Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன வேறுபாட்டால் பிளவுபடுத்தி ட்ரம்போ,மோடியோ வெல்ல முடிந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன வேறுபாட்டால் பிளவுபடுத்தி ட்ரம்போ,மோடியோ வெல்ல முடிந்ததா?

spacer.png

டி. எஸ்.எஸ்.மணி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இப்போது அறிவிக்கிறார்:- "அதிபருக்கான இந்தத் தேர்தலில், இருதரப்பும் ஏழு கோடி வாக்குகள் பெற்றுள்ளார்கள். நாடு ஆழமாக பிளவுபட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இன வேற்றுமையைக் கையிலெடுத்து, டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்தார். அதனால்தான் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில். தோல்வி அடைந்த பிறகும் அவர் அதையே செய்கிறார்."

டிரம்ப்பின் திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தல் உலகுக்கு சில, பல படிப்பினைகளை கற்றுத் தருகிறது. அதில் முக்கியமானது இன வேறுபாட்டை தூண்டுவது வெற்றி பெறுமா என்ற கேள்வி!. 2020 ஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஓராண்டுக்கு முன்பே, விஷமத்தனமான பல காரியங்களை செய்து வந்ததாக ஊடகங்கள் கூறின. தான் வெற்றி பெறுவதற்கு தடையாக, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் தான் தனக்கு எதிராக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்த முறை போட்டியிடுவார் என டிரம்ப் முன்கூட்டியே கணித்தார். ஜோ பைடனை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய, அசிங்கப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். அப்படியே பைடன் போட்டியிட்டாலும், அவரது மரியாதையை முன்கூட்டியே உடைத்துவிட டிரம்ப் நினைத்தார். ஜோ பைடனின் மகன் .உக்ரைன் நாட்டில் வணிகம் செய்வதை கண்டு பிடித்தார். அவர் எப்படி வணிக குழுவில் சேர்ந்தார் எனவும், அதில் பணம் கையாடல் செய்தார் எனவும், நடவடிக்கை எடுக்க புலனாய்வு செய்யம்படி உக்ரைன் நாட்டு அரசை மிரட்டினார். அப்படி நிர்ப்பந்தம் கொடுக்க உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்க அரசு உறுதியளித்த நிதியை நிறுத்தினார். இப்படி பல முறையிலும் எதிர் வேட்பாளர்களை அசிங்கப்படுத்த தனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தினார்.

spacer.png

ஆப்பிரிக்க அமெரிக்க பின்னணியும், இந்திய பின்னணியும் கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக போட்டி போடுவார் என்று தெரிந்ததும் , கமலாவினுடைய மூதாதையர் பற்றிய வரலாற்றையே மாற்றி பொதுவெளியில் குற்றம் சாட்டினார். இப்படி பலபல தவறான வழிகளை எடுத்தவர், தேர்தலுக்கு முன்பே அமெரிக்காவின் " வெள்ளை இன சமூகம் மத்தியில், "கருப்பு இன விரோத மனப்பான்மையை ஊதி விட்டார். அதுவே " வெள்ளை-கருப்பு" என்ற இன வேறுபாட்டை கிளப்பியது. அதற்குப் பிறகு, ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, இறங்கி , கறுப்பர் வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு" தள்ளப்பட்டார். அதனால், தேர்தல் நேரத்தில், "கறுப்பர்-வெள்ளையர் என்ற இன வேறுபாடு " தோன்றியது. அதுவே வன்முறையாக வந்துவிடுமோ என் அமெரிக்க மக்கள் பயந்தனர்.

இன வேறுபாட்டை உருவாக்க மாட்டேன்-பைடன்

இப்பொது வெற்றி பெற்ற பைடன், தெளிவாக ஒரு அறிவிப்பை செய்துள்ளார். "நிற அடிப்படையில் வேறுபாடு பார்க்க விட மாட்டேன்" என்பதே அந்த அறிவிப்பு. அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவேன் என்றும் ஜோ பைடன் கூறிவிட்டார். ஆகவே வரும் காலங்களில் அதற்கான திட்டமிடலை செய்வார் என எதிர்பார்க்கலாம். அதுவே " இன வேறுபாட்டை உருவாக்கி நாட்டை கைப்பற்றவோ, நாட்டை ஆளாவோ விடமாட்டோம் என்று பொதுமக்கள் காட்டும் உறுதி அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இன வேறுபாடுகளால், நாட்டு மக்களை பிளவு படுத்துவது அந்தக் காலம். இப்போது மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள் என்பது இந்தக் காலம்.

மத பிளவும் தோல்வியும்

spacer.png

இதே போன்ற ஒரு நிலை பற்றி, இந்தியாவிலும் பேசப்பட்டது. பாரதீய ஜனதா கட்சி, மதத்தை அடிப்படையாக வைத்துதான் அரசியல் செய்கிறது என்றும், இந்து-முஸ்லீம் கலவரங்களை தூண்டி விடுகிறது என்றும் கிறுத்துவ எதிர்ப்பு வன்முறைகளைக் கூட செய்கிறது என்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உண்டு. பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவாக முஸ்லீம், கிறுத்துவ வாக்குகள் அதனாலேயே சென்று கொண்டு இருப்பது கண்கூடு. 2014 ல் ஆட்சிக்கு வந்த பிறகு, அத்தகைய குற்றச்சாட்டிலிருந்து விலகி நிற்க பா.ஜ.க. கட்சியும் பல முயற்சிகளை செய்து வருகிறது.ஆட்சியில் அமர்ந்திருக்கும் போது "சமயச் சார்பற்று" ஆட்சி புரிய வேண்டிய தேவையும் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தான் தாங்கள் ஆட்சி புரிகிறோம் என்று அதை பிரதமர் மோடியும் அவ்வப்போது கூறி வருகிறார். ,ஆனாலும் சமீபத்தில் அல்லது சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட " குடியுரிமை திருத்தச் சட்டம்" பெரும் பிரச்சனையைக் கிளப்பியது. அதில், முஸ்லீம் மக்களை மட்டும் விட்டு விட்டு, " வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வருகின்ற இந்து, கிருத்துவ, சீக்கிய, பார்சி மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கலாம் என்ற கூற்று பெரும் பிரச்சனையைக் கிளப்பியது என்பது நமக்கு தெரியும்.

அதுவே , இந்தியாவை, "முஸ்லிம்களுக்கும், இந்து உட்பட மற்றவர்களுக்கும்" இடையே ஒரு பிளவை ஏற்படுத்தத்தான் அத்தகைய வரிகள் சேர்க்கப்பட்டன என்ற குற்றச்சாட்டாக, நாடெங்கும் பரவியது. இதுவும் " மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி" என்றே உலக அரங்கிலும் பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் எடுத்த முயற்சியாக " இன அடிப்படையில் நாட்டைப் பிளவு படுத்தல் " என்று கூறி எப்படி ஜோ பைடன் எதிர்கிறாரோ, அதே போன்ற ஒன்றாகத்தான் இந்தியாவின் உள்நாட்டு விஷயத்தையும் ஜோ பைடன் போன்றவர்கள் பார்த்தார்கள் அதுவே அவரது, " சி.ஏ.ஏ. எதிர்ப்பு" என்பதாக அறியப்படுகிறது. ஆனால், இந்திய மக்கள், "சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில், அனைத்து தரப்பு மத நம்பிக்கை கொண்டோரும் கலந்து கொண்டு அத்தகைய பிளவை ஏற்பட விடாமல் தடுத்து விட்டார்கள்" அஸ்ஸாமில், போடோக்களும், கரிபி அங்கலாங் பழங்குடிகளும், ஜார்கண்டிலிருந்து இடம் பெயர்ந்தோரும், முஸ்லிம்களுடன் இணைந்து அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். தில்லியிலும், பெங்களூருவில், சென்னையிலும், இந்து மத நம்பிக்கை கொண்ட இளம் பெண்களும், ஆண்களும் முஸ்லிம்களுடன் சேர்ந்து கலந்து கொண்டார்கள்.

ஆகவே நாட்டு மக்களிடையே " மத அடிப்படையில் பிளவை " ஏற்படுத்துவது தோல்வி கண்டது. அத்தகைய அனைத்து மக்கள் எதிர்ப்பை உணர்ந்ததால், பிரதமர் மோடி, " சி.ஏ.ஏ. சட்டத்திற்கான விதிகள் உருவாக்குவது தள்ளிப் போடப்படுகிறது" என்று உள்துறை இணை அமைச்சர் கிரிஷ்ண ரெட்டி மூலம் அறிவிக்க வைத்தார். ஜார்கண்ட் பொதுத் தேர்தல் நேர பரப்புரையில், " யாரையும் குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்க மாட்டோம்" என்று கூறினார். ஆகவே , அமெரிக்காவானாலும், இந்தியாவானாலும் ," இன, மொழி, மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்தல்" என்பது இனி நடக்காது என்பதையே அமெரிக்க தேர்தல் முடிவுகள் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்கின்றது.

கட்டுரையாளர் குறிப்பு

டி. எஸ்.எஸ்.மணி

டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.

https://minnambalam.com/politics/2020/11/17/14/Racial-discrimination-modi-trump

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ தூங்கிக் கிடந்த அமெரிக்கர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியவர் திரு. ட்ரம்ப் என்றே தோன்றுகின்றது. ஆம்...நான்கு வருடங்களுக்கு முன் தேர்தலில் வாக்கு போட சோம்பல் பட்டு உறக்கத்தில் இருந்தார்கள். அன்று மட்டும் அமெரிக்கர்கள் ஒழுங்காக வாக்களித்திருந்தால் அந்தக் காலகட்டத்தில் ட்ரம்பால் வென்றிருக்க முடிந்திருக்காது என்றே நான் கருதுகின்றேன்.மிக மிக சொற்ப வாக்குகளே கிடைத்திருக்கும்.அதுவும் நல்லதற்கே.....!

இந்தத் தேர்தலில் மக்கள் நன்றாக விழித்திருந்து அலசி ஆராய்ந்து தமது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். ஆனால் பெறுபேறு ட்ரம்பின் நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருப்பதை ஊண்றிக் கவனித்தால் புரியும். சரிக்கு சரியாக நீயா நானா என்று கோபிநாத்தாலும் தீர்ப்பு வழங்க முடியாதபடி  இழுபறிப்படும் நிலையில் வாக்குகள் பெற்றிருக்கிறார் என்றால் 49 % மக்கள் அவரது நிர்வாகத்தை ஏற்று விழிப்புணர்வுடன்  வாக்களித்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.....!

சரியாக சொல்வதென்றால் அமெரிக்காவுக்கு தனது நாட்டின் நலன் பேணும் ஒரு அதிபரும், உலக பத்திரிகையாளர்களுக்கும்,மீம்ஸ் போடுபவர்களுக்கும் அன்றாடம் தீனி போடும் ஒரு கோமாளியாக (அவர்களின் சித்தரிப்புகளின் படி) வும் அவர் இருந்திருக்கிறார். இந்த நக்கல் நையாண்டிகள் எல்லாவற்றையும் "எருமை மாட்டில் பெய்த மழைபோல" ஒரு உதறு உதறிவிட்டு கம்பீரமாய் எமனாக  தனது காரியங்களை செய்து வந்திருக்கிறார். சர்க்கஸில் கோமாளியாக இருப்பவருக்கு அங்கிருக்கும் அத்தனை விளையாட்டுகளும் ஐயம் திரிபுறத் தெரிந்திருக்கும்.முக்கியமான ஒருத்தர் இல்லையென்றாலும் கோமாளி நகைச்சுவையுடன் விளையாடி அவரின் இடத்தையும் பூர்த்தி செய்து விடுவார். அதுபோல்தான் திரு. ட்ரம்ப் அவர்களும் என்றே நான் கருதுகின்றேன்......!

மற்றும்படி திரு.பைடனோ அல்லது திரு.ட்ரம்போ வாரது பிரச்சினையில்லை. காரணம் அமெரிக்கர்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஊட்டியாச்சுது. கமலாவையும் கிளாரியையும் விட ப்ரியங்கா சோப்ரா வந்தால் எனக்கு ரெம்ப ரெம்பப் பிடிக்கும்.நாற்சந்தியில் இருக்கு திண்ணையில ஒரு நாலடியில் போஸ்ட்டர் ஒட்டிவிட்டு அங்கனயே கிடக்கலாம் .....!   😂 

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே இருந்து அமெரிக்காவைப் பார்ப்போருக்கு ட்ரம்ப் கூத்துகள் நகைச்சுவையாகத் தான் தெரிகின்றன. அது பரவாயில்லை. ஆனால், இங்கே வாழும் மக்களுக்கு ட்ரம்பின் செயல்கள் ஜீவ மரணப் போராட்டம், இருப்புக்கே அச்சுறுத்தல் என்று தான் தெரிகிறது. ஒரு உதாரணம்: 

ஒபாமா யாரும் செய்யாத சாதனையாக வசதி குறைந்தோரும் மருத்துவ சேவைகளைப் பெறும் வகையில் Affordable Care Act (ACA)என்ற சட்டத்தை மிகக் கஷ்டப் பட்டு நிறைவேற்றினார். 20 மில்லியன் அமெரிக்கர்கள் வாழ்வில் முதன் முறையாக மருத்துவ சேவைகளை செலவு குறைந்த காப்புறுதி மூலம் பெற்றுக் கொண்டனர். ட்ரம்ப் வந்தவுடன் செய்த முதல் வேலை அந்தத் திட்டத்தின் சில பகுதிகளை வலுவற்றதாக்கி, சில மில்லியன் அமெரிக்கர்கள் டாக்டரைப் பார்க்க முடியாமல் செய்தது தான்! ஏன் செய்தார்? ஒபாமா மீதிருந்த காழ்ப்புணர்வைத் தவிர வேறு வலுவான காரணங்கள் இல்லை! இப்போதும் போவதற்கு முதல், உயர் நீதிமன்ற வழக்கொன்றின் மூலம் முழு ACA ஐயும் ரத்துச் செய்து 20 மில்லியன் அமெரிக்கர்களின் நலவாழ்வில் மண் அள்ளிப் போட தீவிரமாக முயற்சி நடக்கிறது. எல்லாம் ஒபாமா மீதான காழ்ப்புணர்வு தவிர வேறில்லை!

வறுமைக் கோட்டுக்கு அண்மையில் வாழும் அமெரிக்கர்களின் இது போன்ற அவலங்கள், சௌகரியமான நிலையில் இருக்கும் ஏனைய அமெரிக்கர்களுக்கோ அல்லது வெளியாருக்கோ புரியாமல் இருப்பது தான் கவலை தரும் விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஆனால் அவை  தவறான பாதைகளை  மக்களுக்கு  காட்டுவதும்

மக்களை சோம்பேறிகளாக்குவதும்  கூட  உண்மை

நான் பிரான்சிலிருந்து  பேசுகின்றேன்......?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆனால் அவை  தவறான பாதைகளை  மக்களுக்கு  காட்டுவதும்

மக்களை சோம்பேறிகளாக்குவதும்  கூட  உண்மை

நான் பிரான்சிலிருந்து  பேசுகின்றேன்......?

எங்கேயும் உதவிகளை துஷ்பிரயோகம் செய்வோர் இருப்பார்கள் தானே விசுகர்? அப்படித் தான் இங்கேயும்! 

ஆனால், நான் சுட்டிக் காட்டிய சட்டம் இலவச நலக் காப்புறுதி அல்ல! வருமானம் குறைந்தோர் கழிவு விலையில் அடிப்படை காப்புறுதியை நல்ல கம்பனிகளிடமிருந்தே வாங்க முடியும்! ஆனால், எல்லாரும் நலக் காப்புறுதி வைத்திருக்க வேண்டும், இல்லா விட்டால் வருட முடிவில் ஒரு தண்டனைத் தொகையை வரியோடு சேர்த்துக் கட்ட வேணும். இது எவரையும் சும்மா இருந்து சோறு தின்ன அனுமதிக்காத நல்ல திட்டமாகத் தான் கருதப் பட்டது.

ட்ரம்ப் கணக்கில் கொஞ்சம் வீக். ஒபாமா கொஞ்சம் காசு வாங்கிக் கொண்டு கொடுத்த மருத்துவ சேவையைத் தூக்கிப் போட்டு விட்டு, காப்புறுதி இல்லாதவன் அவசர தேவையாக மருத்துவ மனைக்குப் போக வேண்டி வந்து சில ஆயிரம் டொலர்கள் பில் வந்தால் Medicare/Medicaid என்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து பில்லைக் கட்டும் முறைக்கே திரும்பி விட்டார்! எங்கள் ஊர் மாதிரி வரவு செலவு லெட்ஜரை ஆராயும் மூளை வலது சாரி அமெரிக்கர்களுக்கு இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:
20 minutes ago, விசுகு said:

நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்

ஒரு நிரபராதி  தண்டிக்கப்படக்கூடாது

அது தானே???

நான்  உங்க  பக்கம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்

ஒரு நிரபராதி  தண்டிக்கப்படக்கூடாது

அது தானே???

நான்  உங்க  பக்கம் தான்

அதே தான்!

இருப்பதை கொஞ்சம் பகிர்ந்து அடிப்படை வசதிகள் பலருக்கும் கிடைத்தால் பகிர்பவனுக்கும் நன்மை என்ற எண்ணம் தான் ! உதாரணமாக, நல்ல உடல் உள நல, கல்விச் சேவைகள் கிடைத்தால் inner city  என்ற நெருக்கமான உள்நகரப் பகுதிகளில் வாழும் சிறுவர்கள் குற்றச் செயல்கள் பக்கம் திரும்புவது குறைகிறது என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன! இந்த ஒரு விடயத்திலேயே பெறுமதியான உயிர்களையும் உடமைகளையும் காக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஆனால் அமெரிக்க அடிப்படை முதலாளித்துவ பொருளாதார  கொள்கை  இதற்கு  முரணானது  அல்லவா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் 45% க்கு குறைவாக எடுத்திருந்தால்கூட வலதுசாரிகள் வலிமை குறைவாக இருக்கின்றார்கள் என்று சொல்லலாம். ஆனால் பைடன் மட்டுமட்டாக வென்றிருப்பது (ட்ரம்ப் இன்னமும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது) வலதுசாரி அரசியல் சிந்தாந்தம் வலுவாக பலரிடம் ஊறியுள்ளது என்பதைத்தான் காட்டுகின்றது. அடுத்த தேர்தலில் ட்ரம்பிஸம், சிறிலங்காவில் ராஜபக்ஸக்கள் 2015 தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டதுபோல, மீண்டும் வெல்லும் என்றுதான் நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.