Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

 
2-1-1.jpg
 23 Views

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று, ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து விரிவாக தெரியவருவதாவது,

முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்படும் அந்தக்குழு அடிதடி வன்முறையில் ஈடுபட்டுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்துள்ளது.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் குறித்த குழு, தமக்கு காப்பரணாக குறித்த நிறுவத்தினையும் மரக்கூட்டுத்தாபனத்தினையும் பயன்படுத்தி வந்திருக்கின்றது.

நீண்டகாலமாக குறித்த மரக்கடத்தல் தொடர்பில் குமுழமுனை மற்றும் முறிப்பு பகுதி மக்களால் பொறுப்புவாய்ந்த தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

1-37.jpg

அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கும் நபர் தேக்கு மரத்தினாலான மரவீடு ஒன்றை அமைத்துவருவதாகவும் அதனையாவது வெளியில் கொண்டுவருமாறும் முறிப்பு மற்றும் குமுழமுனை மக்கள் ஊடகவியலாளர்கள் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருகின்றனர் .

இதனை அடுத்து சற்று முன்னர் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது குறித்த நபரும் அவருடைய கையாட்கள் மூவரும் வாச்சி, கொட்டன் தடிகள், இரும்புக்கம்பிகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கி பணயக் கைதிகளாக்கியிருக்கின்றனர்.

பின்னர் ஊடகவியலாளர்களின் தொலைபேசி மற்றும் கமெராக்களில் இருந்த காட்சிப் பதிவுகளை அழிக்கவைத்ததுடன், அவர்களிடம் இருந்த தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டிருக்கின்றனர்.

ஊடகவியலாளர்கள் இருவரையும் திருடர்கள் என்று தெரிவுக்குமாறு நிர்ப்பந்தித்து விடியோவாகவும் தமது கமெராக்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

அதன் பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர்.

குறித்த தாக்குலாளிகளுக்கு அதிகாரத் தரப்புடன் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்றும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நன்றி – அருவி

https://www.ilakku.org/முல்லைத்தீவில்-ஊடகவியலா/

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக அடக்குமுறையின் புதிய வடிவம்

October 12, 2020

jourlalists.jpg

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

அதே வேளை மீண்டும் அரங்கேறும் ஊடக வன்முறை தொடர்பில் தனது அச்சத்தை யாழ்.ஊடக அமையம் இவ்வேளையில் பகிர்ந்தும் கொள்கின்றது.ஏற்கனவே வடகிழக்கில் ஊடக சுதந்திரம் கடந்த காலங்களில் எவ்வாறு அரசினால் பேணப்பட்டதென்பது சொல்லி தெரியவேண்டியதொன்றல்ல.

எமது சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 39பேரினது உயிர்களை ஈகம் செய்தே தமிழ் தேசத்தில் ஊடக பணி முன்னெடுக்கப்படுகின்றது. ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் , விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் ஊடகவியலாளர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறும் சூழலே முன்னைய காலங்களில் இருந்து வந்திருந்தது.

ஊடகப்படுகொலைகளிற்கு யுத்த காலத்தை காரணங்காட்டி வந்திருந்த ஆட்சியாளர்களிற்கும் அவர்களது முகவர்களிற்கும் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்படுவது யுத்த கால சூழல் இல்லையென்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை வன வள திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையினரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தலில் ஈடுபட்டதை தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த நபரொருவரது நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் குறித்த குழு தமக்கு காப்பரணாக குறித்த நிறுவத்தினையும் மரக்கூட்டுத்தாபனத்தினையும் பயன்படுத்தி வந்திருக்கின்றதென்பதையும் ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச இயந்திர ஆதரவுடனான தாக்குதல்கள் நிச்சயமாக மகிழ்ச்சியான சூழலொன்றை எதிர்வருங்காலங்களில் நிச்சயம் ஏற்படுத்தாதென்பதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் அரசை கேட்டுக்கொள்வதுடன் ஊடக சுதந்திரத்திற்கான பயணத்தில் உறுதியாக அனைத்து ஊடகவியலாளர்களுடனும் கைகோர்த்து பயணிக்குமென்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது. 

ஆ.சபேஸ்வரன்;                                                                    சி.நிதர்சன்,தலைவர்,                                                                                 செயலாளர்,யாழ்.ஊடக அமையம்                                                          யாழ்.ஊடக அமையம்

#ஊடகஅடக்குமுறை #சட்டவிரோத #மரக்கடத்தல் #தவசீலன் #குமணன்  #வனவளதிணைக்களம்

 

 

https://globaltamilnews.net/2020/151762/

ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட வேண்டும் – மன். ஊடகவியலாளர் ஒன்றியம்

முல்லைத்தீவில் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியளாலர்கள் கடத்தல் காரர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதை மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளதோடு, சம்பவத்தை மேற்கொண்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் சட்டவிரோத குழு ஒன்றினால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். – சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் தமது கடமையை மோற்கொண்ட ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அச்சுரூத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பாதீக்கப்படுகின்றனர். பாதீக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நிலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்களின் நலனுக்காக சொற்ப வேதனத்துடன் தனிச்சலுடன் சேவை செய்கின்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். அச்சுரூத்தப்படுகின்றனர். அந்த வகையிலே தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீதும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்சியாக மரக்கடத்தல் மற்றும் மண் கடத்தல் நடவடிக்கைகயில் ஈடுபடும் கொள்ளைக்காரர்கள் ஊடகவியளாலர்கள் மீது தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு தொடர்சியாக இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது. இச்சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் மாகாண ரீதியில் உள்ள ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதை எச்சரியாக குறிப்பிட விரும்புகின்றோம்.

எனவே தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சர் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.” – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://newuthayan.com/ஊடகவியலாளர்களை-தாக்கியவ/

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் - செல்வம்

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

spacer.png

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மற்றும் ஊடகவியலாளர் குமணன் ஆகியோர் மீதே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 20ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் வன வள திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்!!

இந்த தாக்குதலை நடத்தியது யார் இவர்கள் பின்னணி என்ன என்பதினை பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் நலன் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது தேசத்தில் நடைபெறக்கூடாது என்பதே எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.என்றார்.

 

https://www.virakesari.lk/article/91949

முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது

முல்லைத்தீவு – முறிப்பு காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களான க.குமணன் மற்றும் ச.தவசீலன் ஆகியோரை மூர்க்கமாக தாக்கிய மரக்கடத்தல் காரர்களில் இருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் பிரதான நபரான அனோசன் என்பவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2வது சந்தேக நபரை 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஊடகச் சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை உடைமையில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2வது சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நால்வரில் அடையாளம் காணப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

https://newuthayan.com/முல்லை-ஊடகவியலாளர்கள்-மீ/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இந்த மரக்கடத்தல்காரர்கள் சிங்களவர்கள் என்று இன்னும் ஒருவரும் சொல்லல கிழக்கில் வடக்கில் மண், காட்டு வளம் கொள்ளை அனைத்திலும் ஈடுபடுவது நம்மவர்கள் இதை நம்மவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனால் அதையே ஒரு சிங்களவன் செய்தால்  இந்த நேரம் யாழ் அதிர்ந்து இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.