Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வது திருத்தம் | சகோதரர்களிடையே பிணக்கு வலுக்கிறது – முன்னணி சோசலிஸ்ட் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 வது திருத்தம் | சகோதரர்களிடையே பிணக்கு வலுக்கிறது – முன்னணி சோசலிஸ்ட் கட்சி

 
 

20 வது திருத்தம் சர்வாதிகாரத்தைத் தோற்றுவித்திருக்கிறது – சமாகி ஜன பலவேகய


பிரதமர் இனிமேல் ஜனாதிபதியின் ‘பியோனாகவே’ பணியாற்ற வேண்டும்

-ஆர்.பிரேமதாசா, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் புதிய அரசியமைப்பு பற்றி

2015 இல் மக்கள் ஒரு சிங்கத்தை எதிர்பார்த்தார்கள், ஆனால் நல்லாட்சி அரசாங்கம் கொடுத்ததோ ஒரு எலியை. இப்போது வந்த ஆளும் கட்சி அதையும் எடுத்துவிட்டது.

சகோதரர்களிடையேயான பிணக்கு 20 வது திருத்தத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது

புபுது ஜயகொட, முன்னணி சோசலிஸ்ட் கட்சி செயலாளர்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவிலுள்ள முக்கிய அம்சங்கள்:

  • ஜனாதிபதி பதவி, பாராளுமன்றம் ஆகியவற்றின் தவணை 5 வருடங்கள்; ஜனாதிபதி ஒருவர் இரணடு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாது; தகவல் அறிவதற்கான உரிமை – இவைகளில் மாற்றமில்லை
  • அமைச்சர்களையும், உதவியமைச்சர்களையும் ஜனாதிபதி நியமிப்பார், பிரதமரின் ஆலோசனையைப் பெறவேண்டுமென்ற கட்டாயமில்லை; 19 ஆவது திருத்தப்படி பிரதமரின் ஆலோசனை அவசியம்.
  • அமைச்சர்களின் கடமைகளைத் தீர்மானிப்பது ஜனாதிபதியே, பிரதமருக்கு இதில் அதிகாரமில்லை.
  • எந்த அமைச்சரையும், உதவி அமைச்சரையும் ஜனாதிபதி பதவி நீக்கலாம்.
  • ஜனாதிபதி தனக்கென எத்தனை அமைச்சுக்களையும் வைத்திருக்கலாம்.
  • அமைச்சரவையில் அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை (முன்னர் ஆக மொத்தம் 30 அமைச்சுக்கள்)
  • ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியைப் பொறுப்புள்ளவராகக் கொள்ள முடியாது. (19 வது திருத்தத்தில் ஜனாதிபதிமீது உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீதான வழக்குத் தொடரலாம்)
  • அரசியலமைப்புச் சபை ஒழிக்கப்படுகிறது. பாராளுமன்றச் சபை மீண்டும் கொண்டுவரப்படுகிறது. அரசியமைப்புச் சபையின் கீழ் சபைகளுக்கான நியமனங்களில் பொதுமக்கள் பங்களிப்பிருக்கும்.
  • நீதிமன்றம், சுயாதீன ஆணையங்கள், இதர உயர் பதவிகளை பாரளுமன்றச் சபை நியமிப்பதை ஜனாதிபதி கண்காணிக்கலாம்.
  • 19 வது திருத்தத்தின் கீழ், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கட்டாய ஓய்வு வயது 60 எனவும், வயது 58 ஐத் தாண்டியதும் ஜனாதிபதியிடம் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் இருந்தது. இது தற்போது முற்றாக நீக்கப்படுகிறது.
  • பாராளுமன்றத்தை 1 வருடத்திலேயே கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. முன்னர் நாலரை வருடங்களுக்குப் பிறகுதான் கலைக்கலாம்.
  • 19 வது திருத்தத்தில், பாராளுமன்றத்தில் ஒரு மசோதா வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், அதை ஆராய்ந்து, வேண்டுமானால் அதை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வாதாட 2 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இது 1 வாரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
  • அவசரமாக மசோதாக்கள் சமர்ப்பிக்கப்படுவதை 19 வது திருத்தம் தடை செய்திருந்தது. 20 வது திருத்தம் அதை மீளக் கொண்டு வருகிறது. அவசர மசோதாக்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாமல் நேரே உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகின்றன. பொதுமக்கள் இம் மசோதாக்கள் பற்றி அறிந்து அவற்றை எதிர்த்து வழக்காடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது. இது அரசியலமைப்புக்கு முரணானது. இம் மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டபின் அவற்றை மீள்பார்வை செய்யும் பொறிமுறை இல்லாத போது இந் நடைமுறை ஆபத்தானதாக இருக்கும்.
  • தேசிய கணக்காணயம் (National Audit Commission) ஒழிக்கப்படுகிறது.
  • தேசிய கொள்வனவு ஆணையம் (National Procurement Commission) ஒழிக்கப்படுகிறது. அரச திணைக்களஙகள் செய்யும் கொள்வனவுகளுக்கான விதிமுறைகளை இவ்வாணயம் தீர்மானிக்கிறது.
  • https://marumoli.com/20-வது-திருத்தம்-சகோதரர்கள/?fbclid=IwAR24-uUulObf8bb8jW1aLsxa5CcjnYoc-MErCor1Rq7CJqXdZXCOgs6BSgA

இனத்துவேசம், யுத்தவெற்றி, பெளத்தமதவாதம் சிங்கள மக்களின் அறிவுக் கண்ணை மூடியுள்ளது. தன்னை கட்டிவைக்கும் சங்கிலியை யானை தானே தூக்கி கொடுப்பது போல தனி நபர் சர்வாதிகாரத்தை ஏற்படுத்த துணை போய்விட்டு எதிர்காலத்தில் கஷ்ரப்படப்போகிறவர்கள் அவர்களே. 

கோட்டா & கொம்பனியின் இந்த ஜனநாயகவிரோத நடவடிக்கையை தமிழ் அரசியல் தலைவர்கள் எமக்கு சாதகமாக பயன்படுத்தவேண்டும்.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் எதைக் கூற விளைகிறார்  ?

சகோதரர்களின் பூசலையிட்டு தமிழர் மகிழ்வடையலாம் என்று கூறுகிறாரா 😏

 

வேலையில்லாதவன் பூனைக்கு சிரைச்ச கதைதான் இந்தச் செய்தி ☹️

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.