Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பு

Featured Replies

 

In இலங்கை     May 18, 2020 10:30 am GMT     0 Comments     1347     by : Jeyachandran Vithushan

kilinochchi-amphan.jpg

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும், முழங்காவில் பிரதேச்ததில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், கிராஞ்சியில் 6 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேரும், பொன்னாவெளியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், இரணைமாதாநகர் கிராமத்தில் 1 குடும்பத்தை சேர்ந்த மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் முழுமையாகவு்ம, 2 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், பூநகரி பிரதேச செயலகமும் மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை குறித்த புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தற்காலிக வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது வீட்டில் தங்கியிருந்த 70 வயதான குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 8 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கண்டாவளை பிரதேசத்தில் புன்னைநீராவி கிராமசேவையாளர் பிரிவில் 06 வீடுகளும், உமையாள்புரம் கிராமசேவையாளர் பிரிவில் 02 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகம் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறித்த புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலும் வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அம்பாம்-புயல்-தாக்கத்தின/

  • தொடங்கியவர்

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு

In இலங்கை     May 19, 2020 12:15 pm GMT     0 Comments     1084     by : Jeyachandran Vithushan

IMG-64f806cafd108ae36715de8686569f9a-V-720x450.jpg

யாழ்ப்பாணத்தில் காற்றின் தாக்கம் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர் சமூகத்தினர்விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழில்-சீரற்ற-வானிலை-கார/

  • தொடங்கியவர்

சூறாவளியால் இந்தோனேசியாவுக்கு அடித்துச் செல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

திருகோணமலை - குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும் நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143662?ref=imp-news

யாழில் காற்றின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143589

கடும் காற்றால் பாதையின் குறுக்கே வீழ்ந்த பாலை மரம் மின் விநியோகமும் துண்டிப்பு

Weather-3-720x450.jpg

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த மரம் முறிந்து விழ்ந்துள்ளது. இதனால் மின்சார சபை மற்றும் ரெலிகொம் நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்துள்ளன. அத்துடன் கம்பங்களும் முறிந்துள்ளன. இதன் காரணமாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு, பன்னங்கண்டி உள்ளிட்ட பல கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Weather-6.jpg

Weather-9.jpg

 

 

யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் விவசாயிகள் கவலை

VideoCapture_20200521-155546-720x450.jpg

யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பல விவசாயிகள் தமது விளைபொருட்களை சரி வர சந்தைப்படுத்த முடியாத நிலையில் நஷ்டப்பட்டுப் போயுள்ள சூழலில் வாழை, பப்பாசி போன்ற இலகு மரங்கள் கடும் காற்றினால் சேதமடைந்து விவசாயிகளை மேலும் கவலையுள் ஆழ்த்தியுள்ளது.

http://athavannews.com/யாழில்-கடும்-காற்றினால்/

முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று; வீடுகள் பகுதியளவில் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது

இந்த வகையில் மாங்குளம் பகுதியில் ஒரு வீட்டின் உட்கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த தாயாரும் பிள்ளைகளும் பாதுகாப்பான முறையில் வெளியேறி இருக்கிறார்கள் இந்த சம்பவம் இரவு 1.10 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய காற்று மற்றும் பலத்த மழை காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் ஆக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

குறிப்பாக இந்த பயனாளிகளுக்கான அனர்த்த கொடுப்பனவாக முதல்கட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளில் சேதங்கள் கணக்கிடப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143702

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்றில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் (காணொளி)

82-3.jpeg

 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்தபிரதேசத்திற்கான இன்று நேரடியாக சென்ற கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை நேரடியாக அவதானித்தார்.

அத்துடன், ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டு தனக்கு வழங்குமாறு சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

மேலும், குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அழிவுகளுக்கான நஸ்ட ஈட்டினை பெற்று தருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/43170

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதியில் இருந்து காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம்.

தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படஇருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம்.

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெற்று வருகின்றது அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.

அதோடு தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்டுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் போக்குவரத்து சபையினருடன் பேச உள்ளோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்தோடு தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவு பகுதிக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது.

ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் அறிவித்துள்ளோம் அதிலும் மத வழிபாட்டுத்தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன்.

எங்களுடைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக "சௌபாக்கியா "கொள்கை அதாவது விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சி உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வீட்டு தோட்டங்கள். விதை நாற்றுகள் மரக்கன்றுகள் போன்றவை சுமார் 26,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன அதே போல உரவிநியோகமும் விவசாய உள்ளீடுகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாய உள்ளீடுகள் போதுமானஅளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நாங்கள் உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அதேபோல் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பன இந்த விடயத்தை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்கள்.

சௌபாக்கியா வேலைத்திட்டமானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது எனினும் அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.