Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் 

இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள்.  

நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன்.

காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.

கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர்.

மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.

மாலை இரண்டு மணிக்கு, எமக்கு பொறுப்பான டைரக்டர் வந்து.... மேனேஜர் கிளம்புறார் என்று சொல்லி அதிர வைத்தார். அதாவது மானேஜரை தூக்கி விட்டார்கள்.

ஆனால் மாலையில் HR மேனேஜர் கோஸ்டாவில் இருக்கும் போது கிசுகிசுத்தார்.... மேனேஜர் இடத்துக்கு நீ வரக்கூடும்.... 

நான், அடுத்த வாரம் துண்டு கொடுக்க வேணும். 

இதுதான் கார்பொரேட் உலகம்...

**********

நேர்முகத்தேர்வு குறித்து நாம் எல்லோரும் சிந்திப்போம். டென்ஷன் ஆவோம்.

ஆனால் மறுபுறம், சரியான ஒரு ஆளை வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற டென்ஷன், ஒரு மேனேஜருக்கு தாராளமாகவே இருக்கும்.

மூவர் சேர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தினோம். முதலில் ஒருவர்.... 50க்கு மேல் இருக்கும். அவர் கேள்விகளுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் எடுத்தார். மேலே கூரையினைப் பார்த்தார். யாரோ மேலே இருந்து பதில்கள் தருவது போல. 

மூன்றாவது கேள்வியின் போது டாய்லெட் போகவேண்டும் என்றார். என்னடா இது புதுசா இருக்கிறதே எண்டு வெளியே கொண்டு போய் காட்டிவிட்டு வர.... வந்தவர்.... தனக்கு டாக்டர் ஏதோ மருந்து தந்தாராம். மாறி மனைவியின் மருந்தை போட்டு விட்டதாக நினைக்கிறாராம்.... ஒரே.... பதட்டமாக இருக்கிறது என்றார்...

மெதுவாக.... எல்லாம் ஓகே. எங்களுக்கு நல்ல சந்தோசம். நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று அனுப்பி வைத்தோம்.

இன்னொரு பெண்... முதலில் என்னுடன் நேர்முகம்.... பிறகு HR மேனேஜருடன் நேர்முகம். என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர், சரியாக கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. தீடீரென அழத்தொடங்கி விட்டார்.

இந்த வேலை எனக்கு முக்கியமானது. இல்லாவிடில், வீட்டினை இழந்து விடுவேன்.... என்று சொன்னார். 

எனக்கு பெரிய தர்மசங்கடமாக போய் விட்டது. அந்த வேலையினை அவரால் செய்ய முடியாது. நேரடியாக அவரிடம் சொன்னேன். உனக்கு ஒரு உதவி செய்கிறேன். உன்னை நான் இதுக்கு முன்னர் வேலை செய்த நிறுவன மேனேஜரிடம் அனுப்பி வைக்கிறேன். அவர் காலையில் தான் ஒருவர் தேவை என்று விளம்பரம் செய்ய இருப்பதாக பேசும் போது சொன்னார். 

மேலும், அந்த பெண்ணுக்கு, வேலை என்பது, அனுதாபத்தினால் கிடைப்பது அல்ல. உன்னை நீ, நம்பிக்கையுடன் வியாபாரம் செய்வது. ஆகவே எனக்கு ஒரு உறுதி மொழி தா, அங்கே போய் அழமாட்டேன், உறுதியாக பேசி வேலை எடுப்பேன் என்று கேட்டேன். அவரும் தந்தார்.

அந்த பெண், அந்த மனேஜரினை அதே தினம் சந்தித்து நேர்முகத்தினை உறுதியாக சந்தித்து, வேலையினையும் எடுத்துக் கொண்டார்.

அந்த பெண் நாளடைவில் அங்கே பெரும் நிர்வாகியாக உயர்ந்தார். அவருக்கு பின்னர் இரு தமிழ் இளையோரை அனுப்ப வேலை கொடுத்துள்ளார்.

அந்த பெண் இன்று எனது நட்பு வட்டத்தில்.

*****

மெர்சீடீஸ் பென்ஸ்,  பிரிட்டனின் தலைமையகம் மில்டன் கேயன்ஸ் எனுமிடத்தில் இருக்குது. அங்கே வேலை... நானும், இன்னும் 6 பேரும் பிரிட்டிஷ் காரர்கள்.

இந்தியாவில் இருந்து 32 மென்பொருள் டெவெலப்பர்கள், வந்திருந்தார்கள். 

எமது மேனேஜருக்கு மேலே IT Director. காலை 10.30.

இன்று போர்ட் மீட்டிங். எமக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பில் submission செய்ய இருக்கிறேன். ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் கிடைத்தால், உங்களுக்கு contract extension கிடைக்கும். இல்லாவிடில் எல்லோருக்கும் termination notice என்று பகிடி விட்டு கிளம்பினார். நாமும் வாழ்த்து சொல்லி அனுப்பினோம்.

சரியாக 11.20 அளவில் இரண்டு செக்யூரிட்டி அலுவலகர்களுடன் நடந்து வந்து தனது அலுவலகத்தினுள் நுழைந்தார். மூன்றாவது நிமிடத்தில் வெளியேறினார், எம்மை திரும்பியும் பாராமல்.

கேட்கப்பட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியாமல் திணறி இருக்கிறார், சரியாக தன்னை தயார் செய்யவில்லை.

Fired on the spot at the board meeting room.

இதனை தான் Hire and Fire என்பார்கள் கார்பொரேட் உலகில்.

******

வேலை தொடர்பான நேர்முகத்தினை எதிர்கொள்பவர்கள் முக்கியமாக இந்த விடயங்களை கவனியுங்கள்.

1. சமூக வலைத்தளங்களில் உங்கள் பதிவுகள் குறித்து மிக கவனமாக இருங்கள். தமிழில் பதிந்து விட்டு போகலாம் என்று நினைக்காதீர்கள். அதனை மொழி பெயர்த்து சொல்ல கூகுளை பயன்படுத்துகிறார்கள். சரியாக இல்லாது போயினும், உங்களை மதிப்பிட உதவும்.

2. குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னர், மிகவும் பணிவு மிக்கவராக மாறுங்கள். ரெயிலில், பஸ்சில், அநியாயத்துக்கு எழும்பி அடுத்தவர்க்கு இடம் கொடுங்கள். உங்களை நேர்முகம் செய்பவராக இருக்க கூடும்.

3. வாகனத்தில் போகும் போது, அடுத்தவர் மேலே தவறாயினும், சிரித்துக்கொண்டே சொரி சொல்லி போய் கொண்டே இருங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

MOD] Pulldown Animationen | Seite 3 – Android-Hilfe.de 

நாதம்ஸ்... நீங்கள், சரியான கெட்டிக்காரன்.
சரியான நேரத்தில்... நல்ல முடிவை எடுத்தமை பாராட்டுக்குரியது. 👍

ஜேர்மனியில் உள்ள..  மெர்சீடீஸ் பென்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில்,
எனது இளைய மகள்,  இரண்டு வருடம் Mechatronics engineer ஆக  வேலை செய்து,
இப்போ... மேலும் படிக்க வேண்டும் என்று... 
வேறொரு நாட்டில், படித்துக் கொண்டிருக்கின்றார்.
மீண்டும்...  மேர்சிடஸ்  நிறுவனத்தில், இணையும் வாய்ப்புகளையும், 
ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளமை... நல்லது  என நினைக்கின்றேன்.

யாழ். களத்தில், ஒரு கொம்பனியில் வேலை செய்யும்...
இருவரை.. கண்டது, சந்தோசம். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்... நீங்கள், சரியான கெட்டிக்காரன்.
சரியான நேரத்தில்... நல்ல முடிவை எடுத்தமை பாராட்டுக்குரியது. 👍

ஜேர்மனியில் உள்ள..  மெர்சீடீஸ் பென்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில்,
எனது இளைய மகள்,  இரண்டு வருடம் Mechatronics engineer ஆக  வேலை செய்து,
இப்போ... மேலும் படிக்க வேண்டும் என்று... 
வேறொரு நாட்டில், படித்துக் கொண்டிருக்கின்றார்.
மீண்டும்...  மேர்சிடஸ்  நிறுவனத்தில், இணையும் வாய்ப்புகளையும், 
ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளமை... நல்லது  என நினைக்கின்றேன்.

யாழ். களத்தில், ஒரு கொம்பனியில் வேலை செய்யும்...
இருவரை.. கண்டது, சந்தோசம். :)

ஒரு முக்கியமான விடயம் தொடர்பில் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இங்கே பிறந்து, மொழி, கலாசாரம் தெரிந்த, எமது அடுத்த தலைமுறையினர் வேலை வாய்ப்புகள் குறித்த சிந்தனை இல்லாமல் தடுமாறுகின்றனர். தாய், தந்தைக்கு விபரம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.

அதேவேளை, இந்தியாவில்.... அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிரித்தானியா, IT காரர்களுக்கு விசாவினை வழங்க போகின்றது (கொரோனாவுக்கு முந்திய நிலை), எல்லோரும் தயாராகுங்கள் என்று அறைகூவல் செய்கின்றனர்.

எமது இளையவரை எப்படி இந்த துறைக்கு கொண்டு வருவது?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாதம் என்ன மாதிரி பயந்ததுகள் வேலைக்கு வந்தால் இப்படியா செய்வது.😆..சும்மா கேட்டேன்..😀✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

ஏன் நாதம் என்ன மாதிரி பயந்ததுகள் வேலைக்கு வந்தால் இப்படியா செய்வது.😆..சும்மா கேட்டேன்..😀✍️

நீங்கள்,..... அழுததை சொல்கிறீர்களா?

இல்லை.... வேலை நேர்முகத்தில், நீங்கள் உங்களை வியாபாரம் செய்கிறீர்கள்.

சந்தையில் உங்கள் கையில் உள்ள பொருளை, இது அப்படிப்பட்டது, இப்படி பட்டது என்று கூவி விற்பது போல.... உங்களையே வியாபாரம் செய்வது தான் நேர்முகம்.

சந்தையில், நீங்கள் ஒரு பொருளுக்கு $50 கேட்க்கிறீர்கள். $100 சொன்ன யாவாரி, பொருள் இருக்கும்..... நான் இப்ப வித்து முடிப்பேன், நீ பார்த்துக்கொண்டிருக்கும் போதே என்று சொல்வதற்கும், ஐயோ அம்மா, வீட்டில் கஷடம், இதனை வித்தால் தான், வீட்டில் அடுப்பு எரியும் என்று கவலையுடன் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

உங்கள் பதிவுகளில் மேற் கொண்டு எழுத விருமபவில்லை.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

உங்கள் பதிவுகளில் மேற் கொண்டு எழுத விருமபவில்லை.நன்றி.

யாயினி, என்ன நடந்தது? ஏன் இந்த கருத்து பதிவு?

போல்ட் செய்யபட்ட கருத்து எனக்கு தெரிந்த வகையில் இந்த ஆங்கில வசனத்தின் மொழி பெயர்ப்பு.

In an interview the candidate will get a chance to 'sell themselves' to an employer who are looking out to hire/buy them. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

யாயினி, என்ன நடந்தது? ஏன் இந்த கருத்து பதிவு?

தவறான பொருள் விளக்கம் என நினைக்கிறேன்.எனக்கும் பாத்தவுடன் ஒரு மாதிரித்தான் இருந்தது.பின் விளங்கிக்கொன்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

தவறான பொருள் விளக்கம் என நினைக்கிறேன்.எனக்கும் பாத்தவுடன் ஒரு மாதிரித்தான் இருந்தது.பின் விளங்கிக்கொன்டேன்.

அப்படித்தான் நினைக்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் சொல்லுவதற்கும் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துச் சொல்வதற்கும் அர்த்தங்கள் வித்தியாசமாக விளங்கப்படும் அபாயம் இருக்கின்றது. கொஞ்சம் விலாவாரியாக சொல்லும்போது தவறான அர்த்தம் தோன்றாது என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

ஆங்கிலத்தில் சொல்லுவதற்கும் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துச் சொல்வதற்கும் அர்த்தங்கள் வித்தியாசமாக விளங்கப்படும் அபாயம் இருக்கின்றது. கொஞ்சம் விலாவாரியாக சொல்லும்போது தவறான அர்த்தம் தோன்றாது என்று நினைக்கின்றேன்.

விற்பனை செய்கிறீர்கள், விற்கிறீர்கள் போன்ற சொற்களை பாவித்து, தயங்கி, வியாபாரம் என்ற சொல்லை பயன்படுத்தினேன் கிருபன்.

சிலவேளை, இந்த தங்கைக்கு, நேரடியாக அளித்த பதில் என்பதால், இந்த புரிதல் பிரச்சனை வந்திருக்கலாம். 

ஆனாலும் இது புரியாவிடில், பயமின்றி, நேர்முகத்தில் வென்று, வேலை பெறுவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

விற்பனை செய்கிறீர்கள், விற்கிறீர்கள் போன்ற சொற்களை பாவித்து, தயங்கி, வியாபாரம் என்ற சொல்லை பயன்படுத்தினேன் கிருபன்.

சிலவேளை, இந்த தங்கைக்கு, நேரடியாக அளித்த பதில் என்பதால், இந்த புரிதல் பிரச்சனை வந்திருக்கலாம். 

ஆனாலும் இது புரியாவிடில், பயமின்றி, நேர்முகத்தில் வென்று, வேலை பெறுவது எப்படி?

ஜேர்மனியிலும்... நேர்முகத் தேர்வின் போது, 
எம்மை விளம்பரப் படுத்தி, அவர்களை வாங்க வைக்க வேண்டும் என்ற ரீதியில் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

விற்பனை செய்கிறீர்கள், விற்கிறீர்கள் போன்ற சொற்களை பாவித்து, தயங்கி, வியாபாரம் என்ற சொல்லை பயன்படுத்தினேன்

எமது திறமைகளையும், தொழில் சார்ந்த சாதனைகளையும் சந்தைப்படுத்தும் உத்தி/நுட்பம் தெரிந்திருக்கவேண்டும் என்றும் சொல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

எமது திறமைகளையும், தொழில் சார்ந்த சாதனைகளையும் சந்தைப்படுத்தும் உத்தி/நுட்பம் தெரிந்திருக்கவேண்டும் என்றும் சொல்லலாம்.

சந்தைப்படுத்தும் 

👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.