Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு?

artificial-intelligence  

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து இருக்கிறது.

மின்சாரம், இணையம் போல, செயற்கை நுண்ணறிவு (செ.நு.) மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளம் ஆகும். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செ. நு. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

‘சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் விற்பன்னர்கள் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்தனர். உலகளாவிய வர்த்தகத் தலைவர்கள், முக்கிய முடுவு எடுப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கு பெற்றனர். ஐந்து நாட்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சிலவற்றைப் பார்த்தாலே, இந்த மாநாட்டின் முக்கியத்துவம் / பயன்பாடு புரிந்து விடும்.

செ.நு. வழியே உலகை மாற்றுதலில் - நம் முன்னே உள்ள பாதை; 100 கோடி மக்களுக்கு அதிகாரம் வழங்குதல்; மொழிகளுக்கு இடையிலான தடைகளை செ.நு. மூலம் நீக்குதல், தொடர்பு சாதனங்களை இணைத்தல்; unlocking Maps for Societal impact; ஆய்வுக்கூடத்தில் இருந்து சந்தைக்கு (Lab to Market), செ.நு.வால், சுகாதாரத்துறையில் புதுமைகள்; பொறுப்பான செ.நு.வில் தரவுகளின் பங்கு, செ.நு. செயலாக்கத்தில் அரசாங்கத்தின் பங்கு!

ஜூன் 2018-ல் - செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் (National Strategy for Artificial Intelligence) வெளியிடப்பட்டது. இதன்படி, 2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சியை, 1.3% உயர்த்துதல்; சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இடம் நகர்தல் (mobility) ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருதல் என முடிவாயிற்று.

நிதி ஆயோக் அமைப்பின் ‘அப்ரோச் பேப்பர்ஸ்’, ஆரோக்கியமான செ.நு. அமைப்புக்கு, நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது. 1. ஆய்வுகளை மேம்படுத்துதல் 2. பணியாளர் திறன் வளர்த்தல் 3. செ.நு. தீர்வுகளை தகவமைத்தல் 4. பொறுப்பான செ.நு.க்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.

கம்ப்யூட்டிங் ஆற்றல், தரவு சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தரவுகளின் மொத்தம் (வால்யூம்) இவைதாம் செ.நு.வின் விரைந்த வளர்ச்சிக்கு உதவும். இதிலே ‘டிஜிட்டல் இந்தியா’ முனைவுகள் மூலம், டிஜிட்டல் தரவுகள் உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறோம். ஆனாலும், சிறப்பு வாய்ந்த கம்ப்யூட்டர், தகவல் சேகரிப்பு வசதிகளில் நாம் இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்துக்கு, 957 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதல் வருமானம் தருகிற வல்லமை, இந்தியாவின் செ.நு. துறைக்கு இருக்கிறது. ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துகிற ஆற்றல் செ.நு.வுக்கு இருப்பதை உணர்ந்த நிதி ஆயோக், புதிய தொழில் நுட்பங்களின் மீது ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக தேசிய நிகழ்வு (National Program on AI) ஒன்றைத் தீட்டி இருக்கிறது. இதை நோக்கியே, 2018 ஜூன் 4 அன்று, ’தேசிய திட்டம்’ வெளியிடப்பட்டது.

இது விஷயத்தில், தேவையான அளவுக்கு பயிற்சி சார் 'validation' இல்லாமை; இது தொடர்பான சோதனைகளுக்கு பெருத்த அளவில் ஆதரவு இன்மை; வளர்ச்சி, பயிற்சி, பணிஅமர்த்தல் கட்டமைப்புக்கு ஆகும் அதீத செலவு ஆகியன நம் முன் உள்ள தடைகள் / சவால்கள்.

இந்தத் தடைகளை வென்றெடுக்க, செ.நு.வை மையமாகக் கொண்ட 'cloud' கட்டமைப்பு நிறுவப்படும். இதற்கு வழி கோலுகிறது - ‘ஐராவத்’ தளம். AIRAWAT (AI Research, Analytics and knoWledge Assimilation platform)

உலகின் மிகுந்த ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்புகளை, 'TOP500' என்று பட்டியல் இடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்தத் தர வரிசை, ‘லினியர்’ சமன்பாட்டின் அடர்த்தியான அமைப்பில் எத்தனை விரைவாக தீர்வு கண்டுபிடிக்கிறது என்று கணிக்கிற LINPACK முறை ஆகும். இதன்படி, உயர்நிலையில், யார்-யார், எவ்வளவு இருக்கிறார்கள்..? முதல் 500 நிறுவனங்களில், சீனா - 228; அமெரிக்கா - 117; ஜப்பான் - 29.

இதிலே சற்றே வேதனை தருகிற உண்மை - 18 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் 5/500 இருந்தன; ஆனால், இன்று இரண்டு மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம், உலகளவில் இத்துறையில் பல நாடுகளும் தொடர்ந்து காட்டுகிற ஆர்வம் / செய்கிற முதலீடுகள். இதன் காரணமாக, ‘நுழைவுத் தகுதி நிலை’ உயர்ந்து கொண்டு வருகிறது. ஜூன் 2018-ல் 716Tflop/s இருந்தது; நவம்பர் 2019-ல் அது, 1142 Tflop/s ஆக உயர்ந்து விட்டது!

தற்போது நம்மிடம் உள்ள செ.நு. கட்டமைப்பு வசதிகள், பொதுவான பிரயோகங்களுக்கு உகந்தவையாக இல்லை. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே அவை செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, Indian Institute of Tropical Meteorology நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர், பருவ நிலை குறித்த விவரங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. (‘அப்ரோச் பேப்பர்’ - நிதி ஆயோக்) அதற்கு அப்பால் அது ‘பயணிக்காது’.

செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படுகிற அதிநவீன கட்டமைப்புக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டு வருகிறோம். 70-க்கும் மேற்பட்ட, ‘சூப்பர் கம்ப்யூட்டிங் க்ரிட்’ உருவாக்க முயல்கிறோம்.

பல்வேறு அமைச்சரகங்களை ஒருங்கிணைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக் கட்டுமான அமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே. ‘டிஜிட்டல் பணம் செலுத்துதலில், நவீன அமைப்பு முறையை நாம் கொண்டுள்ளோம். ஆகஸ்ட் 2016-ல் இருந்து, 143 வங்கிகள் மூலம், 125 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் தற்போதுள்ள குழந்தைப் பருவ, செயற்கை நுண்ணறிவின் ‘ஈக்கோ சிஸ்டம்’ மேலும் வலுப்பெற, ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’ கட்டமைப்பு விரிவடைய வேண்டும். மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத் துறைகள் இணைந்து, ஒரு கால நிர்ணயம் வைத்துக் கொண்டு, இலக்கு நோக்கி முன்னேறுதல் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் தலைமை இடமாக இந்தியா திகழ்வதற்கான அத்தனை தகுதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலக நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, நமது அணுகுமுறை மாறியாக வேண்டும்.

‘செயற்கை நுண்ணறிவா..? அது எதற்கு இப்போது..?’ என்ற கேள்வி, மிகப் பெரிய முட்டுக்கட்டையாகும். ஒரே சமயத்தில், எல்லா துறைகளும் வளர்ச்சி பெறுவதுதான் சரியானதாகும். இதில் முற்போக்கு, பிற்போக்கு என்று ஏதும் இல்லை. இது, இருக்கும் ஒன்றை நசுக்கி விட்டுப் புதிதாய் ஒன்றை வளர்க்கும் முயற்சியும் இல்லை.

ஏற்கெனவே, காலம் காலமாக நாம் வலுவாக உள்ள பல்வேறு களங்களில், மேலும் வளம் பெற, இத்துறை பல்வேறு வழிகளில் துணை புரியும்.

செயற்கை நுண்ணறிவு செழித்து வளர, ‘இயற்கை நல்லறிவு’ இயல்பாக இருத்தல் வேண்டும். இன்றைய சூழலில் சாத்தியமா..?

https://www.hindutamil.in/news/opinion/columns/591901-artificial-intelligence-4.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தான் மனிதர்களை கட்டுப்படுத்தும் நிலை வருமோ? என்னவோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தான் மனிதர்களை கட்டுப்படுத்தும் நிலை வருமோ? என்னவோ!

லண்டன் வந்த புதிதில் 62 போன் நம்பர் நினைவில் வைத்து இருந்தேன் இப்ப என்னுடைய நம்பர் வீட்டு நம்பர் மட்டுமே நினைவில் உள்ளது ஒருமுறை போன் பற்றி தீர்ந்து  போக அவசரமாய்  போன் பண்ண முடியாமல் அந்தரித்த கொடுமை 

முன்பு வாகனமோட்டம் மேப் புத்தகம் பார்த்து தான் பல தெருக்கள் நினைவில்தான் இருக்கும்  இப்ப WAZE நேவிகேஷன் போனுக்குள்ளால்  இருந்து எங்களை கூட்டி செல்கிறது சில  நேரம்களில் லண்டனுக்கு வெளியில் சாட்டிலைட் சிக்னல் கிரகிப்பில் இருக்கும் கோளாறு பயணம்களை ஓரிரு மணி நேர தாமதத்தை கொண்டு வருகிறது அந்த தாமதத்தை நாம் உணரா வண்ணம் வெற்றிகரமாய் பயணத்தை முடித்தது போல் காட்டும் .

உங்கள் நண்பர்களை சொல்லு நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்வது போல் ஒரு ஜிமெயில் கணக்கும் உங்கள் மொபைல் போனும் காணும் ஐந்து வருடத்துக்கு முன் இதே திகதி இந்த நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்பதை சொல்லலாம் .

நீங்கள்  சொல்வது போல் செயற்கை நுண்ணறிவு கட்டுப்படும் நிலைவந்தால் மனிதர்கள் ஒருவித அடிமை நிலைக்கு போயிடுவார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.