Jump to content

மத்துகம, அக்குரஸ்ஸ பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை !


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

14 நாள் தனிமைபப்டுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 ஆம் திகதி 8 பேரும், 4 ஆம் திகதி மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில், தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி அவர் மத்துகம - நவ துடுவ பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மார்ச் 10 ஆம் திகதி தென் கொரொயாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே நேற்று முன் தினம் கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

dddd.jpg


தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் வீடு திரும்பியதும் அவரை பார்வை இட வந்தவர்கள், அவ்வீட்டில் வசித்த அந்நபரின் தாய் மற்றும் உறவுக்கார யுவதி ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர் வீடு திரும்பியதும் அவருடன் பழகிய 17 பேர் சந்தேகத்துக்கிடமான கொரோனா தொற்றாளர்களாக பெயரிடப்பட்டு கராபிட்டிய, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந் நிலையில் குறித்த நபருடன் கந்த காடு தனிமைபப்டுத்தல் நிலையத்தில் தென் கொரியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் ஒன்றாக வீடுகளுக்கு வந்த மேலும் 6 பேர் தொடர்பில் பரிசோதனைகளை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். கந்தர, மொரவக, ஊறுபொக்க, கம்புறுபிட்டிய, ஹக்மன பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களே இந்த பரிசோதனைகளுக்கு உள்ளான நபர்களாவர். கம்புறுகமுவ மாவட்ட வைத்தியசாலையில் உள்ள விஷேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டே அவர்களுக்கு கொரோனா தொடர்பிலான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே நேற்று முன்தினம் அக்குரஸ்ஸ -மாலிதுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை பரிசோதிக்கும் போதும் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கவில்லை எனவும், அவரது சளிப் படலத்தின் மாதிரியைப் பெற்று பரிசோதித்த போதே கொரோனா இருப்பது தெரிய வந்ததாகவும், கம்புறுகமுவ வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து அவர் உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன் அவரது மனைவி, மூன்று பிள்ளைகளும் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த ஊர் முடக்கப்பட்டு அங்கு வசிப்போர் தனிமைபப்டுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் போதுமானதாக இல்லை எனவும் அவற்றை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அரசனக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை விரிவு படுத்தலை ஆராய தற்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா கூறினார்.

https://www.virakesari.lk/article/79371

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.