Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார்.

இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது.

புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார்.

ஸ்ரீறிலங்காவின் கொள்வனவுப் பட்டியலில் உள்ள ஆயத தளபாடங்களை வழங்குவதானது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமென இந்தியா கருதுவதால் அதனை விற்பனை செய்ய மறுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீனாவின் தேசிய இலத்திரனியல் நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் டொலர் பெறுமதியான இதே ரக கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் இலங்கை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

-தமிழ் கனேடியன்

இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு.

வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும், இந்தியாவிடமிருந்து இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையெனில் வேறு நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் விடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால், பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள், தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால், இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ்ப்பாணம் 2002ல் அரசுப் படைகள் வசம் வந்தது.

தற்போது யாழ் தீபகற்பத்தின் பெரும்பகுதியை அரசுப் படைகள் வைத்துள்ளன. அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் பிடியில் சிக்கி தமிழர்கள் சொல்லொணா அவதிகளை அனுபவித்து வருகின்றனர்.

செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசு தமிழர்களை அங்கிருந்து வெளியேறவும் விடாமல் கொடுமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விமான பலத்துடன் முன்பை விட வலுவாக திகழும் விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணம் பகுதியை ராணுவத்திடமிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான திட்டம் பிரபாகரன் தலைமையில் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை மீட்கும் இறுதிப் போராக இதை திட்டமிட்டுள்ள புலிகள், இதற்காக சில உயிரிழப்புகளை தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை பிரபாகரனும் அங்கீகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் யாழ் தீபகற்பத்தை மீட்க புலிகள் பெரும் போரில் குதிக்கக் கூடும் என்று கூறப்படுவதால் இலங்கையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை சமாளிக்க, விமானம் தாக்கும் ஏவுகணைகளை தர வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்க்ஷேவின் தம்பி கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்துள்ளார்.

அவரது பயண விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள அவர் தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கை அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோரை படு ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்ஷே.

இப்பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு வேளை இந்தியா இந்த உதவிகளைச் செய்ய மறுத்தால் பிற நாடுகளிடமிருந்து இவற்றைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனியும் இந்தியாவை நம்பி இருக்கப் போவதில்லை. இந்த உதவிகளை இந்தியா செய்யாவிட்டால் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை நாட இலங்கை தயங்காது என்றும் இந்தியத் தரப்பிடம் கோத்தபயா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முத்தமிழ்

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும்.

போர் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.

அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இதற்காக இந்தியா ஆயுதம் வழங்குமா ? :unsure:

இதேவேளை, சீனாவின் தேசிய இலத்திரனியல் நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் டொலர் பெறுமதியான இதே ரக கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் இலங்கை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது....

ஐந்துமில்லியன் டொலரை ஓட்டபாயாவின் கோவணத்தை உருவியா எடுப்பது? சனம் அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கின்றது. ஆனால் சிறீ லங்கா பயங்கரவாத அரசு ஐந்து மில்லியன் இலங்கை ரூபாய்கள் அல்ல, டொலர்களிற்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கத் திட்டமிடுகின்றது. இந்த விளையாட்டுப் பொருட்கள் வரும் 2008 சுதந்திரதினத்தன்று சுதந்திர சதுக்கத்தில் வைத்து மோட்டுச் சிங்களவர்களிற்கு படம் காட்டுவதற்கு உதவக்கூடும். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பித்தபுக்குகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். மேலும், வெளிநாட்டுத் தலைவர்கள் சிறீ லங்காவிற்கு விஜயம் செய்தால் அவர்கள் விமானநிலையத்தில் இறங்கும்போது நிலத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுகணைகளை ஏவி மரியாதை வேட்டுக்களை தீர்க்கவும் முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.