Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pulasithini.jpg

தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் சாரா என்ற குண்டுதாரி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அதாவது குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட குண்டுத்தாரிகளின் மரபணுக்களில் சாராவின் தாயாரின் மரபணு எதிலும் பொருந்தவில்லை

இந்நிலையில் புலனாய்வு பிரிவினர் முதற்கட்டமாக சாராவின் ஊரான மட்டக்களப்பு மாங்காடு பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அதில் சாரா உயிருடன் இருப்பதுடன் புலனாய்வு துறையினரை ஏமாற்றி தப்பியுள்ளார் என தெரியவந்த நிலையில், அந்த பகுதியில் 3 வீடுகளில் மாறிமாறி தங்கவைக்கப்பட்டதான நிரந்தர சாட்சி ஒன்றின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது மகளை முஸ்லீம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய முற்படுவதாக சாராவின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யசென்ற போது, அங்கு கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர், அந்த முறைப்பாடை விசாரித்த நிலையில் சாராவின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்தப்பட்டு அவர் அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையிலேயே ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நாளன்று, மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த சாராவை, அவர் காரில் ஏற்றி சென்றுள்ளார் என தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த நிரந்தர சாட்சி ஒன்றின் தகவலின் பிரகாரம் அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து, தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட தேசிய புலனாய்வு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் முதல் முதலாக சாரா தொடர்பாக அவரை தேடி, அவரது மட்டக்களப்பு மாங்காடு வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தேசிய புலனாய்வு தலைமையத்துக்கு அறிவித்துள்ளபோதும், அப்போது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/தற்கொலை-குண்டுதாரியான-சா/

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி சாரா சாகவில்லை; தப்பியோடியமை அம்பலம்!

July 20, 202000
Share0
625.500.560.350.160.300.053.800.900.160.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவை சேர்ந்த குண்டுதாரியான புலஸ்தினி பயங்கரவாதி சாரா புலனாய்வு பிரிவினரின் கண்களுக்கு மண்தூவி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னர், அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் தம்மை தாமே தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் அழித்துக் கொள்ள நடத்திய தாக்குதலில் பலியான 17 பேரில் பயங்கரவாதி சாராவும் பலியாகி விட்டதாக நம்பப்பட்டது. எனினும் இரண்டு முறை அவரது தாயாரின் இரத்த மாதிரி ஊடாக செய்யப்பட்ட மரபணு சோதனை பொருந்தியிருக்கவில்லை. இந்நிலையிலேயே அவர் தப்பி சென்றமை உறுதியாகியுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது,

“மரபணு சோதனை பொருந்தாத நிலையில் புலனாய்வு பிரிவினர் அடுத்த கட்டமாக சாரா பிறந்த போது வைத்தியசாலையில் குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டு அவர் பிறந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பழைய பதிவுகளான ஏடுகளை தேடி ஆராய்ந்தபோது அன்றை தினம் அந்த வைத்தியசாலையில் அவர் மட்டும் தான் பிறந்துள்ளதாக ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து புலனாய்வு துறையினர் சாரா தப்பி ஓடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முடிவுக்கு வந்தனர்.

அதன் பின்னர் தேசிய புலனாய்வுத் துறையினர் அவரை மீண்டும் தேடத் தொடங்கி, முதற்கட்டமாக சாராவின் ஊரான மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் தேடினர். அதனை தொடர்ந்து சாராவின் சகோதரி கீதானவின் கணவரின் சகோதரன் தேவகுமார், சாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை சி.ஜ.டியினர் கைது செய்தனர்.

அதேவேளை சாராவின் கணவரான பயங்கரவாதி முகமது ஹஸ்தூன் திருமணம் முடிப்பதற்கு முன்னர், அவருடன் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவந்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரை முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்யமுற்படுவதாக சாராவின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யசென்ற போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் அந்த முறைப்பாடை விசாரித்த போது சாராவின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்தப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த சாராவை அவர் காரில் ஏற்றி சென்றதாக தகவல் கிடைத்தது. இதன்படி கடந்த 13ம் திகதி அதிகாலை அவரையும் சி.ஜ.டியினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இந்த தகவல்களின் அடிப்படையில் சாரா இந்தியாவுக்கு தப்பிய ஓடியுள்ளதாக நம்பப்படுகிறது.”.

https://newuthayan.com/பயங்கரவாதி-சாரா-சாகவில்ல/

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி சாரா இந்தியாவிற்கு தப்பி சென்றார் – தலைமை இன்ஸ்பெக்டர் சாட்சியம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90-2.jpg?189db0&189db0

 

உயிர்த்தஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய குண்டு தாரிகளில் ஒருவனான பயங்கரவாதி மொஹமட் ஹஸ்துனின் மனைவி பயங்கரவாதி சாரா (புலஸ்தினி) 2019 செப்டம்பரில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த சாட்சியமளித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் இன்று (21) சாட்சியமளிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட சாரா, எப்படியாவது அதிலிருந்த தப்பி மறைந்து இருந்திருக்கலாம் என்ற தகவலை கடந்த 6ம் திகதி தகவல் அளிக்கும் பெண் தகவலாளி மூலம் அறிந்து கொண்டேன்.

மட்டக்களப்பு – மாங்காடு பகுதியில் சாரா மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது.
இதனால் 8ம் திகதி மங்காடு சென்று விசாரணையை முன்னெடுத்தேன்.

அங்கு ஒருவரை சந்தித்த போது, ‘அவர் சாரா என்று நம்பப்படும் பெண்ணை கண்டதாகவும், 2019 செப்டம்பர் மாதம் ஒருநாளில் அதிகாலை 3 மணியளவில் மாங்காடு பகுதியில் கெப் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்டதாகவும், சாரா என சந்தேகிக்கப்படுகின்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் அதில் ஏறுவதை கண்டதாகவும்’ தெரிவித்தார்.

மேலும் ‘கெப் வாகனத்தின் முன் ஆசனத்தில் பொலிஸ் அதிகாரி நாகூர்தம்பி அபுபக்கர் இருப்பதை கண்டதாகவும்’ தெரிவித்தார்.

பின்னர் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தயாவிற்கு அவர் தப்பி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. சாராவை தப்பிக்க தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாராவின் மாமனாரும், வௌிநாட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் ஒருவரும் உதவியுள்ளனர்.” – என்றார்

 

https://newuthayan.com/பயங்கரவாதி-சாரா-இந்தியாவ/

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியது பயங்கரவாதி சாராவே!

625.500.560.350.160.300.053.800.900.160.90-2.jpg?189db0&189db0

 

“ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தகவலை இந்திய புலனாய்வு பிரிவிற்கு தாக்குதலின் பின்னர் தப்பிச் சென்ற பயங்கரவாதி சாரா யஸ்மின் (புலஸ்தினி) மூலமே வழங்கப்பட்டிருக்கலாம்”

இவ்வாறு குறித்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

இப்போது இந்த பயங்கரவாதி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இந்திய-புலனாய்வு-பிரிவுக/

  • 2 months later...

இந்தியாவிலிருந்து சாராவை நாடுகடத்தினால் பல உண்மைகளை அறியலாம்- முஜிபூர் ரஹ்மான்

ஜஹ்ரான் ஹாசிம் இன்னொரு வேறு ஒரு தரப்பிற்காகவே தற்கொலைதாக்குதலை மேற்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையான தகவல்களை பெறுவதற்காக சாரா என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நாடுகடத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சாரா என அழைக்கப்படும் பெண் தற்போது இந்தியாவில் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சாராவை நாடுகடத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அறியமுடியும் என நான் உயிர்த்தஞாயிறு குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் தெரிவித்தேன் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கான பலத்தை வலுவை யார் வழங்கியது என்பதே எங்கள் கேள்வி என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இ;ந்தியாவிலிருந்து சாராவை கொண்டுவந்தாலே உண்மைகளை கண்டுபிடிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொள்ளவேண்டி அளவிற்கு முஸ்லீம்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்கள் தங்கள் உடலில் குண்டுகளை பொருத்தி தேவாலயங்கள் போன்ற அப்பாவி மக்கள் வழிபடுமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை இலங்கையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/74132

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.