Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள்

Featured Replies

You said you have attached couple of photos. I couldn't see them in my web browser. I think it is a problem in the web browser. Never mind. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் எப்படி ஒவ்வொரு வடிவமான பொருளிற்கேற்ப வடிவம் எடுக்கிறதோ அதே போல தான் இந்து மதமும் (எந்த மதம் என்றாலும்)...இந்து மதம் தண்ணீர் போல....மனிதர்கள் மனம் பாத்திரம் போல.....நல்ல மனம் இருந்தால் நல்ல வடிவமாகவே தண்ணீரை அந்தப் பாத்திரம் பிரதி பலிக்கும்....தப்பான மனம் இருந்தால் எல்லாத்தையும் தப்பு தப்பாகவே பார்க்க வைக்கும்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். ஆனாலும்

தண்ணீர் தெளிவாக இருந்தால்தான் அப்படியே பிரதிபலிக்க வாய்ப்புண்டு

மாசுப்டட தண்ணீர் தனது மாசையும் பிரதிபலிக்கத்தான் எத்தணிக்கும்.

அப்போது நுணுக்குகாட்டி எனும் அறிவியல் கண்களால் பார்க்கும் போது பல கிருமிகள் தெரியும்மல்லவா????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிலைகளோ சித்திரங்களோ வைக்கப்பட்ட காலத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும். அக் கால கட்டத்தில் மக்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் இல்லற வாழ்க்கையை வெறுப்பவர்கள் அதிகமாயினர். அதனால் அவர்களிடம் இனக் கவர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு இப்படி வைத்தனர். இன்றுபோல் அன்று திரையரங்குகளோ பத்திரிகைகளோ இருந்திருந்தால் அவர்கள் இப்படி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அன்று பெரும்பாலான மக்கள் கூடும் ஒரே இடம் கோவிலாகத்தான் இருந்தது. அத்துடன் அது அன்றைய தேவையாகவுமிருந்தது.

இன்று 22ம் நூற்றான்டின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தெருவெங்கும் ஆபாசச் சுவரெட்டிகள் வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கின்றன. வீட்டுக்குள் டி.வி யைத் திறந்தால் ஒரே ஆபாசம். திரைப் படங்களோ குடும்பமாய் சேர்ந்திருந்து பார்க்க முடியாதவை. ஏன் கணணியிலேயே அப்படிப் படங்கள் தானாகவே வந்து போகின்றன. இந்நிலையிலும்கூட யாழ்கள விதிமுறைகளைப் பாருங்கள். ஆபாசமாகப் பேசக்கூடாது, படங்கள் போடக்கூடாது போன்று நிறைய வைத்திருக்கிறார்கலென்றால், அன்று கட்டுக்குடும்பியுடனும், காதில் கடுக்கனுடனும் அதீத கண்டிப்புடனும் இருந்த நம் முன்னோர் இப்படியான ஒன்றைச் செய்வதற்கு முன் எவ்வளவு தூரம் மன்டையைப் போட்டு உடைத்திருப்பார்கள் என்பதைக்கூட நாம் சிந்திக்காமல் எழுதுவது எமது அறியாமையைத்தான் காட்டும்.

இப்போதும் பல அரசுகள் தம்மின மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக அதிக பிள்ளைகள் பெறும் குடும்பத்திற்கு பலவிதமான சலுகைகளை அறிவிக்கிறார்களே! எனின் அவர்கள் ஆபாசத்துக்குத் துனை போகிறார்களா?

இவையெல்லாம் அந்தக் கம்பனிகள் தங்கள் வியாபாரத்தைப் கூட்டுவதற்காக தெரிந்தே செய்யும் தந்திரங்கள். முன்பு கூட ஒருமுறை சுவாமி படங்களை டாய்லெட் தட்டுகளில் பதித்திருந்தனர். இப் பிரச்சனைக்குத் தீர்வு வரும்முன் அவர்கள் நிறைய விளம்பரம் பெற்று விடுவார்கள்.

அந்ததந்த காலத்தில் அவனவன் பிழைப்பதற்கு எதை எதையோ படைக்கிறான் என்பதுதானே ஒரு சாரரின் வாதமாக இங்கே இருக்கிறது. அதையே முழுமையாக நம்பி முட்டாள்கள் ஈவதால் என்ன பயன் என்பதே அவர்களின் கருத்தாகவும் படுகிறது.

இந்து சமயத்தில் ஆபாசம் பிழையென கூறுவோர் குறைவு....... இந்து சமயத்தில் ஆபாசமில்லை அது பார்ப்பவர் கண்ணளுக்குத்தான் அப்படி தெரிகிறது என்று தம்பட்டம் இடிப்பவர்களே அதிகம். அவனவன் பிழைப்பிற்காக ஒன்றை படைத்துக்கொண்டிருக்கிறான் இந்தியாவில் தாம் உயர்ந்த மனிதர்கள் என்று தனக்கு தானே பட்டம் சூட்டியவன் பிள்ளையாரை கடவுளாக படைத் தனது பிழைப்பை பார்த்தான். அமெரிக்காவில் ஒருவன் சற்று வித்தியாசமான கோணத்தில் பிழைப்பை பார்க்கிறான் என்பதே எனது கருத்து!

சுகன், மற்றும் ஈழத்திருமுகன் ஆகியோரின் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இன்றைய கீழைத்தேய உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும், ஏழ்மைக்கும், பொருளாதார பின்னடைவுக்கும் காரணமாக ஏதோ ஒருவகையில் மதம் இருக்கிறது. புதிய தலைமுறை அதன் பிடியிலிருந்து விரைந்து விடுபடுவதே மீட்சியை தரும்!

மதம் என்பது ஒருவரது பலவீனம், எப்படி எமது பாலியல் செயற்பாட்டை நாம் வெளியே பிரசித்தம் செய்வதில்லையோ அப்படியே அதனையும் மறைவாக வைத்துக்கொள்வதே நன்று. அதையும் தாண்டி மற்றவரும் தன்னை போல செய்யவேண்டும் அல்லது தனது நம்பிக்கையை மதிக்க வேண்டும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது?

இந்தப் படங்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அறுகம் புல்லுக்கு அறுபதுக்கு மேற்பட்ட வியாதிகளை தீர்க்கும் குணம் உண்டு. அறுகம் புல்லின் எல்லா பகுதியும் மருத்துவத்துக்கு பயன் படுத்தப்படும் ஒன்று. அது போல் செவ்வரத்தம் பூவுக்கும் நோய் தீர்க்கும் குணமுண்டு.

அறுகு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்யும் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு அதன் பெறுமதி பின்தள்ளப்பட்டுவிட்டது. தற்போது பிளாஸ்டிக் அறுகம் புற்களும் பாவனைக்கு வருகின்றது மிக்க வேதனையான விடயம்.

Edited by sukan

ம்..

நண்பர்களே !!

சமுதாய மாற்றம் தனியொரு மனிதனால் மட்டும் நடந்து முடிவதல்ல. தனிமனித முயற்சி ஒரு உந்துசக்தியாக இருக்கமுடியும். எம்மாலானதை தக்கதருணத்தில் செய்வதே சாலச்சிறந்தது. முதலில் சாதியத்தின் கோரப்பற்களின் பிடியினின்றும் காயம்பட்ட மனிதமனங்களை பண்பாகவும் இதமாகவும் மீட்கவேண்டியது கல்வி கற்ற நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடன். இதை நான் சில ஆண்டுகளுக்குமுன்னரே தொடங்கிவிட்டடேன். மனிதர்களில் உடலியல்ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை (All human beings are physically equivalent). உளவுரண் மட்டுமே வேறுபடுகின்றது. தன்னம்பிக்கை வளரும்போது மதம் ஒழிந்துவிடும். இந்த தன்னம்பிக்கையை வளரவிடாது மதமும் அதன் சடங்குகளும் எம்மை கட்டிவைத்துள்ளன என்பதே உண்மை.

மற்றயது பழந்தமிழர் இனம் இயற்கையோடு இணைந்து வாழப்பழகியது (Natural life !! Truely I don't believe in religion but I do believe in nature - Physics. In this scientific world we all make attempt to understand and learn the hidden laws of nature. There is nothing other than this in our studies). எமது பலமும் பலவீனமும் அதுதான். மதத்தின் பெயரால் ஆழப்புதைக்கப்பட்ட எமது வாழ்க்கைத்திறன் வெளிக்கொணரப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.