Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்

Featured Replies

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்

அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.

சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கில் லக்னெளவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, அப்போதைய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், சக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னெள நகரில் உள்ள உயர் நீதிமன்ற பழைய கட்டட வளாகத்தின் அறை எண் 18இல் இயங்கி வரும் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய இந்துத்துவத் தலைவர்கள் யார் என்பதை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.

அந்த வழக்கின் விசாரணை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

சுரேந்திர குமார்

பட மூலாதாரம்,SANJEEV PANDE

 
படக்குறிப்பு,

சுரேந்திர குமார்

1) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வழங்கவிருப்பவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 16ஆம் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க தொடக்கத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அந்த கெடு பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்பட்டது.

2) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய்கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிவசேனை தலைவர் பாலாசாஹெப் தாக்கரே விசாரணை காலத்திலேயே உயிரிழந்ததால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

3) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் கடைசி இறுதி வாதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை எழுத மூன்று வார அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.

இறுதி வாதங்களின்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி காணொளி வாயிலாக நடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவரான உமா பாரதி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறி தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

4) இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. மொத்தம் 351 பேர் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சுமார் 600 ஆவணங்கள், வழக்கு தொடர்புடையவாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

5) இந்த வழக்கின் ஆரம்ப காலங்களில் மொத்தம் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விசாரணை காலத்திலேயே 16 பேர் உயிரிழந்து விட்டனர்.

6) சிபிஐ தரப்பு முக்கிய வாதமாக, குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை தூண்டி சதி செய்தனர் என்பதாகும்.

இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டில் கல்யாண் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாத நிலைக்கு அவர் வகித்து வந்த மாநில ஆளுநர் பதவி தடையாக இருந்தது. கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்ய தடை நீங்கியது.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,PRAVEEN JAIN

 

7) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து வாதிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்ததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தங்களை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

😎 இந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை காணொளி காட்சி வாயிலாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அளித்தார். அப்போது பாபர் மசூதியை இடிக்கும் சம்பவத்தில் எவ்வித குற்றச்சதியிலும் தான் ஈடுபடவில்லை என்று அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தனது பெயரை தேவையின்றி சிக்க வைத்துள்ளனர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக அத்வானி குற்றம்சாட்டினார்.

9) சம்பவம் நடந்த 1992, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இருந்த பகுதியை அடைந்த கட்டுக்கடங்காத கர சேவகர்கள் கூட்டம், ராமர் பிறந்த இடமாக இருக்கும் பகுதியில் முதலாம் முகலாய மன்னர் பாபர் மசூதியை கட்டியதாகக் கூறி அதை இடித்தனர்.

10) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி ராமருக்கே சொந்தம் என்று கூறியது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-54348232

  • தொடங்கியவர்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

 

சென்னை, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/30064212/Babri-demolition-case-verdict-today-Police-security.vpf

  • தொடங்கியவர்

பாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை!

இந்தியா – அயோத்தி, பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், உபாரதி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ) சிறப்பு நீதிமன்றம் இன்று (30) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

“பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் ஆளும் பாரதியா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் அடங்கலாக 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

https://newuthayan.com/பாபர்-மசூதி-இடிப்பு-பாஜக/

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் மசூதி இடிப்பு: விடுதலைக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள்!

spacer.png

 

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் மீது கிரிமினல் சதி, பகைமையை ஊக்குவித்தல், பேச்சின் மூலம் ஒரு செயலை செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சிபிஐ முன்வைத்தது.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு என்பது தன்னிச்சையாக நடைபெற்றது, அது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அதன் பின்னால் எந்த கிரிமினல் சதியும் இல்லை எனவும் தனது 2000 பக்க தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், “குவிமாடம் மீது ஏறியவர்கள், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோத சக்திகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது கண்டறியப்படவில்லை. உண்மையில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் இடித்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களை இடிப்பதற்கு தூண்டவில்லை” என்று கூறியுள்ளார்.

 

அசோக் சிங்கால் மற்றும் பிற சங் பரிவார் தலைவர்கள் ராம் லல்லா சிலைகள் உள்ளே இருந்ததால் மசூதியை இடிப்பதிலிருந்து காப்பாற்றவே விரும்பியதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, “டிசம்பர் 6 ஆம் தேதி எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது. ஆனால், அது கவனிக்கப்படாமல் விடப்பட்டது” என்று கூறினார்.

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னதாக வினய் கட்டியாரின் வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அங்கு கட்டமைப்பை இடிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது ஆதாரமற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கூட்டத்தின் வீடியோ ஆதாரமாக வழங்கப்பட்டது. எந்தவொரு சதித்திட்டமும் நடந்ததாக வீடியோ சான்றுகள் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ அளித்த ஆடியோ, வீடியோ ஆகியவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சீல் வைக்கப்படவில்லை மற்றும் வீடியோக்கள் கூட தெளிவாக இல்லை. ஆடியோவில் இருக்கும் உரைகள் தெளிவாக கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

“இதுதொடர்பான புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ்களை சமர்பிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ நெகட்டிவை சமர்பிக்கவில்லை. மேலும் வீடியோ பதிவுகள் புனையப்பட்டு சிதைக்கப்பட்டன. 65 ஆதாரச் சட்டத்தின் விதிகளை சிபிஐ பின்பற்றவில்லை, அதனால்தான் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர் "என்று சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞர் பிரசாந்த் சிங் அடல் கூறினார்.

 

https://minnambalam.com/politics/2020/09/30/32/babri-mosque-demolition-case-all-acquitted-key-points-of-verdict

  • கருத்துக்கள உறவுகள்

120539984_3414767171950713_6398156830320197306_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=9jmG5WhiK-8AX8bTORs&_nc_ht=scontent-frx5-1.xx&oh=97568ffa49b4891c7a2e5b55dd68c200&oe=5F9C114A

 

120192371_3414777131949717_5112940021747349773_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=iE6FkABr9ZkAX_AfoGK&_nc_ht=scontent-frt3-1.xx&oh=001a00a8b82fb8c5ea7ecc970de65957&oe=5F998785

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 09:57, தமிழ் சிறி said:

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

tenor.gif நான் அடிச்ச மணி ஆருக்கு கேட்டுச்சோ இல்லியோ அவனுக்கு கேட்டுச்சு .. அடிச்சான் பாரு ஆளுனர்க்கான ஒப்பொயின்ற் மென்ற் ஓடற..☺️..😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.