Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் போகிரி...நாங்கள் நினைத்தபடி கங்காதரன் ஒரு போலி ஆசாமி...வேறு ஒரு பெயரில் நடமாடும் ஒரு உளவு அதிகாரி....ஆளைக்கொஞ்சம் நோட்பண்ணுவோம்.....எழுதின கருத்துகளின் மொத்த எண்ணிக்கை ஆக 40...இப்படிப்பட்ட சாணக்கியனையினையே துணிந்து கேட்க்கும் இந்த ஆசாமி நிச்சயமாக ஒரு பாதிக்கப்பட்ட ஆளாகத்தன் இருக்கும்....நான் துப்பறிந்து இவரையும் பிடிக்கவா....? :lol:

நீங்கள் துப்பி ஒன்றும் பிடிக்க வேண்டாம் இந்த களத்தில் நான் பல ஆண்டு பார்வையாளனாக இருந்து சில மாதங்களுக்கு முன் பதிவு செய்து ஒருகிழமைக்குள்ளே மோகன் அண்ணாவல் தடைசெய்யப்பட்டேன் பின் புதிதாக பதிவு செய்து சில வாக்கு கொடுத்து அனுமதி கிடைக்க பெற்றுள்ளேன்

ஆனா எந்த பெயரில் தடைசெய்யப்படேன் என்று சொல்லி மோகன் அண்ணாவை சங்கடப்படுத்த வில்லை

நன்றி

கங்கா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாணக்கியன்.உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்

  • தொடங்கியவர்

யாழில் மறுபடியும் வந்ததற்கு நன்றிகள்.

அன்புக்கு மிகவும் நன்றி கந்தப்பு.

சாணக்கியனின் மீள்வருகை கள உறவுகள் பலருக்கு "உசார்" குளிசையாக அமையட்டும்!

நன்றி கிருபன்ஸ், அதுவே எனக்கு குளிசை தராமலும் அமையட்டும்!

சாணக்கியனின் மீள்வருகை கள உறவுகள் பலருக்கு "உசார்" குளிசையாக அமையட்டும்!

வணக்கம் கிருபன்ஸ், அதுவே எனக்கு குளிசை தராமல் அமையட்டும்!

...சாணக்கியன் எண்ட அப்பா உள்ளே நொழஞ்ச பிறகு எட்டிப்பாக்குறோம்..

பாப்போம்..இப்பவாவது விடுவாங்களான்னு!!!!

நீங்க வேற....நானே நீண்ட நாளைக்கப்புறம் வந்ததால ஆத்துக்காரி ஏத்துப்பாளோ எண்ட பயத்தில இருக்கேன்!!!

வேணுமின்னா நம்ம வீட்டில நடக்கிற மாதிரி செஞ்சு பார்க்கலாம், "போக்கிரி, ஏன்டா இப்படிச் செஞ்சே" எண்டு நானும் உங்களை நாலு சாத்து சாத்திறேன், அப்போ அம்மா தடுக்க ஓடி வருவாங்க, நானும் ஏதோ அவங்களுக்காக மன்னிச்சு விடுவது போல விட்டிடுறேன், அப்படியே நீங்க அம்மாவை பிடிச்சுகின்னே தேம்பி அழுதபடி, "பசிக்குதம்மா" என்கிறதோட எல்லாம் சரியாயிடும்! சம்மதாமா?

சாணக்கியன் அண்ணாவை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி !

மிக்க நன்றி தங்கை அனிதா!

வருவது முக்கியம் இல்லை எப்படியான நிலையில் யாழைவிட்டு போன்னோம் எப்படியான மன நிலையில் மீண்டும் இனைகிறோம் என்பது தான் முக்கியம்,

உங்களில் எவ்வித மாற்றமும் இல்லாம நீங்களே போய் நீங்களாக வருவதுக்கு 2 தரம் தலைப்பு எடுத்து கருத்து எழுதுவதில் பிரியோசனம் இல்லை .

இந்த பாடம் படித்து இருந்தால் உங்களுக்கு புரியும்

*மனம் திருந்திய மகன்*

ஒருமையில் எழுதியவை திருத்தப்பட்டுள்ளது.- யாழ்பிரியா

நன்றி கெங்கா உங்கள் கருத்திற்கு!

போறது, மீள வாறது எல்லாம் முக்கியமில்லை, நான் நானாகவே இருக்கிறேனா என்பதே முக்கியம்! நான் நானாவே இருக்கிறேன், இருப்பேன், எனக்கு எப்போது யாழில் ஒரே பெயர்தான், அது தான் சாணக்கியன். நான் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!!!

அதை துணிந்து உரக்க சொல்வேன்(யாழ் களத்தில் மட்டும்)!!!

அதையும் பண்புடனேயே சொல்வேன்!

அது சரி நீங்கள் படித்த அந்தப் பாடம் தான் என்ன? பகிர்ந்து கொள்ளலாமே?

வாங்கோ சாணக்கியன் அண்ணா! உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.

மிக்க நன்றி தங்கை இளநிலா!

வணக்கம் சாணக்கியன்.உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்

மிக்க நன்றி புத்தன் அவர்களே!

மற்றும் மனதில் வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு, முன்னர் போல் இல்லாவிடினும் தொடர்ந்து உங்கள் அனைவருடனும் கருத்தால் இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்!

அன்புடன்,

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் ஆனால் மனிதன் மனிதத்தன்மையுடன் இருக்கவேண்டும்

கருத்து சுதந்திரம் என்பது ஒருபோராட்டத்தை நக்கல் பனன்னுவதுக்கு அல்ல

  • தொடங்கியவர்

நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் ஆனால் மனிதன் மனிதத்தன்மையுடன் இருக்கவேண்டும்

கருத்து சுதந்திரம் என்பது ஒரு போராட்டத்தை நக்கல் பனன்னுவதுக்கு அல்ல

நீங்கள் எந்தப் போராட்டத்தை சொல்கிறீர்கள்?

  • இருதலைக் கொள்ளியெறும்பாய் தமிழ் மக்கள் நடத்தும் ஜீவமரணப் போராட்டத்தையா?
  • புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி புலிகள் நடத்தும் விடுதலை போராட்டத்தையா?
  • இலங்கைத்தாயின் புதல்வர்கள் நாமே எனக் கூறி சிங்களவர் நடத்தும் பயங்கரவாதத்திற்க எதிரான போராட்டத்தையா?
  • அல்லது புலம்பெயர் ஈழத்தமிழர் மேற்கத்தேய நாகரீகத்துடன் நடத்தும் நாகரீக போராட்டத்தையா?

ஏனெனில் ஒவ்வோருவருமே தத்தமக்கென வெவ்வேறு போராட்ட நியாங்களை கொண்டுள்ளனர்.

அதனடிப்படையிலேயே மனிதாபிமானத்தையும் நீதியையும் வகுத்துக்கொள்கின்றனர்.

உதாரணமாக, ராணுவத்தினர் கிளைமோரில் சிக்கி பலியாகும் போது, நாம் அதனை ஒரு வெற்றிகரமாக தாக்குதலாக எண்ணி குதுகலிக்கும் அதேவேளை சிங்களவர்கள் அதனை ஒரு கோளைத்தனமானதாக கூறி குமுறுகின்றனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மேற்படி சம்பவத்திற்கு உதவியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் கடத்தப்பட்டு பின்னர் அனாதை பிணங்களாக வீசப்படுவதை கண்டு நாங்கள் உள்ளம் கொதிக்கின்ற போது, பெரும்பாலான சிங்களவர்களோ அது தேசத்திற்கான கடமையென கருதி மெனமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே எப்போது எனது கருத்து சுதந்திரமடைகிறது என்றால், அது எமது நியாங்களின் அடிப்படையில் மட்டுமன்றி மற்றையவரின் நியாங்களையும் உள்வாங்குகின்ற போதுதான்!

இதிலே இருக்கு நான் சொன்னதுக்கு பதில்.

யாருக்கு புரியுதோ இல்லையோ இங்கு எல்லோருக்கும் புரியும்.

நன்றி நீங்களே தெளிவு படுத்தியதுக்கு.

நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் ஆனால் மனிதன் மனிதத்தன்மையுடன் இருக்கவேண்டும்

கருத்து சுதந்திரம் என்பது ஒரு போராட்டத்தை நக்கல் பனன்னுவதுக்கு அல்ல

என் தனிப்பட்ட ஆய்வு இது...இது சாணக்கியனையோ, கங்காவினையோ தாக்குவதற்காகவோ அல்லது ஆதரிப்பதாகவோ இருக்காது. ஆனா நியமான ஒரு நடுநிலைமை என் தீர்ப்பில் இருக்கும். அப்படி இல்லையெண்ணா....இயற்கையில் யாரோ தவறு இழைக்கிறர்கள். அதன் பலா பலன்களினை அவரவர் செய்த வேலைக்கேற்ப பயன் பெற்று ஆனந்தமடைவர்....அல்லது துக்கமடைவர்....

இப்ப மேலே சொன்ன சானக்கியனின் கருத்துப்படி...நியத்தினை அப்படியே எழுதியிருக்கார். இதில எனக்கு நியமான பிரச்சனை கண்ணுக்கு தெரியுது.....

கங்கா கலங்கியிருக்கிறார் ஏன்....அவர் சாணக்கியன் தமிழனையும், சிங்களவனையும்...ஒன்றாக ஒரே மேசையில் வைத்து இருத்தி எடை போட்டவிடயம்....தான்

ஆமா...இங்கிலாந்துக்காரன் ஆட்சி செய்யேக்க ...கொழும்பில் என் அப்பரின் அப்பர்....காணி, காணியாக வேண்டி 1940 களில் குவித்தாரே...அப்ப அது சிங்களவன் தேசம் தானே...அவன் கோபிச்சிருக்கமாட்டான்...தன் நிலம் எல்லாம் தமிழனால் பறிபோகுதே என்று. ஏன் தமிழன் மூளை வழம் கூடியவன் இயற்கையாய்...சிங்களவன் பெரும்பாலானோர் அப்படி அல்ல...ஆகவே அப்படி நெகட்டீவாக சிந்தித்து அவன் தமிழனை...அடித்து...ஒரு இரவுக்குள்...உடுத்த உடுப்புகளுடன் போக சொல்லி சொல்லலேயே? ஏன்

அப்படி இருக்க கதை...முஸ்லீம்கள்..தமிழரின் யாழ்பாணத்தில் தமிழரின் பிசினஸ்ஸினை பிடித்து எழும்பும் ஒரு கால கட்டத்தில் அவர்களினை எமது தமிழ் சுயநலத்துக்காக போட்ட உடுப்பிடன் போக வைத்தது நியாயமா? ஏன்

இப்படி நான் கதைத்தா நான் கோமாளி...ஆனா வலைஞன்...ஒன்றுமே செய்யாது உலக்கைமாதிரி கூட இல்லாம,

இருந்து என்னை புறக்கணிக்க சொல்வது......ஒரு பந்தை தண்ணியில் அமிழ்த்தி விட்டு விட்டாலும் அது தன் பாட்டில வெளிவரும். அப்படிதான் என் வாழ்க்கை...யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.... என் தனித்தளம் உருவாகும் வரை...வேணும் எண்ணா இந்த பெயரை தடை செய்துவிட்டு போகட்டும்....ஆனா நான் மீண்டும் நிச்சயமாக வரவே மாட்டேன்....இம் முறை எனக்கு தேவலை..... :lol:

வணக்கம் சாணக்கியன்.

Edited by அப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.