Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கிய கூலிப்படைகளுக்கு பிரிட்டன் ஆதரவு -முக்கிய ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பின்வாங்குகின்றது- கார்டியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கிய கூலிப்படைகளுக்கு பிரிட்டன் ஆதரவு -முக்கிய ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பின்வாங்குகின்றது- கார்டியன்

இலங்கை இராணுவத்தினரிற்கு ஆதரவாக 1980களில் செயற்பட்ட கூலிப்படையினருக்கு பிரிட்டன் இராஜதந்திர உதவகளை வழங்கியமை குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைசசு மறுத்து வருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

kini-miini-300x169.jpg
கூலிப்படையினர் யுத்த குற்றங்கள் உட்பட பல வகை குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்; வெளிவிவகார அமைச்சு அவர்களிற்கு அவசியமான ஆவணங்களை வழங்க மறுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.
இலஙகையில் கினிமினி கூலிப்படையினரின் நடவடிக்கை குறித்த விபரங்களை -வெளியிடுமாறு புலனாய்வு செய்தியாளர் பில் மில்லர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளார்.

kini-mini-4-300x255.jpg
இலங்கை இராணுவத்தினரிற்கு கினிமினி கூலிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக, பிரிட்டன் அவர்களுக்கு வழங்கிய இராஜதந்திர உதவிகள் குறித்த விபரங்களையே மில்லர் கோரியுள்ளார்.
கினிமினி யுத்தகுற்றங்களை இழைத்ததா என்ற அடிப்படையில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தற்போது முழுமையான விசாரணைகளாக மாறியுள்ளன.


இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் ஈடுபாடுகள் குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளதுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ள மில்லர் தான் தகவல்களை அறிவதற்கும் கோப்புகளை பெறுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் போது பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

kinimini.jpg
கினிமினியின் நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தினை சென்றடைவதை ஏன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு விரும்பவில்லை என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர ஆவணங்களை 20 வருடங்களுக்கு பின்னர் பகிரங்கப்படுத்தவேண்டும் என்பதே அரசாங்க விதிமுறை என தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட கோப்புகள் இலங்கை படையினருக்கு கினிமினி பயிற்சி வழங்குவதற்கு பிரிட்டன் வழங்கிய உதவிகள் குறித்தவை என கார்டியன் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/89632

  • கருத்துக்கள உறவுகள்

கினிமினி’ கூலிப்படை இலங்கையில் போர்க் குற்றம் புரிந்ததா? ஆவணங்களை வழங்க மறுக்கும் பிரிட்டன்

 
kini-miini.jpg
 2 Views

இலங்கை இராணுவத்தினரிற்கு ஆதரவாக 1980களில் செயற்பட்ட கூலிப்படையினருக்கு பிரிட்டன் இராஜதந்திர உதவிகளை வழங்கியமை குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு மறுத்து வருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கூலிப்படையினர் யுத்த குற்றங்கள் உட்பட பல வகை குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் வெளிவிவகார அமைச்சு அவர்களிற்கு அவசியமான ஆவணங்களை வழங்க மறுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.

இலங்கைகையில் கினிமினி கூலிப்படையினரின் நடவடிக்கை குறித்த விபரங்களை -வெளியிடுமாறு புலனாய்வு செய்தியாளர் பில் மில்லர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினரிற்கு கினிமினி கூலிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக, பிரிட்டன் அவர்களுக்கு வழங்கிய இராஜதந்திர உதவிகள் குறித்த விபரங்களையே மில்லர் கோரியுள்ளார்.

கினிமினி யுத்தகுற்றங்களை இழைத்ததா என்ற அடிப்படையில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தற்போது முழுமையான விசாரணைகளாக மாறியுள்ளன.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் ஈடுபாடுகள் குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளதுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ள மில்லர் தான் தகவல்களை அறிவதற்கும் கோப்புகளை பெறுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் போது பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கினிமினியின் நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தினை சென்றடைவதை ஏன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு விரும்பவில்லை என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர ஆவணங்களை 20 வருடங்களுக்கு பின்னர் பகிரங்கப்படுத்தவேண்டும் என்பதே அரசாங்க விதிமுறை என தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட கோப்புகள் இலங்கை படையினருக்கு கினிமினி பயிற்சி வழங்குவதற்கு பிரிட்டன் வழங்கிய உதவிகள் குறித்தவை என கார்டியன் தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/கினிமினி-கூலிப்படை-இலங்/

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் இந்த ஆவணங்கள் எந்த கரணம் கொண்டும் அரசால் அழிக்கப்படக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற injunction ஐ வாங்குவது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜேபிவிக்கு எதிரான நடவடிக்கையிலும் பிரிட்டனின் கூலிப்படையினர் ஈடுபட்டனர்- பழைய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்கள்

November 19, 2020

பில் மில்லர்

தினக்குரல் இணையம்

kini-miini-300x169.jpg

1980களின் இறுதியில் இலங்கை இராணுவம் சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளர்களிற்கு எதிரான இரத்தக்களறி மிகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை பிரிட்டனை சேர்ந்த கினிமினி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து செயற்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்துவரும் பில் மில்லர் இதனை தெரிவித்துள்ளார்.

phil-miller.jpg

 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரிட்டனின் கூலிப்படையினர் முன்னர் தெரியவந்ததை விட மேலும் சில வருடங்கள் இலங்கையில் செயற்பட்டுள்ளனர்.
198-89களில் நாட்டின் இடதுசாரி செயற்பாட்டாளர்களிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையின் போது இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் கினிமினியின் புலானய்வு பிரிவு அதிகாரியொருவர்பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய இடதுசாரி அமைப்பான ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கையின் போது பெருமளவு மாணவர்கள் உட்பட 60000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

rohana-wije-300x169.jpg

 

ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கை 1988 இல் ஆரம்பித்தவேளை கினிமினி இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட தனது உறுப்பினர்களை பெருமளவிற்கு வெளியேற்றிவிட்டது, எனினும் கினிமினியை சேர்ந்த ஒருவராவது 1989வரை இலங்கையின் பாதுகாப்பு படைப்பிரிவுடன் இணைந்து முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
1984 முதல் 87 வரை இலங்கையின் சிறுபான்மை தமிழர்களிற்கு சுதந்திரம் கிடைப்பதை தடுப்பதற்காக கினிமினியினர் இலங்கை படையினருடன் இணைந்து யுத்த குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து பிரிட்டிஸ் பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனவரியில் வெளியான எனது நூலில் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

kinimini.jpg

 

எனினும் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் கினிமினியினர் இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உத்தியோகபூர்வமாக நிறுத்திக்கொண்டனரா அல்லது சிங்கள எழுச்சியை அடக்குவதற்காக இலங்கையிலேயே நிலைகொண்டிருந்தனரா என்பது தெளிவாகவில்லை.
கடந்த வாரம் வெளிவிவகார அலுவலகம் கினிமினி குறித்த பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
பீரிடம் ஹவுசின் வேண்டுகோளிற்கு இணங்க முன்னர் வெளியாகாத ஆவணங்களை வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ளது.
இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் தூதுரகத்தின் பழைய பாதுகாப்பு பிரிவில் இந்த கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

declassified-KMSlatest-inset-2-768x163-1

 

1971 முதல் 1995 வரை இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர்களின் ஆவணங்களே இவை.
ஏன் இந்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவில்லை என முன்னாள் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்கள் கினிமினி எதிர்பார்க்கப்பட்டதை விட இலங்கையில் நீண்ட காலம் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன் இதற்கு முன்னர் தெரியவந்திராத கூலிப்படை வீரரின் பெயரையும் வெளியிட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் கினிமினி பிரிட்டனின் முன்னாள் இராணுவ புலனாய்வு கப்டன் ரொபேர்ட் மக்கிரின்டலை இலங்கையில் தொடர்ந்தும் பணியாற்ற செய்தது,

declassified-KMSlatest-inset-3-260x300.j British High Commissioner David Gladstone forecast in December 1987 that the KMS presence in Sri Lanka was “winding down” (Photo: FCO 37/4706)

அவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமையகத்தில் பணிபுரிந்தார் என வெளியாகியுள்ள ஆவணங்கள் தெரிவித்துள்ளன.கினிமினிக்கும் இலங்கையில் பணியாற்றிய அதன் கூலிப்படையினருக்குமான ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் இவர் இலங்கையில் பணியாற்றியுள்ளார்.
பிரிட்டனின் முன்னாள் இராணுவீரர்; ஜோன்வின்டர்போன் 1989வரை இரத்மலானை விமானப்பயிற்சி கல்லூரியில் பணியாற்றியுள்ளார்.

இவர் யார் என்பது தெரியாத போதிலும் ஆவணங்கள் இவர் முன்னாள் கினிமினி உறுப்பினர் என தெரிவித்துள்ளன.
கினிமினியின் சில உறுப்பினர்கள் 1989 முதல் இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் ஜேவிபிக்கு எதிராக அடக்குமுறையிலும் ஈடுபட்டிருக்கலாம்.
இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவராக பணியாற்றிய டேவிட்கிளட்ஸ்டோன் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவ்வேளை கொல்லப்பட்டனர் என என்னிடம் தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/90597

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.