Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை

Featured Replies

சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை

தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. அமைச்சராகவிருக்கும் சம்பிக ரணவக்கவிடம் நான் கேட்கிறேன். அமைச்சர் பேரியல் அஷ்ரப்பிற்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் மலேஷியாவிற்கு அல்லது வேறெந்தவொரு நாட்டுக்குச் சென்றா தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைமை தொடருமானால் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்களும் சிங்களவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வார்கள். அவ்வாறு நிகழுமானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி லொட்ஜுகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றச் சொல்லும் அரசாங்கம் எதிர்காலத்தில் வெள்ளவத்தையில் வாழும் தமிழ் மக்களையும் வெளியேறச் சொல்வார்கள். பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொழும்புக்கு வந்து தங்கியிருப்போருக்கு விசேட அடையாள அட்டைகளையோ அல்லது வேறு உறுதிப்படுத்தலையோ வழங்கி கொழும்பில் அவர்கள் நம்பிக்கையுடன் தங்கியிருக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, வெளியேற்றுவதென்பது பிழையான தீர்மானமாகும். பாதுகாப்பு செயலாளர் பயணம் செய்யும் போது பாதைகள் பல மணிநேரம் மூடப்படுகின்றன.

இதன் காரணமாக அண்மையில் அமைச்சரான கரு ஜயசூரிய தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் வீதியில் நிற்க வேண்டிய நிலை உருவானது. ஆரம்பத்தில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டனர். இன்று முஸ்லிம்கள் கடத்தப்படுகின்றனர். எதிர்காலத்தில் சிங்கள வர்த்தகர்களும் கடத்தப்படும் நிலைமை உருவாகும். கொழும்பு செட்டியார்தெருவிலுள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அச்சத்தில் தமிழகத்துக்கு சென்றுவிட்டனர். அங்கிருந்தே வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். முஸ்லிம் வர்த்தகர்களும் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். அனைவரும் பயத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். இவ்வாறான குற்றச்செயல்களை தடுப்பதற்கு தம்மிடம் மனிதவளம், ஆயுதபலம் உள்ளதென்று. அவ்வாறானால் கப்பம் கோரல், கடத்தல், கொலைகளை தடுக்க ஏன் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. நாட்டில் காட்டுத் தர்பாரை முன்னெடுக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், தினம், தினம் தமிழர்கள், முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுகிறது. கொலை செய்யப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் காட்டு தர்பார் இல்லையா இதனை ஏன் தடுக்க முடியாதென்றும் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.

http://www.nitharsanam.com/

சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை

ஆ...

அப்போ சிங்களவர் தற்போது வேடர்கள் இல்லையா?

அப்படியானால் வேடுவர் கூட்டத்தின் தலைவன் யார்? மகிந்து இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் வேடர்களிற்கு முந்திய இனம், வேடர்களுக்கு ஓரளவாவது அறிவு இருக்கு.

தமிழகத்தில் இருக்கும் மக்கள் எங்களின் ரத்தம் என்பதை சிங்களவர்களே(வேடர்கள்) ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

ஆகவே இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத மரமண்டைகளும் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஐயாமார்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்கேல்லப்போல. அதாவது எந்த நாட்டில இருந்தாம் இந்தச் சிங்களவங்களின்ர மூத்த தலைவன் விஜயன் அவன்ர 700 நன்பர்களயும் கூட்டிக்கொண்டு வந்தவன். வேறஎங்குமில்ல இந்தியாவிண்ட வடபகுதியில இருந்து துரத்துப்பட்டுத்தான் இங்க வந்தவன். இவன் இங்க வரேக்க எங்கட தமிழ்சனம்தான் அதுதான் இயக்கர்,நாகர் எண்ட பழங்குடியினர்தான் இருந்தாங்க எண்டு நான் சொல்லேல்ல உலக வரலாறு சொல்லுது அப்படி இருக்கேக்க இவங்கள் ஆர் எங்கள இந்தியாவிற்குப்போ, இந்தோனேசியாவிற்குப்போ எண்டு சொல்லுறது.

எங்கட தமிழ்ச்சனங்களே இதநல்லா கேட்டுக்கொள்ளுங்கோ,

தலைகள் குனிந்து நிலைகள் தளர்ந்து நிண்றது போதும்- உங்கட

கலைகள் அழிந்து கவலை மிகுந்து கண்டது போதும்- எங்கட வரிப்

புலிகள் எழுந்து புயலைக்கடந்து போர்க்களம் ஆடினம்- இனியும் நீங்க

உயிரை நினைந்து உடலைச்சுமந்து ஓடாதீங்கோ. வாங்கோ வந்து

எம் போராட்டத்திற்கு வலிமை தாங்கோ.

தமிழர் மனிதவுரிமை மையம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து ஒரு பகுதி:

"தென் ஆபிரிக்காவின் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி கூறியதை இங்கு தருகிறோம். சிறீலங்கா தமிழர்கள் தம்மை மிக நீண்ட காலமாக சந்தித்து, தமிழரின் சுயநிர்ணய போராட்டத்தின் நியாயங்களை தமக்கு பலமுறை கூறி வந்த போதும், அவர்களின் விளக்கங்கள் தம்மை திருப்திப்படுத்தவில்லை என்றும், ஆனால் டக்ளஸ் தேவானந்தாவையும் ஆனந்தசங்கரியையும் சந்தித்து உரையாடியதில் இருந்தே, தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டம் மிக நியாயமானதாக தாம் உணர்வதாகவும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இவர்கள் இருவரின் செயற்பாடுகள், உரைகள், அறிக்கைகள் யாவும், முன்பு தென் ஆபிரிக்காவில் வெள்ளையர்களின் இனத்துவேசத்திற்கு எதிராக தாம் போராடிய காலங்களில், சில கறுப்பு இனத்தவர்கள் வெள்ளையர்களின் அரசுடன் சேர்ந்து செய்த சதிகளையும், துரோகங்களையும் ஒத்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். இப்படியானவர்களின் செயற்பாடுகள் மக்கள் போராட்டத்தின் முன் நீண்ட காலம் நிலைக்க முடியாதெனவும் தெரிவித்தார். இவ்விடயத்தில் தமிழீழ மக்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்"

மூலம்:

http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_06_02.pdf

Edited by vettri-vel

மேற்சொன்ன தென் ஆபிரிக்க பிரமுகரின் கருத்தில் இருந்து மேலும் ஒன்று தெரிகிறது. அதாவது ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தின் நியாயத்தன்மையை ஆணித்தரமாக சர்வதேசம் உணரும் விதமாக, போதுமான பிரசார நடவடிக்கைகளை நாம் இன்னும் மேற்கொள்ளவில்லை என்பதே அது.

இது வெளிநாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகளின் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியமாகும். வீடு மேல் வீடு வாங்கி, மகனையும் மகளையும் டொக்டர், எஞ்சினியர் ஆக்கினால் மட்டும் போதாது, நீ வாழ உனக்கென ஒரு நாடு அமைக்காது போனால், உன் தலைமுறையோடு மெல்ல தமிழ் இனி சாகும்.

தமிழ் செத்தால் என்ன, தங்க நிற முடியோடு பேரப்பிள்ளைகள் பிறந்தால் என்ன என்று இந்த புத்திஜீவிகள், தங்கள் சீவியத்தையே தொடர்ந்தும் பார்ப்பார்களானால் நாளைய சமுதாயம் இவர்களை மன்னிக்காது.

ஒரு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டதற்கே இந்த சர்வதேச தமிழ் புத்தி(?)ஜீவிகள் இன்னும் ஒருமித்த கண்டனம் தெரிவிக்கவில்லை. பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இயங்கும் தமிழ் மாணவர் அமைப்புகள், இது போன்ற விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் தெரியவில்லை.

இப்படி இந்த தமிழ் புத்திஜீவிகள் தூங்கி கொண்டிருந்தால், மாவட்ட சபைகள் என்ன, ஆலமரத்தின் கீழ் கூடி அம்புலி மாமா கதை மட்டும் கூறலாம் என்னும் அளவுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தை வரைய சிங்கள அரசுகளிற்கு தைரியம் வரத்தான் செய்யும்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

?

Edited by Minor Kunju

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.