Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, சித்திரை 2004

தப்பியோடும் கருணாவால் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய புலிகள்

லெப். கேணல் நீலன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்கநாள் | அழியாச்சுடர்கள்

மட்டக்களப்பு மாவட்ட  புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் நீலன் (சின்னத்தம்பி) தப்பியோடிய கருணாவால் 12 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்தனர். லெப் கேணல் எனும் தரம் பொதுவாக அனுபவமுள்ள போராளிகளுக்கே வழங்கப்பட்டு வரும் நிலையில், நீலன் புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்று புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

புலிகளின் அரசியற்துறையின் அறிக்கைப்படி மரணித்த நீலனின் திருவுடல் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தாண்டியடி மாவீரர் மயானத்தில் விதைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

புலிகளின் அறிக்கைப்படி மார்ச் மாதம் முதலாம் திகதி கருணாவால் சிறைவைக்கப்பட்ட நீலன், சித்திரை 12 ஆம் திகதி மருதம் முகாமிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தான் தப்பியோடும் தறுவாயில் கருணா அவரைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்திருக்கின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் புலநாய்வுத்துறை போராளிகள் அனைவரையும் கலந்துரையாடல் ஒன்றிற்காக மீனகம் முகாமிற்கு வருமாறு கருணா அழைத்திருந்தார். இதன்படி, நீலனும் ஏனைய புலநாய்வுப் போராளிகளும் அங்கு சென்றிருந்தனர். அங்கு மற்றையவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட நீலன் கருணாவால் தனியாக விசாரிக்கப்பட்டதுடன், சிறையடைக்கப்பட்டார். 

சித்திரை 12 ஆம் திகதி தனது அடியாட்களைக் கொண்டு நீலனை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு இழுத்துவந்த கருணா அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார். கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நீலனின் உடல் போராளிகளால் கண்டெடுக்கப்பட்டது. 

நீலனுடன் சேர்த்துக் கருணா கொன்றுபோட்ட போராளிகள் மற்றும் அனுதாபியொருவரது பெயர் விபரங்கள் புலிகளால் வெளியிடப்பட்டது.

அவை வருமாறு,


1. மேஜர் தமிழீழன் (தமிழ்) மரணித்த நாள் சித்திரை 4
2. கப்டன் மாவேந்தன் - மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி
3. கப்டன் நம்பி -  மரணித்த நாள் சித்திரை 10, வாகரை
4. லெப். வர்ணகீதன் (சபா) மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி
5. புலிகளின் அனுதாபி மோகன் - கொல்லப்பட்ட நாள் சித்திரை 10, களுவங்கேணி


 

  • Like 1
  • Sad 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ரஞ்சித் said:

புலிகளிடமிருந்து பிரிந்துபோகும் முன்னரும், பிரிந்த பின்னரும். புலிகளிடமிருந்து பிரிந்து தனியாக இயங்கும் நிலை வந்தால் தனது பலத்தைத் தக்கவைக்க அவர் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கைகள். பலவந்தமாக தனது ஆளணியைப் பெருக்கிக் கொண்டதுடன், தலைமைக்குத் தெரியாமல் நிதிவசூலிப்பிலும் ஈடுபட்டார். இவை யாவுமே தான் பிரிந்துபோவதாக முடிவெடுத்தபின்னர், அவர் தன்னைத் தயார்படுத்து எடுத்த நடவடிக்கைகள். 

மன்னிக்க வேண்டும் ரஞ்சித், உங்கள் இந்தப் பதிவில் நீங்கள் வயது குறைந்த போராளிகளை உருவாக்கியது கருணா மட்டுமே, புலிகள் அமைப்பிற்குத் தொடர்பில்லை என்று நிறுவ முயல்கிறீர்கள். 

இது தவறான தகவல் என்பதைப் பதிவு செய்கிறேன். இது கிழக்கிற்கு வெளியேயும் நடந்திருக்கிறது. இதை வாசிக்கும் பலர் புலிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் கேட்போராக இருந்திருக்கிறோம். ஒரு கட்டத்திற்குப் பின்னர் சர்வதேச அங்கீகாரம் நாடி இது நிறுத்தப் பட்டது. ஆனால், இது கருணாவின் கைங்கரியம் மட்டுமே என்பது தவறு.

தொடருங்கள், குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Justin said:

மன்னிக்க வேண்டும் ரஞ்சித், உங்கள் இந்தப் பதிவில் நீங்கள் வயது குறைந்த போராளிகளை உருவாக்கியது கருணா மட்டுமே, புலிகள் அமைப்பிற்குத் தொடர்பில்லை என்று நிறுவ முயல்கிறீர்கள். 

இது தவறான தகவல் என்பதைப் பதிவு செய்கிறேன். இது கிழக்கிற்கு வெளியேயும் நடந்திருக்கிறது. இதை வாசிக்கும் பலர் புலிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் கேட்போராக இருந்திருக்கிறோம். ஒரு கட்டத்திற்குப் பின்னர் சர்வதேச அங்கீகாரம் நாடி இது நிறுத்தப் பட்டது. ஆனால், இது கருணாவின் கைங்கரியம் மட்டுமே என்பது தவறு.

தொடருங்கள், குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள்!

உங்களின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். மறுப்பில்லை.

இத்தொடரினை நான் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதனால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். 

நன்றி. 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, சித்திரை 2004

கருணா துணை ராணுவக்குழுவுக்கு அடைக்கலம் கொடுப்பதை வெளிப்படையாகக் கூற மறுக்கும் இலங்கை ராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து கருணாவைப் பாதுகாத்து, அவரை கொழும்பிற்கு இலங்கை ராணுவமே அழைத்துவந்ததாக கொழும்பின் பிரபல தினசரியொன்றில் வந்த செய்தியை இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது.

இலங்கை ராணுவத்தின் ஊடகப் பிரிவின் சார்பாக கேர்ணல் தர அதிகாரி சுமேத பெரேரா இந்த அறிக்கையினை வெளியிட்டார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இப்பத்திரிக்கை வெளியிட்ட முன்பக்க தகவலில், கடந்த திங்களன்று சுமார் ஆறு ராணுவ வாகனங்கள் பாதுகாப்பு வழங்க, கருணாவும் இன்னும் 20 அடிவருடிகளும் தம்புள்ளை - கொழும்பு வீதியூடாக பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டதாகவும், இந்த ராணுவத் தொடரணி இரவு 10 மணிமுதல் 11 மணிவரை தம்புள்ளையில் அமைந்திருந்த பிரபல உணவு விடுதியொன்றில் உணவருந்தியதாகவும் செய்திவெளியிட்டிருக்கிறது. கருணா குழுவினரும், அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த விசேட ராணுவ அணியும் அந்த உல்லாச உணவுவிடுதியில் தரித்து நின்ற நேரம், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும், எவரும் அவ்வுணவு விடுதியினுள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லையென்றும் கூறும் அச்செய்தி, அவ்வுணவு விடுதியின் அனைத்துக் கதவுகளும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அடைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது. அந்த ராணுவ அதிகாரியின் கூற்றுப்படி, கருணா குழுவுடன் அரசியல்வாதியொருவரும் கூடவே பயணித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இச்செய்தி தொடர்பான மறுப்பறிக்கை கீழே

"புலிகளிடமிருந்து பிரிந்து தனித்தியங்கும் கருணாவுக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்புக் கொடுத்து கொழும்பிற்கு அழைத்துவந்ததாக கொழும்பில் வெளியாகும் பத்திரிக்கையில் வந்த செய்திபற்றி பாதுகாப்பு அமைச்சு தனது கருத்தினைப் பதிவு செய்கிறது".

" இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்தச் செய்தியினை முற்றாக மறுக்கிறது. எம்மிடம் கருணா எதுவித உதவிகளையும் இதுவரை கோரவில்லையென்பதும், அவருக்கு இலங்கை ராணுவத்தின் எந்தப் பிரிவும் எதுவித உதவிகளையும் வழங்கவில்லையென்பதையும் இத்தால் உறுதிபடுத்திக்கொள்ள விழைகிறோம்".

"மேலும், கருணாவினதோ அல்லது அவரது நெருங்கிய சகாக்களினதோ தற்போதைய இருப்பிடம் பற்றி இலங்கை அரசுக்கோ ராணுவத்திற்கு எதுவித தகவலும் தெரியாது".  என்றும் அவ்வறிக்கை கூறியது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, சித்திரை 2004

பிரதேசவாதத்தினை புறக்கணித்ததற்காக புகழப்பட்ட அம்பாறைத் தமிழ் மக்கள்

பிரதேசவாதத்தினைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் மறுக்கமுடியாத தலைமை தமிழீழ விடுதலைப் புலிகளே என்று உள்நாட்டிற்கு சர்வதேசத்திற்கும் இடித்துரைத்ததற்காக அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு தனது பாராட்டுதலினையும் நன்றியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை திகாமடுல்லை உறுப்பினர் கனசகசபை பத்மனாதன் தெரிவித்திருக்கிறார்.

தன்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியமைக்காக தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர், மக்களின் முன்னேற்றத்திற்காக தான் உழைக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை கருணாவின் இனத்துரோக நடவடிக்கைகளால் வாகரைப்பகுதியில் அல்லற்பட்டிருக்கும் மக்களை நேரிற் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயநந்தமூர்த்தி அவர்களுக்கு இருவாரங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, சித்திரை 2004

கருணாவையும் அவரது சகாக்களையும் இலங்கை ராணுவமே பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்துச் சென்றது - உறுதிப்படுத்தும் தமிழ் அலை

கிழக்கில் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டு செய்தி வெளியிட்டிருக்கும் தமிழ் அலை பத்திரிக்கை கருணாவும் அவரது சகாக்களும் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பியோடி, மாவடிவேம்பு ராணுவ முகாமினுள் நுழைந்ததையும், பின்னர் ராணுவ வாகனங்கள் புடை சூழ அம்முகாமிலிருந்து பொலொன்னறுவை நோக்கிப் பயணித்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.


மாவடிவேம்பு ராணுவ முகாம் மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர்கள் வடமேற்கில் அமைந்திருக்கிறது. கருணாவின் இருப்பிடம் பற்றியோ அவரது நிலைபற்றியோ தமக்கு எதுவுமே தெரியாது என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கும் நிலையில், ராணுவமே அவரை பாதுகாத்து அழைத்துச் சென்றதை மக்களின் சாட்சியங்களுடன் தமிழ் அலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

மக்களின் சாட்சியங்களின்படி மேலும் அப்பத்திரிக்கை விபரிக்கையில், கருணாவும் அவரது சகாக்களும் சுமார் 7 வாகனங்களில் கல்லடிச் சேனை எனும் விவசாயப் பகுதியினை வந்தடைந்ததாகவும், பின்னர் அந்த வாகனங்களில் பஜிரோ ஒன்றிற்கும் இரு பிக் அப் ரக வாகனங்களுக்கும் தீவைத்துவிட்டு மீதி வாகனங்களில் ஏறிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. கல்லடிச் சேனைக்கும், மாவடி வேம்பு ராணுவ முகாமிற்கும் இடையிலான மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட யுத்த சூனியப் பகுதியினை கருணா குழு சென்றடைந்தபோது, ராணுவ முகாமிலிருந்து வந்த சில அதிகாரிகளால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டதை மக்கள் கண்ணுற்றதாகவும் கூறியிருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில், ஆறு ராணுவ வாகனங்கள் புடைசூழ கருணா குழு அங்கிருந்து பொலொன்னறுவை நோக்கி சென்றதாகவும் அம்மக்களை மேற்கோள் காட்டி அப்பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.

அப்பத்திரிக்கையின்படி, கருணா குழுவினரால் பாவிக்கப்பட்ட சில வாகனங்கள் தற்போதுவரை மாவடிவேம்பு ராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

ரஞ்சித், இந்த 168 வயது குறைந்த போராளிகளை கருணா பிரிந்து போன பின்னர் சேர்த்தாரா அல்லது புலிகளோடு இருக்கும் போதே சேர்த்தாரா? 

ஏன் பிழை பிடிக்கவா கேட்கிறீர்கள்.. 😏

புலிகளுடன் இருக்கும்போது இணைந்தார்கள் என்று கூறினால், புலிகளின் தலைமை என்ன பார்த்துக்கொண்டிருந்தது என்று கேட்கலாம். அத்துடன் புலிகள் சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதாகக் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கலாம்...

😁😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

ஏன் பிழை பிடிக்கவா கேட்கிறீர்கள்.. 😏

புலிகளுடன் இருக்கும்போது இணைந்தார்கள் என்று கூறினால், புலிகளின் தலைமை என்ன பார்த்துக்கொண்டிருந்தது என்று கேட்கலாம். அத்துடன் புலிகள் சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதாகக் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கலாம்...

😁😁

ஒரு விடயம்பற்றிய தவறான பார்வையாக இருந்ததால் கேட்டேன். ரஞ்சித்துக்கு இடைஞ்சல் செய்யாமல் இதை வேறிடத்தில் பேசலாமே? 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, சித்திரை 2004

7 தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் கொலை

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னாங்காணிச்சேனையில் அமைந்திருந்த புலிகளின் முகாம் மீது ராணுவ முகாமிலிருந்து வந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு புலிகள் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலிருந்து வடமேற்கில் அமைந்திருக்கும் இப்பகுதியில், புலிகளின் முகாமிற்கும் ராணுவத்தின் முகாமிற்கும் இடையிலான தூரம் என்பது வெறும் 1.5 கிலோமீட்டர்கள் மட்டுமே என்பதுடன், இப்பகுதியில் ராணுவத்தினரைத்தவிர வேறு குழுக்கள் இருக்கவில்லையென்றும் கெளசல்யன் மேலும் கூறினார்.

வவுனதீவு ராணுவ முகாமிலிருந்து வந்த அடையாளம் காணமுடியாத ஆயுததாரிகளே இத்தாக்குதலில் ஈடுபட்டதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Justin said:

ஒரு விடயம்பற்றிய தவறான பார்வையாக இருந்ததால் கேட்டேன். ரஞ்சித்துக்கு இடைஞ்சல் செய்யாமல் இதை வேறிடத்தில் பேசலாமே? 

ஆமோதிக்கிறேன். 👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 26, சித்திரை 2004

அங்கவீனமுற்ற போராளிகளைத் தலையில் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக் குழு  - புலிகள் தெரிவிப்பு

"அங்கவீனமுற்றிருந்த எமது போராளிகளின் படுகொலையில் துணை ராணுவக் குழுவே ஈடுபட்டிருந்தது  என்பதை நாம் திடமாக நம்புகிறோம். இலங்கை ராணுவத்துடன் இப்படுகொலைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் கோரியிருக்கிறோம். இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு இதுவே இறுதியானதாக இருக்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் வான் ரக வாகனமொன்றில் வவுனதீவு முகாம் நோக்கிச் சென்றதை ராணுவம் அறியவில்லை என்று கூறுவது கேலிக்கிடமானது. எமது முகாமிற்கும், வவுனதீவு ராணுவ முகாமிற்கும் இடையில் காடுகளோ அல்லது ஆட்களையும், வாகனங்களையும் மறைத்துவைக்கக்கூடிய பற்றைகளோ இல்லாதபோது, தமக்குத் தெரியாமல் இத்தாக்குதல் நடந்தது என்று இராணுவம் சொல்வதை ஏற்கமுடியாது" என்று புலிகளின் மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் புலிகளின் ஊனமுற்ற போராளிகள் மீதான கருணா குழுவின் மிலேச்சத்தனமான் தாக்குதல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.

"இது ஒரு மிகவும் கோழைத்தனமான மிலேச்சத்தனமான படுகொலை. இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து தமிழ்மக்களுக்கெதிரான கருணா துணை ராணுவக் குழுவின் ஆள ஊடுருவும் அணியின் நடவடிக்கையே இது" என்று புலிகளின் தளபதியொருவர் கூறினார். அத்துடன் புலிகளின் பெய்ரூட் முகாம் பகுதியில் கருணா துணை ராணுவக் குழுவுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் புலிகள் பாதிக்கப்பட்டதாக வார விடுமுறைப் பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை முற்றாக மறுத்த அவர், "இலங்கை ராணுவத்தினுள் இருக்கும் கருணாவை ஆதரிக்கும் சக்திகளின் புனைகதைகளே இவை" என்றும் கூறினார்.

"எமது முகாம் பற்றிய அறிவைக் கொண்ட முக்கிய தளபதிகளும், போராளிகளும் இப்போது கருணாவை விட்டு எம்முடன் இணைந்துவிட்ட நிலையில், தன்னிடமிருக்கும் ஒரு சில விசுவாசிகளைக் கொண்டு கருணா எமது முகாமைத் தாக்கினார் என்று கூறுவது நகைப்பிற்கிடமானது. ஆனால், இவ்வாறான செய்திகளை மெதுவாகக் கசியவிடுவதன் மூலம், இலங்கை ராணுவம் தமிழ்ர் பகுதிகளில் ஆள ஊடுருவும் அணிகள் மூலம் நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திவருகிறதென்பதே உண்மை" என்றும் அவர் மேலும் கூறினார்.


சுமார் இரவு 11:30 மணிக்கு வவுனதீவு ராணுவ மூகாமிலிருந்து வான் ரக வாகனத்தில் வந்த துணை ராணுவக்குழு வவுனதீவு - ஆயித்தியமலை வீதியில் அமைந்திருந்த எமது பாதுகாப்பு நிலை மீது தாக்குதல் நடத்தி எமது போராளிகள் மூவரைக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவில் முல்லமுனை பகுதியில் அமைந்திருந்த எமது நிதித்துறைக்குச் சொந்தமான சேமிப்புக் கிட்டங்கியில் இருந்த நான்கு ஊனமுற்ற போராளிகளையும் ஒரு அப்பாவிக் குடிமகணையும் சுட்டுக் கொன்றனர். கருணா துணை ராணுவக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊனமுற்ற போராளிகளில் ஒருவருக்கு கழுத்திற்குக் கீழே எதுவும் இயங்கவில்லை, இரண்டாமவருக்கு இரு கண்களும் போரில் சிதந்துவிட்டன, மூன்றாமவர் இரு கால்களையும் மிதிவெடியில் இழந்தவர், நான்காமவர் போரில் செல்வீச்சில் ஒரு காலை முழுமையாக இழந்தவர். 

உயிர்தப்பிய ஒருவரின் சாட்சியத்தின்படி, வாகனத்திலிருந்து இறங்கும்போதே கருணா துணை ராணுவக்குழு சரமாரியாகச் சுட்டுக்கொண்டே இறங்கியது. நான்கு ஊனமுற்ற போராளைகளை தலையில் சுட்டே கருணா துணை ராணுவக் குழு கொன்றதை பற்றைக்குள் மறைந்திருந்து உயிர்தப்பிய வயோதிபரான அந்த காவலாளி தெரிவித்தார்.

அந்தச் சேமிப்புக் கிட்டங்கியில் இருந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களுக்குத் தீவைத்த கருணா குழு வவுனதீவு முகாம் நோக்கி வேகமாகச் சென்றிருக்கிறது.

கருணா துணை ராணுவக்குழுவின் அட்டூழியத்தைப் பார்வையிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தகவல்களைச் சேகரித்துச் சென்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 6, வைகாசி 2004

தன்னாமுனையில் இரு அரசியல்த்துறைப் போராளிகளைச் சுட்டுக் கொன்ற கருணா துணை ராணுவக் குழு

பகலவன் எனப்படும் சிவநாதன் முரளி மற்றும் வரதன் ஆகிய ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளை தன்னாமுனைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும்போது மறைந்திருந்து கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பு நகரிலிருந்து 9 கிலோமீட்டர்கள் வடக்கே திருகோணமலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்த போராளிகளை வியாழன் பிற்பகல் 2 மணிக்குக் கருணா குழு சுட்டுக்கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் இப்பகுதியில், இலங்கை ராணுவம் ரோந்து சென்றுகொண்டிருந்தபொழுதே இப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட போராளிகளின் வித்துடல்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

தன்னாமுனை வாசிகளின் தகவல்ப்படி ஜி டி 470 எனும் இலக்கத் தகட்டினையுடைய மோட்டார் சைக்கிளில் இப்போராளிகள் வாழைச்சேனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது கருணா குழுவினரால் சாரமாரியாகச் சுடப்பட்டு, அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இலங்கை ராணுவத்தின் பின்புலத்துடனேயே இக்கொலைகளைக் கருணா குழு நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் புலிகள் இக்கொலைகள் தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டிருக்கிறார்கள். 

சித்திரை மாதம் 24 ஆம் திகதி ஆயித்தியமலைப் பகுதியில்  உடல் ஊனமுற்ற போராளிகள் எழுவரைச் சுட்டுக்கொன்ற கருணா குழு, மே மாதம் 2 ஆம் திகதி இன்னொரு அரசியல்த்துறைப் போராளியையும் பெண்டுகல்ச்சேனையில் சுட்டுக் கொன்றதன் பின்னர் இந்தப் படுகொலையினை அரங்கேற்றியிருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 22, வைகாசி 2004

இலங்கை ராணுவத்தின் ஆதரவுடனேயே எமது போராளி கோகிலனைக் கருணா குழு கொன்றது - புலிகள் 

தமிழீழ விடுதலைப் புலிகளின்  போராளி கோகிலன் என்றழைக்கப்படும் மார்க்கண்டு புனிதலிங்கம் மீதான படுகொலையினை இலங்கை ராணுவத்தின் ஆதரவுடன் கருணா குழுவே நடத்தியதென்று புலிகள் தெரிவித்தனர். நாம் இப்படுகொலைபற்றி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டிருக்கிறோம் என்று கெளசல்யன் தெரிவித்தார்.

படுகொலை இடம்பெற்ற ஆளங்குளம் பகுதி, மாங்கேணி ராணுவ முகாமிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே இருப்பதுடன், புலிகளின் தளபதி நாகேஷ் மீது கருணா குழு திட்டமிட்ட இத்தாக்குதலில், பெண்டுகல்ச்சேனையிலிருந்து வாகரை நோக்கிப் பயணித்த கோகிலன் கொல்லப்பட்டார் என்றும், புலிகள் தெரிவித்தனர். கண்ணிவெடியினை வெடிக்கவைத்தபின்பு, இலகுரக இயந்திரத்துப்பாக்கி கொண்டு கருணா துணை ராணுவக் குழு கோகிலன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
 கருணா துணை ராணுவக் குழுவினரால் கொல்லப்பட்ட கோகிலனின் உடல் அவரது ஊரான கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கடந்த சனியன்று தாண்டியடி மாவீரர் நினைவிடத்தில் விதைக்கப்பட்டது.

இந்த இறுதிமரியாதை நிகழ்வில் கெளசல்யன் மற்றும் பல தளபதிகள் கலந்துகொண்டனர்.

இத்தாக்குதலுடன், இதுவரையில் புலிகள் மீது மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணை ராணுவக்குழுவும், இலங்கை ராணுவமும் இணைந்து நான்கு படுகொலைகளை அரங்கேற்றியிருக்கின்றன.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 25, வைகாசி 2004 கோகிலனை

கிழக்கு மாகாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விச்சரணை வேண்டும் - புலிகள்

கருணா துணை ராணுவக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகளால் படுகொலைசெய்யப்பட்ட கிழக்கு மாகாண பல்கலைக்கழக் விரிவுரையாளர் குமாரவேல் தம்பையாவின் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று மட்டு - அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் யுத்த நிறுத்தக் கண்கானிப்புக்குழுவினரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

விரிவுரையாளரின் கொலை தொடர்பாகத் தமது கண்டணத்தைப் பதிவுசெய்திருக்கும் புலிகள், அவரது குடும்பத்திற்குத் தமது இரங்கல்களையும் தெரிவித்திருப்பதோடு, அவரின் இழப்பு கிழக்கு மக்களின் கல்வி, பொருளாதார, சமூக அபிவிருத்தி ஆகியவற்றிற்கு பாரிய இழப்பாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

புலிகளின் முழுமையான அறிக்கை வருமாறு,

"கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல்ப் பீட தலைமை விரிவுரையாளரை தமிழினத்திற்கெதிரான சக்திகள் படுகொலை செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியத்திற்கெதிரான  இந்த நாசகார சக்திகள் தமிழர்களின் கல்வி, சமூக பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை அழிக்கும் முகமாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்திலுமே திரு தம்பையா அவர்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள்" என்று அவ்வறிக்கை கூறியது.

மேலும், "அன்னாரின் படுகொலை தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரைக் கோரியுள்ளோம். தம்பையா அவர்கள் தனது வாழ்க்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அர்ப்பணித்து வந்ததோடு, தமிழ்த்தேசியத்திற்கும் தனது உறுதியான ஆதரவினைத் தெரிவித்து வந்தார். மட்டக்களப்புத் தமிழ்மக்களின் மனங்களில் அவருக்கென்று எப்போதுமே ஒரு நிலையான இடம் இருந்துவந்தது. அதனைப் பொறுக்கமுடியாத தேசியத்திற்கு எதிரான சக்திகளே அவரை இன்று கொன்றிருக்கின்றன". 

அதேவேளை திரு தம்பையாவின் படுகொலை வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன.

வவுனியா ஆசிகுளத்தில் பிறந்த தம்பையா, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தனது பொருளியல் பட்டப்படிப்பில் அதியுயர் சித்தியினைப் பெற்றிருந்ததோடு, கடந்த 14 வருடங்களாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். கொல்லப்படும் வரை அவர் பொருளியல் பீடத்தின் பீடாதிபதியாக மட்டுமல்லாமல், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

பல்கலைக் கழகத்தினதும், மாணவர் கல்வியினதும் நலனில் மிகுந்த அக்கறை செலுத்திவந்த தம்பையா மீது சக விரிவுரையாளர்களும் மாணவர்களும் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். திரு தம்பையா அவர்கள் தமிழ் கலாசார அமைப்பின் ஸ்த்தாபகர்களில் ஒருவராக விளங்கியதுடன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திக் கவுன்சிலின் தலைவராகவும், மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் மறைவினையடுத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, வைகாசி 2004 கோகிலனை

மூத்த பத்திரிக்கையாளர் திரு ஐய்யாத்துரை நடேசன் மட்டக்களப்பில் கருணா குழு ஆயுததாரிகளால் படுகொலை

Unsolved murder in broad daylight of Batticaloa journalist Aiyathurai  Nadesan – UK TAMIL NEWS


திங்கள் காலை தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் காலை 8 மணியளவில் கருணா துணை ராணுவக் குழுவினரால மட்டக்களப்பின் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான திரு ஐய்யாத்துரை நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு பொலீஸாரின் தகவல்ப்படி மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள், அவரை வழிமறித்து தலையில் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டு போதனாவைத்தியசாலைக்குக் கையளிக்கப்பட்ட திரு நடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டது.

வீரகேசரி, ஐ பி சி தமிழ் உள்ளிட்ட பல செய்திநிறுவனங்களுக்கு செய்தியாளராகச் செயற்பட்டு வந்த நடேசன் அவர்கள் இலங்கை ராணுவத்தினதும், கருணா துணை ராணுவக்குழுவினதும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்ததுடன் ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் தனது அரசியல்க் கட்டுரைகளில் இவைபற்றி தொடர்ச்சியாக எழுதியும் வந்தார்.  

யாழ்ப்பாண நகரிலிருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள நெல்லியடியினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு நடேசன் "இனவிடுதலைப் போராட்டச் சரித்திரம்" எனும் புத்தகத்திற்காக வடக்குக் கிழக்கு சாகித்திய விருதினையும், 2000 ஆண்டின் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் எனும் விருதினையும் பெற்றிருந்தார்.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, வைகாசி 2004 

நெல்லியடியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் நடேசனின் இறுதிக் கிரியைகள்

TamilNet: 03.06.04 Large crowds attend Nadesan's funeral

 

கருணா துணை ராணுவக் குழுவினரால் படுகொலைசெய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் திரு ஐய்யாத்துரை நடேசனின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமையன்று அவரது பிறப்பிடமான நெல்லியடியில் நடைபெறவிருக்கிறது.

கரிகாலன் garikaalan on Twitter: "Assassinated #Tamil journalist #Nadesan  was remembered in commemoration ceremony held in #Jaffna;organized by local  journalists #WeRemember… https://t.co/Z1kBMATOmb"

 

அன்னாரின் பூடவுடல் வைத்தியசாலையிலிருந்து வாவிவீதியில் அமைந்திருக்கும் அவரது இல்லத்திற்கு அவரது நண்பர்களால் எடுத்துவரப்பட்டது. கொலை நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் அஜ்மீர் இது கொலைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.

 

ஊடகவியலாளர்களும் நண்பர்களும் திரு நடேசனின் பூதவுடலை அவரது பிறப்பிடமான நெல்லியடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து பல தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் அன்னாரின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

"கடந்த 60 நாட்களில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டம் 35 படுகொலைகளையும், 20 வன்முறைச் சம்பவங்களையும் கண்டிருக்கிறது" என்று தனது இறுதி அரசியல் குறிப்பில் நடேசன் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசியற்கட்டுரை மே 30 ஆம் திகதிய ஞாயிறு வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது.

Remembering journalist Aiyathurai Nadesan – eelamview

மட்டக்களப்பு மக்களின் அவலங்களை உலகின் கண்களுக்குக் கொண்டுவந்த ஒரு துணிச்சலான பத்திரிக்கையாளர் இன்று 36 ஆவது உயிராக அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார் என்று இன்னொரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டார்.

 

49 வயதான நடேசன் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். வர்த்தக மேலாண்மைத் துறையில் பட்டம்பெற்றிருந்த நடேசன் தனது ஆரம்பகால வாழ்வை ஒரு ஆசிரியராகவே ஆரம்பித்தார். பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணசபையிலும், வருமானவரித் திணைக்களத்திலும் பணியாற்றிய நடேசன் கடந்த 20 வருடங்களாக பத்திரிக்கையாளராகச் செயற்பட்டு வந்தார்.

ராவய பத்திரிக்கை ஆசிரியர் விக்டர் ஐவன் நடேசனின் கொலைபற்றிக் கண்டனம் தெரிவித்ததோடு, மட்டக்களப்பில் ராணுவத்தினதும், கருணா துணை ராணுவக் குழுவினதும் நடவடிக்கைகளை விமர்சித்து அவர் இறுதியாக எழுதிய அரசியற் கட்டுரையே அவரைக் கொல்லவேண்டிய தேவையினை கருணாவுக்கும் அவரை நடத்துபவர்களுக்கும் ஏற்படுத்தியதென்று குறிப்பிட்டிருந்தார்.


 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 19, ஆணி 2004 

இலங்கை ராணுவமே கருணாவைப் பாதுகாத்து வருகிறது - சிறப்புத்தளபதி ரமேஷ்

ramesh_new.jpg

"இலங்கை ராணுவமே கருணாவைப் பாதுகாத்து வருகிறது. புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான சதிவேலைகளில் கருணாவை ராணுவம் பாவிக்கின்றதென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷ் கொக்கட்டிச்சோலை தேனகம் முகாமில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும்போது கூறினார்.

"கருணாவைப் பாவித்து  இலங்கைராணுவம் எம்மீது வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டால், நாமும் பதிலுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவோம்" என்றும் அவர் கூறினார்.

கருணவுடன் செயற்பட்ட நான்கு ராணுவ அரசியல்த்துறைப் பெண்போராளித் தலைவர்கள் தம்முடன் வந்து இணைந்துள்ளதாக ரமேஷ் மேலும் தெரிவித்தார். கருணாவின் செயற்பாடுகள் தொடர்பாக இப்பெண் போராளித் தலைவர்கள் விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"சிங்கள ஆங்கில ஊடகங்கள் எமது மக்களைப் பிரித்து, எமது போராட்டத்தினை நசுக்கிவிட கங்கணம் கட்டிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், எமது மக்களுக்கு இவர்களின் கைங்கரியம் நன்கு தெரிந்தே இருக்கிறது. மொத்தத் தமிழினமும் ஒன்றுபட்டு எமது தேசியத் தலைமையின்கீழ் எமது விடுதலையினை வென்றெடுக்கும் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. எமது போராளிகளைக் குறிவைத்து துணை ராணுவக் குழுவும் ராணுவமும் அவ்வப்போது நடத்திவரும் படுகொலைகள் விரவில் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்றும் அவர் கூறினார். 
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 21, ஆணி 2004 

கருணாவின் மறைவிடம் பற்றிய உண்மைகள் வெளிவந்தன

sub-committee_batti_3_201102.jpg

கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம்  இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை.

பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். 

அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.


இதேவேளை, இப்பெண்போராளிகளின் வாக்குமூலம்பற்றி சிங்கள சேவையான சந்தேஷயவுக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சிரில் ஹேரத் அதனை முற்றாக மறுப்பதாகக் கூறினார். முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும், நாம் விசாரிக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருணாவைப் பயன்படுத்தி சமாதான நிலையினைக் குழப்பி, மோதல்ப்போக்கினை அரசு நாடுகிறது எனும் தளபதி ரமேஷின் கூற்றுப்பற்றிக் கேட்டபோது, " எமது அரசாங்கம் சமாதானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கின்றது" என்று மட்டும் கூறினார்.

மேலும் ஊடகவியலாளர் தொப்பிகலக் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களில் இலங்கை ராணுவத்திற்கு பலத்த இழப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, "அது மிகைப்படுத்தப்பட்ட தகவல், ஏழு அல்லது 8 ராணுவத்தினரே கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 21, ஆனி 2004  

கருணா இலங்கை ராணுவத்துடனேயே கொழும்பில் தங்கியிருந்தார் - நிலவினி

TamilNet: 04.04.03 New LTTE cadres pass out from training camp

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் நெருங்கிய தோழியான நிலவினி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "நானும் என்னுடன் வந்திருந்த ஏனையவர்களும் கொழும்பில் இலங்கை ராணுவத்தின் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டோம்" என்று கூறினார்.  சார்ளி என்ற இயக்கப்பெயரினைக் கொண்ட நிலவினி மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதியாகவும், கருணாவுக்கு விசுவாசமாகவும் செயற்பட்டு, புலிகளின் ராணுவநடவடிக்கையின்போது கருணாவுடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்றவர். அவர், கொழும்பில் கருணாவின் செயற்பாடுகள் பற்றி விபரிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிலவினியுடன் மேலும் மூன்று பெண்போராளித்தலைவர்களும் மட்டக்களப்பிலிருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த சோலையகம் முகாமில் நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர். 

TamilNet: 24.06.04 SL Government admits SLA complicity in Karuna affair

நிலவினி மேலும் தெரிவிக்கும்போது, "நாம் தங்கவைக்கப்பட்டிருந்த அதியுச்ச பாதுகாப்புக் கொண்ட வீட்டிற்கு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி கருணாவைச் சந்திக்க பந்துபோயினர். எங்கள் எல்லோரையும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மெளளானாவே தனது சொந்த வாகனத்தில் ராணுவத்தின் பாதுகாப்போடு கொழும்பிற்கு அழைத்துவந்தார்" என்று கூறினார்.

Seyed-Ali-Zahir-Moulana-Gets-Deputy-Minister-Position-600x394.gif

" நாங்கள் முதலில் கொழும்பு ஹில்ட்டன் உல்லாச விடுதியில் முதல் மூன்று நாட்களும் தங்கவைக்கப்பட்டோம். அதன்பின்னர் கருணாவும் நாங்களும் கொழும்பிலிருந்த இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்கு மாற்றப்பட்டோம். அங்கு 7 முதல் 8 நாட்கள் வரை தங்கவைக்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் இன்னொரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றப்பட்டோம். நாம் இறுதியாக மாற்றப்பட்ட வீட்டிலிருந்து பார்க்கும்போது கொழும்பு அப்பொல்லோ மருத்துவமனைத் தெளிவாக எங்களுக்குத் தெரிந்தது. இவ்வீட்டில் வரதனும் எங்களுடன் கூடவிருந்தார்" என்றும் அவர் கூறினார்.

அப்பொல்லோ மருத்துவமனை கொழும்பின் நாரஹேன்பிட்ட எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை என்பதும், இப்பகுதியில் இலங்கை ராணுவத்தின் பாரிய முகாம் ஒன்றும் அமைந்திருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. 

நிலவினியின் கருத்துப்படி, ஜூன் மாதம் 13 ஆம் திகதி தமது பாதுகாப்பு மிக்க வீட்டிற்கு வந்த கருணா, தானும் தனது குடும்பமும் வெளிநாடொன்றிற்குச் செல்லவிருப்பதாகக் கூறிவிட்டு, அதே ராணுவ வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்று கூறினார்.

கருணா சென்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்த தனது உறவினர் ஒருவரைத் தொடர்புகொண்ட நிலவினி, தாம் மீண்டும் மட்டக்களப்பிற்கு வரும் ஒழுங்குகளைச் செய்துதருமாறு கேட்டுக்கொண்டார். கருணா சென்றதன் பின்னர் தாம் தங்கியிருந்த வீட்டின் பாதுகாப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தானும் ஏனைய மூன்று பெண்போராளிகளும் அங்கிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 30, ஆனி 2004 

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் செயற்பட்டுவந்த ஏழு கருணா துணைராணுவக் குழுவினர் புலிகளால் கைது

karu_5.jpg

karu_1.jpg

karu_3.jpg

karu_4.jpg

karu_2.jpg

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் செயற்பட்டுவந்த ஏழு கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்துள்ளதாக புலிகளின் மட்டு - அம்பாறை செயலகம் அறிவித்திருக்கிறது. இவர்களுள் சிலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான திக்கோடை, துமாபன்கேணி ஆகிய பகுதிகளிலும் ஏனையவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான களுவாஞ்சிக்குடி, களுதாவளை மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளிலிருந்தும் கைதுசெய்யப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட துணைராணுவக் குழுவினரிடமிருந்து கைத்துப்பாக்கிகள், கைய்யெறிகுண்டுகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கைய்யடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 05, ஆடி 2004 

பெளத்த விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா குழு உறுப்பினர்கள் கைது

ஹிங்குராகொட பொலீஸாரின் தகவல்ப்படி அப்பகுதி பெளத்தவிகாரையொன்றில் தங்கியிருந்த கருணா துணை ராணுவக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர்களைத் தாம் கைதுசெய்ததாகக் கூறியிருக்கின்றார்கள். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று டி -  56 ரக துப்பாக்கிகள், மூன்று டி - 84 ரக துப்பாக்கிகள், டி - 81 ரக துப்பாக்கி ஆகியவையும் 6 கைய்யெறிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்களின் பாவனைக்கென்று வழங்கப்பட்டிருந்த ஒரு வான் ரக வாகனமும் ஒரு மோட்டார்வண்டியும் பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிக அண்மைக்காலம்வரை இலங்கை ராணுவத்தின் அமெரிக்க ராணுவத்தால் பயிற்றப்பட்ட விசேட படைப்பிரிவொன்று இந்த பெளத்த ஆலயத்தில் தங்கியிருந்ததாகவும், இந்த படைப்பிரிவே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆள ஊடுருவி புலிகளையும் பொதுமக்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.


புபுல ஆலயம் என்றழைக்கப்படும் இந்த பெளத்த ஆலயத்தின் விகாராதிபதி கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேதலில் சிங்கள இனவாதக் கட்சியான சிஹல உறுமயவின் சார்பில் பொலொன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

புபுல விகாரையிலிருந்த இந்த 14 கருணா துணை ராணுவக் குழு உறுப்பினர்களையும், அவர்களின் ஆயுதங்கள் சகிதம் திங்கள் இரவு பொலிஸார் கைதுசெய்தனர். கருணா குழு உறுப்பினர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவித்த சிஹல உறுமயக் கட்சியின் முக்கியஸ்த்தரான அந்தத் தேரர், "அவர்கள் மட்டக்களப்பு நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். தங்க அனுமதிகிடைக்குமா என்று கேட்டுக்கொண்டதனால் நானும் அனுமதித்தேன். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தனவா என்பதுபற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.

தேரர் மேலும் கூறுகையில், அந்த இளைஞர்களை எனது பிரதான காரியாலயம்தான் என்னிடம் அனுப்பி வைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கருணா குழு இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸார்மீது கடுமையான கண்டனங்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவ்விளைஞர்கள் அனைவரும் எதுவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி மறுநாளே விடுவிக்கப்பட்டதுடன், அவர்களின் ஆயுதங்களும் மீளக் கையளிக்கப்பட்டன. இவர்களை ராணுவம் பின்னர் பொறுப்பெடுத்து அழைத்துச்சென்றதாக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.

Suspected Karuna cadres released on bail September 3, 2004 by lrrp

The Hingurakgoda magistrate Tuesday released fourteen Tamil youth who were arrested with assault rifles and bombs by Sri Lanka Police in a village Buddhist temple in Hingurakgoda Monday evening. They were enlarged on personal surety bail, Police said. Possession of illegal weapons is a unbailable offense under Sri Lankan law.

Sinhala nationalist media in Colombo did not report the arrest.

Meanwhile, the head of LTTE’s political division in Batticaloa, Mr. E. Kousalyan said that he had conveyed message to Deputy Inspector General (Eastern Range), Mr. Nevil Wijesingha, confirming the identities of the fourteen youth as members of the renegade commander Karuna’s group.

Police sources said that the released youth, who did not know any Singhalese were escorted out of court by persons from the Sri Lanka army intelligence.

”Now it is very obvious that the Sri Lankan authorities are conniving with their military intelligence and Police to gather, arm and send stragglers of the Karuna group to murder innocents and sabotage the peace. ”What happened today is a travesty of justice”, Mr. Kousalyan said.

He further pointed out that a group of LTTE cadres who were arrested by Sri Lanka Police with a box of cartridges in Batticaloa in early 2003 are still in custody because the courts refuse to grant them bail.

Police sources in Hingurakgoda who were involved in the arrest of the armed youth said that they (the youth) had told them that they were on their way to the Thoppigala jungles in the Baticaloa District. LTTE has military bases in this region.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆடி 2004

கருணாவுக்கு வெளிப்படையாகவே இலங்கை அரசு ஆதரவு வழங்குகிறது - புலிகள்

Heroic Saga of an Eastern Warrior: Lt. Col Kausalyan – Batticaloa-Amparai  LTTE Political Chief – UK TAMIL NEWS

 

நடைபெற்றுவரும் சமாதான பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் முகமாகவும், மக்களைக் குழப்பத்தில் வைத்திருக்கும் விதத்திலும் 
 கருணாவுக்கு அரச ஊடகங்களிலும், செய்திச்சேவைகளிலும் அரசு முன்னுரிமையளித்து வருகிறது என்று மட்டக்களப்பு அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெள்சல்யன் தெரிவித்தார்.

அரச வானொலியில் கருணாவின் பேட்டியினை ஒலிபரப்பியதுபற்றி கண்டனம் தெரிவித்த கெளசல்யன், "கருணாவுக்கு அரச வளங்களை வழங்கியிருப்பதன் மூலம், புலிகளுக்கெதிரான பொய்ப்பிரச்சாரத்தையும், பினாமி யுத்தம் ஒன்றையும் இலங்கையரசு செய்துவருகின்றது என்பது இப்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் புலநாய்வுப்பிரிவு புலிகளுக்கெதிராகவும், தமிழ் மக்களுக்கெதிராகவும் நாசகார தாக்குதல்களை மேற்கொண்டுவருவதுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பவேண்டும் என்ற நோக்கிலும் செயற்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார்.


"இலங்கையரசின் உண்மையான நோக்கம் பற்றிய மிகத் தெளிவான பார்வை எமக்கு இருக்கிறது. அது கருணாவைப் பாவித்து எம்மைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. இதன்மூலம் தமிழ்மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்னவெனில், இலங்கையரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் நாட்டம் காட்டவில்லையென்பதும், ஆனால் சமாதான காலத்தைப் பாவித்து எம்மை அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தோற்கடித்து முற்றான அழிவு யுத்தம் ஒன்றினை எம்மீது கட்டவிழ்த்து விடவே முயல்கிறது என்பதுதான்" என்றும் அவர் மேலும் கூறினார்.

"இலங்கையரசு எம்மைப் பலவீனப்படுத்தி அழித்துவிடலாம் எனும் நோக்கில் போரில் ஈடுபட்டால், நாமும் அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத்தவிர வேறு வழிகள் இல்லை" என்று அவர் கூறினார்.


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, ஆடி 2004

உயிர் அச்சத்தின் காரணமாக நாட்டைவிட்டே வெளியேறும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

கிழக்கு மாகாணத்தில் கருணா துணை ராணுவக்குழுவினால் தமக்கு விடுக்கப்பட்டுவரும் கொலைப் பயமுருத்தல்களினால் குறைந்தது 10 வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டே செல்லும் முடிவினை எடுத்திருக்கிறார்கள். 10 வருடச் சேவையினை முடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு விடுப்பினைப் பாவித்து நீண்டகால அடிப்படையில் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கருதப்படுகிறது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் ஒருவர்," எமது பொருளியல்ப் பீட பீடாதிபதி, கலாநிதி குமாரவேல் தம்பையா அவரது வீட்டில் வைத்து கருணா துணை ராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தமக்கும் இது நிகழலாம் என்கிற அச்சம் அவர்கள் எல்லோருக்கும் இருக்கிறது" என்று கூறினார்.

கலாநிதி குமாரவேல் தம்பையா கருணாவின் பிளவினையடுத்து யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் தாக்கப்படலாம் என்கிற அச்சத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியிருந்தார். பின்னர், புலிகளால் கருணா விரட்டியடிக்கப்பட்டதையடுத்து மீளவும் மட்டுநகர் திரும்பியிருந்தார். ஆனால், இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கிய கருணா குழு அவரை ஞானசூரியம் சதுக்கத்தில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் வைத்து மே மாதம் 24 ஆம் நாள் தலையில் சுட்டுக் கொன்றது.

"வெளிப்படையான அச்சுருத்தல் அவர்களுக்கில்லை என்றாலும் கூட, அரச ஆதரவுடன் இயங்கும் கருணாவால் தாம் எப்போதும் கொல்லப்படலாம் என்கிற அச்சமே அவர்களை நாட்டைவிட்டு விலகிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, ஆடி 2004

உள்ளிருந்த அதிருப்தியாளர்களால் கொல்லப்பட்ட கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் - கொட்டாவை பன்னிபிடியவில் சம்பவம்

கொழும்பில் முகாமிட்டிருந்த கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலில், அதிருப்தியாளர்கள் தம்முடன் இருந்த ஏனைய 7 பேரைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இக்கொலைகளுக்குப் பின்னர் மட்டக்களப்பிற்குத் தப்பிவந்த மீதிப்பேர் தம்மிடம் சரணடைந்திருப்பதாக புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

உடனிருந்த துணை ராணுவக் குழு அதிருப்தியாளர்களால் கொல்லப்பட்ட கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களின் விபரங்கள்,

1. குகனேசன்

karuna_31.jpg

2. காஸ்ட்ரோ

karuna_33.jpg

3. கேசவன்

karuna_32.jpg

4. ரூபன்

5. அட்பரன்

6. விக்கி

7. விமல்காந்த்

 

karuna_41.jpg

குகனேசன் என்பவர் கருணாவுக்கு அடுத்த நிலைத் தளபதியாகச் செயலாற்றியவர். புலிகளின் அரசியல்த்துறை அறிக்கை மற்றும் இலங்கை அரச செய்திச்சேவையின் பிரகாரம் குகனேசன் என்பவர் ஜூன் மாதத்தில் ஹிங்குராகொடை விகாரையில் அரச புலநாய்வுத்துறையினரால் தங்கவைக்கப்பட்டிருந்தபோது பொலொன்னறுவைப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் உடனடியாக விடுவிக்கப்பட்ட 14 துணைராணுவக் குழுவினரில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

karuna_safehouse_3.jpg

புலிகளிடம் சரணடைந்திருக்கும் துணைராணுவக் குழு உறுப்பினர்களின் தகவல்ப்படி கொட்டாவைப் பகுதியில் ராணுவப் பாதுகாப்புடன் ஒருவீட்டில் தாம் தங்கவைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

karuna_safehouse_1.jpg

இதேவேளை கருணா துணைராணுவக் குழுவினரோடு தங்கியிருந்தபோது கொல்லப்பட்ட எட்டாவது நபர் ராணுவப் புலநாய்வு அதிகாரியொருவர் என்று வெளிவந்த செய்திகளை இலங்கை அரசு மறுத்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சு இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கருணா குழுவுக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்றும், தமது அதிகாரிகள் கருணா குழுவினருடன் தொடர்புகளைப் பேணவில்லையென்றும் மறுத்திருக்கிறது.

karuna_safehouse_2.jpg

ஆனால், இந்திய பத்திரிக்கையொன்றில் வெளிவந்த செய்தியின்படி, கொலைகள் நடந்தவிடத்திற்குச் சென்ற பொலிஸார் எட்டாவது நபரை உடனேயே அடையாளம் கண்டுகொண்டதாகவும், அவர் ராணுவ புலநாய்வு அதிகாரிதான் என்பதை தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் இந்தியச் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : துரோகிகளை பினாமிகளாக வைத்து இனவழிப்புப் போரை அன்றே திட்டமிட்ட சிங்களம்


கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க இலங்கையரசு திட்டமிடுகிறது - அமெரிக்க ஆய்வுக்குழு


அமெரிக்காவின் தனியார் ராணுவ, அரசியல் , பொருளாதார புலநாய்வு மைய்யமான (Strategic Forecasting - STRATFOR) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் கருணாவின் பிளவினை அரச -  ராணுவ உயர்மட்டத்தினர் ஆதரிப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


"அவர்களின் திட்டம் இதுதான், புலிகளை நிலைகுலைய வைப்பது, தமக்குள் பிளவுகளை உண்டுபண்ணி, பலவீனப்படுத்துவது, இறுதியாக பலவீனப்பட்டிருக்கும் அந்த அமைப்பை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின்மூலம் முற்றாக அழித்தொழிப்பது" என்று அரச உயர்மட்டத்திலிருப்பவர்களால் தமக்குக் கூறப்பட்டதாக இந்த ஆய்வுமைய்யம் கூறுகிறது.

"கருணா தொடர்ந்தும் புலிகளிடமிருந்து பிரிந்துநின்று செயற்படுவாரானால், அவரது குழுவுக்கும் புலிகளுக்குமிடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெறும். இவ்வாறான சூழ்நிலையொன்று இலங்கையரசிற்கு மிகவும் உவப்பானதாக இருக்கும் என்பதும், இந்த நிலையினைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க அது கருணா குழுவைத் தொடர்ந்தும் அதிகம் அதிகமாக ஆதரிக்கும்" என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது. 

"புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையால், அவர்கள் உள்ளுக்குள் மோதி, பலவீனப்படுவதை விரும்பும் அரசு, இதன்மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புவதையும் எதிர்பார்க்கிறது. இதனாலேயே கருணவை அவரது பிளவின்போது காப்பாற்றிய அரசு, அப்பிளவு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்க அவரைத் தொடர்ச்சியாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறது". 

"சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புமிடத்து புலிகள் மீண்டும் போரை நோக்கித் தள்ளப்படலாம், ஆகவே அதற்குமுன்னர் அவர்களுக்குள் ஏற்படும் பிளவு அவர்களை ராணுவ ரீதியில் கடுமையாகப் பலவீனப்படுத்தும். இந்தச் சூழ்நிலை அவர்களை இலகுவாக அழித்துவிட உதவும் என்று கொழும்பு எதிர்பார்க்கிறது".

"தமக்கும் கருணாவுக்கும் இடையே எதுவித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையரசு திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, அரச உயர் பீடத்திலிருப்பவர்களும், ராணுவத் தளபதிகளும் தனிப்பட்ட சந்திப்புக்களில் கருணாகுழுவுக்கான தமது ஆதரவினை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்".

புலிகளுடனான 6 வார மோதல்களில் வெட்கக்கேடான தோல்வியினைத் தழுவியிருந்த கருணா 3 மாதகாலத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை அரச வானொலிச் சேவைகளிலும், பி பி சி செய்திச் சேவையிலும் தோன்றிப் பேட்டிகளை வழங்கியிருந்தார். 


"அவமானகரமான தோலிவியின் பின்னரும் வெளிப்படையாக பேட்டிகளை அளித்திருப்பதன்மூலம் கருணா தனக்கான ஆதரவினை குறிப்பாக, கிழக்கு மக்களிடையே பெற்றுக்கொள்ள முயலலாம். அத்துடன், புலிகளின் தலைமையினை அகற்றும் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபடலாம்" என்றும் அவ்வறிக்கைகூறுகிறது.

"தனது பேட்டிகளின்போது அரசியலில் ஈடுபடப்போவதாக கருணா கூறியிருப்பது, தன்னை வேண்டுமென்றே புலிகளின் இலக்காக காட்டுவதற்காகத்தான் என்பதும், இதன்மூலம் தனக்கும் புலிகளுக்குமான  பகையினை இலங்கையரசின் விருப்பத்தின்படி அவர் தொடரப்போகிறார் என்பதையும், இவரைப் பாவிப்பதன் மூலம் பலவீனமாக்கப்படும் புலிகளை தனது விருப்பப்படி அழிக்க அரசு முயல்வதும் தெரிகிறது " என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

"ஆனால், புலிகள் இலங்கை அரசுகளுடன் பல தசாப்த்தங்களாக மோதிவருகின்றனர். ஆகவே, பெருமளவு இரத்தம் சிந்துதலில்லாமல் தீர்வொன்றை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தெரியவில்லை" என்றும் அது கூறுகிறது.


"போர் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கும் பட்சத்தில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையினை அடைவார்கள் என்பது திண்ணம். இது பேச்சுவார்த்தைகளில் அவர்களது நிலையினை மிகவும் பலவீனப்படுத்தும் என்பதுடன், அவர்கள் இதுவரை காலமும் முன்வைத்த 
 சுயநிர்ணய உரிமை அடிப்படியிலான கோரிக்கைகளை இலங்கையரசு உதாசீனம் செய்யும் நிலையும் ஏற்படப்போகிறது". 

"அதேவேளை, காயப்பட்ட புலியினை வலிந்து போருக்கு அழைப்பதும் பாதுகாப்பானது அல்ல. புலிகள் தமது கோரிக்கைகளைத் தளர்த்தினாலோ அல்லது இலங்கையரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலோவன்றி, இப்போது தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்போவதில்லை" என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.


  • Like 1
  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.