Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன்

Featured Replies

20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன்

  • நிலாந்தன்

nilaanthan.jpgளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததோ அதே 19 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்கும் நோக்கத்தோடு அவர் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருகிறார்.

ஆனால் அந்த 20ஆவது திருத்தம் 19க்கு மட்டும் அல்ல அதைவிட ஆழமான பொருளில் அவருடைய தமையன்  மகிந்த ராஜபக்சவுக்கும் எதிரானது என்று ஒரு விளக்கம் இப்பொழுது கூறப்படுகிறது.

இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் இப்பொழுது நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக அபிப்பிராயங்கள் திரண்டு வருவதன் பின்னணியில் மஹிந்தவும் இருக்கிறார் என்று தென்னிலங்கையில் பரவலாக ஓர் ஊகம் நிலவுகிறது.

Gotabaya_Rajapaksa.png

அதிகரிக்கும் எதிர்ப்புக்கள்; பின்னணியில் மஹிந்த?

20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவிட்-19 இரண்டாவது அலையைக் காரணங்காட்டி எதிர்க்கட்சிகளின் வெகுஜனப் போராட்டங்களை கோட்டாபய கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் அதனையும் மீறி நீதிமன்றம் அவருடைய கனவுகளின் ஒரு பகுதியை முறியடிக்கும் விதத்தில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பின் பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிரான அபிப்பிராயங்கள் மேலும் திரட்சியுற்று வருகின்றன. குறிப்பாக அமரபுர நிகாய, ராமன்ய நிகாய போன்ற பீடங்கள் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அவர்கள் 20ஆவது திருத்தம் நாட்டு மக்களை பழங்குடி நிலைக்குக் கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் இலங்கைத் தீவுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது மேலும் ஒரு யாப்புத் திருத்தம் அல்ல ஒரு புதிய யாப்புத்தான் என்று மிகக் கூர்மையாகக் கூறப்படுள்ளது..

இவ்விரண்டு பீடங்களும் சிங்கள உயர் குழாத்தை அல்லது மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல. அவற்றின் எதிர்ப்பு சிங்களப் பொது சனத்தின் கூட்டு அபிப்ராயத்தை முழுமையாகத் திரட்டப் போதுமானவை அல்ல. சிங்கள பௌத்த உயர் குழாத்தையும் மேட்டுக் குடியையும் பிரதிநிதித்துவப்படுததும் மல்வத்த பீடமும் அஸ்கிரிய பீடமும்தான்  சிங்கள பொதுசன அபிப்பிராயத்தை பெருமளவுக்கு திரட்சிச்சியுறச் செய்யமுடியும். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன யாப்பை கவிழ்த்த பொழுது  இந்த இரண்டு பீடங்களும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. மல்வத்து பீடாதிபதி மைத்திரியை சந்திப்பதைத் தவிர்த்தார். இது சிங்கள பௌத்த உளவியலை பெருமளவுக்கு தீர்மானித்தது. பின் வந்த நீதிமன்ற தீர்ப்பிலும் இதன் தாக்கம் இருந்திருக்கும்.

Amarapura-Ramanna-Maha-Nikaya.png

அமரபுர, ராமன்ய மகாநாயக்க தேரர்கள்; கடும் எதிர்ப்பு

இம்முறை 20ஆவது திருத்தத்துக்கு எதிராக இவ்விரண்டு பீடங்களும்  இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் யுஎன்பி பிரமுகர் ஆகிய கருஜெயசூரிய ஊடாக அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டி வருவதாக ஓர் அவதானிப்பு உண்டு. இவை தவிர. இரண்டு பௌத்த பீடங்களின் எதிர்ப்பை அடுத்து கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இரண்டு பௌத்த பீடங்களும் வலியுறுத்திய அதே விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அதாவது இலங்கைத் தீவுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு புதிய யாப்பே என்று.

இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக அபிப்பிராயத் திரட்சி  ஏற்பட்டு வருகிறது. இந்த அபிப்பிராய திரட்சி தன்னியல்பாக ஏற்படவில்லை என்றும் இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவே இருப்பதாகவும் ஒரு ஊகம் கொழும்பில் பரவலாகக் காணப்படுகிறது.

ஆனால் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தரும் தகவல்களின்படி வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சிந்திப்பது போல ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் பூசல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. மாறாக அவர்கள் இது விடயத்தை தங்களுக்கிடையே சுமுகமாக தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோட்டபாய முன்வைத்த  20ஆவது திருத்தத்துக்குரிய சட்ட வரைபை மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எதிர்த்தார்கள். அதனால் அவர் அந்தத் திருத்தத்தை குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமித்தார். ஆனால் அந்த நாடாளுமன்றக் குழுவின்  பரிந்துரைகளை கவனத்தில் எடுக்காமல் கோட்டாபய முன்வைத்த அதே உத்தேச சட்ட வரைபே தொடர்ந்தும் அரச வர்த்தமானியில் காணப்பட்டது. அப்படியென்றால் மஹிந்த ராஜபக்ச நியமித்த நாடாளுமன்றக் குழுவை கோட்டாபய பொருட்படுத்தவில்லையா என்று ஒரு கேள்வி எழுந்தது. எனினும் இது விடயத்தில் இரண்டு சகோதரர்களும் பிரச்சினையைத் தங்களுக்கிடையே சுமூகமாக தீர்த்துக் கொண்டதாகவே தோன்றியது. இப்பொழுதும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான அபிப்பிராயத் திரட்சி ராஜபக்ச சகோதரர்களை ஒற்றுமைப்படுத்துமா?.

மஹிந்த ராஜபக்சவுக்கு இப்பொழுது 74 வயது. இன்னும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருமளவுக்கு அவருடைய உடல்நிலையும் வயதும் இடம் கொடுக்குமா என்ற கேள்விகள் உண்டு. எனவே அவரைப் பொறுத்தவரை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை விடவும் தன் மகன் நாமலை எப்படி அந்த பதவியை நோக்கி நகர்த்தலாம் என்றே அவர் சிந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு நாமலை எதிர்கால ஜனாதிபதியாகக் கட்டியெழுப்புவது என்றால் அதற்கு இப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவும் பசில், சமல் ராஜபக்சக்களின் ஆதரவும் தேவை. எனவே வம்ச ஆட்சியைத் தொடர்வதென்றால் சகோதரர்கள் தங்களுக்கிடையே சுதாகரித்துக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்கப்படுகிறது. தொகுத்துப் பார்த்தால் இதுவிடயத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களுக்கிடையே பிணக்குகள் இன்றி அல்லது பிணக்குகளை வெளிக்காட்டாது பிரச்சினையை  எப்படியாவது சுதாகரித்துக் கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.

supreme.court_-1.jpg

நீதிமன்றத் தீர்ப்பு; வெளிவர முன்னரே கசிந்தது எப்படி?

உச்சநீதிமன்ற தீர்ப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை எனினும் கசிந்திருக்கும் செய்திகளின்படி உத்தேச சட்ட வரைவில் காணப்படும் 4 சரத்துக்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது அதற்கும் அப்பால் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள்; ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு; ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்குரிய கால எல்லை; தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் ஆகிய நான்குமே அந்த ஷரத்துக்கள் ஆகும்.

ஒரு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு வலுவேறாக்கம் அவசியம். சட்டமன்றம் அதாவது நாடாளுமன்றம் ; நிறைவேற்று அதிகாரம் அதாவது ஜனாதிபதி ; நீதி பரிபாலனக் கட்டமைப்பு அதாவது நீதிமன்றங்கள் ஆகிய மூன்றும் தனித்தனியே சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் உத்தேச 20ஆவது திருத்த சட்ட வரைபானது  சட்டவாக்க மன்றத்தையும் நீதிபரிபாலன கட்டமைப்பையும் ஏனைய ஜனநாயக நிறுவனங்களையும் பெருமளவுக்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவைகள் ஆக்க முயற்சிக்கிறது.

எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வலு வேறாக்கப் பொறிமுறையை  ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்படுகிறது. எனினும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் ஏனைய எல்லா ஷரத்துக்களிலும் நீதிமன்றம் தலையீடு செய்யவில்லை. அவற்றில் கணிசமானவை ஏற்கனவே 18ஆவது திருத்தத்தின் கீழ் நடைமுறையில் இருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தின் முடிவு உத்தியோகபூர்வமாக வெளி விடப்பட்ட முன்னரே சமூக வலைதளங்களில் எப்படிக் கசிந்தது? இது எதன் துர்குறி?

எனவே திருத்தப்பட்ட சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொழுது அங்கே அதற்கு எதிர்ப்பு இருக்கும். ஆனால் யார் எதிர்ப்பைத் திரட்டுவது? யூஎன்பி  இரண்டாக உடைந்து கிடக்கிறது. முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்க முடியாதிருக்கின்றன. சிலவேளை ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் இறுக்கிப் பிடித்தால் அது முஸ்லிம் பிரதிநிதிகளை ஐக்கியப்படுத்தக்கூடும். எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு எதிர்தரப்பில் இருந்து பிரதிநிதிகளைக் கழட்டி எடுக்கும் வாய்ப்புக்களை அதிகப்படுத்தும் ஷரத்துக்களில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை. அதாவது கோட்டாபய தனது அமைச்சரவையை விரும்பியபடி பெருப்பிக்கலாம். எனவே அமைச்சுப் பதவி தருகிறோம் இணை அமைச்சுப் பதவி தருகிறோம் என்று கூறி எதிர்தரப்பில் இருந்து கழட்டக்கூடிய ஆட்களைக் கழட்ட முடியும். எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன.

இப்படிப் பார்த்தால் 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு உண்டா? நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒரு வெகுசன எதிர்ப்பலையைத் திரட்டக் கூடிய விதத்தில் எதிர்க்கட்சிகளோ அல்லது சிவில் சமூகங்களோ அல்லது மத அமைப்புகளோ பலமாக இல்லை. அப்படிப் பலமாக இருந்திருந்தால்  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருந்து அதன்பின் இரண்டு மகா சங்கங்கள் தமது எதிர்ப்பைக் காட்டி இருந்திருக்காது. ஆயர்களின் சம்மேளனமும் அப்படித்தான். மதத் தலைவர்களும் சிவில் சமூகங்களும் தமது எதிர்ப்பை நீதிமன்றத் தீர்ப்புக்கு முன் வலிமையாக வெளிக்காட்டி இருந்திருந்தால் அது சில சமயம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும்.

மைத்திரிபால சிறிசேனவின் யாப்புக் கவிழ்ப்பின் போது 2018இல் அதுதான் நடந்தது. ஆனால் அவ்வாறு எதிர்ப்பைப் பரவலான அளவில் காட்டுவதற்கு கோவிட்-19 மட்டும் தடையில்லை. எதிர்க்கட்சிகளும் சிவில் கட்டமைப்புகளும் அரசாங்கத்தை எதிர்க்கும் ஒன்றிணைக்கப்பட்ட பலத்தோடு இல்லை என்பதே உண்மை. ஏனெனில் அரசாங்கம் பெற்ற வெற்றி அத்தகையது. அந்தப் பிரமாண்டமான வெற்றிக்கு முன் மத நிறுவனங்களும் சிவில் சமூகங்களும் ஒடுங்கிபோய் விட்டனவா?

https://thinakkural.lk/article/80569

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் போராட்டங்களை நசுக்கும் திட்டமும் 20 இன் பின்னால் இருக்கிறது: விக்னேஸ்வரன்

cv-600.png
 45 Views

20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னால் இருப்பதாக உணர்வதாக அச்சம் வெளியிட்டார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றும் கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்துஇந்த சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் கூறியதாவது,

மத்தியில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப்பீடம் ஏறும்போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது, நாட்டு நலன்கள் பற்றிச் சிந்திக்காது தமது கட்சிகளின், அங்கத்தவர்களின், ஆதரவாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றிவருவது இந் நாட்டின் துர்திஷ்ட வரலாறாகத் தொடர்ந்து வந்துள்ளது. லீ குவான் யூ க்களாக பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கசார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்ததான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குலான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை.

அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசிப்பவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20வது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயக பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்து செயற்பட்டுவரும் இந்தவேளையில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டி புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நான் இதனை பார்க்கின்றேன்.

தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இம்ம்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி செயலணி (Task force) என்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் தமிழ்ப்பேசும் மக்கள் தமது உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிக்கொண்டுவராது அவர்களை கட்டுப்படுத்த வடக்கு கிழக்கில் குவித்துள்ளார்கள்.

வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாராம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றனர். அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்கு புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. மகாவலியின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்படுகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்த மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி வரவில்லை. எமது எந்திரிகளின் கூற்றுப்படி அது என்றுமே வராது. இது தான் வடக்கு கிழக்கின் இன்றைய நிலைமை.

கடந்த 20 வருடங்களாக இனப்பிரச்சனையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக மக்களிடத்தில் ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் அதனை நிறைவேற்றவில்லை. அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் கூட அதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.

இதனால்த்தான் ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு கள்வனையோ அல்லது ஒரு குண்டுதாரியையோ பிடிக்கவேண்டுமாக இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால்தான் பிடிக்க முடியும் என்ற இந்த சிந்தனை முட்டாள் தனமானதாக அல்லவா இருக்கிறது. உண்மையில் ஏப்ரல் சம்பவம் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு படை அதிகாரிகளின் அசட்டையீனமும் பாதுகாப்பு படைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமையுமே பிரதான காரணங்காளாகும்.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்றில் அனர்த்தம் நடைபெற்றிராது.

உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலபப்டுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

நீதித்த துறை, பொலிஸ் துறை போன்ற நிறுவனங்கள் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே நாட்டை பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும்.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.

இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
ஒரு உதாரணத்தை இனித் தருகின்றேன்.

குழுநிலை நேர திருத்தங்களின் போது நடைபெறப்போகும் 20வது திருத்தச்சட்டத் திருத்தங்கள் கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவிருக்கின்றன. அரசாங்கம் அல்லாது அரச கூட்டுத்தாபனம் நூற்றிற்கு ஐம்பது சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும் கொம்பனிகள் கணக்காய்வுக்கு கணக்காளர் நாயகத்தால் உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் வெளியேற்றப்படவிருக்கின்றன.

அப்படியானால் ஜனாதிபதியின் செயலகமும், பிரதம மந்திரியின் செயலாளரும் முன்னர் கணக்காளர் நாயகத்தின் ஆய்வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து பின்னர் இருவரையும் குழுநிலை நேர திருத்தப்படி திரும்பவும் ஆய்வுக்கு உட்படுத்த விளைந்த காரணம் யாது? முக்கியமான கேள்வி என்னவென்றால் அரசாங்கத்தால் உரிமை கொண்டாடப்படும் கம்பனிகள் இதுவரை காலம் நடைபெற்ற கணக்காளர் ஆய்வில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளமையின் காரணம் யாது?

இதன் முக்கியத்துவம் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்துறை தலைமையதிபதி அவர்களினால் இயற்றப்பட்ட அவரின் கருத்துப் பரிமாற்றத்தைக் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார் – அரசியல் யாப்பின் உறுப்பிரை 154ல் ஏதாவது நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறாவிட்டால் கணக்காளர் நாயகத்தின் நியாயாதிக்கம் அதன் பொருட்டு நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. கணக்காய்வுக்கு உள்ளடக்கப்படவேண்டிய அலகுகள் அனைத்தும் 2018ம் ஆண்டின் 19ம் இலக்கச் சட்டமான தேசிய கணக்காய்வுக் கூட்டத்தின் பிரிவு 55ன் கீழ் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்ட திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்.

https://www.ilakku.org/தமிழ்-மக்களின்-போராட்டங்/

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20 இன் பின்னால் இருக்கிறது: விக்னேஸ்வரன்

cv.w.jpg20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னால் இருப்பதாக உணர்வதாக அச்சம் வெளியிட்டார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றும் கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்துஇந்த சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் கூறியதாவது,

மத்தியில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப்பீடம் ஏறும்போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது, நாட்டு நலன்கள் பற்றிச் சிந்திக்காது தமது கட்சிகளின், அங்கத்தவர்களின், ஆதரவாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றிவருவது இந் நாட்டின் துர்திஷ்ட வரலாறாகத் தொடர்ந்து வந்துள்ளது. லீ குவான் யூ க்களாக பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கசார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்ததான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குலான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசிப்பவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20வது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயக பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்து செயற்பட்டுவரும் இந்தவேளையில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டி புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நான் இதனை பார்க்கின்றேன். தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இம்ம்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி செயலணி (Task force) என்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் தமிழ்ப்பேசும் மக்கள் தமது உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிக்கொண்டுவராது அவர்களை கட்டுப்படுத்த வடக்கு கிழக்கில் குவித்துள்ளார்கள். வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாராம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றனர். அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்கு புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. மகாவலியின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்படுகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்த மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி வரவில்லை. எமது எந்திரிகளின் கூற்றுப்படி அது என்றுமே வராது. இது தான் வடக்கு கிழக்கின் இன்றைய நிலைமை.

கடந்த 20 வருடங்களாக இனப்பிரச்சனையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக மக்களிடத்தில் ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் அதனை நிறைவேற்றவில்லை. அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் கூட அதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.

இதனால்த்தான் ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு கள்வனையோ அல்லது ஒரு குண்டுதாரியையோ பிடிக்கவேண்டுமாக இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால்தான் பிடிக்க முடியும் என்ற இந்த சிந்தனை முட்டாள் தனமானதாக அல்லவா இருக்கிறது. உண்மையில் ஏப்ரல் சம்பவம் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு படை அதிகாரிகளின் அசட்டையீனமும் பாதுகாப்பு படைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமையுமே பிரதான காரணங்காளாகும்.
நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்றில் அனர்த்தம் நடைபெற்றிராது.

உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலபப்டுத்த நாம் முயற்சிக்க வேண்டும். நீதித்த துறை, பொலிஸ் துறை போன்ற நிறுவனங்கள் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே நாட்டை பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும்.
நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.
இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
ஒரு உதாரணத்தை இனித் தருகின்றேன்.

குழுநிலை நேர திருத்தங்களின் போது நடைபெறப்போகும் 20வது திருத்தச்சட்டத் திருத்தங்கள் கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவிருக்கின்றன. அரசாங்கம் அல்லாது அரச கூட்டுத்தாபனம் நூற்றிற்கு ஐம்பது சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும் கொம்பனிகள் கணக்காய்வுக்கு கணக்காளர் நாயகத்தால் உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் வெளியேற்றப்படவிருக்கின்றன.

அப்படியானால் ஜனாதிபதியின் செயலகமும், பிரதம மந்திரியின் செயலாளரும் முன்னர் கணக்காளர் நாயகத்தின் ஆய்வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து பின்னர் இருவரையும் குழுநிலை நேர திருத்தப்படி திரும்பவும் ஆய்வுக்கு உட்படுத்த விளைந்த காரணம் யாது? முக்கியமான கேள்வி என்னவென்றால் அரசாங்கத்தால் உரிமை கொண்டாடப்படும் கம்பனிகள் இதுவரை காலம் நடைபெற்ற கணக்காளர் ஆய்வில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளமையின் காரணம் யாது?

இதன் முக்கியத்துவம் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்துறை தலைமையதிபதி அவர்களினால் இயற்றப்பட்ட அவரின் கருத்துப் பரிமாற்றத்தைக் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார் – அரசியல் யாப்பின் உறுப்பிரை 154ல் ஏதாவது நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறாவிட்டால் கணக்காளர் நாயகத்தின் நியாயாதிக்கம் அதன் பொருட்டு நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. கணக்காய்வுக்கு உள்ளடக்கப்படவேண்டிய அலகுகள் அனைத்தும் 2018ம் ஆண்டின் 19ம் இலக்கச் சட்டமான தேசிய கணக்காய்வுக் கூட்டத்தின் பிரிவு 55ன் கீழ் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்ட திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்.

https://thinakkural.lk/article/81913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.