Jump to content

கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்

என்னதான், செலவுகளைக் குறைத்து, வருமானங்களைச் சேமித்தாலும், கையில் பணப்பற்றாக்குறையே உள்ளது என்பதை, யாரேனும் ஒருவர் கூறுவதையே நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு வகையில் செலவு அதிகரிக்க, வரவுகளை எதிர்பார்த்து விழிபிதுங்கி நிற்கும் சாமானி நிலையையே, பெரும்பாலான குடும்பங்கள அனுபவித்து வருகின்றன.

அதிலும் இந்தக் கொரோனா நெருக்கடி, அதிகளவான அழுத்தத்தைத் கொடுத்து வருகின்றது. வருமானம் அப்படியே இருக்க அல்லது குறைந்துச் செல்ல, செலவீனங்க மாத்திரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்றே கூறலாம்.

அப்படியாயின், நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே கடந்துபோய் கொண்டு இருக்கிறோமா அல்லது இவற்றை எல்லாம் நிவர்த்திக்க எந்த வழியும் இல்லை என்று கடந்து செல்கின்றோமா என்ற என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?

உண்மையில், நாமது அன்றாடம் செலவீனங்கள் கைமீறிப் போகாதவண்ணம், சேமிப்புகளையும்  வரவுகளையும் ஒருங்கிணைத்துச் செல்லவே முயல்கின்றோம். ஆனால், அதை இன்னும் சற்றே வினைத்திறனாகத் திட்டமிட்டுச் செய்வதில்தான், கோட்டை விட்டுவிடுகின்றோம். உண்மையான நிதியியல் வெற்றி என்பது, எளிமையான ஒன்றாகும். அது, உழைப்பதில் ஒரு பங்கு சேமித்து, செலவுகளைக் குறைப்பதாகும். இதன்போது செய்கின்ற ஒவ்வொரு செலவுக்குமே கண்காணிக்கக் கூடியவகையில் ஒரு முறைமையைப் பயன்படுத்தினாலேயே, இந்த நிதிவெற்றியை அடைவது எளிதாக்கிவிடுகிறது.

இதற்கு இலகுவாகக் கையாளக்கூடிய முறைமைகளில் ஒன்றுதான், பாதீடு ஆகும். அதாவது, ஒவ்வொரு வரவையும் செலவையும் முறையாகக் கண்காணிக்கும் வரவு-செலவுப் பட்டியலை மாதம்தோறும் தயார்செய்து, அதன் பிரகாரம், நமது செலவீனங்களைக் கண்காணிப்பதாகும்.

வரவு-செலவு பற்றிக் கணக்கு வைத்தும் அதை சரியாகப் பராமரிக்க முடியாமல் உள்ளதா, அனைத்தையும் கண்காணிக்கின்றபோதிலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதா? எல்லாவற்றுக்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அது, எல்லாவற்றையும் மீண்டும் புதிதாக முதலிலிருந்து தொடங்குதல் ஆகும். அதற்காக, எதையும் பெரிதாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்து செயற்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, எல்லாவற்றையும் எளிமைப்படுத்தினாலே போதுமாகும்.

உதாரணத்துக்கு, செலவு என்றவகையில், உங்கள் கையால் செலவு செய்கின்ற எல்லா பணத்தையும் ஒருசேர கணக்கு வைத்துக்கொள்வதை விட, ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாகப் பிரித்துகொண்டு, மின்சாரச் செலவு, நீர்க் கட்டணம், பொழுதுபோக்குச் செலவு எனக் கணக்கு வைத்துகொள்ளும்போது, எந்தச் செலவு அதிகமாக உள்ளதென அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

நீங்கள் உழைக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்கள் உழைப்பால் உருவானது என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள். காரணம், சில ரூபாய்களை செலவு செய்யும்போது, இது சிறுதொகைதானே எனும்ன்கிற போக்கில் செலவையும் செய்துவிட்டு, அதை கணக்கில் உள்வாங்காமல் போனால், பிற்காலத்தில் அப்படியான செலவுகள் சிறுகச் சிறுக அதிகரித்து உங்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதில் ஜயமில்லை.

எனவே, வருமானத்தில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதை அறிந்துகொள்ள, அதைக் கணக்கு வைத்துகொள்ளப் பழகுங்கள். பின்பு ஒரு நேரத்தில் வருமானத்தை எப்படி எல்லாம் செலவு செய்யக்கூடாது என்பதை நீங்களே தானாகவே உணர்ந்து கொள்ளுவீர்கள்.

வருமானம் கைக்கு வந்ததுமே, அதை எப்படி செலவு செய்யலாமென திட்டமிடுபவர்கள் சிலர் என்றால், எப்படி செலவு செய்யாமல் சேமிக்கலாம் என யோசிப்பவர்கள பலர் உள்ளனர்.

உண்மையில், எதற்கு எவ்வாறு / ஏன் செலவு செய்ய வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், செலவுகள் கைமீறிப் போவதுடன், தேவையான செலவுகளைச் செய்யக்கூட, கையில் பணமில்லாத நிலையே ஏற்படும். எனவே, எந்தவகை செலவுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருத்தல் அல்லது அதற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியமாகிறது. ஆடம்பர செலவுகளா அத்தியாவசிய செலவுகளா முக்கியமானது என்பது மூலம் எதிர்காலம் நோக்கி திட்டமிட முடியுமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆடம்பர வாழ்க்கையை விட, கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியானது என பெரியோர்கள் சொல்லக்கேட்டு இருப்போம். அதுவே, உண்மையும் கூட. எத்தனைதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும், கடன்காரன் என்கிற பழிச்சொல் ஒருவரை தூற்றுதலுக்கு உள்ளாக்கிவிடும். எனவே, முடிந்தவரை கடனை தவிர்ப்பது அவசியமாகிறது.

வருமானத்தை மீறி செலவுகள் செல்லும்போது, கடன் வாங்குவதுஎன்பது, தவிர்க்க முடியாத விடயமாகும். ஆனாலும், அப்படியானக் கடன்களை முதலில் செலுத்தி முடிப்பதற்கு முயற்சிப்பதே எதிர்காலத்தில் கடனின் அளவு குறைவடைவதையும் சேமிப்புக்கு வழி ஏற்படுவதையும் உறுதிச்செய்வதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இல்லையேல், கடன் மாதம்தோறும் வருமானத்தின் மிகப்பெரியப் பகுதியை முழுங்கிக்கொண்டு விடும். இது, நாளாந்தச் செலவுகளைச் செய்வதில்கூட சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, சிறந்த வரவு-செலவு திட்டம் உள்ளபோது, எவ்வாறு உள்ள கடனை அடைத்துக்கொள்ள முடியுமென அறிந்துகொள்ள முடியுமோ, அதுபோல எதிர்காலத்தில் கடனை வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுமா இல்லையா என்பதை அறிந்தும்  செயல்பட முடியும்.

ஒவ்வொரு புத்தாண்டு உறுதியாக இம்முறை வரவையும் செலவையும் ஒழுங்குபடுத்தி கொள்ளுவேன் என்று கூறிக்கொண்டு உறுதி பூண்டுவிட்டு, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிடும் நிலைமையே அதிகம் பேரில் காணப்படுகிறது. குறிப்பாக, பலருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களை செலவுசெய்து, வரவு-செலவை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவதில் ஒருவித தேக்கநிலையே காணப்படுகிறது. இதனாலேயே, பாதீட்டு ஒழுங்குகள் பாதிவழியிலேயே நின்றுபோய் விடுகிறது.

எனவே, வரவு-செலவு கணக்குகளை ஒழுங்குபடுத்தும்போது, அதற்கு பொறுமையும் அவசியமாகிறது. எப்படி நிறைக் குறைப்பானது நீண்டகால பயிற்சியில் சாத்தியமாகிறதோ அதுபோல, செலவீனங்களை கட்டுப்படுத்துவது என்பதும்நீண்டகால முயற்சியில் மாத்திரமே சாத்தியப்படும். அதுவரை, பொறுமை அவசியமாகிறது.

இன்று கைக்குள் அடங்கும் உலகமாக எல்லோரிடத்திலும் அலைபேசிகள் உள்ளன. அதில், மிக இலகுவாக வரவு-செலவுகளை கண்காணித்துக் கொள்ளவென பலவிதமான மென்பொருள்கள் உள்ளன. எனவே, அவற்றில் உகந்தவொன்றை பயன்படுத்தி கொள்ளுவதில் தவறில்லை. இன்னமும் எத்தனை காலம்தான், அப்பியாச கொப்பியில் கணக்கு வழக்கை குறித்துக்கொண்டிருப்பதென நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள்கள் வழியிலும் உங்கள் கணக்குகளை பராமரிக்க முடியுமென்பது ஒருவகை கால்கட்டே.

மேலதிகமாக, வெவ்வேறு மூலங்களிலிருந்து பணம் வருவதையும், அவை செலவாகும் விதத்தினையும் அப்பியாசக் கொப்பியின் ஒவ்வொரு பக்கத்தில் குறித்துக்கொண்டிருப்பதை விட, மென்பொருள்களை பயன்படுத்தி இலகுவாக வேறுபடுத்திக்கொள்ள முடியும். இதுவும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேறிச்செல்ல ஏதுவான காரணியாக இருக்கிறது. .

வரவு-செலவுகளை பராமரிக்கத் தொடங்கியதுமே, நீங்கள் உங்கள் செலவு தொடர்பிலான பலவீனங்களை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, உணவுக்கோ அல்லது ஆடம்பரப் பொருள்களுக்கோ, தேவைக்கு அதிகமாக நீங்கள் செலவு செய்வதை அறிந்தால், அதை எப்படி குறைத்துக்கொள்ள முடியும் எனும் வழியை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது பல சமயங்களில் உங்கள் நடத்தைக் கோலத்திலும் நன்மைகளை கொண்டுவருவதாக அமையும்.

ஒவ்வொருவருக்குமே நிச்சயமாக செலவீனங்கள் தொடர்பில் மேற்கூறியதுபோல, பலவீனங்கள் இருக்கவே செய்யும். எனவே, அதுதொடர்பில் ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துகொள்ளுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதிப்பிரச்சனைகளுக்கு ஏதுவாக அமையும்.

ஒவ்வொரு மாதமும் நமது வருமானம் பெரும்பான்மையாக மாற்றமடைவதில்லை எனும் போதிலும், வெவ்வேறு காலங்களில் நமது செலவுகள் வெவ்வேறு விதமாக மாற்றமடையக் கூடியதாகவிருக்கும். உதாரணத்துக்கு, ஆடி மாதத்தில் தமிழர்கள் மத்தியில் சுபகாரியங்கள் இடம்பெறாமை காரணமாக, அது தொடர்பிலான செலவீனங்கள் குறைவாக இருக்ககூடும். ஆனால், அடுத்துவரும் மாதத்திலேயே சுபகாரியங்கள், ஒன்றன்பின் ஒன்றாக வந்து செலவுகள் அதிகரிக்கும் நிலை காணப்படும். இதற்காக, பாதீட்டை கடுமையாகக் கடைப்பிடிப்பதாகக் கருதி, குறித்த சுபகாரியங்களை தவறவிடுவதென்பது முட்டாள்தனமான செயல்பாடாகும்.

பாதீட்டைத் தொடர்ச்சியாக பேணுவதும், அதைப் பராமரிப்பதும் கூட எளிமையான விடயமல்ல. அவற்றைக் கூட கடந்துவிட்டாலும், வரவு-செலவு கணக்கு ஏற்றவகையில், உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுவது என்பது எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும். ஆரம்பத்தில், உங்களுக்குப் பிடித்த பல விடயங்களை கட்டுபடுத்த வேண்டிய தேவையிருக்கும். அவற்றை, கடுமையாக அவசியம் கடைபிடியுங்கள், சில காலத்தில் அதற்கு நீங்களே பழகிக்கொள்ளுவீர்கள். காரணம், அது ஒரு முறைமை போல உங்களுடனேயே ஒட்டிக்கொள்ளும். பின்பு, அதனை மேம்படுத்துவதும், புதிய முறைகளை கையாள்வதும் உங்களுக்கே இலகுவாக இருக்கும். இதற்க்கு மேலாக, நீங்களே மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்ககூடிய அளவுக்கு திறன் கொண்டவர்களாக மாறிப் போனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

 

http://www.tamilmirror.lk/வணிகம்/கொரோனா-காலமும்-வருமானத்துக்கு-மீறிய-செலவீனங்களும்/47-258428

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.