Jump to content

வேலை


Recommended Posts

பதியப்பட்டது

ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை

சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். ஆன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.

மூலம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பாலபாடம்

  • 1 month later...
Posted

"சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான்"..

அப்படி என்றால் என்ன? சம்பத்து என்ன அது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பத்து என்றால் நிறையச் சொத்துப் பத்து உள்ளவன்.

சிவிகையாட்கள் நெருஞ்சிமுள்ளால் குத்துப்பட்டு வருந்தி முறையிட்டபோதும், அவர்களை நிறுத்தாமல் பல்லக்கைச் சுமக்கச் செய்த வர்த்தகனின் கருணையோ கருணை. இதன்மூலம் நாங்களும் படிக்க நிறைய உள்ளது!

Posted

ஐயா நாவலரே முதலில் இளையோருக்கு புரியும் எளிய தமிழில் எழுத பழகுங்கள். உங்கள் மற்ற கட்டுரைகளின் தமிழையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

அது சரி இந்த கதை மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து தான் என்ன?

எந்த தொழிலுக்கு ஒருவன் கூலி பெறுகிறானோ அதை தான் எவனும் செய்வான். கூலி தருகிறான் என்ற ஒரே காரணத்திற்காக கூலிதருவோன் ஏவும் எந்த தொழிலையும் செய்ய வேண்டும் என்று எந்த தர்மத்தில் இருக்கிறது? சற்று விளக்குவீர்களா?

தனக்கு சேர வேண்டிய கூலியான மாம்பழத்தை தர மறுத்ததற்காக தாய் தந்தையரை எதிர்த்து முருகன் எழுப்பிய உரிமைக்குரலை தப்பென்று நீங்கள் அன்றாடம் போற்றும் ஈசனும் சொன்னதாக நான் அறியவில்லையே.

சனாதன தர்மத்திற்கு சம்பந்தமே இல்லாத கருத்துக்களை சைவத்தின் கருத்துக்களாக கூறுவதும், சைவம் சொல்லாத சாதி பாகுபாடுகளை கூறி சைவத்தின் பேரால் செய்யப்படும் பித்தலாட்டங்களும் சைவத்திற்கு செய்யும் சேவைகள் அல்ல. சைவத்திற்கு செய்யப்படும் அநியாயம்

Posted

"சீவனார் வேறு சிவனார் வேறிலை

சீவனார் சிவனாரை அறிவாராகில்

சீவனாரே சிவனார் ஆவார்".

இதில் எங்கே ஐயா உள்ளது

கூலிதருவோன், கூலிபெறுவோன்

உயர்ந்த சீவன், தாழ்ந்த சீவன் என்கிற பேதங்கள்?

Posted

கதை சொல்லும் நிதி என்ன எண்டால் முதலாளியிடம் தொழிலாளி அடிமையாக நடந்து கொள்ள வேண்டும்.....

அதுக்கு சிவிகை தூக்குவோரையும் சொல்ல வேணும்... அந்த முதலாளியை விட்டா வேற வேலையா கிடைக்காது...??

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.