Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

KAJEEBAN
 
படக்குறிப்பு, 

மாவீரர தினத்தையொட்டி தமது வீட்டு வாயிலில் கொடியேற்றி தீபமேற்றும் இலங்கை தமிழர்

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன. 

மாவீரர் நினைவு

பட மூலாதாரம், KAJEEBAN

 
படக்குறிப்பு, 

மாவீரர் தினத்தையொட்டி யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் நினைவாக அவரது படத்தை வைத்து தீபம் ஏற்றும் குடும்பத்தினர்

கடந்த காலங்களில் மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அரசாங்கத்தினாலும், நீதிமன்றங்களினாலும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன், வடக்கில் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மாவீரர் நினைவு

பட மூலாதாரம், KAJEEBAN

 
படக்குறிப்பு, 

மாவீரர நினைவு தினத்தை அனுசரிக்கும் தமிழர்களின் காட்சிகளை படப்பதிவு செய்யும் இலங்கை ராணுவத்தினர்

தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கத்தினால் மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதற்கு தடை விதித்துள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது ஆண்டு, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை செய்ய கெடுபிடிக்கள் விதிக்கப்படவில்லை. 

பிபிசி

பட மூலாதாரம், KAJEEBAN

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டு ராணுவ கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.

மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வுகளை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழ்; அரசியல்வாதிகள், மாவீரர்களின் உறவினர்கள் என தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலானோர் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் தினத்தை தமது வீடுகள் மற்றும் தமது அலுவலகங்களில் அனுஷ்டித்திருநதனர். 

தமிழர் தாயகம் முழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.

பிபிசி

 

முதலாவது மாவீரர் நிகழ்வு

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூரும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. 'மாவீரர் துயிலும் இல்லங்கள்' இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

 

 

https://www.bbc.com/tamil/sri-lanka-55105805

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களை நினைவு கூர்ந்த மக்கள்

1-187-696x464.jpg
 30 Views

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகள், இந்தியா மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள்  வாழும் நாடுகளிலும் மாவீரர் எழுச்சி நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தால் மாவீரர் நாள் நினைவு கூரல், ஒரு சலுகையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த ஆண்டு அரசாங்கம், நீதி மன்றங்கள் ஊடாக தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கு ஓர் தடையாக அமைந்தது.

KAJEEBAN

மேலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன்,   பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பிபிசி

இந்நிலையில், தமிழர் தாயகம் முழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, தமிழ் அரசியல் கட்சிகள், பொது மக்கள் என அனைவரும் தமது வீடுகளில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நினைவு

அதே போல் புலம் பெயர் மற்றும் தமிழகத்தில் உள்ள மக்களாலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கடும்-கெடுபிடிகளுக்கு-மத/

தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

 
2-7-696x464.jpg
 43 Views

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1-187.jpg

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

1-188.jpg

தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்கு நினைவுகூரப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/தனது-இல்லத்தில்-மாவீரர்க/

அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி

Untitled2.jpg
 48 Views

மாவீரர் நாளாகிய இன்று மாவீரர்களை நினைவுகூர்ந்து தாயகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் இல்லங்களில் நினைவுச்சுடர் ஏற்றி வணக்கங்களைச் செலுத்தினர்.

cf665fbf-e2cb-4e13-a2f3-4a7df9f0577d.jpe

அதே போல் பொது மக்களும் தமது வீடுகளில் தங்களின் மாவீரர் உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

aadce80f-a521-424c-a8a9-b5018d6817dd.jpe

இந்நிலையில், “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.”

WhatsApp-Image-2020-11-27-at-7.47.04-PM.

என்று  தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-6.jpg

இலங்கை அரசாங்கம், மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்யக்கூடாதென நீதிமன்றங்கள் கூடாக தடை  கோரி வழக்கு தொடர்ந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

1-187.jpg

 

https://www.ilakku.org/தாயகத்தில்-மாவீர்களை-நின/

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

 

IMG_20201127_181530-960x720.jpg?189db0&189db0

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மாவீரர் கப்டன் புயல்வேந்தன் அவர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்ற, சமநேரத்தில் கடற்புலிகள் படையணியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் இறைமதி, மாவீரர் கப்டன் எழுகடல் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரன், குட்டிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த மாவீரர் 2ம் லெப் கதிர்கோதை அவர்களின் சகோதரன் ஆகியோர் ஈகைச்சுடர்களை ஏற்றினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.