Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

mullivaikkal-4-2.jpgமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் நினைவுகூரல் நிகழ்வுகள் செம்மணி படுகொலை நினைவிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தியுள்ளதுடன். அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர். எனினும் சமூக இடைவெளியை பேணி நினைவுகூரல் இடம்பெற்றது.

http://thinakkural.lk/article/41596

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

 

 

 

  by : Dhackshala

Mullivaikal.jpg

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தியுள்ளதுடன். அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர். எனினும் சமூக இடைவெளியை பேணி நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே  நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் பதிவுகளை பெற்ற பொலிஸார், அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-6/

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

 

 

     by : Jeyachandran Vithushan

Court-Order.jpg

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவை 500,000 ரூபாய் பெருமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி  திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குறித்த திருத்த விண்ணப்பம் இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவின் மூலம், ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முன்னாள்-சுகாதார-அமைச்ச-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் இராணுவம் குவிப்பு; முன்னணிக்கு தடை!

IMG_20200513_124526-960x573.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் – செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தலை செய்ய முயன்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

நினைவேந்தலுக்கு சென்றிருந்த பொ.கஜேந்திரகுமார் உள்ளிட்டோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளர். அத்துடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் அந்தத் தடையை மீறி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை தனித்தனியே படம் எடுத்து விபரங்களை பொலிஸார் சேகரித்ததுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

  • IMG_20200513_124535-1024x620.jpg?189db0&
  • IMG_20200513_124517-1024x596.jpg?189db0&
  • FB_IMG_1589354665584.jpg?189db0&189db0
  • FB_IMG_1589354658846.jpg?189db0&189db0
  • FB_IMG_1589354646629.jpg?189db0&189db0
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து தெரிவதென்ன.. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும்.. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும்.. தனிமைப்படுத்தல் முகாம் அமைப்புக்களும்.. தமிழ் மக்களின் சமூக வாழ்வியலை சீர்குலைத்து அவர்களுக்கு எதிரான தண்டனைகள் வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இது உலகில் எங்கும் நிகழவில்லை. சொறீலங்காவில் மட்டும்.. சிங்கள படைகளாலும்.. பொலிஸாலும் நிகழ்த்தப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செய்யும் அடிப்படை உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. அதனை ஐநாவும் உறுதி செய்திருந்தது. 

சிங்கள அரசுகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. 

இதுக்குள்ள அரசின் அரவணைப்புக்கு எங்கும் சபலக்காரர்கள் தரமற்ற சந்தர்ப்பவாதிகள் நியாயமான ஆயுதப் போராட்டம் பற்றி கொச்சைக் கருத்துக்கள் சொல்லி தங்கள் அநாகரிக குணங்களை வெளிப்படுத்துகின்றனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: வீட்டிலிருந்து நினைவு கூரலுக்கு விக்கினேஸ்வரன் அழைப்பு

cv-300x181.jpgமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கொரோனாவின் பாதிப்பு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால் பலவிதமான தடங்கல்களை நாங்கள் எதிர்நோக்க இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலுக்குச் சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்குக் கூறமுடியாது இருக்கின்றது.

அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று.

தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸாருடைய, படையினருடைய எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன்.

அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தடுப்பு முகாமுக்குக் கொண்டுபோக எத்தணிக்கிறார்கள். அப்படியானால் 14 நாட்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்திருக்கக்கூடும்.

ஆகவே, முடியுமான மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம்.

ஆனால், எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம்.

இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நாட்ட இருக்கின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதேவேளை, உலகம் பூராகவும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 இற்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும்.

இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது.

உதாரணமாக எங்களுடைய நாட்டிலே அந்த நேரத்தில் செய்யும்போது அவுஸ்திரேலியாவில் 5 அல்லது 6 மணித்தியாலம் வித்தியாசமாக இருக்கும். இங்கிலாந்தில் வித்தியாசமாக இருக்கும்.

ஆகவே, அந்தந்த நாடுகளிலேயே 18.18.18 இற்கு நாங்கள் விளக்குகளை ஏற்ற இருக்கின்றோம். விளக்குகளை ஏற்றி இறந்தவர்களை நினைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பின் படி வரும்காலம் நல்லதொரு காலமாக வடகிழக்கு மாகாண மக்களுக்கு அமைய வேண்டும் என்று சிந்திப்போமாக” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/41648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளில் அனுஷ்டிப்போம்

Mullivaikkal-Remembrance.jpg?189db0&189db0

 

 

முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகூரலை இம்முறை இல்லங்களில் இருந்து அனுஷ்டிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் அமையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிவில் சமூகத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ.யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமராரவடிவேல் குருபரன் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில்,

‘முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினத்தை தமிழ் தேசம் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அனுட்டிக்கவுள்ளது.

ஆழமாகிவரும் இராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் கொரோனாவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்த நினைவு நாளை அணுக வேண்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் போராட்டம் இந்தத் தலைமுறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்திய பாடங்கள். நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்திற்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்பு சார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போராட்டத்திற்குத் தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் பிறந்த ஓர் தலைமுறை எமது தாயகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்தத் தலைமுறைக்கு எமது தேசத்தின் வரலாற்றையும் போராட்டத்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த, அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, ஒடுக்குமுறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று நினைகூரலை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏற்கனவே கோரப்பட்டுள்ளவாறு இம்முறை நாம் நினைவுகூரலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்.

பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம்.

  • மே-18,2020 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரல்.
  • மே-18,2020 அன்று எமது மக்கள் போரின் இறுதி நாட்களில் உட்கொண்ட கஞ்சியை அன்றைய தினம் ஒரு வேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ளல்.
  • மே-18,2020 அன்று இரவு 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி பேரவலத்தை நினைவுகூருதல்.

இத்தகைய செயற்பாடுகள் நினைகூரலை சமூகமயப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். எமக்குள் என்றும் நீங்கா அந்த நினைவு விளக்கை தூண்டிவிட அனைவரும் கரம் கோர்ப்போம்’ – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://newuthayan.com/முள்ளிவாய்க்கால்-நினை-2/

 

 

On 13/5/2020 at 15:36, nunavilan said:

இந்நிலையிலேயே  நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் பதிவுகளை பெற்ற பொலிஸார், அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

சொறிலங்கா அரச பயங்கரவாதம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.