Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள் பல ரகம் ஒவ்வொன்றும் தனி ரகம்

Featured Replies

  • தொடங்கியவர்

அதிசயக்குழந்தை - பூதம் 
-------
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

ஆசானுக்கு  நான் சொல்வதா ...?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!

மனத்தின் அழுக்கை நீக்க 
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....
உடலின் அழுக்கை நீக்கவும் ...
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ...
காற்றோடு கலக்கிறீங்க ....
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...
அசுத்தமாக்கும் போது 
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் 
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?

என்றான் - அதியக்குழந்தை.....!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....

விழுந்து விழுத்து சிரித்தான் ....

ஏனடா சிரிகிறாய்....?

இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!

திகைத்து நின்றேன் ....!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ....
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....
" ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு 
எனக்கு சரிவராது என்றான் 

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

10) அணுக்கவிதை 
.... 
உன் 
பார்வைக்கு அஞ்சி
நீ அருகில் வரும்போது
மறு தெருவுக்கு போகிறேன்.
.....
உன்னை நான் நேரில்
ரசிப்பதை விட கவிதையில்
ரசிப்பதே அழகாய் இருகிறாய்.
....
ஒவ்வொருவனுக்கும்
அவனவன் காதல் தான்
ஆயுள் பாசக்கயிறு.
.....
இதயம் மட்டும்
வெளியில் இருந்திருந்தால்
நிச்சயம் நீ அழுதிருப்பாய்
என்னை ஏற்றிருப்பாய்.
.....
பெண்ணை பற்றி நான்
கவிதை எழுதியதில்லை
உன்னை பற்றியே கவிதை
எழுதுகிறேன்.

  • தொடங்கியவர்

11) இரண்டு வார்த்தையில் கதை 
....... 
 கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.

-------------

தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் 
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .

கதை ; செலக்சன் சரியில்லை
@
கவிப்புயல் இனியவன் 
....
இவ்வாறு 10 கதை எழுதியுள்ளேன் 

  • தொடங்கியவர்

12) கதைக்கு கவிதை 
.......

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!! 

இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் 
வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த 
வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!! 

!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!! 

கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........ 
..........எதற்கு அஞ்சாத வீரமங்கை....................... 
பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ................. 
..........பத்தினியாள் பக்தியாள்............................ 
சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........ 
.........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்............... 
சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்.......... 
.........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............ 
சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!! 

!!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!! 

தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்....... 
..............காதலன் பெயரோ கருணாகரன் ............ 
மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........ 
......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ...... 
கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் ......... 
.....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் ....... 
அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் ..... 
....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!! 

!!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!! 

மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் .... 
....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் ..... 
மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........ 
....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் ....... 
கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன் 
....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!! 

!!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!! 

சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் ..... 
....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே ..... 
வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....! 
....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்..... 
சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ...... 
...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை....... 
இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!! 

!!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!! 

காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் .... 
....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்........... 
காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ........... 
....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ...... 
தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட .... 
.....காத்திருந்தாள் காத்திருந்தாள்.......... 
கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி ....... 
.....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின ..... 
முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ...... 
.....பலமாகிய காற்று பலமிழந்தது ........... 
ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின ..... 
....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் .... 
அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது..... 
...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!! 

!!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!! 

கருணாகரனே எனவனே கருணாகரனே ...... 
....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்..... 
குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........ 
....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ...... 
வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே ..... 
...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே ....... 
தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே .... 
...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் .... 
என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது .... 
....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!! 

!!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!! 

என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே ..... 
...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் ..... 
புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,, 
....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது..... 
மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் .... 
....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ...... 
இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் .... 
....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ...... 
அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் ..... 
...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ .... 
என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் .... 
,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!! 

!!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!! 

மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு ..... 
...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்..... 
சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் ..... 
....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்...... 
மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் ..... 
.....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்...... 
அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!! 

.......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் ..... 
அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் .... 
....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே....... 
எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே! 
....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........ 
இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்? 
...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே..... 
நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,, 
.,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே! 
என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!! 
......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!! 

!!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!! 

மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது..... 
......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் .... 
மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட .... 
......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.... 
பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே....... 
....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ...... 
மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை .... 
.....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!! 

!!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!! 

கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை .... 
....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்..... 
என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்..... 
....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ...... 
என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் ..... 
....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது ..... 
இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் ..... 
...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் .... 
அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!! 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது மாணவர்களுக்கு 
மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி 

நன்றியுடன் ;கவிப்புயல் இனியவன் -யாழ்ப்பாணம்

  • தொடங்கியவர்

13) காதல் வெண்பா 
..... 

இனியவன் காதல் வெண்பா

.....
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!. 

....

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

.....

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

....

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

....

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா
.... 

முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

14) கானா கவிதை 
...... 

அறிமுகம் செய்தவர் : கவிப்புயல் இனியவன் 
.... 

ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குதுகால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குதுகைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?

கானா கவிதை 
கவிப்புயல்   இனியவன்

 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பழமொன்ரியு
.......
ஐம்பதில் வளையாது 

ஐம்பதிலும் வளைந்திருகிறது 
முதுகு 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு  01

....

  பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார் 
அரசியல் வாதி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 02

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 

நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான் 
குடிகாரன் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 04
 

ஆழம் அறியாமல் காலை விடாதே 
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது 
காதல் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 05 

பாத்திரம் அறிந்து பிச்சை போடு 
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி 
தருமம் தோற்றது 

@
கவிப்புயல் இனியவன்

 காதல் வெண்பா 

..... 

இனியவன் காதல் வெண்பா

.....
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!. 

....

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

.....

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

....

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

....

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா
.... 

முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும்

  • தொடங்கியவர்

10)  காதல் வெண்பா 

..... 

இனியவன் காதல் வெண்பா

.....
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!. 

....

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

.....

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

....

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

....

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா
.... 

முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும்

11) கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள். 

1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும். 

2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும். 

3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை. 

இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன். 

..... 

கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப 

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப

போன்சாய் அமைத்துள்ளேன். 

...... 

1) உலகமே 

     வைத்தியசாலை ஆக்கியது 

      கொரோனா 

....... 

2) காற்றுக்கு என்ன வேலி 

     யார் சொன்னது 

      முகக்கவசம் 

...... 

3) குற்றம் செய்யாதவருக்கும்.

     வீட்டுச்சிறை.

      தனிமைப்படுத்தல்.

..... 

4) ஜனநாயகக்கடமை.

     நீண்ட வரிசையில் நின்று

      வாக்களிப்பு.    

       தலைவர் வீடியோ உரை 

......

5) மழை மகிழ்ச்சிக்கும் 

     மரணத்துக்கும்

      காரணமாகிறது.

       தவளை. 

......

தொடரும்

  • 1 month later...
  • தொடங்கியவர்

தன்மானம் காத்திட …..
தலைசாயாத சக்தி ….
தன்னம்பிக்கை………….!

  • தொடங்கியவர்

நீ  பிரிந்தாய்.....
சொறணை கெட்ட...
என் இதயம்...
நீ வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
பார்த்துக்கொண்டு இருக்கிறது......!

@
கவிப்புயல் இனியவன்
அணுக்கவிதை (02)

🌋

நீ ................
காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!

@
கவிப்புயல் இனியவன்
அணுக்கவிதை(03)

  • தொடங்கியவர்

நான் 

ண்ணீருக்குள்

தாகம் -நீ

தண்ணீரின் 

குமிழி .....!!!


நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது.... 

உன்னை போல்...

இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!

கவிதை.....

காதலின் வலி... 

காதலின் மொழி.... 
நீ
கவிதையையே வெறுக்கிறாய்....!!!

@

கஸல் கவிதை (1804)

கவிப்புயல் இனியவன் 

யாழ்ப்பாணம் 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தேர்தல்


-----------
மெய்யும் பொய்யும் ....
தேர்தலில் போட்டியிட்டன ....
மெய்யின் ஆதரவாளர்கள் ....
மிகக்குறைவு -பொய்யின் ...
ஆதரவாளர்களோ .....
குவிந்து செறிந்து பரந்து ...
காணப்பட்டன .....!!!

பொய்யின் தேர்தல் ...
பிரச்சாரத்தில் பேச்சுகள் ....
தூள் பறந்தது கைதட்டல் ....
வானை பிழந்து சென்றன ....
ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ...
எங்களுக்கு வேண்டும் .....
நீங்கள் இல்லாத ஆட்சி .....
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் ....
என்று கோஷமிட்டனர்.....!
மெய்யின் பிரச்சாரத்தில்....
ஆங்காங்கே ஒருசிலர் ......!!!

தேர்தல் முடிவு வெளியானது .....
பொய் கட்சி அமோக வெற்றி ...
மெய் கட்சியினர் கட்டு பணத்தை ...
இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் ....
பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் ....
மெய் கட்சி தலைவர் சிறையில் ....
அடைக்கப்பட்டார் ......!!!

பொய்களே அரச கொள்கையானது ....
லஞ்சமே தேசிய தொழிலானது ....
உண்மை பேசியோர் சிறையில் ....
அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ...
கொடுக்க மறுத்தோர் நாக்கு ....
அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ...
பொய்பேசியோர் வீடுகளில் ....
உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!

பொய் பேசாத தனியார் நிறுவனங்கள் ....
லஞ்சம் கொடுக்காத நிறுவனங்கள் ....
அரசை புகழ்ந்து பேசாத நிறுவனங்கள் ....
அரசுடமையாக்கப்பட்டன .......!
பொய் பேசும் அண்டைநாடுகளுடன் ....
வலுவான ஒப்பந்தம் போட்டனர் ....
தலைவர்கள் கை குலுக்கினர் ....
ஆட்டம் போட்டனர்  சென்றனர் .....!!!

அரசின் இலவசத்திட்டங்கள் .....
பொய் சொல்வோருக்கு அதிகரித்தது ....
மறந்து போய் மெய் சொன்னவர்களுக்கு .....
இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டன ....
துரோகிகளாக தனிமைபடுத்தப்பட்டனர்....!
மெய் கட்சி தலைவரை சிறையில் ....
பொய்கட்சி பிரமுவர்கள் சந்தித்தனர் ....
ஒரே ஒரு பொய் சொல் உன்னை ....
விடுதலை செய்கிறோம் என்றனர் ....
என்றோ ஒருநாள் விடுதலை ...
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ....
மெய் கட்சி சிறையில் வாடியது ....!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுக்கு நன்றி கவிப்புயல் இனியவன், தொடர்ந்து பகிருங்கள்

  • தொடங்கியவர்

குடும்ப ஒற்றுமையில்
மாமியார் மருமகள்
::::::::::::::::::

வண்டியின் சக்கரங்கள்..
மாமியாரும் மருமகளும்.... /

பொறுமையும்  ஏற்றலும்...
வண்டியின் அச்சாகும்.... /

முதுமை இளமையின்...
பாசப்பிணைப்பு உறவாகும்.... /

பிறந்தவீடு புகுந்தவீடு....
எண்ணம் வேண்டாம்... /

மருமகள்
விட்டுக்கொடுக்கணும்....
மாமியார்
தட்டிக்கொடுக்கணும்.... /

முதுமையில் பெற்ற...
குழந்தை  மருமகள்.../

இளமையில் கிடைத்த...
தாயே மாமியார்.... /

முதலாளி எண்ணங்கள்...
விலக்குதல் நன்று... /

இல்லம் என்னும்...
ஆலயம் மிளிரும்... /

உறவும் அயலும்..
போற்றி வாழ்த்தும்... /
@
கவிப்புயல் இனியவன்
(யாழ்ப்பாணம்)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

 எங்கள்பாரதி
........................
கவிஞன் இறப்பதில்லை
வாழ்க்கையோடு
கலந்திருப்பான் //

மீசையை  முறுக்கினால்
பாரதி வருகிறார்//

தலைப்பாகை சொல்கிறது
தமிழனின் திமிரை//

கண்கள் மிரட்டுகிறது
பிறமொழி கலப்பை//

கவிதை வரிகள்
நரம்புகளைத் தூண்டும்//

அடக்குமுறை தோன்றினால்
பிறந்திடும்
கவிஞன்  //

வறுமையில் வாழ்ந்தாலும்
தன்மானத்தை
இழக்காதவர்//

குழந்தைப் பருவத்துக்கு
முதலாவது   கவிஞன் //

கடுமையும் கனிவும்
இரண்டறக் கலந்தவர்//

கவிஞர்களில் ஞானி
எங்கள் பாரதியே //

@
கவிப்புயல் இனியவன்
(யாழ்ப்பாணம்)

  • 2 months later...
  • தொடங்கியவர்

தன்முனைக்  கவிதை

🌹🌹🌹

இக்கவிதை எழுதுவதற்கான  நிபந்தனைகள் 

🌹🌹🌹
# நான்கு வரிக் கவிதை

# வரிக்கு அதிகபட்சம் மூன்று சொற்கள் குறைந்தபட்சம் இரண்டு சொற்கள்

# இரண்டாம் வரியில் நிறுத்தம் வேண்டும்

# மூன்றாம் நான்காம் வரிகள் முதல் இரண்டு வரிகளில் கூறப்பட்டதற்கு நேராக அல்லது எதிராக இருக்கவேண்டும் 

# கற்பனை உவமை மட்டும் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்பவற்றை பயன்படுத்தலாம்
🌹🌹🌹
உதாரண கவிதை
🌹🌹🌹
விடுமுறை முடிந்து //
கல்லூரிக்கு திரும்புகிறேன் //
மூக்கைத் துளைக்கிறது//
அம்மா சமையல்.... //
🌹🌹🌹
மேலே கூறப்பட்டது போல் நான்கு வரி கவிதை அமைய வேண்டும். 

முதலாவது வரி விடுமுறை முடிந்து

இரண்டாவது வரி கல்லூரிக்கு திரும்புகிறேன். 
இங்கு வரி முற்றுப்பெறுகிறது

மூன்றாம் நான்காம் வரிகள் முதலாம் இரண்டாம் வரிக்கு திருப்புமுனையாக அமைகிறது
🌹🌹🌹
 

அந்தாதி குறுங்கவிதை
🌹🌹🌹
ஒரு வரியில் முடியும் சொல் அடுத்த வரியின் 
ஆரம்பச்  சொல்லாகக் கொண்டு கவிதை எழுதுங்கள்.
🌹🌹🌹
 நம் எல்லோருக்கும் தெரிந்த சினிமா பாடல் ஒன்று அந்தாதியில்  அமைந்துள்ளதை பாருங்கள்
🌹🌹🌹
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்

பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்

புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
🌹🌹🌹

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையில் கொண்டாட்டம் 

காதலியுடன் கடையில்  சிற்றூண்டி 

வீட்டில் விளக்கெரிகிறது 

வாசலில் மனைவி சாப்பிடாமல்.......!

 

தன்முனைக் கவிதை விளக்கங்கள் நன்று புயல்.......!  👍

 

எங்களுக்கும் கவிதை கொஞ்சம் வருது......!

  • தொடங்கியவர்


சிந்தடியில் கவிதை
✔️✔️✔️✔️✔️
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கு ஏற்ப - ஒரு அடிக்கு மூன்று சொற்கள் வீதம் மூன்று (சிந்தடி) அடிகளில் கவிவடிக்கவும். 
✔️
எடுத்துக்காட்டு 
✔️
தலைப்பு : நேசம் 
✔️
அக்காள் மகளின்
பாசம்...//
அக்கரைக் கொண்ட
நேசம்.../
அடிக்கடி வந்திங்கு
பேசும் !
✔️
இவ்வாறு வெண்பாவின் சுவை வரும் வகை யில் கவிதை எழுதுங்கள் 
 

  • தொடங்கியவர்

காதல் தன்முன்னைக்  கவிதைகள் 

❤️❤️❤️

 பயணத்தில் பார்த்த/

 பருவ மங்கை அவள்.

 கண் வரைந்த ஓவியம்/

 இதயத்தில் குடியிருக்கிறாள் //

@

 இலக்கியக்  கவிப்பேரரசு

 இனியவன்

 

 உன்னை கண்டது/

 ஆலய தரிசனத்தில். 

 கற்பூரம் போல் கரைகிறது/

 என் இதயம்/

@

 இலக்கிய கவிப்பேரரசு

 இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.