால், சுமார் 20 சதவீத நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது என்று நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நைட்ரஜன் ஆக்ஸைடுதான் பி.எம் 2.5 துகள்கள் உருவாக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.  கட்டுமானத் துறை Getty Images டெல்லியை புகைமூட்டம் சூழும்போது, டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டுமானத்திற்கு முழு தடையை அரசும், உச்ச நீதிமன்றமும் விதிக்கிறது. கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் இதனால் தடைபடுகின்றன.  இத்தகைய பணியிடங்களில் இருந்து தூசிகள் மற்றும் இடிபாடுகளை செயல்திறன் மிக்கதாய் கையாளுவதில் ஒத்துழைப்பு பல கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்காததால் இது பெரும் பிரச்சனையாகியுள்ளது.  இயற்கையாகவே ரசாயனமாக இருக்கும் இந்த தூசியை காற்று அடித்து செல்வதால், மூச்சுத்திணறலையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும் உருவாக்குகிறது  Getty Images இந்தியாவில் கட்டுமான துறை வளர்ந்து வருகிறது. விரைவாக வளர்ந்து வரும் இந்தியா, சீனாவோடு போட்டியிட முயற்சிக்கிறது. கட்டுமானங்கள் வளர்ச்சிக்கான வழியின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன.  2022ம் ஆண்டுக்குள் கட்டுமான துறையின் மதிப்பு 738.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இரும்பு, பெயிண்ட் மற்றும் கண்ணாடி தொழிற்துறையில் இந்தியா முக்கிய பங்களிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.  இந்தியா முழுவதும் எவ்வளவு கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்று தெளிவான மதிப்பீடுகள் இல்லை.  ஆனால், பெரும்பாலான சிறிய நகரங்களில் குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், உள்கட்டுமான வசதிகள் என எல்லா துறை கட்டுமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனாலும், இந்திய நகரங்கள் உலகிலேயே அதிக மாசுபாடு உள்ள நகரங்களாக மாறுகின்றன. https://www.bbc.com/tamil/india-50321509  
  • எனக்கு பல நாளா ஆசையிருந்திச்சு இனியில்லை😪 நன்றி பெருமாள்🙏
  • நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம்.    நன்றி சிறி, ஆமாம் எனக்கும் தான் நேற்று வியப்பாக இருந்திச்சு, வழக்கமாக நான் கொடுக்கும் பணங்களைதான் அவா யாருக்கும் கொடுப்பா ஊருக்கு போகும்போது. இப்ப ரியூஷனில்  உழைப்பதால் அவரின் வங்கிகணக்கில் கொஞ்ச காசிருக்கு. அதை நல்ல வழியில் செலவழிக்க பழுக்கனும்.. சின்னவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணமிருக்கு. 
  • இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் TOM ROBST கோப்புப்படம் வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு.  இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே.  அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை கடந்த இரண்டு மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறது அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை.  ஒரு புறம் பெருக்கெடுக்கும் வருடாந்திர வெள்ளம், மறுபுறம் மண் சரிவு, இன்னொரு பக்கத்தில் தற்போது பெருகிவரும் கொரோனா தொற்று என்று முப்புறமும் பேரிடர்கள் சூழ்ந்து தாக்கும் நிலையில், இடி மின்னலை முன் கணிப்பதற்கான இந்த தொழில்நுட்பம் அந்த மாநிலத்துக்கு ஒரு சிறு ஆசுவாசத்தை வழங்குகிறது.  அசாம் மாநில உள்துறை செயலாளரும், அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான மு.ச.மணிவண்ணன் இந்த தொழில்நுட்பம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். மு.ச.மணிவண்ணன் "அமெரிக்க நிறுவனமான எர்த் டாட் நெட் இந்த தொழில்நுட்பத்தை எங்களுக்கு வழங்குகிறது. ஏற்கெனவே ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.  இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும்" என்கிறார் மணிவண்ணன். "இடி மின்னலின் பாதையை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறோம். அதே நேரம் அசாம் மாநிலத்தில் எங்கேயாவது இடி தாக்கும் என்றால் அது குறித்து 45 நிமிடம் முன்பே கணித்துவிடும் அமெரிக்க நிறுவனம் அது குறித்து, அந்த ஊர் எந்த வட்டத்தில் வருகிறதோ அந்த வட்டாட்சியருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். உடனடியாக வட்டாட்சியர் அதைப் பற்றி குறிப்பிட்ட ஊருக்கு அழைத்து எச்சரிக்கை விடுப்பார் என்று கூறும் மணிவண்ணன், இதற்காக வட்டவாரியாக உள்ளூர் அதிகாரிகளின் எண்கள் எர்த் டாட் நெட்டிடம் பகிரப்பட்டுள்ளன என்கிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் முதல், அதாவது கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக கூறும் அவர், இதுவரை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாக இருந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். "கடந்த ஆண்டு அசாமில் இடி மின்னல் தாக்கில் 42 பேர் இறந்துள்ளார்கள். இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த கிராமத்தில் இடி தாக்கப் போகிறது என்று 45 நிமிடம் முன்பாகவே செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாகவே இருந்துள்ளன. ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. இதற்காக, ஊராட்சிகளுக்கு ஒலி பெருக்கிகளைத் தந்து அதன் மூலம் அறிவிப்பு செய்யலாமா என்பது போன்ற யோசனைகள் இருக்கின்றன" என்றார் மணிவண்ணன். உயிர் காக்கும் தொழில்நுட்பம்  இதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கிறதா என்று கேட்டபோது, வெறும் இரண்டு மாதம் முன்பிருந்துதான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்துபார்த்தால், கடந்த ஆண்டை ஒப்பிட எவ்வளவுதூரம் இடி மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்பது தெரியவரும். அப்படி ஒரு ஆய்வை செய்ய சிறிது காலம் பிடிக்கும் என்கிறார் மணிவண்ணன்.  "மகவு பிறப்பதும், மழை வருவதும் எப்போது நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது" என்று கூறும் பழமொழி ஒன்று தமிழில் உண்டு. ஆனால், புயல், மழை போன்றவற்றை கணிக்கும் தொழில்நுட்பத்தில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதன் மூலம் புயல் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.  சுனாமியை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் ஏற்பாடுகள் வந்துவிட்டன. நிலநடுக்கத்தை முன் கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்துவந்தாலும் ஒரு நிமிடத்துக்கு முன்பு அதைக் கணிப்பதுகூட இன்னும் சவாலானதாகவே இருக்கிறது.  இந்நிலையில் இடி மின்னல் என்னும் ஓர் இயற்கை இடர்ப்பாட்டை முன் கணிக்கும் தொழில்நுட்பம் மனித உயிரிழப்புகளை தவிர்ப்பதில் உதவி செய்யக்கூடும்.  தமிழகத்திலும் ஆண்டுதோறும் இடிமின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் தமிழ்நாட்டுக்கும் எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடும்.    https://www.bbc.com/tamil/science-52926994