Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆடி 2017

தமிழர் தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட இனரீதியான சிதைப்பிற்கு எதிராகச் செயற்படும் சமூக ஆர்வலர்களை கொல்லும் ராணுவ புலநாய்வுத்துறையினரும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும், அவர்களைக் காத்து நிற்கும்   சிங்கள நீதித்துறையும், காவல்த்துறையும்

இலங்கையில் தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளும் போட்டியில், தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கொலையினையும் அவர்களின் தாயகம் மீதான இனரீதியிலான சிதைப்பினையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு வரும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் போக்கினை தனக்குச் சாதகமாக பாவித்துவரும் சிங்கள இனவாத அரசு , தனது கருவிகளான ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், அவர்களினால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுக்களினையும் தமது குற்றங்களிலிருந்து தொடர்ச்சியாகக் காப்பற்றியே வருகிறது.

 குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்ச் சமூகம் தனது தாயகம் சிதைக்கப்படுவதற்கு எதிராக , அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர்களின் தன்னலமற்ற முயற்சியினையே வேண்டிநிற்கின்றது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், அரச ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல்கொடுத்துவரும் தனி நபர்களைத் தனது துணைராணுவக் கொலைக் குழுக்கள் மூலம் முதலில் அச்சுருத்தியும், பின்னர் கொன்றும் தனது தடைகளை அரசு அகற்றி வருகிறது. அழிக்கப்படும் தமது தாயகத்திற்காக உதவியின்றிப் போராடிவரும் ஒரு சில தன்னார்வ சேவையாளர்களைக் கூட கொன்று தமது எஜமான விசுவாசத்தினைக் காட்ட இப்பகுதிகளில் இயங்கிவரும் தமிழ் ராணுவத் துணைக் குழுக்கள் பின்னிற்பதில்லை என்பது தமிழினத்தின் சாபமேயன்றி வேறில்லை.

ஆனாலும், தமிழர்களின் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் அரசின் திட்டமிட்ட தாக்குதல்களும் படுகொலைகளும் அரச நீதித்துறையினராலும், காவல்த்துறையினராலும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வருவதும், சர்வதேசத்தில் சிங்கள அரசுக்கான தாராள அனுமதியும் இவ்வாறான படுகொலைகளையும் தாக்குதல்களையும் மேலும் மேலும் தங்குதடையின்றி செயற்படுத்த வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ மனிதவுரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் இதுபற்றிக் கூறுகையில், 2007 ஆம் ஆண்டின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா - பிள்ளையான் கொலைக் குழுக்களாலும், அரச ராணுவப் புலநாய்வுத்துதுறையினராலும், காவல்த்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றி முன்வைக்கப்பட்ட எந்த முறைப்பாடுகள் மீதும் நடவடிக்கைகளைனை எடுப்பதற்கு சிங்கள காவல்த்துறையும், நீதித்துறையும் மறுத்தே வருகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கேதீஸ்வரன் தேவராஜா

Ketheeswaran Thevarajah


2010, மார்கழி 31 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் துணைராணுவக் கொலைப்படையான டக்கிளஸ் ஆயுதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திற்கு முரணனான மணல் அகழ்வினை வெளிப்படுத்தியமைக்காக டக்கிளஸினால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் கேதீஸ்வரன் தேவராஜா.

கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட நாள் 26, வைகாசி 2014

Krishnasamy Nakuleswaran

 

மதிசாயன் சச்சிதானந்தம் , படுகொலை செய்யப்பட்ட நாள் 25, வைகாசி 2015

Mathisayan_Sachchithanantham.jpg


 பொலீஸாரினால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஷன் சுகந்தராஜா மற்றும் கஜன் நடராஜா, கொல்லப்பட்ட நாள் 20, ஐப்பசி 2016

Sulaxan Sukantharajah and Gajan Nadarajah


யோகராஜா தினேஷ், கொல்லப்பட்ட நாள் 8, ஆடி 2017

24-year-old Yogarajah Thinesh, gunned down by SL Police on Sunday

 மட்டக்களப்பு மனிதவுரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் தான்னார்வத் தொண்டர்கள் மீதான படுகொலைகளை ஒத்ததாகவே கிழக்கில் அரச ராணுவத் துணைக்குழுக்களால் நடத்தப்படும் படுகொலைகளும் காணப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.


43 வயதுடைய மண்டூர் சமூக நல சேவகர் மதிசாயன் சச்சிதானந்தம் கருணா துணைக் கொலைப்படையினரால் கொல்லப்பட்டு 26 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ள காவல்த்துறை மறுத்து வருகிறது.

தனது கிராமமான மண்டூர் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிதிமுறைகேடுகள் மற்றும் கருணாவினால் அமைக்கப்படவிருந்த ஆற்றையன்றிய விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிப் பேசியதால் அவர் கருணா கொலைக்குழுவால் கொல்லப்பட்டார். பொலீஸாரால் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு துணைராணுவக் குழு உறுப்பினர்களும் அப்போது பதவியிலிருந்த துணையமைச்சர் ஒருவரின் அழுத்தத்தினாலும், அவருக்கு ஆளும்வர்க்கத்துடன் இருந்த தொடர்புகளினாலும்  விடுவிக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்திருந்தனர். 

இவ்வாறே 13 மாதங்களுக்கு முன்னர், குடும்பிமலைப் பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்குப் பாதுகாப்பளிக்க அமைக்கப்பட்ட ராணுவ முகாமிலிருது செய்ற்பட்டு வந்த ஐந்து ராணுவத்தினர் மரங்களை வெட்டி தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு விற்றுவருவதை அறிந்து அவர்களை விசாரித்த கிராம சேவகர் சண்முகம் குருவை இழுத்துச்சென்று, கடுமையாகத் தாக்கி வாழைச்சேனை வைத்தியசாலையில் எறிந்துவிட்டுச் சென்ற நிகழ்வும் நடந்திருந்தது. 
தாக்கப்பட்ட கிராம சேவகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே தனக்கு நடந்த விடயத்தை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய் என்று ராணுவப் புலநாய்வுத்துறையினரால் மிரட்டப்பட்டதும், இவ்வதிகாரிக்கு தகவல் வழங்கிய மாவீரர் குடும்பத்தை கருணா கொலைக்குழு 
"மீதமிருக்கும் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொவோம்" என்று மிரட்டியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குடா வீதி தளவாயிலும், ஏறாவூர்ப் பகுதி சவுக்கடியிலும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து வெளியாருக்கு விற்கமுயன்ற கொழும்பின் அரசில் துணையமைச்சராகவிருந்த ஒருவரின் முயற்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அமைச்சின் இயக்குநர் விமலராஜ் நேசகுமார் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட ஆயுததாரிகளால் சுடப்பட்டு கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பொலீஸார் இந்த தாக்குதல்பற்றி நடவடிக்கை எதனையும் எடுக்க மறுத்துவருவதாகவும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆளும் வர்க்கத்துடன் இருக்கும் மநெருக்கமே இதற்குக் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவை தமிழர் தாயகத்தில் தமிழ் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஒரு சில சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. இவைபோன்ற பல சம்பவங்கள் முறையிடப்படாமலேயே விடப்பட்டு வருகின்றன. 

பல தடவைகளில் சாதாரண உடையில் வரும் ஆயுததாரிகள், இலக்கத் தககடற்ற வாகனங்களில் பலரைக் கடத்திச் செல்வதாகவும், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், சட்டத்திற்குப் புறம்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கொல்லப்படுவதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த மனிதவுரிமை மீறல்கள்பற்றிப் பேசினால் குடும்பங்களைக் கொன்றுவிடப்போவதாகவும் பலர் அச்சுருத்துப்பட்டுவருவதாகவும் கூறுகின்றனர்.

தமிழர் தாயகத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் ராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களின் அக்கிரமங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்தில் நிலவும் நிலைமை உதவிவருவதாகவும், இதன்மூலம் அவர்கள் தமது குற்றங்களிலிருந்து இலகுவாகத் தப்பிவிடுவதாகவும் அந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இதே பாணியிலான வன்முறைகள் யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அரச சார்பு ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், அரசின் செல்வாக்கு இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்க முயலும் அரசும் காவல்த்துறையும், இவ்விசாரணைகளை நாட்டிற்கு வெளியேயான அமைப்பொன்றிடம் கொடுத்த்தன் மூலம், இந்த விசாரணைகளை திசைதிருப்பி மக்களின் மனங்களிலிருந்து அகற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் வசித்துவந்த முன்னாள் தமிழீழக் காவல்த்துறை அதிகாரியான நகுலேஸ்வரன் தனது பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அரச ராணுவத்தாலும், கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலங்கள் தொடர்பாக தொடர்ச்சியாகப் பேசிவந்ததற்காக நகுலேஸ்வரன் 2014 ஆம் ஆண்டு கார்த்திகை 12 அன்று அரச புலநாய்வுத்துறை ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக சிலரை மன்னார் காவல்த்துறை கைதுசெய்தபோதும், அரசின் ஆதரவுடன் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம், சிங்களக் குடியேற்றக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மரக்கடத்தல், மணற்கொள்ளை மற்றும் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் இயங்கிவரும் அரச ஆதரவுடனான துணைராணுவக் குழுக்களுக்கும் பங்கிருக்கின்றதென்று மக்கள் கூறுகின்றனர்.

  • Like 1
  • Thanks 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2017

கிரானில் தனியார்க்காணிகளை பலவந்தமாகப் பறித்தெடுத்து தனது சகோதரியின் பெயரில் எழுதிய கருணாவும் எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் மட்டக்களப்பு காவல்த்துறையும்

இலங்கை சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைப்படையொன்றினை நடத்திவருபவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரான் பிரதேசத்தில் தடாணை பகுதியிலுள்ள 16 பேருக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் தனியார் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி தனது சகோதரியின் பெயரில் பதிவுசெய்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

தம்மால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பொலீஸார் ஏற்கமறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட காணியுரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 2009 இல் முடிவுற்ற இனக்கொலையில் முற்றாகப் பங்கெடுத்து ராணுவத்திற்கு உதவியதற்குச் சன்மானமாக மகிந்த அரசாங்கத்தின் துணையமைச்சராக பதவி கொடுக்கப்பட்ட கருணா, பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் துணைத்தலைவர்களில் ஒருவராகவும் வலம்வந்தவர். பின்னர், தனது சகோதரியை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்கள் பிரிவின் தலைவியாகவும் நியமித்திருந்தார் கருணா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் அரசின் கீழ் சுதந்திரமாகச் செயற்படும் கருண கொலைக்கு ஆயுததாரிகள் சத்தியன் எனும் கருணாவின் நெருங்கிய சகா தலைமையிலும்  கருணாவின் சகோதரியின் துணையோடும் இவ்வாறு பலாத்காரமாக தாம் பறித்த காணிகளில் இன்னும் விவசாயம் செய்துவரும் உரிமையாளர்களை மிரட்டியிருக்கின்றனர். "தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயத்தில் ஈடுபட்டால் உங்களை வெட்டிக் கொல்வோம்" என்று கருணாவின் சகோதரி இந்த உரிமையாளர்களை மிரட்டியதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


கிரான் பிரதேச சபை இக்காணிகள் அந்த உரிமையாளர்களுக்கே சொந்தம் என்று உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், கருணாவும் அவரது சகோதரியும் கூறுகையில் இக்காணிகள் புலிகள் காலத்தில் ஒரு பண்ணையாகப் பாவிக்கப்பட்டதாகவும், இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இக்காணிகள் தமக்கே உரியவை என்று வாதாடிவருவதாகவும் கூறப்படுகிறது.

காணியுரிமையாளர்கள் இதுபற்றிக் கூறுகையில் புலிகளின் காலத்தில் சமுதாயத்தின் நலனுக்காக தமது காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்த தாமே காணிகளை முன்வந்து வழங்கியிருந்ததாகவும், இக்காணிகளுக்கான குத்தகையினைப் புலிகள் தமக்கு வழங்கிவந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், சமூக நலனுக்காக அன்று பாவிக்கப்பட்ட தமது காணிகளை தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை செயற்பட்டுவரும் ஒரு துரோகிக்கு தாம் வழங்கவேண்டிய தேவை இல்லையென்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.


கிரான் மக்களின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்த காலத்தில் சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 112 ஏக்கர்கள் தனியார் காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்திவந்ததாகவும், பெரும்பாலும் உள்ளூர் தொழிலாளிகளே இங்கெ வேலை செய்துவந்ததாகவும், பலருக்கு இப்பண்ணை வாழ்வாதாரமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்தப் பண்ணையின் ஒரு பகுதியான 25 ஏக்கர்களையே கருணாவும் சகோதரியும் ஆயுதமுனையில் உரிமையாளர்களிடமிருந்து பறித்திருப்பதாகத் தெரியவருகிறது.

மழை காலத்தில் வெள்ளப்பெருக்கின் அபாயத்தினை எதிர்கொள்ளும் இப்பகுதியில், காணிகளை பரவலாக்கம் செய்து வீடுகளை அமைப்பதுபற்றியும் சில உரிமையாளர்கள் சிந்தித்துவருவதாகவும் தெரிகிறது. அதனாலேயே இக்காணிகளை பலவந்தமாக தம்வசப்படுத்த கருணாவும் அவரது சகோதரியும் முயல்வதாகத் தெரியவருகிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, தை 2018

படுவான்கரையில் கால்நடைகளைச் சுட்டுக் கொன்று இறைச்சிக்கு விற்றும், பண்ணையாளர்களை அடித்து விரட்டியும் வரும் துணை ராணுவக் கொலைப்படை ஆயுததாரி கருணா !

Karuna's intervention for Mahinda unsuccessful


தமிழனக்கொலையாளி மகிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து தமிழினம் மீது பாரிய இனக்கொலையொன்றினை நடத்தி முடிக்க பேரினவாதத்திற்குச் சகலவிதத்திலும் உதவிய கருணா எனப்படும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி மீண்டும் தனது புதிய எஜமானர்களுக்காக களத்தில் இறங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. 

அதன் ஒரு அங்கமாக சித்தாண்டிப் பகுதியில் கால்நடை பண்ணையாளர்களைக் குறிவைத்திருக்கும் கொலைப்படை ஆயுததாரி கருணா , தனது புதிய எஜமானர்களுக்காக இப்பகுதியில் தமிழர்களால் மேய்ச்சலுக்குப் பயன்படும் நிலங்களையும் , காட்டு நிலங்களையும் தனது எஜமானர்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும், அவர்களுக்காக வேலை செய்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.

2004 இல் தமிழினத்திற்கெதிராக செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகத்தின்பின்னர் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன கொலைப்படை ஆயுததாரி கருணா, மீண்டும் சித்தாண்டிப்பகுதியில் தமிழர்களை ஏமாற்றி தன்வசப்படுத்தவே இதனைச் செய்வதாக கால்நடைப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாவின் கட்டளைப்படி பல ஆயுதம் தாங்கிய கொலைப்படையினர் சித்தாண்டி பண்ணையாளர்களைத் தாக்கியுள்ளதோடு, பல கால்நடைகளையும் கொன்றுள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

Mailaththanmadu_grazing_land.jpg
சிங்கள குடியேற்றங்களால் அழிக்கப்பட்டுவரும் மயிலத்தைமடு மேய்ச்சல் நிலத்திற்கு மிக அருகிலிருக்கும் பாலைக் காட்டு வெட்டை எனும் மேய்ச்சல் நிலப்பகுதியில் சுமார் 200 ஏக்கர்களில் பண்ணையாளர்களை அடித்து விரட்டியுள்ள கருணா இப்பகுதியை தந்து எஜமானர்களின் தேர்தல் வெற்றிக்காக லஞ்சமாகக் கொடுக்க எண்ணியிருப்பதாகத் தெரிகிறது.

கருணாவும், அவனது கொலைப்படையினரும் வன வள அமைச்சுடன் சேர்ந்து இப்பகுதியில் மேலும் 150 ஏக்கர்கள் வனப்பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டு விவசாய நிலங்களாக மாற்றியிருப்பதாக மட்டக்களப்பு செயல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு நகரிலிருந்து 21 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் சித்தாண்டிப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை பல்லாண்டு காலமாக உபயோகித்துவரும் பண்ணையாளர்கள் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனத்துரோகியால் நடத்தப்படும் துணை ராணுவக் கொலைப்படியினரின் அச்சுருத்தலினையும் எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

பாலை வெட்டவான் பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலங்கள் மிகவும் செழிப்பானவை என்பதுடன், பல நீர்த் தேக்கங்களையும் இப்பகுதி தன்னகத்தே கொண்டுள்ளது. மயிலத்தைமடு பகுதியில் இதுவரை காலமும் காலநடைகளை மேய்த்துவந்த பண்ணையாளர்கள் கூட இப்பகுதிக்கு நீர் வசதி காரணமாக கால்நடைகளை அவ்வப்போது அழைத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செழுமையான மேய்ச்சல் நிலமே கருணாவினால் அழிக்கப்பட்டு தேர்தல் நோக்கத்திற்காக கூறுபோடப்படவிருக்கிறது.

கருணா கொலைப்படையினர் சித்தாண்டியில் கால்நடைகளைப் பிடிப்பதற்கு இரவில் பொறிகளை வைப்பதாகவும், இவ்வாறு அகப்படும் பல கால்நடைகளை கருணா கொலைப்படையினர் சுட்டுக் கொல்வதாகவும் அண்மையில் தனது கால்நடைகளை இழந்துள்ள பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். வாழைச்சேனைப் பொலீஸில் முறையிடச் சென்ற பண்ணையாளர் ஒருவரை "முறையிட்டால் உன்னைக் கொல்வேன்" என்று கருணா மிரட்டிய நிலையிலும், அவர் தனது முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆரம்பத்தில் பண்ணையாளருக்குச் சார்பாக இயங்கிய பொலீஸார், கருணாவின் தலையீட்டினையடுத்து தம்மால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கையைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அரசுக்கும் இடையே இருக்கும் நெருக்கமே பொலீஸார் இவ்விடயத்தில் தலையிடாமல் இருப்பதன் காரணமென்று சித்தாண்டிப் பகுதி பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கிறது.

Tamil farmers rally against land encroachment by Sinhala settlers in  Batticaloa | Tamil Guardian

தமிழ்ப் பண்ணையாளர்களின் கால்நடைகளைக் கொன்றுவரும் துணை ராணுவக் கொலைப்படையான கருணா குழு, இவ்வாறு தம்மால் கொல்லப்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்றுவருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிரானில் அமைந்திருக்கும் அனைத்து மேய்ச்சல் நிலங்களையும் விவசாயக் காணிகளாக்கி அரசுடன் சேர்ந்து குடியேற்றங்களை ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கும் கருணா, இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் பண்ணையாளர்கள் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்றும் அச்சுருத்தியிருப்பதாகத் தெரிகிறது.

இப்பகுதியில் பல்லாண்டுகாலமாக மேய்ச்சலில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்கள் கருணா தமக்கும் விவசாயிகளுக்குமிடையிலான பிரிவொன்றினை ஏற்படுத்தவே முயல்வதாகவும், சிங்கள குடியேற்றவாசிகளின் அச்சுருத்தலினை எதிர்கொண்டுள்ள தமக்கு கருணா எனும் வடிவில் புதியதொரு அச்சுருத்தல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கருணாவின் துரோகத்தால் 2007 இற்குப்பின்னர் கிழக்கில்  முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தினை வனவளம், அபிவிருத்தி, தொல்லியல், உல்லாசபயணத்துறை ஆகிய பெயர்களைக் கொண்டு சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமித்துவரும் வேளையில், இனத்துரோகி கருணாவும் தன்பங்கிற்கு தமிழர்களை மேலும் துன்புருத்திவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மாசி 2018

காயங்கேணியில் செயற்கையான சதுப்பு நில உருவாக்கத்தில் ஈடுபடும் சிங்களவர்களும், அவர்களுக்குச் சார்பாகக் களமிறங்கும் கருணா துணைராணுவக் கொலைப்படையும்

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 115 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் கரையோரப் பகுதியான காயங்கேணியில் செயற்கை முறையில் சதுப்பு நிலங்களை அமைக்கும் கைங்கரியத்தில் சிங்களவர்களின்  நிறுவனம் ஒன்றினை அரச மீன்வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சு அமர்த்தியிருக்கிறது. சீமேந்துக் கற்களினால் கட்டப்பட்டு, கரையோரப்பகுதியெங்கும் புதைக்கப்பட்டுவரும் இந்தச் செயற்கை சதுப்பு நில ஊக்கிகளால் மீன்வளமும், சதுப்புநிலத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாகக் கூறும் தென் தமிழீழத்தின் மீனவர்கள், இந்த செயற்பாட்டிற்கெதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர். 

13542-399A44D657C48DF2C125758A00361F79-Map.png?itok=uZrBPenT

சூழலைப் பாதிக்கும் இந்தச் செயற்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த மீனவர் சங்கத்தின் தலைவர் அன்டன் இதுபற்றிக் கூறுகையில், சுமார் 6 இலிருந்து 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்படும் இந்தச் சீமேந்தினால் உருவாக்கப்பட்ட சதுப்பு நில பாறைகள்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு, புதிய சீமேந்துக் கற்கள் மீண்டும் புதைக்கப்படுவதாகவும், இது இப்பகுதியில் ஆரோக்கியமான சூழல் அமைப்பிற்கு பாரிய பங்கத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்.

Kaayaangkeani-fake-mangroves-02.JPG


காயங்கேணியில் அகழப்பட்ட செயற்கையான சதுப்புநில பாறைகள் 

பல நாடுகளில் சதுப்பு நில ஆரோக்கியத்தை மாசுபடாவண்ணம் சிறந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளையில் சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் சகட்டுமேனிக்குச் செய்யப்பட்டுவரும் இவ்வாறான செயற்பாடுகள் உண்மையிலேயே தமிழரின் கடல்வளத்தினை நீண்டகால அடிப்படையில் பாதிக்கவல்லன என்றும் அவர் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி காயங்கேணிப்பகுதியில் சுமார் 8000 செயற்கை சதுப்புநிலக் கற்கள் 2017 ஆம் ஆண்டில் மட்டும் புதைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

தனது செயற்பாடுகளுக்கு உள்ளூர் மீனவர்களிடமிருந்து வரும் எதிர்ப்பினைச் சமாளிக்க அரசாங்கம் துணைராணுவக் கொலைப்படையான கருணா குழுவை களமிறக்கியிருப்பதாகத் தெரிகிறது. அரசின் செயற்பாடுகளை விமர்சித்துவரும் பல சமூக ஆர்வலர்கள் காயங்கேணிப்பகுதியில் கருணா குழுவினரால் மிரட்டப்பட்டுவருவதாகத் தெரிகிறது. 

அதேவேளை, பல சிங்கள வியாபாரிகள் இப்பகுதியில் இருக்கும் மீனவ சமூகங்களின் பிரதிநிதிகளுக்கு லஞ்சமாகப் பெரும் பணத்தினை வழங்கி தமது நடவடிக்கைகளைத் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

சிங்கள ஆக்கிரமிப்பினுள் முற்றாக உள்வாங்கப்பட்டிருக்கும் இப்பகுதி மீனவர்கள் இதுபற்றிக் கூறுகையில், அரசியல் ரீதியாக எமது குரல் ஒலிப்பதற்கும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கும் வழியின்றித் தவிப்பதாகக் கூறுகிறார்கள். 

Kaayaangkeani-fake-mangroves-01.JPG


செயற்கையான முறையில் உருவாக்கப்படும் சதுப்புநில பாறைகள்  கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக பாரவூர்தியில் ஏற்றப்படும்பொழுது.

இப்பகுதி சமூக ஆர்வலர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் ஒருபோதுமே இடம்பெற்றிருக்கவில்லை என்றும் , இவ்வாறான சுரண்டலினை புலிகள் இறுதிவரை தடுத்தே வந்திருந்தார்கள் என்றும் தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கின் அபிவிருத்திபற்றி தொடர்ச்சியாகப் பேசிவரும் ஆக்கிரமிப்பு அரசும், அதன் பினாமிகளான கருணா மற்றும் பிள்ளையான் கொலைப்படையினரும் கிழக்கு மக்களின் வளங்களைச் சுரண்டி, தெற்கின் சிங்களவர்களின் அபிவிருத்தியையே முன்னெடுத்துவருவதாக பாதிக்கப்பட்டுவரும் காயங்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் செயற்கைமுறை சதுப்புநில உருவாக்கத்தில் ஈடுபடுவதற்காகக் குடியமர்த்தப்பட்டிருக்கும் சிங்களவர்கள் தமக்கென்று புத்த விகாரையொன்றினையும் நிறுவிவருவதாகவும், இதன்மூலம் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியொன்றில் சிங்களக் குடியேற்றம் ஒன்று மெதுவாக நிகழ்ந்துவருவதாகவும் கூறுகிறார்கள்.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, புரட்டாதி 2018

தனது சகாக்களுக்காக மேய்ச்சல் நிலங்களை வலிந்து விவசாய நிலங்களாக மாற்றும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி கருணா

Deadlier and more dangerous than Corona Virus - Karuna Amman - Sri Lankan  Civil War - Quora

கோரளைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் அண்மையில் தெரிவித்த கருத்தின்படி சுமார் 550 ஏக்கர்கள் மேய்ச்சல் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும்படி முன்னாள் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைப்படை ஒன்றை வழிநடத்துபவருமான கருணா எனும் ஆயுததாரி தமக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இனக்கொலையாளி ராஜபக்ஷெவுடன் சேர்ந்து 2009 இல் முடித்துவைக்கப்பட்ட தமிழினக்கொலையில் பங்கெடுத்த கருணா, அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வடுவதுடன், தனது கொலைப்படையின் ஆயுததாரிகளுக்கும் தனது செல்வாக்கினைப் பாவித்து நிலங்கள், சொத்துக்கள் என்று தென் தமிழீழ மக்களின் வளங்களைச் சூறையாடிப் பெற்றுக்கொடுத்துவருவது தெரிந்ததே. அதனடிப்படையிலேயே, கோரளைப்பற்று பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை காலநடைகளை மேய்ப்பதன் மூலம் நடத்திச்செல்லும் பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் கைங்கரியமான மேய்ச்சல் நிலங்களை விவசாயக் கணிகளாக்கி தனது சகாக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் செயலில் கருணா இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கிரான் மற்றும் செங்கலடி கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் செயலாளர் நிமலன் கந்தசாமி இதுபற்றிக் கூறுகையில், "எமது மேய்ச்சல் நிலங்களை கருணா விவசாய நிலங்களாக மாற்றி தனது அரசியலுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நாம் முறைப்பாடுகளை முன்வைத்து வருகிறோம், ஆனால் கிரான் விவசாய அம்பிவிருத்தி அதிகரியோ கருணாவின் கட்டளைக்குப் பயந்து எமது மேய்ச்சல் நிலங்களை கருணாவின் சொற்படி விவசாயக் காணிகளாக மாற்றும் நடவடிக்கையினை ஆரம்பித்துவிட்டார்" என்று கூறினார்.

மேலும், கருணாவினால் புதிய விவசாயக் காணிகளைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் அவரது கொலைப்படை உறுப்பினர்களும், அவர்களது நண்பர்களும் இம்மேய்ச்சல் நிலங்களில் இன்னும் கால்நடைகளை வளர்த்துவரும் பண்ணையாளர்களை அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ச்சியாக மிரட்டிவருவதாகத் தெரியவருகிறது.

கருணாவினால் அபகரிக்கப்பட்டிருக்கும் இந்த மேய்ச்சல் நிலம் பாலை வெட்டுவான் பகுதியில் அமைந்திருப்பதுடன் நீர்த்தேக்கங்களையும் கொண்டிருக்கிறது. கால்நடை வளர்ப்பிற்கு மிகவும் உசிதமான பகுதியென்பதால் பெருமளவு பண்ணையாளர்கள் இப்பகுதியினை தமது வாழ்வாதாரத்திற்காகப் பாவித்து வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


கருணாவின் இந்த நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் பண்ணையாளர்கள் இதுபற்றி மேலும் கூறுகையில், "அரச ஆதரவுடன், தீவிர சிங்கள பெளத்த பிக்குகள் தலைமையில் சிங்களமயமாக்கப்பட்ட எமது நிலங்களால் நாம் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்துவருகின்ற நிலையில், கருணாவைப் பாவித்து சிங்களப் பேரினவாதம் அதே பிரித்தாளும் தந்திரம் மூலம் எமது நிலங்களை காவுகொள்ள பார்க்கிறது" என்று கூறுகின்றனர்.

கருணாவின் பலாத்கார காணி அபகரிப்பிற்கு பிரதேச செயலாளரும், மவட்ட செயலாளரும் துணைபோவதாகவும், தமது நலன்களுக்காகவும், பதவிகளுக்காகவும் கருணாவுக்குத் துணையாக நின்று மக்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, ஆடி 2018

கருணா, பிள்ளையான், டக்கிளஸ்  துணை ராணுவக் கொலைக்குழுக்களை மீள அணிதிரட்டும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை

Ranil refuses to resign during talks with Maithripala | Colombo Gazette

ராணுவப் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்டுவந்த முன்னாள் துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் சிலரின் தகவற்படி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் தமக்குக் கீழான பாதுகாப்புப் பிரிவுகளின் புலநாய்வுத்துறையினருக்கு வழங்கியுள்ள பணிப்புரையின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ராணுவப் புலநாய்வுச் சேவைக்கு வலுச் சேர்க்கும் முகமாக கருணா மற்றும் பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழுக்களை மீள ஒருங்கமைத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு பணித்திருப்பதாகத் தெரியவருகிறது.

Daily Mirror - Mahesh Senanayaka new Army Commander


கடந்த 4 வாரங்களாக இலங்கை ராணுவத்தின் தளபதி மகேஷ் சேனநாயவுக்கும் துணைராணுவக் கொலைக்குழுக்களுக்கும் இடையே நடந்துவரும் சந்திப்புக்களில் இதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், மீள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கும் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு தகுந்த சன்மானமும், சலுகைகளும் வழங்கப்படும் என்று ராணுவத் தளபதியினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. துணைராணுவக் கொலைக்குழுக்களை மீள் ஒருங்கிணைத்து அதன் நடவடிக்கைகளை தொடங்கும் முகமாக மகேஷ் சேனனாயக்கவின் பதவிக்காலம் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மேலும் ஒரு வருடத்தால் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துணைராணுவக் கொலைக்குழுக்களுக்கான நேர்முக தெரிவுகள் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் போர்காலத்தில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மக்கள் மேல் உளவியல் ரீதியிலான அச்சமூட்டும் நடவடிக்கள் ஆகியவற்றில் கைதேர்ந்த அதிகாரிகளினால் நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரியவருகிறது.

Long-range reconnaissance patrol - Wikipedia

பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்குக் காரணமான இந்த ராணுவப் புலநாய்வுத்துறை அதிகாரிகள் யுத்தத்தின்பின்னர் பல உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதுடன், இவர்களில் அனைவருமே முன்னள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மிகுந்த விசுவாசம் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மைத்திரிபால மற்றும் ரணில் ஆகியோரின் புதிய அரசில் இந்த அதிகாரிகள் தெற்கின் பகுதிகளுக்கு பதவி உயர்வுடனும், சம்பள அதிகரிப்புடனும் மாற்றப்பட்டு வந்தனர் என்று தெரியவருகிறது. இவர்களையே மீண்டும் தமது கொலைப்பணிகளை ஆரம்பிக்க துணைராணுவக் கொலைக்குழுக்களை மீள் ஒருங்கிணைக்கும் பணிக்கு நல்லாட்சி அரசாங்கம் வரவழைத்திருக்கிறதென்பது குறிப்பிடத் தக்கது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆவணி 2018

திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பிளவினை உருவாக்க துணைராணுவக் கொலைக்குழுக்களைக் களமிறக்கிவரும் ராணுவப் புலநாய்வுத்துறை

ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணைராணுவக் கொலைப்படை பிரமுகர் ஒருவர் கிழக்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் முறுகலினை ஏற்படுத்த கட்டைப்பறிச்சான் ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டு வரும் ராணுவப் புலநாய்வுத்துறையினர் கருணா துணை ராணுவக் கொலைப்படை உட்பட இன்னும் வேறு துணைராணுவக் குழுக்களைப் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இனரீதியிலான தாயகச் சிதைப்பிலிருந்து மக்களின் கவனத்தினைத் திசை திருப்பி, தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையே கைகலப்பினை உருவாக்குவதன் மூலம், தமது இன அடக்குமுறையினை மேற்கொள்ள மைத்திரிபால -  ரணில்  நல்லாட்சி அரசு முயல்வதாகவும் இந்த ஆயுததாரி மேலும் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் மூதூர் பகுதியில் இடம்பெற்ற இரு சமூகங்களுக்கிடையிலான பிணக்கில் கருணா குகுழுவே இருந்ததாகவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலிலேயே இவர்கள் செயற்பட்டுவருவதாகவும் தெரிகிறது. அரசின் அமைச்சுக்களூடாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழரின் தாயகச் சிதைப்பிற்கு முஸ்லீம்களைக் காரணமாகக் காட்டுவதன் மூலம், அவர்கள் மீதான தாக்குதல்களை கருணா துணைக் கொலைப்படையுறுப்பினர்கள் தலைமையில் "தமிழர்கள்" எனும் போர்வையின் கீழ் நடத்த எத்தனிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, மூதூரில் முஸ்லீம் தீவிரவாத அமைக்களுடன் நெருங்கிச் செயற்பட்டுவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினர், அவர்களுக்கு போதைவஸ்த்துப் பாவனையினை அறிமுகப்படுத்திவருவதாகவும், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளுக்காக முஸ்லீம் இளைஞர்களை இவர்கள் தூண்டிவருவதாகவும் இந்த கொலைக்குழு முக்கியஸ்த்தர் மேலும் கூறுகிறார்.


திருகோணமலை மாவட்டத்தில் எல்லையிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் வரையான கரையோரப் பகுதிகளில் சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்றங்களைத் தமிழர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருவதையடுத்து, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவே தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பிரிவினையொன்றினை மீள ஆரம்பித்து நடத்த ராணுவப் புலநாய்வுத்துறை முயன்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2018

மட்டக்களப்பில் அரசு சாரா நிறுவன ஊழியர்களை ராணுவத்திற்காகச் செயற்படுமாறும் வற்புறுத்தும் அவ்வமைப்பின் தலைவரும் கருணா துணைராணுவக் கொலைப்படையும்

10431354_533202356806298_2504733949311735255_o.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ZxQCTdsCKbMAX_MDLNh&_nc_ht=scontent.fsyd10-2.fna&tp=6&oh=4da046f71db1f2225c4e896b30b0e7cd&oe=60763547

பிரபல இனவாத பிக்குவின் அருகில் அமர்ந்திருக்கும் ஷக்ய நாணயக்கார 

 

கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசு சாரா அமைப்பொன்றின் நிர்வாக இயக்குநரான ஷக்ய நாணயக்கார மட்டக்களப்பில் அவ்வமைப்பின் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் இலங்கை ராணுவத்துடனும் பொலீஸாருடனுன் அவர்கள் சேர்ந்து செயற்பாடமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதாக இக்கருத்தரங்கில் பங்குகொண்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுசாரா அமைப்புக்களின் தேசியச் செயலகத்தின்மூலம் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பெருமளவு கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

நாணயக்கார தொடர்ந்தும் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் கிளிநொச்சியில் தமது அமைப்பினைச் சார்ந்த சிலர் ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டு வருகையில் மட்டக்களப்பில் மட்டும் தமிழர்கள் ராணுவத்திற்கு உதவாமல், விலகிச் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ராணுவத்திற்கும் சமூக அமைப்புக்களுக்குமான தொடர்பினை ஏற்படுத்துவதே தனது கடமை எனும் தொனியில் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு எனும் கோட்பாட்டின் கீழ் "தேசிய கலந்துரையாடல்" அமைப்பினரின் உதயவியுடன் இவ்வமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்குகள் சமூகத்தின் அடிப்படை மட்டத்திலிருந்து "ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் கோட்பாட்டினை முன்வைத்தும், ஈழத் தமிழர் எனும் அடையாளத்தை அழித்தும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாகாணசபை முறையிலான அதிகாரப் பரவலாக்கம் என்பதனை நிராகரித்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே உரிமை, ஒரே அடையாளம் எனும் கருப்பொருளுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்தி, நலிவுறவைக்கும் கைங்கரியத்தை அரசும் ராணுவமும் முன்னெடுத்துவருவதாக இவ்வமைப்பின் செயற்பாடுகளை அவதானித்துவரும் மனோ கணேசனின் மனிதவுரிமை அமைப்புக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் "மாவட்ட நல்லிணக்க செயற்பாடுகள்" எனும் போர்வையில் நாணயக்கார எனும் அரச - ராணுவ பின்புலத்தில் இயங்கும் நபருக்கு உதவியாக கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரியும் கருணாவின் பிரத்தியே செயலாளருமான வி கமலதாஸ் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வமைப்பிற்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நாணயக்காரவின் இந்தக் கருத்தரங்கில் பேசிய கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி கமலதாஸ் வடமாகாணத் தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் கடுமையாகச் சாடியதுடன், கிழக்கு மாகாணத் தமிழர்கள் தனித்து இயங்கவேண்டுமென்றும், ராணுவத்துடன் நல்லுறவைப் பேணுதல் அவசியம் என்றும் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டதாக இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். நல்லிணக்கம் எனும் பெயரில் அரச ராணுவமும் அதன் துணைராணுவக் கொலைப்படைகளும் தமிழர்களின் அடையாளத்தினை இல்லாமல் அழித்து, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் "ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் அடையாளத்தினை விதைக்க முயன்றுவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, தை 2019

படுவான்கரையில் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவரும் கருணா துணைராணுவக் கொலைப்படையினர்

Mailaththanmadu_grazing_land.jpg

நல்லாட்சி அரசின் மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கிச் செயற்பட்டுவரும் முன்னாள் துணையமைச்சரும் துணைராணுவக் கொலைப்படையொன்றினை நடத்தி வருபவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்டளையின் கீழ் அவரது ஆயுததாரிகள் படுவான்கரையின் பாலை வெட்டுவான் பகுதியில் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமேற்கில் அமைந்திருக்கும் இம்மேய்ச்சல் நிலப்பகுதி 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தது. 2007 இல் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா செய்த துரோகத்தின்மூலம் இப்பகுதி சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களையும் இப்பகுதி எதிர்நோக்கி வருகிறது. 


இதேவேளை, கடந்த இரு வாரங்களில் மட்டும் குறைந்தது 20 கன்றுகளை சிங்களக் குடியேற்றக்காரர்கள் இப்பகுதியிலிருந்து களவாடிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பொலீஸாரிடம் முறையிடச் சென்றபோது, திருடர்களை அடையாளம் காட்டினால் மட்டுமே தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணைராணுவக் கொலைப்படையினரால் பசுக்கள் சுட்டுக் கொல்லப்படும் பால வெட்டுவான் (பாலை மடு) பகுதிக்கு ஓரிரு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மயிலத்தை மடு மேய்ச்சல் தரைகளிலேயே சிங்களவர்களால் பசுக்கன்றுகள் திருடிச் செல்லப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

பொலீஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அண்மையில் தெரிவித்த கருத்தில் கிழக்கு மாகாணத்தில் முப்படைகளையும் பொலீஸாரையும் தவிர வேறு எவராவது ஆயுதங்களுடன் நடமாடினால் கைதுசெய்யப்படுவார்கள் என்று கூறியிருக்கும் நிலையில், பாலை வெட்டுவான் நீர்த்தேக்கத்தருகில் முகாமிட்டிருக்கும் கருணா துணைராணுவக் கொலைப்படையினர் வாழ்வாதாரத்திற்காகப் போராடிவரும் தமிழர்களின் கால்நடைகளை கொன்றுவருவதுபற்றி நடவடிக்கை எதனையும் எடுக்காதது ஏன் என்றும் இவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கருணா துணைராணுவக் கொலைக்குழுவின் ஆயுததாரிகள் டி - 56 துப்பாக்கிகள் சகிதம் பாலை வெட்டுவான் பகுதியில் நடமாடுவதாகவும், இப்பகுதியில் முகாமிட்டு  சிங்களக் குடியேற்றக்காரர்களுடன் இணைந்து  சிங்கள மயமாக்கலினை ஆதரித்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூறுகின்றனர். கருணா கொலைக்குழு ஆயுததாரிகள் தமது கால்நடைகளைச் சுட்டுக்கொல்வதுபற்றி பொலீஸாரிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளை அவர்கள் உதாசீனம் செய்வதாகவும், "அவர்களிடம் நீங்களே போய்ப் பேசுங்கள்" என்று கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்லாண்டுகளாக தமிழர்களால் பாவிக்கப்பட்டுவரும் மேய்ச்சல் நிலங்களுக்குள் பிரவேசிப்பதென்றால் அனுமதிப்பத்திரம் அவசியம் என்று பொலீஸார் திடீரென்று கட்டாயப்படுத்துவதாகவும், ஆனால் அரச பால்ப்பண்ணை நிறுவனமான மில்க்கோவினால் தமக்கு தரப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பொலீஸார் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிரான், சித்தாண்டி, கோரகள்ளி மடு மற்றும் சந்திவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த பண்ணையாளர்கள் மேலும் கூறுகையில், "2007 இலிருந்து சிங்களவர்கள் எமது கால்நடைகளைத் திருடியும், எமது மேய்ச்சல் நிலங்களை அபகரித்தும் வருகின்றனர். தற்போது கருணா துணைராணுவக் கொலைக்குழுவும் எமது கால்நடைகளை சுட்டுக் கொல்கிறது. எமக்கு தற்போது இரு பக்கத்திலிருந்து அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன" என்று கூறுகிறார்கள்.

பாலை மடு நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருக்கும் சுமார் 200 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களில் மேயும் கால்நடைகள் இந்த நீர்த்தேக்கத்தினை நாடி வருகின்றன. இப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன அரசினால் கருணா குழுவிற்கு வழங்கப்பட்ட 20 ஏக்கர்கள் பகுதியில் முகாமிட்டு தங்கியிருக்கும் இக்கொலைப்படை நீர்த்தேக்கத்திற்கு வரும் கால்நடைகளைக் கொன்று வருகின்றனர். 

தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இம்மேய்ச்சல் தரைகளிலிருந்து 550 ஏக்கர்களை விவசாய நிலமாக்கித் தருவேன் என்று கருணா உறுதியளித்திருந்ததும், அதன்படியே இப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துவரும் பண்ணையாளர்களை விரட்டுவதற்காக அவர்களின் கால்நடைகளைச் சுட்டுக் கொல்வதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை , மைத்திரிபால அரசின் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மூலம் படுவான்கரையில் 10,000 ஏக்கர்களை சிங்களமயமாக்கும் கைங்கரியத்தில் மகாவலி அபிவிருத்திச் சபை ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபாலவுக்கும் கருணாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒப்பந்தத்தினையடுத்தே இப்பகுதியில் கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுதங்களுடன் முகாம் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்ப் பண்ணையாளர்களை விரட்டும் வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Mahaweli System B

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "பி பிரிவு" மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை சிங்களமயமாக்கும் நோக்கத்துடனேயே செயற்படுத்தப்பட்டு வருகிறது. 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்தபொழுது சிங்களக் குடியேற்றங்கள் எவையுமே மேற்கொள்ளப்படவில்லையென்றும், தமிழ்ப் பண்ணையாளர்கள் சுதந்திரமாக தமது வாழ்வாதாரத்தினை இப்பகுதியில் பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, ஆனி 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப் புறங்களில் மீண்டும் கருணா பிள்ளையான் கொலைக்குழுக்களைக் களமிறக்கும் சிங்கள ராணுவப் புலநாய்வுத்துறை

http://www.uktamilnews.com/wp-content/uploads/2015/04/karuna-and-gotha-AND-PILLAYAN.jpg


மட்டக்களப்பு மாவட்டத்தின் வட மேற்கில், 45 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகரைப் பகுதியில் இனவழிப்பு யுத்தத்தினால்நலிவடைந்திருக்கும் மக்களைக் கண்காணிக்கவென்று கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படைகளை மீளவும் களமிறக்கியிருக்கிறது ராணுவப் புலநாய்வுத்துறை. 

இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரும் உறவினர்கள், இம்மக்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள், சமூக மட்டத்திலான ஒன்றுகூடல் விபரங்கள்,  இப்பகுதி மக்களுக்கான வருமானம், அவை வரும் மூலம், பணத்தினை அவர்கள் செலவழிக்கும் முறைகள், புதிதாகக் குடியேறும் மக்களின் கொட்டகைகளின் விபரம், அவர்கள் அப்பகுதியில் தங்குய்வதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறான தகவல்களை இம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு இவ்விரு துணைராணுவக் கொலைக்குழுக்களும் பாவிக்கப்பட்டு வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாகரைப் பகுதி 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவும், அவர்களது நிர்வாகப் பிரதேசமாகவும் விளங்கிவந்தது குறிப்பிடத் தக்கது.

2009 இன் பின்னர், இம்மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2007 இற்கு முட்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றுக்கு மேலாக, இன்று இவர்களுக்கென்று இருக்கும் காணிகளும் துணைராணுவக் கொலைப்படைகளின் ஆதரவோடு சிங்களக் குடியேற்றவாதிகளால் சிறிது சிறிதாக சூறையாடப்பட்டு வருகின்றன. 

மக்களின் வீடுகளுக்குள் திடீர் திடீரென்று நுழையும் ராணுவப் புலநாய்வுத்துறையும், அவர்களின் ஏவலாளிகளான கருணா பிள்ளையான் கொலைப்படையுறுப்பினர்களும் மக்களின் அன்றாட வாழ்வில் இடம்பெறும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தமக்கு அறியத் தரப்படவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், தம்மோடு ஒத்துழைக்காதவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.

கிராமப்புற அபிவிருத்திச் சபை செயற்பாட்டாளர்களின் கூற்றுப்படி மாங்கேணி, காயங்கேணி மற்றும் பண்ணைக் கொலனி ஆகிய கிராமங்களிலேயே துணைராணுவக் கொலைக்குழுக்கள் அதிகம் உலவ விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமது காணிகளைத் துப்பரவு செய்து, மீளக் குடியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லையென்றும் கூறப்படுகிறது. அக்காணிகளுக்கான உரிமைப் பத்திரம், கொட்டகைகளை அமைக்க அவர்களுக்கு பணம் கிடைத்த விபரம் போன்ற விபரங்கள் உட்பட பல விடயங்களை அவர்கள் மக்களை மிரட்டிப் பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

இப்பகுதியில் சகல அதிகாரம் கொண்டவர்களாக ராணுவமும் அவர்களால் வழிநடத்தப்படும் கருணா பிள்ளையான் கொலைப்படையுறுப்பினர்களும் திகழ்வதாகவும், இப்பகுதியில் மீள்குடியேற்றம் முதல் சகலவிதமான நிவாரணச் செயற்பாடுகள்வரை பிரதேச செயலாளரின் அனுமதி கிடைத்தப்போதும் கூட, ராணுவத்தினரினதும், துணைராணுவக் கொலைப்படைகளினதும் அனுமதி கிடைத்ததன் பின்பே ஈடுபட அனுமதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ரஞ்சித் உங்களின் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் .

இதே போல் முன்னாள் புளொட் உறுப்பினர் வெற்றிச்செல்வன் முகநூலில் எழுதும் தொடர்களில் இயக்கம் இயங்க பணம் தேவை எப்படி எல்லாம் கேரளா அயல் மாநிலங்களில் கொள்ளை அடித்தார்கள் பொறுக்கித்தனமாய் என்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் நாக்ஸலைட் களின் தொடர்புகள் இந்திய அரசு கொடுத்த ஆயுதத்தையே அந்த அரசுக்கு எதிராக இயங்கும் தீவிர வாத குழுக்களுக்கு விற்று  அந்த பணத்தில் தலைவர்கள் சுகவாழ்க்கை  என்ற  பல தகவல்களை சொல்கிறார் .

ஆக மொத்தம் ராஜீவ்  கொலைக்கு முன்பே ஈழத்து தமிழர்களுக்கு எதிரான போக்கை சருகு கூட்டம்கள் உருவாக்கி உள்ளார்கள் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஐப்பசி 2019

படுவான்கரைப்பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களாலும், கருணா குழு துணைராணுவக் கொலைப்படையினராலும் கடந்த 10 மாத காலத்தில் கொல்லப்பட்டுள்ள கால்நடைகளின் எண்ணிக்கை 1500 !

கோரளைப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவினுள் அடங்கும் கிரான் மற்றும் செங்கலடிப் பகுதியில் கடந்த 10 மாதகாலத்தில் மட்டும் குறைந்தது 1500 கால்நடைகளை சிங்கள குடியேற்றக்காரர்களும் கருணா துணைராணுவக் கொலைப்படையினரும் சுட்டுக் கொன்றுள்ளதாக இப்பகுதியின் பாலுற்பத்தி சபையின் செயலாளர் நிமலன் கந்தசாமி தெரிவிக்கிறார். இவ்வாறு கால்நடைகளை இரு பக்கத்தினராலும் இழந்துவரும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் பாழாக்கும் முகமாக மில்கோ எனப்படும் அரச பாலுற்பத்திச் சபை, தமிழர்களிடமிருந்து மிகவும் குறைவான விலைக்கே பாலினைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார். அநியாய விலைக்குக் கொள்வனவுசெய்யப்படும் பாலிற்கான கொடுப்பனவுகள் கூட நீண்ட கால தாமதத்தின் பின்னரே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுவான்கரையிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை நிறுவிவரும் அரசாங்கம் மில்கோ அதிகாரிகளூடாக தமிழ் பண்ணையாளர்களை மேய்ச்சல் நிலங்களைக் கைவிட்டு பண்ணைகளை ஆரம்பித்து மாட்டுத் தீவனத்தைக் கொண்டு தமது கால்நடைகளைப் பராமரிக்கவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறது. சகல வழிகளிலும் தமிழர்களை இப்பகுதியில் இருந்து வெளியேற்றிவிட அரசு கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாகக் கூறும் நிமலன், சிங்கள ஊர்காவல்ப்படை மற்றும் துணைராணுவக் கொலைக்குழுக்களினைக் கொண்டும் பசுக்களைக் கொன்றுவருகிறது என்று கூறுகிறார்.

சிங்களக் குடியேற்றக்காரர்களினால் சுட்டுக் கொல்லப்படும் பசுக்களை இறைச்சிக்காக விற்பதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை அரச வனவளத்துறை, ராணுவம் மற்றும் பொலீஸார் உதவிவருவதாகவும், இவர்களுக்கான பாதுகாப்பினையும் அவர்களே வழங்கி வருவதாகவும் கூறுகிறார் நிமலன்.

இப்பகுதியில் 2007 இன் பின்னர் குடியேறிய சிங்களவர்களில் ஒரு பகுதியினர் தமிழர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினை அடுத்து தற்காலிகமாக வெளியேறிச் சென்றதாகக் கூறப்பட்டது. மீதமிருந்தோர் ராணுவத்தினரின் பாதுகாப்புடனும், உதவியுடனும் குடியேற்றத்தினை விரிவுபடுத்தி வந்ததாகவும், ராணுவத்தால் இவர்களுக்கு வழங்கப்பட்ட T - 56 தானியங்கித் துப்பாக்கிகளைக் கொண்டே தமிழர்களின் கால்நடைகளை இவர்கள் கொன்றுவருவதாகவும் படுவான்கரை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இது இவ்விதமிருக்க, இதே பகுதியில் பிரிதொரு திசையில் கருணா துணைராணுவக் கொலைக்குழுவினரும் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களை அச்சுருத்தி இப்பகுதியிலிருந்து நிரந்தரமாகவே விரட்டும் நடவடிக்கையில் அரசு சார்பாகச் செயற்பட்டு வரும் இக்குழுவினர் தம்மால் கொல்லப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவில் நீர் அருந்த நீர்த் தேக்கங்களை நாடிவரும் மாடுகளை பொறிவைத்துப் பிடிக்கும் இக்குழுவினர் அவற்றைச் சுட்டுக் கொல்வதாக மக்கள் கூறுகின்றனர்.

அண்மைய ஆட்சிமாற்றத்தின் பின்னர் அதிகரித்துவரும் இவ்வாறான கால்நடைகள் படுகொலைகள் கூறும் விடயம் யாதெனில், இப்பகுதியில் மீளவும் விரைவுபடுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றினை சிங்கள அரசு தனது முப்படையினரைக் கொண்டும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரைக் கொண்டும் நடத்தத் தொடங்கியிருக்கிறது என்பதைத்தான் என்று நிமலன் கூறுகிறார்.

பெரும்பாலான கால்நடைக் கொலைகள் பெரிய மாதவனை மற்றும் மயிலத்தை மடு ஆகிய பகுதிகளிலேயே நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஐப்பசி 2019

கருணா பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுக்களின் பின்புலத்துடன் மட்டக்களப்பில் மணற்கொள்ளையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்கள்

கோரளைப்பற்று வடக்குப் பகுதியான வாகரையில் ஆற்று மணற்கொள்ளையில் ஈடுபட்டுவரும் கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மணற்கொள்ளையர்கள், தம்மை தடுக்க முனைந்த பிரதேச சபை அதிகாரியான கரன் என்பவரை மிரட்டியுள்ளதுடன் "நாங்கள் நினைத்தால் உன்னை இப்பதவியிலிருந்து அகற்றுவோம்" என்றும் கூறியிருக்கின்றனர். தமக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மணல் அகழும் பகுதியினை நீட்டிக்கவேண்டும் என்று அவ்வதிகாரியை மிரட்டிய சிங்கள மணற்கொள்ளையாளன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தாவின் தேர்தல் செலவுகளுக்காக மணற்கொள்ளையில் ஈடுபடவேண்டியிருக்கிறதென்றும், கோத்தாவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், ஆலோசகரும் தமக்குப் பின்னால் பக்கபலமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறான்.

வாகரையில் கட்டுப்பாடற்ற ஆற்று மணல் அகழ்வினால் இப்பகுதியில் ஏற்படவிருக்கும் பாரிய சுற்றுப்புறச் சூழல் அநர்த்தத்தினைத் தடுக்கும் முகமாக இப்பகுதியில் ஒரு சில அதிகாரிகள் மணல் அகழ்வதற்கான அனுமதிகளைக் கட்டுப்படுத்த எத்தனித்துவரும் நிலையில், அரச அமைச்சுக்களில் ஒன்றான கனியவள மற்றும் புவியியல் அமைச்சு மணற்கொள்ளையர்களுக்கான ஆசீர்வாதத்தினை வழங்கிவருவதாக நம்பப்படுகிறது.

தமிழர் தாயகத்தின் ஒரு பாகமான வாகரையிலிருந்து கொள்ளையர்களால் அகழப்படும் மணல் வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதிசெய்யப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

அரச ஆதரவுடனும், துணைராணுவக் கொலைக்குழுக்களின் பக்கத்துணையுடனும் இப்பகுதியில் மணல் அகழ்ந்துவரும் சிங்கள மணற்கொள்ளையர்களின் நடவடிக்கையினால் வெருகல் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துவருவதாகவும், கடும் மழைக் காலத்தில் இப்பகுதியில் அமைந்திருக்கும் தமிழர்களின் மனைகளுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்துவருவதாகக் கூறும் சுற்றுப்புறச் சூழல் அதிகாரிகள் ஆற்று நீரின் உப்பின் அளவும் இதனால் அதிகரித்துவருவதாகவும் கூறுகிறார்கள். 

சிங்கள மணற்கொள்ளையர்களுக்கு துணையாகச் செயற்பட்டுவரும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படையினரும் தம் பங்கிற்கு இப்பகுதியில் மணற்கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. இதுவரை காலமும் ஆயுதமுனையில் , சட்டவிரோதமாக மணற்கொள்ளையில் ஈடுபட்டுவந்த இக்கொலைக் குழுக்கள் தற்போது அனுமதிப்பத்திரங்கள் ஊடாக மணற்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், அனுமதிப்பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவினைக் காட்டிலும் மிக அதிகளாவான மணலினை அதிகாரிகளை அச்சுருத்தி இவர்கள் அகழ்ந்துசெல்வதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் மக்களை தமது மணற்கொள்ளைக்காகப் பாவிக்கும் இவர்கள், மணல் அகழ்விற்கெதிரான மக்களின் தொடர்ச்சியான ஆர்ப்பட்டங்களையும், இயற்கை அனர்த்தங்களையும் சட்டைசெய்யாது சட்டவிரோத மண் அகழ்வில் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2007 வரை புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழரின் இயற்கை வளம் இன்று இனத்துரோகிகளாலும், எதிரியினாலும் சூறையாடப்பட்டு, நிரந்தரமான அநர்த்தத்தினை எதிர்நோக்கிவருகிறதென்பது குறிப்பிடத் தக்கது.

மகாவலி ஆற்றின் ஒரு பகுதியான வெருகல் ஆற்றின் அருகில் காயங்கேணி, மாங்கேணி, கண்டலடி, பால்ச்சேனை மற்றும் கதிரவெளி ஆகிய தமிழ்க் கிராமங்கள் அமைந்திருப்பதுடன் A - 15 நெடுஞ்சாலையினை ஒட்டியும் அமைந்திருக்கின்றன.
 

Edited by ரஞ்சித்
spelling
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, கார்த்திகை 2019

இந்த ஜனாதிபதித் தேர்தலில் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ஷவுக்காக கிழக்கில் களம் இறங்கிய கருணா பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுக்கள்

In Sri Lanka's election, bumps ahead

கடந்த சனிக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழர்கள் பெருமளவில் கல்ந்துகொண்டு வாக்களித்ததுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகளால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இனக்கொலையாளியுமான கோத்தாபயவுக்கு ஆதரவாக கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரச்சாரத்தை நிராகரித்துள்ள மக்கள் தமதினத்தினை அழித்த ஒரு கொலையாளி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லையென்பதை இத்தேர்தல்களில் அவர்கள் வாக்களித்த முறை காட்டுகிறதென்று தெரிவிக்கப்படுகிறது.

இன்னொரு சிங்கள இனவாதியான சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்துள்ள தமிழர்கள், ஒரு இனக்கொலையாளியுடன் ஒப்பிடும்பொழுது சஜித்திற்கு வாக்களிக்கலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவின் கருத்துப்படி அண்மைய காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் வன்முறைகள் குறைவாகக் காணப்பட்ட தேர்தல் இதுவென்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனாலும், போர்க்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லீம்களை மன்னார் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவரும்போது கோத்தபாய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக முஸ்லீம்கள் பொலீஸில் முறையிட்டிருக்கின்றனர்.

கிழக்கிலும், வடமேற்கிலும் சிங்கள இனவாதிகளும், கருணா - பிள்ளையான் துணைராணுவக் கொலைக் குழுக்களும் முஸ்லீம்களுக்கெதிரான இன்வாதத்தினைக் காகிவந்ததாகவும், வெளிப்படையாகவே கோத்தபாயவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று தமிழர்களை இக்கொலைக் குழுக்கள் கிழக்கில் வற்புறுத்திவந்ததாகவும் கூறப்படுகிறது.


அனைத்து எதிரணியினையும் ஒன்றிணைத்து பொதுவான வேட்பாளரை தெரிவுசெய்யும் முயற்சி இறுதியில் கைகூடாமல்ப்போனதென்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அன்றாட பிரச்சினைகள் குறித்து தெளிவான உத்தரவாதம் ஒன்றினை வழங்கும்வரை எந்தவொரு வேட்பாளருக்கும் தமது ஆதரவினை தெரிவிப்பதில்லையென்கிற முடிவினால் பொதுவான எதிரணியிலிருந்து தமிழரசுக்கட்சி விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அதேவேளை தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி ஆதரிக்கும் முடிவினையும் தமிழ்க் கட்சிகளால் எடுக்கமுடியவில்லை.

இத்தேர்தலில் போர்க்குற்றவாளிகளும் , இனக்கொலையாளிகளுமான ராஜபக்ஷ சகோதரர்களின் ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அதிகப்படியான வாக்கு வீதம் கணக்கிடப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஆவணி 2020

கடற்படையினருடன் இணைந்து கிழக்கில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழித்துவரும் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு

fisheries: purse seine - Students | Britannica Kids | Homework Help

கரையிலிருந்து 10 மைல்களுக்குள் பாரிய இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடக் கூடாதெனும் சட்டத்தினையும் மீறி கடற்படையின் ஒத்துழைப்புடன் கிழக்கின் கடல்வளத்தினை  நாசமாக்கிவருவதாக பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் மீது கிழக்கின் மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

பிள்ளையான் கொலைக்குழுவினால் பயன்படுத்தப்படும் பாரிய இழுவைப்படகுகளின் சுருக்கு வலையில் பெருமளவு மீன்குஞ்சுகள் உட்பட அழிந்துபோகும் நிலையிலிருக்கும் பல மீன்களும் அகப்பட்டுவருவதால் இது கடல்வளத்தினை நீண்டகால அடிப்படையில் அழித்துவருகிறதென்றும், சில மீனினங்கள் முற்றாகவே அழியும் நிலையினை இந்த சட்டத்திற்கு முரணான மீன்பிடிமுறை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், கிழக்கின் கடல் வளத்தின் சமநிலையினை இது வெகுவாகப் பாதித்துவருவதாகவும் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் அமைக்கப்பட்டிருக்கும் "காஷியப்ப" எனும் சிங்கள ஆக்கிரமிப்புக் கடற்படை முகாமிலிருந்து இயங்கிவரும் படையினர் பிள்ளையான் கொலைப்படையினரும், தென்னிலங்கை மீனவர்களும் பாரிய இழுவைப் படகுகளைப் பாவித்து கிழக்கின் கரையினை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஊக்குவித்து வருகின்றனர். அத்துடன் உள்ளூர் மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய்களை கடற்படைக்குக் கப்பமாக வழங்கவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் இன்னொரு கொலைப்படையான டக்கிளஸின் ஈ பி டி பீ ஆயுததாரிகள் வடபகுதி மீனவர்களிடம் பறிக்கும் பணத்திற்கு நிகராக கிழக்கில் பிள்ளையான் கொலைக்குழுவும் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதுடன் தமது பாரிய படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதன் மூலம் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாரியளவில் அழித்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்களையும், முஸ்லீம் மீனவர்களையும் இழுவைப்படகுகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை ஊக்குவித்துவரும் கடற்படையினர், அதேவேளை பிள்ளையான் கொலைக்குழுவினரைப் பாவித்து தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை முடக்கிவருகின்றனர் என்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புப் படைகளுடன் இணைந்து இனத்துரோகிகள் செய்துவரும் இந்த சூழல் நாசகார செயலினால் குறைந்தது 1000 தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினை இழக்க நேரிட்டுள்ளதோடு, அவர்களின் குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து அகன்றுசெல்லும் நிலையினையும் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஆவணி 2020

கிழக்கில் பலமிழக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளும், இனக்கொலையாளிகளை ஆதரித்தும், முஸ்லீம்களை தீவிரமாக எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் கருணாவும்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களில் ஆறு ஆசனங்களை வட மாகாணத்தில் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே தேர்தலில் களமிறங்கும் இரு தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வடமாகாணத்தில் குறைந்தது 8 ஆசனங்களை தேசியத்திற்கு ஆதரவான கட்சிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சனத்தொகையில் அதிகமுள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களில் மூன்று இடங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பில் இரு ஆசனங்களையும், திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Karuna Amman reveals what he will do after the election. - YouTube

கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளான கூட்டமைப்பு, காங்கிரஸ், தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பலவீனத்தினைப் பயன்படுத்தியும், முஸ்லீம்களுக்கெதிரான அதிதீவிர இனவாதத்தினைக் கக்கியும் இனக்கொலையாளிகளின் ஏவலாளியும், ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கொலைக்குழுவின் தலைவரான கருணா இனக்கொலையாளிகளின் சார்பாக இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும், முஸ்லீம்கள் மீதான துவேஷ அரசியலினை முன்னெடுத்தும் வரும் கருணா இத்தேர்தலில் வெற்றிபெறுவாராகவிருந்தால் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்திச் செய்யப்பட்டுவரும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு பாரிய பின்னடைவினை இது உருவாக்கும் என்று கிழக்கின் அரசியல் செயற்ப்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

TMVP Leader “Pillaiyaan” Implicated in Assassinations of TNA  Parliamentarians Pararajasingham and Raviraj – dbsjeyaraj.com

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இன்னொரு கொலைக்குவின் தலைவனான பிள்ளையானின் கட்சி சுமார் 68,000 வாக்குகளை இதேர்தலில் பெற்றிருப்பதோடு, தேசியக் கூட்டமைப்புப் பெற்ற 79,000 வாக்குகளுக்கு மிக அண்மையாக வந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இரு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நிலையில், துணை ராணுவக் கொலைக்குழுக்களின் ஊடாக ஒரு ஆசனத்தை இனக்கொலையாளிகள்  பெற்றிருப்பதன் மூலம் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குச் சவால் விடும் நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

இனக்கொலையாளிகளின் வழிநடத்தலில் செயற்பட்டு வரும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி பிள்ளையானும், மகிந்தவின் கட்சியில் நேரடியாகப் போட்டியிட்ட கொலைப்படை ஆயுததாரி கருணாவும் செய்துவரும் "அபிவிருத்தியும், சந்தர்ப்பவாதமும்" எனும் அரசியலின் மூலம் தமிழர் தாயகத்தில் உரிமைகளுக்கான அரசியலைனை சிங்களப் பேரினவாதம் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டியிருக்கிறதென்று கிழக்கின் அரசியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

Fragmenting Tamil Politics | CGS

தமிழ்த் தேசியத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கயீனத்தினை ஏற்படுத்தும் அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பு, காங்கிரஸ், மக்கள் கூட்டணி ஆகிய தேசியம் சார்ந்த கட்சிகளே இனக்கொலையாளிகளின் ஏவலாளிகள் மட்டக்களப்பில் வேரூன்றுவதற்கான  சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்றும் அவர்கள் மேலும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சிங்களப் பேரினவாதிகளின் ஏவலாளிகள் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தலா ஒரு ஆசனத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

Angajan Ramanathan (@AngajanR) | Twitter

32 Douglas Devananda Photos and Premium High Res Pictures - Getty Images

இது இவ்வாறிருக்க தமிழ்பேசும் முஸ்லீம்கள் சஜித்தின் கட்சிக்கே பெருமளவில் வாக்களித்திருப்பதாகத் தெரியவருகிறது.

புலிகள் இயக்கத்தின் முன்னாள்ப் போராளியொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இறுதிநேரத்தில் வடமாகாணத்தின் துணைராணுவக் கொலைக்குழுவான டக்கிளஸின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இனக்கொலையாளிகள் சார்பாக ஒரு ஆசனத்தினைப் பெற்றிருக்கிறார். வன்னியில் இனக்கொலையாளிகள் பெற்றுக்கொள்ளும் முதலாவது பாராளுமன்ற ஆசனம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது.

இனக்கொலையாளிகளும், போர்க்குற்றவாளிகளுமான ராஜபக்ஷ சகோதரர்களின் கட்சியே இத்தேர்தலில் அமோக வெற்றியீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajapaksa brothers win by landslide in Sri Lanka's election | Sri Lanka  News | Al Jazeera

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆவணி 2020

இனைக்கொலையாளிகளினதும், துணைராணுவக் கொலைக்குழுக்களினதும் அச்சுருத்தலினையும் மீறி மட்டக்களப்பில் இடம்பெற்ற காணமலாக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம்

 

சர்வதேச காணமலாக்கப்பட்டவர்களுக்கான நாளில், வடக்கிலும் கிழக்கிலும் தமது உறவுகளை இனக்கொலையாளிகளிடமும், இனத்துரோகக் கொலைகாரர்களிடமும் பறிகொடுத்த பெற்றோர்களும் உறவுகளும் இனக்கொலையாளிகளினதும், துணைராணுவக் கொலைப்படையினரினதும் அச்சுருத்தலினையும் மீறி இம்மாதம் 30 ஆம் திகதி எழுச்சிகரமாக தமிழர் தாயகத்தில் முன்னெடுத்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்றினைத் தடுக்கிறோம் என்கிற போர்வையில் பேரினவாதிகளின் காவல்த்துறையும், நீதித்துறையும் சேர்ந்து இட்ட முட்டுக்கட்டைகளை உதாசீனம் செய்த காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த எழுச்சியின் மூலம் இனக்கொலையாளிகளுக்கும் துணைராணுவக் கொலைப்படையினருக்கும் தெளிவான செய்தியொன்றினைச் சொல்லியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் மற்றும் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் கடத்திக் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவியான அமலநாயகி அமல்ராஜ் அவர்களை காவல்த்துறையும், நீதித்துறையும் 1000 பேருக்கு மேல் மக்களை ஒன்றுதிரட்டியதாக குற்றஞ்சுமத்தியிருக்கின்றன.

Batticaloa_Magistrate_Interim_order_Amalanayaki.jpg

அத்துடன், இந்த போராட்டத்தினை தாம் தடுக்க முயல்வதன் நோக்கம் புலிகள் மீளவும் ஒருங்கிணைவதைத் தடுக்கவே என்று மட்டக்களப்பு மாவட்ட காவல்த்துறை தனது முறையீட்டில் தெரிவித்திருக்கிறது. 

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு நிகழ்வினை இனக்கொலையாளிகளும், இனத் துரோகிகளின் கொலைக்குழுக்களும் தடுக்க முனைந்ததையடுத்து இப்போராட்டத்திற்கான பொதுமக்களினதும், தமிழ்த் தேசிய  அரசியல்வாதிகளினதும் ஆதரவு பெருகியிருக்கிறதென்பது குறிப்பிடத் தக்கது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலீஸாரின் உத்தரவினையும் மீறி இளைஞர்களுக்குத் தலைமைதாங்கிச் சென்றதாக பொலீஸார் கூறுகின்றனர். 

இனக்கொலையாளிகளின் பணத்திற்காகக் கட்சிதாவி இன்றுவரை அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எனும் போர்வையில் இனத்திற்கெதிராகச் செயற்பட்டு வரும் வியாழேந்திரன் தலைமையில் பேரணியொன்றினை மட்டக்களப்பில் நடத்திய இனக்கொலையாளிகள், தமது பேரணியினை மட்டும் கொரோனாவினைக் காட்டி தடுக்க நினைப்பது எங்கணம் என்று சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களுக்கு அருகில் பவனிவந்த இளைஞர்கள் பொலீஸாரை எச்சரித்ததாகவும், தாய்மாரைத் தடுக்கவிடமாட்டோம் என்று பொலீஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Thinakkural_31_08_2020.jpg

இதேவேளை கருணா மற்றும் பிள்ளையானினால் கடத்திச்சென்று கொல்லப்பட்ட தமது பிள்ளைகளுக்கான நீதியினைப் பெற்றுத்தரவேண்டும் என்று சர்வதேசத்திடம் கோரிக்கையொன்றினை தமது அமைப்பு முன்வைத்திருப்பதாக அமலநாயகி அன்று மாலை இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

Eelanadu_31_08_2020.jpg

ஆக்கிரமிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்திடம் சரணடைந்த தமது பிள்ளைகளையும், பின்னர் கொலைக்குழுக்களைக் கொண்டு கடத்தப்பட்ட பிள்ளைகளையும் அரசு கொன்றிருப்பது அப்பட்டமான இனக்கொலையென்று அவர் மேலும் கூறினார். 

Kaalaikkathir_31_08_2020.jpg

"2009 இல் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இன்றைய ஜனாதிபதி அன்று நடந்த அக்கிரமங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடத் தயங்குவதேன்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். 

பேரினவாதத்தின் நீதித்துறையின் மீது முற்றாக நம்பிக்கையிழந்த தாய்மார்கள் சர்வதேசத்திடம் மட்டுமே தமது பிள்ளைகளுக்கான நீதியினைக் கோருவதாக அவர் கூறினார்.

Uthayan_31_08_2020.jpg

2009 முதல் இன்றுவரை காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தில் இதுவரையில் குறைந்தது 72 தாய்மார்கள் இறந்துபோயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கிலும் இம்மாதிரியான போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : பாகம் 2

கொழும்பு டெலிகிராப் எனும் இணையத் தளத்தில் வெளிவந்த இனத்துரோகி கருணாவினதும், அவனது சகாக்களினதும் அக்கிரமங்கள் தொடர்பான செய்திகளின் தொகுப்பு.

தொடரும்.....

 

https://www.colombotelegraph.com/index.php/page/5/?s=vinayagamoorthy


 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

செய்திக்குறிப்பு 1 : மார்கழி 2011

சிறார்களை தனது துணைராணுவக் குழுவில் இணைத்த கருணா

ஆங்கிலத்தில் : உவிந்து குருகுலசுரிய

 

2005 ஆம் ஆண்டு, இலங்கையினுள்ளும், வெளியேயும் மனிதவுரிமைகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக ராதிகா குமாரசுவாமிக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேஷமான்ய எனும் உயர்ந்த கெளரவத்தினை வழங்கியிருந்தார். ராதிகா அப்பொழுது ஐ நா வின் சிறுவர்களுக்கும்  ஆயுதப் பிணக்குகளுக்குமான நடவடிக்கைக் குழுவில் விசேட பிரதிநிதியாகச் செயலாற்றிவந்தார். ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது பிரதான கடமையாக இருந்து வந்தது.

கார்த்திகை 2011 இல், இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் எனும் நபருக்கு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே உயர் கெளரவமான தேஷமான்ய எனும் பட்டத்தினை வழங்கி கெளரவித்திருக்கிறார். கடந்த 18 ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற ஆடம்பர நிகழ்வொன்றில் இனியபாரதிக்கு இந்த நாட்டின் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதை அம்பாறையிலிருந்த அவரது அலுவலகம் சண்டே லீடர் பத்திரிக்கை இதுதொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டபொழுது உறுதிப்படுத்தியிருந்தது. 

யார் இந்த இனியபாரதி ? 

lk-1.jpg

சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் துணைராணுவக் குழுவில் இணைத்துவருபவர் என்று ஐ நா வால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், வினாயகபுரம் ஆகிய பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்களுக்கும் காணாமற்போதல்களுக்கும் காரணமானவர் என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர் இவர். ராஜபக்ஷவின் அரசில் துணையமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துணைராணுவக் குழுவில் மிக முக்கிய ஆயுததாரியாகச் செயற்பட்டு வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டுவருபவர் இவர்.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்களில் 90 வீதமானவர்கள் தமது பிள்ளைகள், கணவன்மார்கள், மனைவிமார்களைக் கடத்திச் சென்று காணமாலக்கியது இனியபாரதியே என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

pic-b-outside-tmvp-office-tirukkovil-number-plate-covered-white-van-and-jeevendran-and-inayapaarathi-taken-from-inside-our-van-photo-by-uvindu-kurukulasuriya.jpg

திருக்கோயிலில் அமைந்திருக்கும் கருணா துணை ராணுவக் குழுவின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்கத்தகடு பத்திரிக்கையால் மறைக்கப்பட்ட வெள்ளை நிற வானும் அருகே இனியபாரதியுடன் அவரது சகா ஜீவேந்திரனும் 

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு கொலைப் பயமுருத்தல் விடுத்தது, மகிந்தவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுருத்தியது, தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது போன்ற பல வன்முறைகளில் இனியபாரதியே தலைமை தாங்கிச் செயற்பட்டதாக தேர்தல்க் கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை விடுத்திருக்கின்றனர். இந்த வன்முறைகளின்பொழுது குற்றவாளியென்று கண்டறியப்பட்ட இனியபாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனையினை கல்முனை நீதிமன்றம் வழங்கியிருந்தது. 

இனியபாரதியும் அவரது வெள்ளை வான் கடத்தல்களும்

நான் இந்த மனிதரை ஆனி 19, 2007 அன்று திருக்கோயிலில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சுதந்திர ஊடகம் சார்பாகவும், இலங்கை ஊடக நிலையம் சார்பாகவும் நானும், சர்வதேச ஊடக நிலையத்தின் இயக்குனர் டேவிட் டாட்ஜ், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சுகுமார் முரளிதரன், இலங்கை ஊடகத் தொழிலாளர்கள் சார்பாக அதுல லியனகே மற்றும் இலங்கை முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் ஜாவிட் முனவ்வரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டோம்.

pic-a-from-left-inayapaarathi-jeevendran-an-armed-cradersukumar-muralidharandavid-dadge-and-uvindu-kurukulasuriya-photo-by-athula-vithanage.jpg

 பேச்சுக்களில் ஈடுபட்ட சுதந்திர ஊடகவியலாளர்களும், இனியபாரதியுடன் அவரது உதவித் தலைவரும் 


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணா குழுவினால் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைச் சரிசெய்யும் நோக்கிலேயே எமது இந்தப் பயணம் அமைந்திருந்தது. அந்தவருடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இனியபாரதியால் பல தடவைகள் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. நாம் அம்பாறை மாவட்ட கருணா துணைராணுவக் குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி மற்றும் அவரது உப தலைவரான ஜீவேந்திரன் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் அன்று சந்தித்தோம்.

அவரது அலுவலகத்தினுள்ளே பல சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை நான் கண்டேன். அதுல லியனகேயுடன் சேர்ந்து இரகசியமாக அச்சிறுவர்களைப் படமெடுக்க நான் எண்ணினேன். அத்துடன், அவர்களின் அலுவலகத்தின் முன்னால், இலக்கத்தகடு பத்திரிக்கையினால் மறைக்கப்பட்ட வெள்ளைநிற வான் ஒன்றைக் கொண்டோம். அருகில் சென்று பார்க்கும்பொழுதுதான் அவ்வாகனத்தில் இலக்கத்தகடே இருக்கவில்லையென்பது எமக்குப் புரிந்தது.

pic-c-tmvp-tirukkovil-no-number-plate-photo-by-athula-vithanage.jpg

கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான்

 

தற்போதைய தேசமான்ய கெளரவத்தினைப் பெற்றிருக்கும் இனியபாரதியுடன் சேர்த்து அவ்வாகனத்தினைப் படம்பிடித்துக் கொண்டேன். அவர்களுடன் கூடவே ஆயுதம் தாங்கிய  இரு சிறுவர்களையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

இப்புகைப்படம் என்னாலேயே முதன் முதலாக வெளிக்கொண்ரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இப்புகைப்படத்தினைப் பகிருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டபோதும்கூட, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளரின் பாதுகாப்புக் கருதி அதனைப் பகிர நான் விரும்பியிருக்கவில்லை.

 

கருணா துணைராணுவக் குழுவினரின் அலுவலகத்தின் முன்னால் இலக்கத்தகடற்ற வெள்ளைநிற வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது அவர்கள் ஆட்களைக் கடத்திச் செல்ல இந்த வாகனத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலீஸாரிடம் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒருவர் கூட விடுவிக்கப்படவுமில்லை, குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை. 


பலவந்த சிறுவர் ராணுவப் பயிற்சியும் இனியபாரதியும்

ஐ நா சிறுவர் நிதியத்தின் அறிக்கைப்படி, "64 வீதமான சிறுவர்கள் புலிகளால் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறது. ஆனால், தவறாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கையினைப் பார்த்த பிரபல சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரமுகர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு, கடத்தப்பட்ட சிறுவர்கள் அரச ராணுவத்தாலும் கருணா குழுவாலும் கடத்தப்பட்டிருக்கும்பொழுது, இதனைப் புலிகள் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சாத்தியம் என்று வினவினார். அரசு நேரடியாக கடத்தல்களில் ஈடுபடவில்லையென்று நான் கூறினாலும் கூட, இவ்வளவு பெரிய தவறை இந்தவறிக்கை எப்படி சுமந்து வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையென்னவெனில், அரசின் ஆதரவுடனேயே கருணா துணைராணுவக் குழு இக்கடத்தல்களைச் செய்துவருகிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். புலிகளுடனான போருக்காகவே இவர்கள் தமிழ்ச் சிறார்களைக் கடத்திச்சென்று பயிற்றுவிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் இங்குநடக்கும் கடத்தல்களும் காணாமற்போதல்களும் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்திருக்கிறதென்பது தெளிவாகிறது. அத்துடன், நாட்டின் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ஆகியோருக்கும் இக்கடத்தல்கள் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது. 

pic-d-tmvp-child-soldiers-athula-vithanage-pretendes-taking-notes-and-our-van-photo-by-uvindu-kurukulasuriya.jpg

கருணாவினால் கட்டாய ராணுவப் பயிற்சிக்காக கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள்

 

"ஜனாதிதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனுமான சந்திப்புக்களில் எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு சிறுவர்களை துணைராணுவப் படையில் இணைக்கும் விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தூதுவர் கோரியிருந்தார்.  அதன் போது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், துணைராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கையினைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக துணைராணுவப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விலக்குவதும் அடங்கும்" என்றும் கூறியிருந்தார்.

மே மாதம் 26 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த கேபிள் செய்தியின் காலப்பகுதியில்  தூதுவராக ரொபேட் ஓ பிளேக்கே இருந்தார். அமெரிக்காவுக்கு, சிறுவர்களை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்திவருவது இலங்கை அரசும், துணைராணுவக் குழுக்களும்தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் யுனிசெப் அமைப்பு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்? அவர்கள்கூட அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமாக மாறிவிட்டனரா? 

கோத்தாபய அவர்கள் ஐலண்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் "100 ஆட்டிலெறிக் குண்டுகளால் செய்யமுடியாததை ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர் தற்கொலைப் போராளியைக் கொண்டு பிரபாகரனால் செய்யமுடிந்தது. இன்று சிறுவர்களை நாம் படையில் சேர்க்கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் அன்றே பிரபாகரனுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் அவர்களால் ஆயுதங்களைத் தருவித்தோ, கட்டமைப்புக்களை உருவாக்கியோ போராடியிருக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை, கட்டமைப்பினை, வங்கிக் கணக்குகளை முடக்கியிருந்தால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு, சிறுவர்களை இணைப்பதையும் நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இன்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், யுனிசெப்பை விமர்சிக்காமல், புலிகளுக்கெதிரான அதன் விமர்சனத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார். 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை ஐலண்ட் நாளிதழுக்கு வழங்கிய செய்தியில் இறுதிப்போரில் நடந்த மனிதவுரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் பற்றிப் பேசுபவர்கள், சிறுவர்களை படையில் சேர்த்தது பற்றிப் பேசவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால், புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் மட்டுமல்லாமல் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பற்றியும் பேசப்படுவதுதான் நியாயமாக இருக்கும். 


 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாவைப் பாவித்து ஊடகவியலாளர்களுக்குக் கொலைப்பயமுறுத்தல் விடுத்த கோத்தா

விக்கிலீக்ஸில் வெளிவந்த செய்தி : செய்தி அனுப்பப்பட்ட நாள், மே 18, 2007. அனுப்பியவர்  அமெரிக்கத் தூதர் ரொபேட் ஓ பிளேக்

"கருணாவுக்கு தாம் ஆதரவளிக்கவில்லையென்று அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, கடந்தமாதம் 16 ஆம் திகதி அஸோஸியேட்டட் பிரஸ் அமைப்பின் தென்னாசிய நிருபர் மத்தியூ ரொசென்பேர்க்கிற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தா வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் கிடைக்கப்பெற்றது. அச்செவ்வியில் கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை வானளாவப் புகழ்ந்த கோத்தாபய, கருணாவின் உதவியின் மூலம் ராணுவத்திற்குக் கிடைத்த நண்மைகள் , வெற்றிகள் பற்றிப் பெருமையாகப் பேசினார்" என்று வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருக்கிறார்.  

GotaKaruna.jpg

கோத்தாவும் கருணாவும்

விக்கிலீக்ஸில் வெளிவந்த இந்தச் செய்திக்குறிப்பை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டிருக்கின்றது. "உச்ச பட்ச ரகசியம்" என்று குறிப்பிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த செய்திக்குறிப்பில் கருணா தலைமையிலான துணைராணுவக் கொலைக்குவின் நடவடிக்கைகள் பற்றி அது விளக்குகிறது. இச்செய்திக் குறிப்பு அன்றைய தூதுவர் ரொபேட் பிளேக்கினால் மே மாதம் 18 ஆம் திகதி, 2007 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

அதேவேளை, கடந்த சித்திரை மாதம் 16 ஆம் திகதி டெயிலி மிரர் பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, வாகரையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்கள் பற்றிய எழுதியதற்காக  அவரையும், அச்செய்தியைச் சேகரித்து வழங்கிய நிருபரையும் (விபச்சாரி என்று விழித்து) "கருணாவைக் கொண்டு கொல்வேன்" என்று மிரட்டியிருக்கிறார். 
இதனையடுத்து சம்பிக்க லியனராச்சி கருணாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசியபோது, "நீங்கள் கவலைப்படவேண்டாம், நான் உங்களைக் கொல்லப்போவதில்லை, கோத்தா சும்மாதான் சொல்கிறார்" என்று பதிலளித்திருக்கிறார்.

ரொபேட் பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட முழுச் செய்திக்குறிப்பின் விபரம் கீழே:

"அரசாங்கத்தின் உதவியுடன் கருணா துணைராணுவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் கடந்தவருடத்தில் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. கருணாவைக் கொண்டும், டக்கிளஸைக் கொண்டும் புலிகளுக்கு ஆதரவானவர்களையும், அனுதாபிகளையும் கொன்றுவரும் அரச ராணுவம் பழியினை இலகுவாக இக்கொலைக் குழுக்கள் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடுகிறது". 

"இந்த துணைராணுவக் கொலைக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் அரசாங்கம் கண்துடைப்பிற்காக கடத்தல்களையும் காணாமற்போதல்களையும் விசாரிக்க தனிநபர் விசாரணைக் கமிஷன் ஒன்றினையும் நிறுவப்போவதாகக் கூறிவருகிறது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம், வெளிநாட்டில் சரிந்திருக்கும் தனது பெயரினை மீள கட்டியெழுப்பவே அது செய்கிறதென்பதும், உள்நாட்டில் உண்மையாகவே மனிதவுரிமை மீறல்களை அடக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லையென்பதும் தெளிவானது".
  
"கொழும்பிற்கு வெளியே இந்த துணைராணுவக் குழுக்களால் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள், பிள்ளைகளைக் கடத்துதல், சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கப்பம் அறவிடுதல் ஆகிய விடயங்கள் அரசின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன".

 "பெரும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் ராஜபக்ஷேவின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட துணைராணுவக் குழுக்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை முற்றாக நிறுத்தியிருப்பதோடு, கருணா மற்றும் டக்கிளஸ் ஆகிய துணைராணுவக் குழுக்கள் நேரடியாகவே மக்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவதை ஊக்குவித்து வருவது தெரிகிறது". 
"இந்த துணைராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான நெருக்கம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு உள்ளூர் தொடர்புகள் மூலம் மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன" 
என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசேப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரைக் கொன்றது கருணாவும் டக்கிளஸும் தான் - பாராளுமன்ற உறுப்பினர் ரொபேட் பிளேக்கிடம் தெரிவிப்பு : விக்கிலீக்ஸ் வெளியீடு !

"இலங்கையில் அரசின் பின்புலத்தில் இயங்கிவரும் துணைராணுவக் குழுக்களில் கருணா குழுவே மிகக் கொடூரமானதும் வீரியம் மிக்கதாகவும் காணப்படுகிறது. ஆட்களைக் கடத்துதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் என்பவற்றில் இக்குழுவே முன்னின்று செயற்பட்டு வருகிறது".


"கடந்த பங்குனி மாதம் 20 ஆம் திகதி எனைச் சந்தித்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டவல்லுனருமான க. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கருணாவைக் கொண்டு இலங்கையரசாங்கம் படுகொலை செய்யும் என்று நாம் அச்சப்படுகிறோம் என்று என்னிடம் கூறினார்".


"இதேபோல் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான மனோ கணேசன் அவர்களும் இதே வகையான அச்ச உணர்வு தனக்கும் இருக்கிறதென்று கடந்த பங்குனி 29 ஆம் திகதிச் சந்திப்பில் எம்மிடம் கூறினார். இவர்களைப்போலவே இன்னும் பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும், சில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருணாவினால் தாம் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் இருப்பது தெரிகிறது".

"திரு விக்னேஸ்வரன் மேலும் கூறுகையில், கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தைக் கொல்லும் திட்டத்தினைத் தீட்டிய கருணா, டக்கிளஸ் தேவானந்தாவின் ஆதரவுடன் நத்தார் ஆராதனையில் அவரைக் கொன்றார் என்று எம்மிடம் தெரிவித்தார். அவ்வாறே கடந்த 2006, கார்த்திகை 10 ஆம் திகதி யாழ்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல மனிதவுரிமைச் சட்டத்தரணியுமான திரு நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொழும்பில் திட்டம் தீட்டிக் கொன்றது கூட கருணாதான் என்று அவர் எம்மிடம் மேலும் கூறினார்". 

KARUNA-and-Douglas.jpg

பிரபல துணைராணுவக் கொலைக்குழு முக்கியஸ்த்தர்கள் கருணா மற்றும் டக்கிளஸ் தேவானந்தாவுடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்கத் தூதுவர் ரொபேட் பிளேக்கினால் வோஷிங்க்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பின் விக்கிலீக்ஸின் வெளியீடு பின்வருமாறு சொல்கிறது.


"யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவர் பேர்ணாட் எம்முடன் பேசும்போது கருணா தனது துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளை கிழக்கில் மட்டுமல்லாமல் வடக்கிற்கும் விஸ்த்தரித்திருப்பதாகக் கூறினார். 2005 கார்த்திகை முதல் 2007 மாசி வரை குறைந்தது 747 தமிழர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கருணாவினால் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எம்மிடம் கூறிய குருவானவர், இவற்றுள் கடந்த 2007 பங்குனி மாதத்தில் மட்டும் கருணாவினால் 52 தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்"
"காணமலாக்கப்பட்டவர்களைப்பற்றிய விசாரணைகளுக்கென்று மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் கமிஷனிடம் தான் சேகரித்த 200 கடத்தல்கள் பற்றிய முறைப்பாடுகளை வழங்கியதாகவும், ஆனால் இவ்விசாரணைக் கமிஷனின் தலைவரும் ஜனாதிபதி மகிந்தவின் நெருங்கிய நண்பருமான திலகரட்ன மஹநாம இதுவரையில் எந்தவொரு கடத்தல்பற்றியும் நடவடிக்கை எடுக்க மறுத்துவருவதாகவும் அவர் மேலும் கூறினார்"
"யாழ்ப்பாணத்தில் கருணாவினால் நடத்தப்பட்ட 747  கடத்தல்களில் பல சம்பவங்களில் பொலீஸாரின் அசமந்தத்தினாலும், அரச இடையூறுகளினாலும் தன்னால் 200 கடத்தல்கள் பற்றிய விபரங்களையே சேகரித்து ஆவணப்படுத்த முடிந்ததாகக் கூறும் குருவானவர், இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவத்தில் புலிகளின் அனுதாபியொருவரைக் கடத்திச்சென்ற கருணா குழு அவரது உறவினர்களிடம் கருணாவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டியை கொடுத்துவிட்டு "இவனின் காலம் முடிந்துவிட்டது" எனும் தொனியில் கூறிவிட்டுச் சென்றதாக  முறையிடப்பட்டிருப்பதாகக் கூறினார்" என்று ரொபேட் ஓ பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு கருணாவிடம் 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் கோட்டாபய ராஜபக்ஷெ - பொலீஸ் அதிகாரி சாட்சியம்

முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மனிதவுரிமை சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொல்வதற்கு அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரி கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னால் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலநாய்வுத்துறை பொலீஸ் உத்தியோகத்தர் லியனராச்சி அபெயரத்ன மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

Gota Paid Karuna Faction 50 Million To Kill Raviraj - Colombo Telegraph


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ

அப் பொலீஸ் அதிகாரி மேலும் சாட்சியமளிக்கையில், கருணாவுக்கான இந்தக் கொடுப்பனவு பாதுகாப்பு அமைச்சகத்தினூடாக, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான வசந்தவினால்  வழங்கப்பட்டதென்று கூறினார். ரவிராஜைக் கொல்வதற்கான இந்தப் பேரத்தின்பொழுது பிரதிப் பொலீஸ் மா அதிபர் கீர்த்தி கஜனாயக்க மற்றும் தேசிய புலநாய்வுச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் மஹில் டோலேயும் சமூகமளித்திருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

பங்குனி மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இப்படுகொலைப் பேரத்தினை கண்ணால்க் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை மீண்டும் வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்படுமிடத்து சமூகமளிக்கும்படியும் கோரப்பட்டது.

LEN - www.lankaenews.com |

முன்னாள்ப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் நாள் கொழும்பிலிருந்த அவரின் வீட்டிற்கு மிக அருகாமையில் வாகனத்தில் செல்ல எத்தனிக்கும்போது கருணா துணைராணுவக் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவிராஜைக் கொன்றது மகிந்த ராஜபக்ஷெவின் அரசுதான் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் குற்றஞ்சாட்டிய நிலையில், அரசு இதனை மறுத்திருந்தது.


 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன், இன்று என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் - கருணா ஆதங்கம்

ஆங்கிலமூலம் : கொழும்பு டெலிகிராப், ஐப்பசி  2015

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தான் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாகவும், வீ. ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணையப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Prabhakaran will not be taken alive' - YouTube

பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன் கருணா

அவர் தனது முடிவுபற்றி மேலும் தெரிவிக்கையில் தன்னை ஆதரிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இனிமேல் இலங்கையில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலேயே போட்டியிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தனது தற்போதைய முடிவு குறித்து இருவார காலத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் விபரமாக விளக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை மீது தான் கடுமையான அதிருப்தியையும், விசனத்தையும் கொண்டிருப்பதாகக் கூறிய கருணா, தன்மீதான பல மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளின்போது அரசியல் ரீதியாக தன்னை அந்நியப்படுத்தியுள்ளதுடன் எதுவித ஆதரவினையும் நல்காது  கட்சித் தலைமை தன்னை கைவிட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

ஆனால், நாட்டிற்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையேற்பட்டபோது தான் அனைத்து வழிகளிலும் உதவியதாகக் கூறிய கருணா, பிரபாகரனைக் கொன்று, புலிகளைத் தோற்கடிக்க தான் ஆற்றிய சேவையினை இன்று நாட்டின் தலைவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மறந்துவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகதீத் எக்லியகொட தன்னாலேயே கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறிய கருணா, இதுபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்குமிடத்து, தான் அஞ்சப்போவதில்லையென்றும், இதன் பின்னால் இருப்பவர்கள் யாரென்பது அப்போது தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணா குழுவின் கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், அரசியல்வாதிகள் மீதான படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதுபற்றிப் பேசிய கருணா, அதுபற்றி தான் அச்சப்படவில்லையென்றும், தேவையென்றால் விசாரணைகளைச் சந்திக்க தான் தயார் என்றும் சவால் விட்டார்.

இவ்வறிக்கை பற்றி மேலும் பேசிய கருணா, கருணா குழு என்று ஒரு குழு இருப்பதே எனக்கு இந்த அறிக்கையினைப் பார்த்த பின்னர் தான் தெரியவந்தது என்றும், புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்துகொண்டபின்னர் தான் ஆயுதங்களை மீண்டும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையென்றும் கூறினார்.

http://1.bp.blogspot.com/_otWn2PlEOdY/RtP1QNRrQcI/AAAAAAAAAfs/vz9JcWMuM9I/s320/author.jpg

ஆனந்த சங்கரியுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தான் மேற்கொண்டதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பல திட்டங்களை ஆனந்தசங்கரி கொண்டிருப்பது கண்டு தான் வியந்ததாகவும் கருணா கூறினார்.

இறுதியாக, சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதான தனது முடிவினை இன்று கட்சியின் பொதுச் செயலாளருக்குத் தான் அறிவித்திருப்பதாகவும் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்

கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015

"பிரேமினிக்கு நடந்த கொடூரம் மிகவும் மிருகத்தனமானது. சற்று நிறங்குறைந்தவராக இருந்தாலும், அவர் அழகானவர்தான். கடத்தி இழுத்துச் செல்லப்பட்ட அவரை இன்னொரு முகாமிற்குக் கொண்டுசென்று முதலில் வன்புணர்வில் ஈடுபட்டவர் அவரைக் கடத்திய சிந்துஜன் தான். அதற்குப் பிறகு நடந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுததாரிக் குழுவினரால் அவர் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு. அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக அந்தப் பெண்மீது தமது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர். எல்லாமாக 14 கருணா குழு ஆயுத தாரிகள் அன்று பிரேமினியைக் கூட்டாக வன்புணர்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல்கள் நேரம் போகப் போக உயிரற்ற முனகல்களாக மாறி இறுதியில் ஓய்ந்துபோயின".

"எமது இச்சைகளைத் தீர்த்துக்கொண்ட பின்னர் 
அவரைக் கட்டிற்குள் இழுத்துச் சென்றோம். அவர் அழவில்லை, அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை"
என்று பிரேமினியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை புரிந்த கருணா குழு ஆயுததாரி ஒருவர் பின்னர் கூறினார். அவரது கூற்றுப்படி பிரேமினியை வாட்களால் துண்டு துண்டுகளாக வெட்டி அந்தக் காட்டுப்பகுதியெங்கும் வீசியெறிந்திருக்கிறார்கள் கருணா குழுவினர். 

நீர்வேலியைச் சேர்ந்த காணாமல்போன இளைஞர் ஒருவரின் தாயாரை நான் அறிந்திருந்தேன். அவரது இழப்பின் வலி மிகக் கொடியது. உங்களின் உறவொன்று கடத்தப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பின்னர் கொடூரமாகக் கொல்லப்படுவதும் அதனை நீங்கள் வேறு வழியின்றி அமைதியாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவதும் கொடுமையானது. உங்களின் குடும்பத்தில் ஒருவர் காணாமற் போய்விட்டால் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா, அவர் உயிருடன் இருந்தால் எங்கிருக்கிறார், அவரைக் கடத்தியவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள், அவருக்கு என்னவகையான கொடுமைகளை அவர்கள் வழங்குகிறார்கள், அவரை விடுவிப்பதென்றால் நாம் யாரை அணுகவேண்டும் என்று பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். ஒருவர் கடத்தப்படும்பொழுது, கடத்தப்பட்டவரைப் போலவே, அவரைப் பறிகொடுத்த உறவுகளுக்கு இருக்கும் வலியும் மிகவும் கொடியது. 

தனது மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று நிச்சயமில்லாது, அச்சத்தினுள் வாழும் அந்தத் தாயாரின் வலி பெரியது. தேடிக் களைத்த நிலையில் தனது மகன் எங்கே என்று சாத்திரிகளை அவர் போய்க் கேட்டார். அவர்களில் பலர் உனது மகன் உனது வீட்டிலிருந்து தெற்குத்திசையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அந்தத் தாயும் தனது மகன் தென்னிலங்கையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிர்வாழ்வதாக எண்ணி வாழ்ந்துவருகிறார். தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் எனும் நினைவே அவனைத் தேடும் அவரது முயற்சியில் அவரைச் சளைக்காமல் இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் தொலைபேசி அழைக்கும்போது அது தனது மகனாகவோ அல்லது மகனின் இருப்பைப் பற்றி தெரிந்தவர்கள் ஆராவதோ இருக்கக் கூடாதோ என்று அவர் ஏங்குகிறார். அவரது மகன் காணமலாக்கப்பட்டு இத்துடன் ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர்போன்றே இன்னும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் வடக்குக் கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

வலிந்து காணமலாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது பிள்ளைகளையோ, துணையினையோ, பெற்றோர்க்களையோ கடத்தியவர்கள் யாரென்பது அவர்களின் உறவுகளுக்குத் தெரிந்திருந்தது. கடத்தியவர்கள் கருணா குழுவா, டக்கிளஸ் குழுவா, ராணுவமா அல்லது பொலீஸா என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தார்கள். முக்கியமாக கடத்தியவர்கள் எந்த முகாமிலிருந்து வந்திருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது. பலநேரங்களில் தமது உறவுகளைக் கடத்திச்சென்ற தனிநபர்கள் பற்றிய விபரங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இன்றுவரை இந்தக் கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவுமில்லை, அவர்கள்மேல் இலங்கையின் நீதித்துறை வழக்குகள் எதனையும் பதிவுசெய்யவுமில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியமளித்த பலநூற்றுக்கணக்கான தாய்மார்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணா குழுதான் என்று வெளிப்படையாகவே சாட்சியமளித்திருந்தாலும் இன்றுவரை எந்தச் சிங்கள அரசும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்தே வருகின்றன

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்...........................

கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015

karuna-ramada-dance-colombotelegraph.jpg?ssl=1

கொழும்பு ரமடா ரினைஸன்ஸில் அழகியுடன் நடனமாடும் கருணா

இலங்கையின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள். அவர்களின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்க எவராலும் முடியாது. ஆனால், துணைராணுவக் குழுக்கள் இலங்கையின் மக்கள்மீதும், ஒட்டுமொத்த மானிடத்தின்மீதும் நடத்திவரும் வலிந்த கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்காக அவர்களை தண்டிக்க முடியாமலிருப்பது ஏன்? அவர்கள் தமது கொலைகளுக்கான சாட்சியங்களை ஒருபோதும் விட்டுச் செல்வதில்லையென்பதாலா? இல்லையே, பெரும்பான்மையான கருணாவின் கடத்தல்களும் படுகொலைகளும் பல மக்கள் பார்த்திருக்க, பலர் சாட்சியங்களாக இருக்க பபகலில்தானே நடந்திருக்கின்றன? எத்தனை தடவைகள் பேரூந்துகளில் பயணித்த இளைஞர்களை வெளியே இழுத்துச் சென்ற கருணா, கெஞ்சி அழும் தாய்மாரை அடித்து விரட்டியிருக்கிறார்? இவ்வாறு எத்தனை கடத்தல்களை நாம் பார்த்தாயிற்று? 

அப்படியானால் இந்தக் கடத்தல்க்காரர்கள் தொடர்ச்சியாக எங்கோ ஒளிந்து மறைந்து வாழ்கிறார்களா? இல்லை, அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். எங்கள் கண்முன்னேயே, அவர்களின் குடும்பங்களுடன் எம்முன்னால் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் சிரித்து அகமகிழ்ந்தும், நடனமாடியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் பிரபாகரனைக் கொன்றதெப்படி, புலிகளை வீழ்த்தியதெப்படி என்று வீரப்பிரதாபங்களை நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்று, படுகொலை செய்து, பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்து, கப்பத்திற்காக அப்பாவிகளைக் கடத்திக் கொன்றபின்னரும்கூட அவருக்கு "கெளரவ கருணா அம்மாண்" எனும் நாமம் சூட்டப்பட்டு அழகுபார்க்கப்பட்டுத்தான் வருகிறது.

கடந்த 2013 கார்த்திகை மாதத்தில் பொதுநலவாய அமைப்புக்களின் மாநாடு ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருணா தொடர்பாக பின்வருமாறு கூறினார்.

"எம்முன்னே இன்று வீற்றிருக்கும் கருணாவின் பிரசன்னம் முன்மாதிரியானது. புலிகள் இயக்கத்திலிருந்து போராளிகள் பிரிந்துவந்து சமாதானத்தைத் தழுவிக்கொள்கிறார்கள் என்பதனைக் காட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பமே போதுமானது" என்று அவர் கூறினார்.

நீதித்துறை அமைச்சராக அன்றிருந்த ரவூப் ஹக்கீமின் இந்த பேச்சு விசித்திரமானது. 2004 பங்குனியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா நடத்திய நரவேட்டைகளின் கொடூரங்களை அவர் எப்படி மறந்தார் என்பது கேள்விக்குறியது. அவர் கூறுவதுபோல "சமாதானத்தைத் தழுவிக்கொண்ட கருணா" எவ்வாறு வலிந்த கடத்தல்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினார் என்பதை அவர் எப்படி மறந்தார்?

KARUNA-and-Douglas.jpg?ssl=1

துணைராணுவக் குழுத் தலைவர்கள் கருணாவும் டக்கிளஸும் அவர்களின் எஜமானாருடன்

மஹேந்திர பேர்சி ராஜபக்ஷவின் கொடுங்கோலாட்சி கருணாவுடனான தனது அரசின் ஒருங்கிணைவினை "ஒரு பயங்கரவாதியின் ஜனநாயதினை நோக்கிய சாய்வு" என்று சந்தைப்படுத்திவருகிறது. மகிந்தவின் அரசு, கருணாவை லைபீரியாவின் " நிர்வாண, மனிதமாமிசம் உண்ணும்" ஒரு ஆயுததாரியின் மனமாற்றத்துடன் ஒப்பிட்டுக் கிலாகிக்கிறது. கருணாவினதும் லைபீரியாவின் மனித மாமிசம் உண்ட ஆயுததாரியினதும் இன்றைய நிலைகள் வேறு வேறாகவிருந்தாலும், இவர்கள் இருவரது மானிடத்தின்மீதான சொல்லில் வடிக்கமுடியாத அக்கிரமங்களும் பாதகங்களும் ஒரேவகையானவை. 

ஆனால், லைபீரியாவின் கொலைகார ஆயுததாரியோ லைபீரியாவின் யுத்தத்தில் தான் செய்த கொடுமைகள் பற்றியோ, கொன்று தின்ற மனிதர்கள் பற்றியோ எதனையும் மறைக்கவில்லை. தனது குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளவும் தயார் என்றே சொல்லியிருக்கிறான். அப்படியானால், கருணா எனப்படும் கொலைகாரனின் நிலையென்ன? 

கருணாவின் கொடூரங்கள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க விமர்சித்தபோது கொதித்தெழுந்த கருணா, "உங்களின் முன்னாள் தலைவர் பிரேமதாசா புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதை மறந்துவிட வேண்டாம், எனது வாயைக் கிளறினீர்கள் என்றால் இன்னும் பல ரகசியங்களை வெளியே விடுவேன்" என்று பாராளுமன்றத்தில் எகிறிப் பாய்ந்தது நினைவிற்கு வரலாம்.

கருணாவுக்கும் அவரது எஜமானர்களுக்கும் இடையே இருக்கும் உறவு சுவாரசியமானது. பிரபாகரனுக்குத் துரோகமிழைத்து அவரிடமிருந்து பிரிந்துசெல்லும்வரை அவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், கிழக்கில் எவருமே கேள்விகேட்க முடியாத அதிகாரத்தில் இருந்தவர். ஆனால், புலிகளிடமிருந்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் அவர் இணைந்துகொண்டவுடன் உடனடியாகவே கிழக்கு மாகாணத்தில் வலிந்த கடத்தல்கள், சிறுவர்களை ஆயுதப் போருக்கு இணைத்தல், கப்பம் கோருதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்று பல கொடூரங்களில் இறங்கினார்.

கருணாவின் இந்த மனிதவுரிமை மீறல்களையும், மானிடத்திற்கெதிரான குற்றங்களையும் ஊக்குவித்த மகிந்தவின் அரசு, புலிகளுக்கெதிரான போருக்கு கருணாவின் அவசியமான நடவடிக்கைகள் என்று நியாயப்படுத்தியே வந்தது. புலிகளுக்கெதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் கருணா நிகழ்த்திய கொடூரங்களுக்காக மகிந்த அரசு அவருக்கு 2008 இல் நீர்ப்பாசனத்திற்கான துணையமைச்சர் பதவியினை வழங்கியிருந்தது. கருணா இன்றும்கூட அதேவகையான செல்வாக்கினையே ரணில் - மைத்திரியின் "நல்லாட்சி" அரசாங்கத்திலும் அனுபவித்து வருகிறார்.

கருணா தனது வாழ்வில் ஒரேயொருமுறை மட்டும் தான் சவாலுக்கு முகம்கொடுத்தார். அதுகூட தனது சகாவான பிள்ளையானின் வடிவில் அவருக்கு வந்தது. மொத்தக் கிழக்கு மாகாணமுமே இந்த இரு கொலைகார ஆயுததாரிகளினதும் போர்க்களமாக மறியது. இந்த மோதல்களிலேயே கருணா குழுவின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளனும், தமிழர் புணர்வாழ்வுக்கழக பிரதம ஆய்வாளர் பிரேமினியைக் கடத்திச்சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்தவனுமாகிய சிந்துஜனை பிள்ளையான் குழு சுட்டுக் கொன்றது. 
 

Edited by ரஞ்சித்
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுது, ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு வன்னியில் எனது சேவை உங்களுக்கு தேவைப்படும் என்றால் வருகின்றேன். அல்லாது போனால் நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்’ என்று கூறியவர். அதன் பின் வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்திற் கொண்டு வன்னி சென்றவர். யுத்தம் முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோர் ஓடிய பொழுதும், 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜா அவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலை இரண்டு பாகங்களாகத் தருகின்றோம். இரண்டாவது பாகம் எமது அடுத்த இதழில் வெளிவரும். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் மருத்துவர் வரதராஜா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா. கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட சவால்களை – மிக முக்கியமாக – நீங்கள் குறிப்பிடக் கூடிய சவால்களைப் பற்றி விபரிக்க முடியுமா? பதில்: வன்னியில் மட்டுமல்ல, வாகரைப் பிரதேசத்திலும் கடமையாற்றிய பொழுது, அது ஒரு யுத்தப் பிரதேசமாக இருந்ததால் பல விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உதாரணமாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களினுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – ஒரு அசாதாரணமான சூழ்நிலை – பல சவால்களைத் தந்திருந்தது. அதேநேரம் காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தோம். அதேநேரம் மக்களுக்கும் அந்த இடத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து – ஒரு இடத்தில் இருக்கிற மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு விதமான சவால்களை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். அதேநேரம் வைத்தியசாலைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து வைத்தியசாலைகளும் – திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது. சுயமாக நாங்கள் – இயல்பாக இருந்து – வைத்திய சேவை வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது. கேள்வி: இந்த சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? பதில்: சவல்களை நாங்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் – சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி – எமது வைத்தியசாலையும் சரி, மக்கள் குடியிருப்புகளும் சரி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்திகளை தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதற்கு இருக்கின்ற சவால்கள், தேவைகளையும் உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். அதேநேரம் எமது வைத்தியசாலையில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வழமையை விட மேலதிக நேரங்கள் கடுமையாக உழைத்து, கஸ்ரப்பட்டு நித்திரை கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டிருந்தோம். கேள்வி: இதிலே நீங்கள் குறிப்பிட்ட அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை ஒரு பரந்துபட்ட கருத்தாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இதிலே நீங்கள் குறிப்பிடத்தக்க – ஒரு பிரத்தியேகமாக நீங்கள் எதிர்கொண்ட ஒரு சவாலும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா? பதில்: உதாரணமாக சொல்வதென்றால் ஒரு பாரிய காயம் – ஒரு பெரிய காயம் – அல்லது ஒரு பெரிய சத்திர சிகிச்சை, நீண்ட நேரம் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைகள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து மிகவும் அதிக எண்ணிக்கையில் – பெரும் அளவான மயக்க மருந்து தேவைப்படும். அதேநேரம் மருந்து, சேலைன், இரத்தம் ஏற்றுவது போன்றவை அதிகமாக தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளருக்கு அப்படியான ஒரு சிகிச்சையைச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குரிய வீதம் சில நேரம் குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அதேநேரம் நாங்கள் அப்படியான சிகிச்சைகளைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான சத்திர சிகிச்சைக்காக அந்த நோயாளர்களைத் தவிர்த்து செய்திருக்கின்றோம். அதேநேரம் ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற சேலைன், மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளையும், ஏனைய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறோம். கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது? பதில்: எங்களுடைய உணர்வுகள் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் இருந்து மிகவும் கஸ்ரமாக இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து அங்கவீனர்களாவது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, மேலதிக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இறப்பது போன்ற சம்பவங்கள் எங்களுடைய மனதை – மற்ற வைத்தியர்களுடைய மனதை – மிகவும் பாதித்துக் கொண்டிருந்தது. கேள்வி: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்ற வகையில் – சிங்கள அரசாங்கம் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு விதமான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது ஒரு இனவழிப்பு என்று இருந்தாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதாவது மக்களுடைய மனவுறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில்: இலங்கையில் ஏற்பட்ட இந்த யுத்தம் வாகரையிலோ அல்லது முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஒரு யுத்தம். தமிழின அழிப்பிற்கான ஒரு யுத்தம். 83ஆம் ஆண்டு கலவரத்திலும், அதற்கு முன்பு கூட இந்தப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்ல, உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடைகளை விதித்து, எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் வந்தாலும், அந்தத் தடைகள் – குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இனவழிப்பின் ஒரு உச்ச கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதியை நாம் பார்க்க வேண்டும். கேள்வி: ஆனால் இதன் மூலமாக அவர்கள் – அதாவது மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது கொல்வதன் மூலம் மக்களின் மனவுறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் என்று கூற முடியுமா? பதில்: பல நோக்கங்கள் இருந்திருக்கும். சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமல்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துக்களை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக்கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது. முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவ தேவைகளுக்குக் கூட தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஒரு இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான – எங்களுடைய கலாச்சாரம், போன்ற எல்லா வகையிலான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, கலாச்சார சீரழிவுக்குக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரித்தான் யுத்தம் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துக்கள், கல்வி வளர்ச்சி எல்லாமே அந்த யுத்தம் மூலம் அழித்திருந்தார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதேநேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகளும் இலங்கைக்கு சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையிலேயே சர்வதேசத்திடம் அந்த நேரத்தில் நீங்கள் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்? பதில்: நான் மட்டுமல்ல, எங்கள் மக்கள் அனைவருமே ஒரு சமாதான முன்னெடுப்பொன்று ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த மக்கள் இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களைச் சர்வதேசம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்றும் நம்பியிருந்தார்கள். இந்த மக்கள் அனைவருமே சர்வதேசம் இதில் தலையிட்டு உடனடியாக எங்களுடைய மக்களைப் பாதுகாப்பார்கள், அல்லது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது சமாதான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கேள்வி: அந்த கால கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா? பதில்: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில் புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டமென்றால் என்ன, வெளிநாடுகளின் – இந்தியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகள் தலையிட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது. கேள்வி: இந்த சந்தர்ப்பதிலே இறுதி வரை எதையுமே சர்வதேசம் செய்யவில்லை என்ற பொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது? பதில்: ஒரு கோபம் கலந்த ஒரு வெறுப்பு, அல்லது ஒரு ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வெளியேற்றி விட்டது. சர்வதேச நிறுவனங்கள், சுயாதீனமாக இயங்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஒரு அச்சம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனத்தையும் அனுமதிக்காமல், மக்களை அழிக்க – அழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதில் இருந்தது. அதேநேரம் குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2009 ஆண்டு தை மாதம் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அந்தப் பகுதியில் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்த பொழுது, எண்பதுனாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தியை உலகத்திற்குக் கூறி, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சர்வதேச நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி அந்த உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிவிட்டார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தத்திலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் 146,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்ற ஒரு கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதேநேரத்திலே சில இடங்களிலே ஐக்கிய நாடுகள் சபை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று கூறியது. ஒரு இடத்தில் – நான் சென்ற ஒரு இடத்தில் கூறினார்கள் – ஐ.நா.வின் ஒரு முன்னாள் அதிகாரி – 80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால் – வன்னிப் பகுதியில் நடந்த யுத்தத்தில் மட்டும். அதற்கு வெளியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது – அதாவது முகாம்களுக்குச் செல்லும் பொழுது. ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வின் ஒரு உயர் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது ஒரு வெளியில் வராத சந்திப்பொன்று. உங்களுடைய கணக்கின் படி, நான் அதாவது இந்த 146,000 பேர் கணக்கைச் சொல்லவில்லை. வன்னியில் மட்டும் – வன்னியில் நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்கள்? பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. புள்ளி விபரங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருந்தது. வழமையாக, சாதாரண நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவார்கள். நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும் தான் ஏதோ ஒரு கஸ்ரப்பட்டு, தூக்கியோ, அல்லது மோட்டார் சைக்கிள் – வேறு ஒரு வாகனங்களில் கொண்டு வருவார்கள். இறந்தவர்களை கணிப்பிடுவதில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்தது. இது கிட்டத்தட்ட 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பல்வேறு புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதை இலங்கை அரசாங்கம், அரச அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களம், ஜீ.ஏ. – அவர்களுடைய பிறப்பு, இறப்புப் பதிவாளர்கள் மூலம் கணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம். கேள்வி: நீங்கள் வன்னியிலும், வாகரையிலும் – இரண்டு பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தவை – அங்கு கடமையாற்றியவர் என்ற வகையிலேயே, நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில், மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக இருந்தது? பதில்: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளினுடைய இராணுவ அணிக்கும், அவர்களுடைய மற்றப் பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாக சம்மந்தம் இருப்பதில்லை. நான் மருத்துவர் என்ற ரீதியிலும், மருத்துவ அதிகாரி என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளுடைய சுகாதாரப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள் – ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனடிப்படையில் சில வைத்தியசாலைகளில், உதாரணமாக கிராமிய வைத்தியசாலைகளில், அல்லது பொது வைத்தியசாலைகளில் இருந்து கிராமங்களை நோக்கி இருக்கின்ற இடங்களில் அரசாங்க வைத்தியர்களை நியமிப்பதில் பற்றாக்குறை இருந்தது. அந்த பற்றாக்குறைகளில் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவின் வைத்தியர்கள், தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் வைத்தியர்களின் உதவியுடன் அந்தக் கிராம வைத்தியசாலைகளை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் வைத்தியர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கி சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வைத்தியசாலை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த வைத்தியர்கள் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவினராக இருந்தார்கள். அதேபோல பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்கள். சில இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் – நிர்ப்பந்தம் என்ன சந்தர்ப்பங்கள் இருந்தது – சூழ்நிலைகள். அது மிகவும் ஒரு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதைவிட மக்களுக்குப் அது ஒரு பெரும் உதவியாக இருந்தது. கேள்வி: மருந்துப் பொருட்கள் என்று வரும் பொழுது விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் – தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்களின் விடயத்தில் எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது – விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து? பதில்: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளை செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய வைத்தியர்கள் அங்கு கடமையாற்றியிருந்தார்கள். ஆனால் சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கம் எங்களுக்குத் தர மறுத்து விட்டது. உதாரணமாக மயக்க மருந்து, இரத்தம் ஏற்றுகின்ற அந்த இரத்தப் பை என்று முற்று முழுதாகத் தர மறுத்து விட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் – சில சந்தர்ப்பங்களில் – விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை நாங்கள் வாங்கிப் பாவித்திருக்கிறோம். கேள்வி: நீங்கள் இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என்று அறிகிறோம். பதில்: ஆம், நான் முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதேநேரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தேன் – சாதாரண சூழ்நிலையில். 2009 ஆண்டு இடம்பெயர்வுக்குப் பின்னர் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புதுமாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுது நான் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தேன். கேள்வி: அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதாகினீர்கள்? அதாவது என்ன அடிப்படையில் உங்களை – நீங்கள் யுத்தம் முடிகின்ற கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொழுது – என்ன அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்? பதில்: எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரச வைத்தியர்கள். அரச வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதற்குரிய முறையான அனுமதிக் கடிதங்கள், முறையான அனுமதிகள் எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாம் வேலை செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் அங்கே இருக்கின்ற நிலைமைகளைத் தெரியப்படுத்தி – எமது சுகாதாரத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் – சிற்றுவேசன் ரிப்போர்ட் என்று. அந்த மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த சிற்றுவேசன் ரிப்போர்ட்டில் இருக்கும். நாங்கள் ஒரு இடத்தில் கூட அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாமலோ, அல்லது அவர்களின் விதிமுறைகளை மீறி நாங்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. மே மாதம் 15ஆம் திகதி வைத்தியசாலைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம் திகதிக்குப் பிற்பாடு யுத்தம் மிகவும் அண்மையிலும், மிகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் திகதி இரவிரவாக விடியும் வரைக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தான் எல்லா வைத்தியர்களும், சில ஊழியர்களும் இருந்தோம். 15ஆம் திகதி நண்பகல் நான் காயமடைந்தேன். அந்த காயமடைந்த ஒரு சொற்ப நேரத்தில் அந்த இடத்திற்கு இராணுவம் வந்து விட்டார்கள். வந்து எங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு நான் சிகிச்சைக்காக அவர்களுடைய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஏனைய வைத்தியர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில் வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னை கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய ஒரு இரகசியமான இராணுவ ஜெயில் – அந்த இடத்தில் ஒரு கிழமைக்கு மேல் வைத்திருந்தார்கள். கேள்வி: என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில், என்ன சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்? பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல், எங்களுக்கு சட்டமோ – குற்றங்களோ நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். அந்த விசாரணைகள் எல்லாம் சி.ஐ.டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், அதைச் சார்ந்தவர்களும் தான் எங்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றங்களும் நேரடியாகச் சுமத்தப்படவில்லை. விசாரணையில் கூட எங்களுக்கு எதிரான ஒரு குற்றங்களைக் கூட அவர்களால் உறுதிப்படுத்தக் கூடிய மாதிரி இருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாத்தையும், எல்லா செயற்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையின் சட்ட திட்டங்களுக்கு அமையத் தான் செய்திருந்தோம். கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இரகசிய முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? பதில்: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகத் தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பஸ்சிலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சொற்ப நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது ஒரு இராணுவ வீரர் மற்றவரிடம் கேட்கிறார் ‘ஏன் இறக்குகின்றீர்கள்’ என்று. அவர் சொன்னார் ஓடர் வந்திருக்கு செல்லுக்குள்ள போடச் சொல்லி. செல் என்றால் ஜெயில் கம்பிக்குள் போடச் சொல்லி. அதற்கு முதல் நாள் இரவு அவர்களுடைய ஒரு முகாம் – ஒரு காம்ப் – ஒரு வெளியிடத்தில் தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் ஒரு அறையில். ஒரு கம்பிக் கூட்டுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, ஒரு தற்காலிகமாக ஒரு அறை – சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் அவதானித்திருந்தேன் அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பாவித்த அடையாளங்கள் – சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அதிலிருந்த எனக்கு காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து அனுமதி வந்தால்தான் என்னை வவுனியாவிற்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். கடைசி நாள் – நான் நினைக்கிறேன் 8ஆவது நாள் இரவு – அந்த கொமாண்டர் – இராணுவ அதிகாரி வந்து, கடுமையான தொனியில் – அவர்களுக்கு ஆகலும் பிரச்சினையாக இருந்த விடயம் அங்கே நடந்த செய்திகளை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தியதும் எங்கள் மீது ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. அவர்களுடைய கதைகள் எல்லாம் ஏன் பேட்டி கொடுத்தனீர்கள், ஏன் சொன்னீர்கள் என்ற கோபம் தான் இருந்தது. அதனால் தங்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைச் சம்பங்களைத் தெரியப்படுத்தியது தங்களுக்கு மிகவும் அசௌகரியங்களைத் தந்ததாகத்தான் அவர் கூறியிருந்தார். கேள்வி: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு – ஒரு ஆள் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது மிருகங்களை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்;டா? பதில்: அது சாதாரண ஒரு அறையில் மூன்று கூடு என்றால், கிட்டத்தட்ட மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழால் சாப்பாட்டுப் பிளேற் அனுப்பக் கூடிய மாதிரி ஒரு இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளால் சாப்பாடு வரும். சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள் – முகம் கழுவுதவற்கு, குளிப்பதற்கு எல்லாம். அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும். கேள்வி: உங்களுக்குத் திடீர் என்று ஏதாவது உடல் உபாதைகள் – உதாரணமாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்? பதில்: சொன்னால் கூட்டுக் கொண்டு போவார்கள். கேள்வி: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டல்ல. உங்கள் மனவுறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், அல்லது இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை? பதில்: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அவர், 8ஆம் நாள் வந்து கதைத்த அதிகாரியின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில் ‘உன்ரை நல்ல காலம் சண்டை முடிஞ்சிது. இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும்.’ அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன், சில வேளை அவர்கள் என்னை, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. உதாரணமாக சனல்-4 இல் ஆட்களைக் கொண்டு போய் சுடுவது போல் ஒரு சந்தர்ப்பம் என்னையும் கொண்டு போய் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத் தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன். கேள்வி: ஆனால் சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது சமரி எக்சிகியூசன் என்று சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை, அதாவது இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை ஏன் அவர்கள் சுடவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? பதில்: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றது. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னுடைய வைத்திய நண்பர்களும், மற்றும் ஊழியர்களும் – என்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் – இராணுவத்திடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதேநேரம் இந்த வைத்தியர்களை – வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை – இலங்கை அரசாங்கம் தடுத்து – விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி, உலகத்திற்கும், சர்வதேச நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருக்கின்ற பொழுது, நான் அங்கே இருக்கின்றேன், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, சர்வதேச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. நான் நினைக்கிறேன் யுத்தம் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டு விட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும் பொழுது யுத்தத்தின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்று ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள். (நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட அனுபவங்களை அடுத்த இதழில் விபரிக்கின்றார் மருத்துவர் ரி.வரதராஜா) நன்றி: ஈழமுரசு
    • பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவ பிரிவின் மகனார் மருத்துவர்கள் 24/10/2005    
    • கொஞ்ச நாள் பொறுத்து இந்த திரியில் எழுதுகிறேன்….
    • இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது.  அது சிலரின் மனதில் உதித்த கற்பனை. புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர். அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை. அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே. ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான். இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்? இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது. இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.