Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகே அழகே தமிழ் அழகே

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயே! தமிழே! | மொழிவணக்கப் பாடல் - யாழ்ப்பாண நிலக்காட்சிகளுடன் | உலகத் தாய்மொழி தினம்

 

  • Replies 50
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் இனிமை.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !


புதுவை புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அமுது பாடல்

அ.காஜா முகைதீன் ( இடைநிலை ஆசிரியர்)

ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி வடகிழக்கு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழா தமிழா தமிழ் பேசு தமிழா
தமிழா தமிழா தமிழ் பேசு தமிழா

தமிழே எங்கள் மொழி
தமிழே எங்கள் உயிர்
தமிழே எங்கள் இல்லம்
தமிழே எங்கள் சுகம்

மொழியே மொழியே தமிழ் மொழியே
முத்தமிழ் கண்ட தனிமொழியே
மொழியே மொழியே தமிழ் மொழியே
முத்தமிழ் கண்ட தனிமொழியே

தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழராய் வாழ்ந்திடுவோம்
தமிழே தலைநிமிர்வோம்

தமிழ் வாழ தமிழ் மொழியே
வாழு வாழ வை

தமிழ் பேசு
தமிழா தமிழா
தமிழா தமிழா

தமிழனாய் நாம் வாழ்ந்திடுவோம்
தமிழாலே தமிழ் நிமிர்ந்திடுவோம்
தமிழோடு நாம் வழர்ந்திடுவோம்

தமிழனாய் நாம் வாழ்ந்திடுவோம்
தமிழாலே தலை நிமிர்ந்திடுவோம்
தமிழோடு நாம் வளர்ந்திடுவோம்

தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

நன்றி: வசந்தம் மீடியாகார்ப்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னைத் தமிழே - செய்யுள் பகுதி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து' - மறத்தல் தகுமோ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழிக்கிணையேது... தரணிக்கெல்லாம் இதை நீ எடுத்தோது 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழா தமிழா தரணியின் தோழா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களினால் ஒளி வடிவம் கொடுக்கப்பட்டு வெளிவருகிறது  எங்கள் தமிழ் மொழியின் பெருமை கூறும் புத்தம் புதிய பாடல் தமிழே எம் தாய்மொழியே இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கலாபூஷணம் கீழ்கரவை கீ . குலசேகரனின் வரிகளில் தேன்மதுர குரலோன் கந்தப்பு ஜெயரூபனின் குரலில் இப்பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது பாடலை பாருங்கள் பகிருங்கள் கருத்திடுங்கள் நன்றி 

இசை -கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -கலா பூஷணம் கீழ்கரவை குலசேகரன் 
குரல் -கந்தப்பு ஜெயரூபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே உன்னால் நான் அடையும்

கவலை கொஞ்சமா

என் கவலை கொஞ்சமா
ஆண் : அதை கண்டு சும்மா இருக்க உனக்கு

கல்லு நெஞ்சமா

கண்டு சும்மா இருக்க உனக்கு

கல்லு நெஞ்சமா
பெண் : ஏய்…
ஆண் : ஏ உ ஏய்………ஆஹ ஏ

ஏய் ஆ ஏய் ஆ ஏய் ஏய் ஏய் ஏ ஓ
பெண் : ஏன்ய்யா என்னது கண்ணே

கிண்ணே சொல்றீங்க
ஆண் : அட உன்ன இல்லம்மா

என் கண்ண பத்தி பாடுறேன்

ரெண்டு நாளா தூக்கமே இல்ல

சதா அரிக்குது வெந்நீரா கொட்டுது

அதுதான் வேற ஒண்ணும் இல்ல
பெண் : ஓஹோ அப்ப பாடு
ஆண் : தங்கமே தங்கமே…

தங்கமே உன் தயவை

நான் பெறுவேனோ

என்று தான் பெறுவேனோ
ஆண் : என் அங்கம் குளிர

வாரி அணைத்து

அகம் மகிழ்வேனோ

என் அங்கம் குளிர

வாரி அணைத்து

அகம் மகிழ்வேனோ
பெண் : தா

ஆண் : தா… ன்தா…. ஐயோ ன்தா அட ன்தா

ஐயோ இன்தா இன்தா த… மத தா வ தா
பெண் : இந்தாங்கையா

இப்போ தங்கமேன்னு சொன்னது

என்ன தானே
ஆண் : ஐயையோ ஐயையோ ஐயையோ

இது என்னடா இது இத பாரும்மா

இத இந்த பாட்டு பாடுறேன் பாரு

அதுல பித்தள காசு

வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு

தங்கம் கிடைக்கல

அப்படி தங்கம் வந்திருச்சின்னா

தங்கமே அதான்
பெண் : ம்… ம்… ம்…

பாடுங்க பாடுங்க
ஆண் : தேனே தேனே……..

தேனே உன்னே தேடித் தேடி

நான் அலைந்தேனே

நான் அலைந்தேனே

நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேனே

நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேனே
பெண் : மொகரையப் பாரு

ஆண் : ஐயையோ மொகரையப் பாரா

மொகரையப் பாரு

ஆஹா மொகரையப் பாரு

ஓஹோ மொகரையப் பாரு

மொகம மொகம மொகரையப் பாரு

சரி ஓ சரி
பெண் : இந்தாங்கைய்யா

இன்னமே ஒண்ணும் மாத்த முடியாது

சத்தியமா சொல்லுங்க

இப்ப தேனேன்னு என்ன தானே சொன்னீங்க
ஆண் : அது உன்னையில்லமா இந்த

எனக்கு ஒடம்பு சரியில்ல

வைத்தியரு ஒரு பஸ்பம் குடுத்திருக்காரு

அத கொளச்சி சாப்படரதுக்கு

தேன் வேணும்
பெண் : அது சரி எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேன்னு

சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமா
ஆண் : எதிர்ல இருக்கு தொட முடியல அதான்
பெண் : என்னது
ஆண் : இங்க இல்ல

தோட்டத்துல ஒரு மரத்துல

உச்சீல இருக்கு தேன் கூடு

அது தொட போனா அடிக்குமோ

இல்ல இல்ல கொத்துமோ

அப்படினு பயமா இருக்கு
பெண் : ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா என்னா மூளை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்திதில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
மின்னும் உலக மேட
தங்க தமிழ பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்...

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்


ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள் நகர மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்

தாய்ததமிழ் தூக்கி நிப்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கு சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் ஏழையும் உன்  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: 17-9-2004

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: 17-9-2004

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

செம்மொழி தகுதியை அடைந்ததன் தொடர்ச்சியாக ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஐந்து நாள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆய்வு மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

 


மாநாட்டினை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் தொடங்கி வைத்தார். மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல உலக நாடுகளில் இருந்து தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். உலகில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் மிகவும் பழமையான இலக்கியங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2013/09/16204034/Classical-Tamil-promulgated-da.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உயிர் தமிழே"தமிழ் மொழியின் பெருமை கூறும் பாடல்

இசை :- கந்தப்பு ஜெயந்தன் (Kandappu Jeyanthan)
பாடல் வரிகள் :- கு.நித்திலன்(Nithilan Kugarajah)
ஒலி ஒளி வடிவமைப்பு :- இ.வினோத்(Vinoth Rm)
இயக்கம் :- இ.கஜானன்(Rajendran Kajanan)�ஒழுங்கமைப்பு :- கெ.அருன்பிரசாத்(Àrunprashath Gangatharan)�பாடியவர்கள் :- கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு
நாதஸ்வரம் -ஐங்கரன் �அனுசரணை:-�கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி கனடா.�திரு.கனகேந்திரம் குகேந்திரன்�திருமதி வனிதா குகேந்திரன்.�விசேட நன்றிகள் பா.நிருஜன்(Nirujan Balasubramaniam)�மலைத்தென்றல் நிகழ்வில் பாடலை வெளியிட்டு வைத்தவர்�இ.சர்வேஸ்வரா (Ratnasingam Sharveswara) (சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் )

https://www.youtube.com/watch?v=haKaOkOCNXw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்லத் தமிழ் இனி சாகுமா ? 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம் தாய் மொழியாம்

பாடகர்கள்: தனுஷ், தனுஸ்ரீ , கே. எம். மிதுஸ்ரீ மற்றும் தேஜ்பானவ்
பாடலாசிரியர்: கவிஞர் கவின்மொழி வர்மன்(மறைவு)
புரோகிராமிங்: வானவில் பாலா (புதுச்சேரி)
வயலின்: பாலாஜி (சென்னை)
ஸ்டுடியோ: டெக்னோ மியூசிக் புரொடக்சன்
ஒளிப்பதிவு: ராம்குமார் (சென்னை) மற்றும் கந்தன் (மலேசியா)
எடிட்டிங்: கந்தன்(மலேசியா)
ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்: திரு. இல்மீ உமர்
நன்றி: பி.சி.ராஜா, திரு.சந்தோஷ் (தமிழ் மீடியம்), திரு.மலேசியா கலை உலகம், திருமதி. கவிதா உதயகுமார், திருமதி. தீபலட்சுமி, கவிதா மற்றும் கிருபாகரன். 
இசை: இசைவாணன் (எ) சரவணன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

நல் அன்பிலா நெஞ்சில்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா?

கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?

 

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வில் உணர்வு சேர்க்க

எம் வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ 

அன்றை நற்றமிழ்க் கூற்றின் முறையினால்

ஆடிக்காட்ட மாட்டாயா?
கண்ணே ஆடிக்காட்ட மாட்டாயா?               

கண்ணே ஆடிக்காட்ட மாட்டாயா?

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது

யாம் அருகி லாத போது
தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

இறைவ னாரின் திருக்குறளிலே
தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?
நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?


புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின்

தமிழ்ப் புலவர் கண்ட நூலின்

தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?
கண்ணே இயம்பிக் காட்ட மாட்டாயா?

நல் திறமை காட்டிஉன்னை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா?

தமிழ் செல்வம் ஆக மாட்டாயா?

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு : தமிழ்நாட்டின் கொடி | அந்த கொடியின் பாடல் |

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் பெருமை | மிகவும் தொன்மையான மொழி தமிழ்

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 247 எழுத்துக்களை கொண்ட மொழி பாடல்

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

 247 எழுத்துக்களை கொண்ட மொழி பாடல்

 

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

அதுதான் எனக்கும் கேள்வி😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

 247 எழுத்துக்களை கொண்ட மொழி பாடல்

 

 

9 hours ago, பெருமாள் said:

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

இந்தத் தமிழ்ப் பாடலுக்கு... ஆஸ்கார் விருது கிடைத்ததைப் பற்றி, எந்த ஊடகங்களிலும் வரவில்லையே.

தமிழ் என்ற படியால்... இருட்டடிப்பு செய்து விட்டார்களா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.