Jump to content

லெப். கேணல் விக்கீஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் விக்கீஸ்வரன்

 

 

Commander-Lieutenant-Colonel-Vickieswaran.jpg

ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.

லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…

இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார்.

2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.

இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார்.

2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார்.

08.05.1971 இல் வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.

கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார்.

25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார்.

மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும்.

11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார்.

எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார்.

11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்.

23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார்.

லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தகவல்: பிரிகேடியர் தீபன்
நினைவுரை: செ.யோ.யோகி (2008).
தொகுப்பு: சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-vickieswaran/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்:     தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்:    
    • அன்பார்ந்த தமிழீழ மக்களே, பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார். அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது என்பதை அறியாதோருக்கு அறியத் தருகிறேன். அன்னாருக்கு கடந்த 15 ஆண்டுகளாக உரிய முறையில் வீரவணக்கம் செய்யப்படாத நிலையில் எதிர்வரும் மே 18ம் திகதி அன்று ஐரோப்பிய நேரம் பகல் 14 மணிக்கு டென்மார்க்கில் தலைவரின் தம்பியின் மகனால் உரிய முறையில் வீரவணக்கம்/ இறுதிச் செய்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நானும் ஒத்தாசை வழங்குகிறேன் என்பதோடு அதற்கு எனது முழு ஆதரவையும் நல்குகிறேன். இதற்கு எம்மக்களும் ஆதரவை வழங்கி தலைவரினதும் குடும்பத்தினரினதும் ஆன்மா சாந்தி அடைய வேண்டுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன். நடைபெறுமிடம்: paladspassagen, ved analaeget 12C, 7100 Vejle, Denmark ஒருவேளை, எதிர்பாராத காரணங்களால், அது நிறுத்தப்பட்டாலும் யாழில் என்னால் அது சரியாக மே 18 அன்று மேற்கொள்ளப்படும் என்பதை பறைந்துகொள்கிறேன். நன்றி, இங்ஙனம், நன்னிச் சோழன். "தமிழீழமே தமிழர் தாகம்"   "எங்கள் தலைவன் போல் இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் எவனும் இல்லை! எரிமலை மூச்சுக்கும் எழும்புயல் வீச்சுக்கும் ஏதடா எல்லை?"    
    • இந்த விடயத்தில் நிலாந்தனும் ரஞ்சித்தும் ரொம்பவே உணர்சி வசப்படுகிறார்கள். பொ.த.வே நிறுத்துவதால் “செய்தி சொல்லல்” ( பொன்சேக்காவுக்கு வாக்களித்து சொன்னதை போல) என்பதை தாண்டி என்னத்தை சாதிக்ககலாம் என்ற positive case ஐ ஒருவரும் முன் வைப்பாதாக இல்லை. இதற்குள் பொ.வே ஐ ஆதரிக்கும் விக்கி ஐயாவே, இரெண்டாம் வாக்கை சிங்கள வேட்பாளருக்கு (ரணில் 🤣) போடலாம் என்கிறார்.  இரெண்டாம் வாக்குகளில் தேர்தல் தீர்மானிக்கப்பட்டு, அதில் தமிழ் வேட்பாளர் ஆதரவில் ரணில் வென்றால் என்ன செய்தியை அது சொல்லும்? அதே போல் @நிழலி இன்னொரு இடத்தில் சொன்னது போல் - பொ.த.வே யை இம்முறை, பொருளாதார காரணங்களுக்காக, புறக்கணித்து,  தமிழர் ரணிலுக்கு போடவும் வாய்ப்பு உண்டு. இப்படி நடந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை ஆகி விடும். புலிகள் கூட ஏன் பொ.த.வே என்ற தெரிவுக்கு போகவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.