Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமண் பத்திரிகை! பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுவைத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமண் பத்திரிகை! பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுவைத்தார்

  • December 5, 202010:36 pm

 

ஈழத்தமிழர் நோக்குநிலையில் இருந்து உலகத்தமிழ் பரப்பினை நோக்கிய ‘ஈழமண்’ பத்திரிகையின் முதல்பதிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

19 பக்கங்களை கொண்ட மின்னிதழாக வெளிவந்துள்ள முதல்பதிப்பில் மாவீரர் நாள் செய்திகள், கட்டுரைகள், தாய்நிலம், கருத்துக்களம், விருந்தினர் பக்கம், அக்கம் பக்கம், நினைவோடை, வெற்றிப்படிகள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

மாவீரர் வணக்கத்துடன் வெளிவந்துள்ள ஈழமண், தனது முதல்காலடி தொடர்பில் தெரிவிக்கையில், முதலாவது வாயிலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பின் வடிவமாக, தேசமாகச் சிந்தித்து, தமிழர் தேசத்தின் நோக்குநிலையில் இருந்து ‘ஈழமண்’ இவ்வுலகைக் காண்கின்றது.

தமிழர் தாயக மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், சமூக சிக்கல்கள், சுற்றுச்சூழல் சவால்கள், அரசியல் நிலவரங்கள் எனத் தாய்மண்; வேரையும், அதனை விழுதாகத் தாங்கும் புலம்பெயர் உறவுகளையும் உள்வாங்கியதாக ஈழமண் தன்னை வடிவமைத்துள்ளது.

சமூக, அரசியல் விழிப்பையும், தமிழீழ போராட்டத்தின் உயிர்ப்பையும் தனது முதற்பணியாக ‘ஈழமண்’ கொண்டிருக்கும். தமிழர் தேசத்தின் நலன்களின் அடிப்படையில் ஜனநாயக பண்புகளுக்கு அமைய கருத்தாடல்களுக்கான ஓர் களத்தினை ஈழமண் வழங்கும்.

தமிழர்கள் அரசுக்குரியவர்கள் என்ற அரசியல் நிமிர்வினை ஈழத்தமிழர் தேசத்துக்குத் தந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்கள பௌத்தம் இன்று தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர அரசியல் இறைமையினை மீட்டெடுக்கவும், இனஅழிப்புக்கு எதிரான ஈடுசெய் நீதியினை வென்றெடுக்கவும் உருக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ‘ஈழமண்’  துணை நின்று செயலாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் பிரித்தானியாவிலும், செல்வி குமுதினி அவர்கள் கனடாவிலும் வெளியிட்டு வைத்தனர்.


666DDBEB-4CF8-41CE-AC35-C13F0F6C879B-225

66156F31-0F14-49C1-87BA-E2A9932EBFD1-300

E3DEAAB2-A7BC-4C6B-905E-44C65D18EA64-225

FC42367D-1B75-4547-A56D-B4A00129085B-225

2575E86D-6948-4421-A554-9F9C409849A0-300

AE20FF54-1BF1-4D48-B9DE-10516CF114C5-300

D7A9DA95-C24D-4806-8D65-C63865E4BB2C-300

FF0B8AFE-5703-4AD9-8D18-5E8B08808FC7-300

D0E4D65A-EA32-4197-B23B-02D8614C097C-300

576C09B2-B833-4474-BC63-A24513B1220E-225

 

https://www.meenagam.com/ஈழமண்-பத்திரிகை-பிரதமர்/

 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைய இதழின் முகவரியைத் தரமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரஞ்சித் said:

இந்த இணைய இதழின் முகவரியைத் தரமுடியுமா? 

http://eelamann.com

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி அண்ணா,

உங்கள் நாட்டில் கொரோணா நிலைமை எப்படி? ஓரளவு அடங்கியபின் கனடா வர விருப்பம். அங்குவந்தால், ஒரு எட்டு மிதித்து நியுயோர்க்கும் வரலாம், வந்தால் உங்களையும் காணலாம். பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

நன்றி அண்ணா,

உங்கள் நாட்டில் கொரோணா நிலைமை எப்படி? ஓரளவு அடங்கியபின் கனடா வர விருப்பம். அங்குவந்தால், ஒரு எட்டு மிதித்து நியுயோர்க்கும் வரலாம், வந்தால் உங்களையும் காணலாம். பார்க்கலாம். 

ரஞ்சித் 
தலைவர் ரம் சொல்லும் வேதவாக்குகளை கேட்டு பெரும்பான்மையான மக்கள் அவர் சொல்வது போலவே நடந்து கொள்கிறார்கள்.கட்டுமீறி போய்க் கொண்டிருக்கிறது.
நாளாந்தம் 150000 பேருக்கு கூடுதலாக புதிய நோயாளராக கணக்கிடப்படுகிறார்கள்.
தினமும் 2500-3000 பேர்வரை இறக்கிறார்கள்.
லெக்டவுண் என்றால் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் வேறு செய்கிறார்கள்.
மருந்து வந்து அதன் மூலம் கட்டுப்படுத்தினால்ச் சரி இல்லை என்றால் அவலங்கள் கூடிக் கொண்டே போகலாம்.
மற்றும் உங்கள் வடஅமெரிக்க சுற்றுலாவை வரவேற்க தயாராக உள்ளோம்.
எதற்கும் எவ்வளவு முதலே அறியத்தருகிறீர்களோ அந்தளவுக்கு நல்லது.
பிள்ளைகள் வேறுவேறு மாநிலங்களில் இருக்கிறபடியால் சுற்றித் திரிவது தான் கூடுதலாக நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

எதற்கும் எவ்வளவு முதலே அறியத்தருகிறீர்களோ அந்தளவுக்கு நல்லது.

நிச்சயமாக அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி. ஈழப்பிரியன் அண்ணா.

செய்தியை இணைக்கும்போது கூகிளில் தேடியும் கிடைக்கவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசின் தளத்தில் (அப்படி ஒன்று இருப்பது இன்றுதான் தெரியும்!) இணைத்திருந்தார்கள்.

 

https://www.tgte-homeland.org/2020/12/05/eelamann-paper-tgte/

 

மின்னிதழ்:

https://www.scribd.com/document/487047271/ஈழமண-EELAMANN-NEWSPAPER#fullscreen&from_embed

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.