Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது.

1.jpg

தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது.

தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2.jpg

இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 91 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்­பேசும் மக்­களின் இத­யங்­களில் தனக்­கென தனி­யி­டத்­தைப்­பி­டித்துள்ளது.

3.jpg

வீர­கே­சரி பல சவால்கள் மிக்க  ஊட­கப்­ப­ய­ணத்தில் 90 ஆண்­டு­களை பூர்த்­தி­செய்து 91 ஆவது அக­வையில் மிடுக்குடன் காலடி எடுத்து வைக்­கின்­றது.

4.jpg

v1.jpg

ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் மாத்திரமல்லாமால் உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் அதன் நாமத்தை உச்சரிக்கும் அளவுக்கும் ஆலவிருட்சம் போல்வளர்ந்துள்ளது. 

அந்தவகையில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே  ஸ்தாபிக்கப்பட்டவீரகேசரி நாளிதழ் பலதரப்பட்ட அரசியல் பொருளாதாரம் உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது, தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தன்னை பலமாக வைத்துதொடர்ந்து அவர்களுக்கு பக்கபலமாகவே இருந்து வந்துள்ளதுடன் தற்போதும் இருந்து வருகின்றது.

5.jpg

இலங்கையில் முதன்மையான ஊடகங்கள் பல உருவாகிய காலத்தில் ஆணித்தரமாக தனது 91 ஆவது வயதில் கால்த்தடம் பதிக்கும் போது இன்னும் அதன் வளர்ச்சி திடகாத்திரமாக இருக்கின்ற அதேவேளை, டிஜிட்டலிலும் தனியிடத்தைப் பிடித்துள்ளமையை இங்கு மறந்துவிட முடியாது.

தற்போதைய டிஜிட்டல் உலகிலும் வீரகேசரி தனக்கென தனியிடத்தைப் பிடித்து வைத்துள்ளதென்று சொன்னால் அதுவும் மிகையாகது.

6.jpg

நவீன உலகில் ஊடகத்துறையில் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் வளர்ச்சிகளுக்கு மத்தியில் வீரகேசரியின் கம்பீரமான பயணம் என்பது அபரிமிதமாகவேயுள்ளது.

7.jpg

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கி வரும் செய்திச் சேவை, இன்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். இதன் மூலம் சிறந்த இணையதளம் என்ற விருதையும்  பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது .

 இவை அனைத்திற்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒலி ஒளிபரப்பு சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் , நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

8.jpg

அச்சு ஊட­கங்­க­ளுக்கு இணையாக இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் செல்­வாக்கு செலுத்­தி­வரும் இந்நேரத்திலும் அவற்­றுக்கு எதிராக முகம்கொடுத்து  தனது அபிமான வாச­கர்­களின்  இதயம் கவர்ந்த வீரகேசரி தேசிய தமிழ் நாளி­த­ழா­கவும் வாராந்த வெளியீடாகவும்  வெளிவந்து வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. 

9.jpg

தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­க­ளிலும், சமூக, கலை கலாசாரத்திலும் மக்களிக் நலனிலும் நாட்டு நலனிலும் கடந்த 90 வருடங்களாக தனது பங்­க­ளிப்­பினையும் செல்வாக்கையும் வீரகேசரி செலுத்தி வருகின்றது.

10.jpg

இலங்கையின் ஊட­கத்­து­றையில் வியக்­கத்­தக்க சாத­னைகளைப் புரிந்­து வரும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ்  ஸ்தாபனம், தனது வெற்­றி­க­ர­மான பய­ணத்தில் வீர­கே­சரி நாளிதழ், வீர­கே­சரி வார­வெ­ளி­யீடு, மித்­திரன் செய்தித்தாள்களை வெளி­யிட்டு வருகின்றது. 

11.jpg

எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ இயக்­குநர் குமார் நடே­ச­னி­னதும் பணிப்­பாளர் சபை­யி­னதும் வழி­காட்­டல்­க­ளி­னாலும் புதிய முயற்­சி­க­ளி­னாலும் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களைக் கண்டு ஆல­வி­ருட்­சம்போல் இலங்கையின் தலை­ந­கரில் தலைநிமிரந்து நிற்கும் வீரகேசரி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் தானே  என்ற வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

12.jpg

இதுவும் தமிழ்ப்­பேசும் மக்­க­ளுக்கும் இளந்த தலைமுறையினருக்கும் பெருமை சேர்க்கும் விட­ய­மாகும். 

v2.jpg

ஊட­கத்­து­றையில் மாத்­தி­ர­மன்றி, அச்­ச­கத்­து­றை­யிலும் இன்று வீர­கே­சரி தன்­னி­க­ரற்ற நிறு­வ­ன­மாக விளங்­கி­வ­ரு­கின்­ற நிலையில், கொழும்பு - ஏக்­கலை பிர­தே­சத்தில் தனது நவீன ஊடக (Digital Media ) காரி­யா­ல­யத்­தையும் அச்சு இயந்­திரத் தொகு­தி­யையும் நிறுவி அதன்­மூலம் டிஜிட்டல் ஊடகத்துறையிலும் அச்­ச­கத்­து­றை­யிலும் நவீன மாற்­றங்­களை உள்­வாங்கி நாட்டின் "ஊடக நிறு­வன அபி­வி­ருத்தி"யிலும் முன்­னணி நிறு­வ­ன­மாக விளங்­கு­கி­றது.

வீரகேசரி அச்சு ஊடகத்துறையில் பல பத்திரிகைகளை பிரசுரித்து வருகின்ற போதிலும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் மக்களுக்கு தனது இணையத்தளத்தையும் ஆரம்பித்து தற்போதும் அதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. 

இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் செய்தி இணையத்தளம் என்ற பெருமையும் இலங்கையில் முதல் முதலாக செயற்படுத்தப்பட்ட மின்னிதழ் (e-paper) என்ற பெருமையும் வீரகேசரியையே சாரும்.

அந்தவகையில் தற்போது வீரகேசரி டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டுள்ளதோடு இணையத்தள செய்தி சேவைகளையும் தனது வாசகர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதேவேளை, நவீன இலத்திரனியல் ஊடகங்களும் தொழில்நுட்பங்களும் உலகில் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் வேளையில், தனது அபிமான வாசகர்களின் தேவைகளை அறிந்து வீரகேசரி எதிர்காலத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளது. 

இலங்கை வர­லாற்றில் தமிழ்ப் பத்­தி­ரி­கைத்­து­றையின் வளர்ச்­சிக்கு வீரகேசரி ஓர் பல்கலைக்கழகமாக விளங்­குகின்றதென்றால் அது மிகையாகது. 

கடந்த 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீர­கே­சரி நிறு­வனம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.  

அந்­த­வ­கையில்,  ஈழத்துப் பத்­தி­ரிகை வளர்ச்­சியில் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் ஆற்­றிய மகத்­தான பணிகள்  வர­லாற்றில் பொன் எழுத்­துக்­களால் பொறிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­ன­வாகும். 

இலங்கைப் பத்­தி­ரிகை நிறு­வ­ன­மொன்று தொடர்ச்­சி­யாக நீண்­ட­காலம் செயற்­பட்டு தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு ஆற்­றிய மகத்­தான பணிகள் காலத்தால் அழி­யா­தவை. 

91 ஆவது ஆண்டில் தனது காலடியை எடுத்து வைக்கும் வீரகேசரி, ­நி­று­வ­னத்தை  ஆரம்­பித்த சுப்­பி­ர­ம­ணியம் செட்­டியார் மற்றும் அவ­ரோடு தோளோடு தோள் நின்று பணி­யாற்­றிய சகல அறி­ஞர்­க­ளையும் கல்­வி­மான்­க­ளையும் இப்­பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­யர்­க­ளையும் இந்­நி­று­வ­னத்தின் தலை­வர்­க­ளாக விளங்­கிய பெரு­மக்­க­ளையும் மற்றும் வீர­கே­ச­ரியின் வளர்ச்­சிக்கு ஆக்­கமும் ஊக்­கமும் அய­ராது நல்­கிய எழுத்­தா­ளர்­க­ளையும் வாச­கர்­க­ளையும்  வாடிக்­கை­யா­ளர்­க­ளையும்  நாம் நினைவுகூர வேண்­டி­யது இந்நாளில் அவ­சி­ய­மாகும். 

ஒரு பத்­தி­ரி­கையின் வளர்ச்­சிக்கு முக்­கிய பங்­காற்­றி­ய­வர்கள் வாச­கர்­க­ளே­யாவர். இவர்­களின் ஊக்­கமும் ஒத்­து­ழைப்பும் இருந்­தால்தான் ஒரு பத்­தி­ரிகை 'ஆல்போல் தழைத்து அறு­கு போல் வேரூன்றி' வளர்ச்­சி­ய­டைய முடியும். 

வீரகேசரி தலை­நி­மிர்ந்து நின்று முக்­கி­ய­மாக தமிழ்ப்­பேசும் மக்­க­ளுக்கு ஆற்­றி­வரும் மகத்­தான பணி­க­ளுக்குக்  காரணம்  இப்­பத்­தி­ரிகை கொண்­டுள்ள பக்கச்சார்பற்ற கொள்கையும் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவுமாகும்.

தமிழ்ப்பேசும் மக்கள் பலரும் கடல்கடந்து வாழ்ந்தும் வீரகேசரிக்கு நல்கிவரும் ஆதரவு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் பேருதவியாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தம். 

வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டு வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  நிறுவனம் தங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன்றைய பொன்னான தருணத்தில் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றது.
 

https://www.virakesari.lk/article/87425

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பத்து வருடங்கள் நிண்டு பிடித்தால் சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200806-125242.jpg முதல் பதிப்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.