Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்!

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Ahnaf.jpg

 தமிழில் நடராஜா குருபரன்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னார் கவிஞரின் கைதானது தவறானதென கல்வியாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்…

தமிழ்க் கவிதை நூலில் தீவிரவாத கருத்துக்கள் உட்பதிந்து இருப்பதாக,  குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID)   பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, அஹ்னாஃப் ஜசீம் (Ahnaf Jazeem)    மீது  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அந்த கவிதை நூலைப் படித்த, தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும்  மறுத்துள்ளனர்.

25 வயதான கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) கீழ் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது குறித்து,  சக எழுத்தாளர்கள், தமிழ் கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் கவலையையும்  தோற்றுவித்துள்ளது.

மன்னாரில் வசிக்கும் ஜஸீம், குற்றத்தடுப்பு பிரிவினரால் (CID), பயங்கரவாத குற்றச்சாட்டில் 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார்.  அவர் தமிழில் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தில் “தீவிரவாதம்” குறித்த சிந்தனைகளும் கருத்துகளும் பொதிந்திருந்ததாகவும்,  அந்த நூலானது புத்தளத்தில்  உள்ள ஒரு பாடசாலையில்  இளைஞர்கள் மத்தியில் அவை  பரப்பப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கைதானார். இந்த நிலையில்  ஜசீமின் கவிதை புத்தகத்தின் உள்ளடக்கங்கள் சிறார்களை மோசமாக பாதிக்குமா என்பது குறித்து ஆராய, கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மனநல மருத்துவர்கள் குழு ஒன்றை நியமித்த  கோட்டை மாஜிஸ்திரேட் நிதிமன்றம்  அவர்களிடம் இருந்து  அறிக்கையொன்றை கோரியது.  இந்தக் குழு,  உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர்களின் நேரடி மொழிபெயர்ப்பின் அடிப்படையில்  தனது அறிக்கையை தயாரித்தது.

எனினும், அஹ்னாப்பின்  கவிதைப்  புத்தகத்தின் மின்னணு பதிப்பைப் படித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஸ்ட  விரிவுரையாளர்  கலாநிதி அஹிலன் கதிர்காமர், கவிஞர் அஹ்னாப்பின்  கைது “குழப்பகரமானது” எனவும், இந்த வழக்கானது  எதிர்கால எழுத்தாளர்களை முடக்கும் பீதியான காலச்சாரத்தை மேலும் மோசமாக்கும் என,  கவலையடைவதாகவும் குறிப்பிட்டள்ளார்.  சி.ஐ.டி யால் கைதான அஹ்னாஃப் ஜசீம், நெடிய ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு வழிவகுத்த புத்தகம், தனது சொந்த வாசிப்பின் அடிப்படையில்  எந்தவிதமான தீங்கையும் கற்பிக்கவில்லை என கலாநிதி  கதிர்காமர் குறிப்பிட்டார்.,

“மதத்திலிருந்து அன்பு வரை தனது உலகத்தை வடிவமைக்கும் கருத்துகளினூடாக எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கவிதைத் தொகுப்பு இதுவாகும். இந்த கவிதை புத்தகத்தை எழுதியதற்காக அஹ்னாஃப் ஜஸீமை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதல் எதிர்கால எழுத்தாளர்களை அச்சத்தின் சூழலுடன் திணறடிக்கும் ”என கலாநிதி  கதிர்காமர் டெய்லி எஃப்டிக்கு (Daily Ft)  தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தங்கள் உலகங்களை விமர்சன ரீதியாக ஆராய, எழுத, படிக்க, விவாதிக்க மற்றும் கருத்தாட ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர். “எங்கள் சமூகங்களுக்குள் முற்போக்கான மாற்றத்திற்கான வழி இதுவே” என்றும் கலாநிதி  கதிர்கமர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற தமிழ்  அறிஞரும், பேராதனைப் பல்கலைக்கழ தகைசார் ஓய்வு நிலைப் தமிழ் பேராசிரியரும், 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது  “புத்தரின் படு கொலை” என்ற ஒரு பிரபலமான கவிதையை எழுதியவருமான எம்.ஏ.நுஹ்மான், PTAயின்  கீழ் நீண்டகாலமாக அஹ்னாஃப்ப  ஜசீமின்  தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

இவர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் அறிந்து, அவரின்  45 கவிதைகள் அடங்கிய  சிறிய கவிதை புத்தகத்தை  படித்ததாகவும், அந்தக் கவதைத் தொகுப்பில்  தீவிரவாதம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் பேராசிரியர் எம்.ஏ நுஹ்மான்  தெரிவித்துள்ளார்.. “மாறாக, இந்தத் தொகுப்பில் தீவிரவாதம், வன்முறை மற்றும் போருக்கு எதிராக பல கவிதைகள் உள்ளன” என்றும் ஜஸீமின் கைது குறித்து பேராசிரியர் நுஹ்மான்  கூறியுள்ளார்.

இதேவேளை ஜசீம்மின் பணிகள் பெரும்பாலும் மத அறநெறி, மனிதநேயம், அன்பு மற்றும் அமைதியான வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டுள்ளன. “இந்த உணர்வுகள் எவ்வாறு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பார்க்க முடியும்,” என பரவலாக மதிக்கப்படும் தமிழ் அறிஞர் பேராசிரியர் நுஹ்மான்  கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மொழியில் கவிதைகளைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத அதிகாரிகள் அந்தக் கருத்துடன் ஓடிப்போயிருக்கலாம், ஏனென்றால் ஜஸீமின் தொகுப்பின் அச்சிடப்பட்ட பதிப்பில்  ஒரு சில படங்கள் ஆயுதங்கள் மூலம்  சித்தரிக்கப்பட்டுள்ளன என கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளரும், கவிஞரும்,   புனைகதை எழுத்தாளருமான மஞ்சுளா வெடிவர்தனவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தமிழ் கவிஞரை சிறையில் அடைப்பதை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “நவரசம்” ஆசிரியரும், மன்னாரைச் சேர்ந்த முஸ்லீம் பாரம்பரியத்தைச் சேர்ந்தவருமான ஒரு இளைஞனின் படைப்பு இது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இலங்கைக் குடிமகனாகிய இவர்  இந்த நேரத்தில்,  சிங்கள மேலாதிக்கவாதத்தின் முக்கிய எதிரி ”என்று வெடிவர்தன ஜசீம் கைது செய்யப்பட்டதை  பலமாக  கண்டித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் இன-மத மேலாதிக்கத்தின் வன்முறை மற்றும் அடக்குமுறையின் மற்றொரு தீவிர வெளிப்பாடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என  எச்சரித்த வெடிவர்தன “இதனால்தான், அஹ்னாபின் விடுதலையானது, இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களின் சுதந்திரத்துக்கான, இன-மத மேலாதிக்கத்திற்கு எதிரான, எங்கள் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று நான் நம்புகிறேன்” என மஞ்சுள வெடிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, 2014 ஆம் ஆண்டில் PTA  சட்டத்தின்  கீழ் தவறாக தடுத்து வைக்கப்பட்டவர்.   இவர், ஜசீமின் தடுப்புக்காவல் சிறுபான்மையினர் மற்றும் சுதந்திரமான கருத்துக்களுக்கு எதிராக கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக தான் கருதுவதாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில்  வெளியிட்ட ஆய்வில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாவோர்கள் விசாரணையின்றி 15 ஆண்டுகள் வரை காவலில் தடுத்து வைக்கப்படலாம், என ருக்கி பெர்னாண்டோ டெய்லி எஃப்டிக்கு தெரிவித்தார்.

“PTA  கைதிகள் 15 வருடங்கள் அரச காவலில் இருந்த பின்னர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதையும் நான் கேள்விப்பட்டேன்,” என்றும்  ருக்கி  பெர்னாண்டோ கூறினார், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களில் பலர்  சில நேரங்களில், இவற்றைக் கையாளும் அமைப்பு முறையின் தவறுகளால்   எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதனையும் விளக்கி உள்ளார்.

செப்டம்பர் 2020 இல் ஹிஸ்புல்லாவின் வழக்கறிஞர்களால் அவரது வழக்கு தற்செயலாக கண்டுபிடிக்கப்படாவிட்டால்  அஹ்னாஃப் ஜஸீமின் தலைவிதியும் இவ்வாறே ஆகியிருக்கும். ஆனால் நாடு முழுவதும் COVID-19  பரவுகையால் நீதிமன்ற செயல்பாடுகள் குறைக்கப்பட்ட நிலையில், ஜசீம் வழக்கு 2021 மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அறியப்படாத ஒரு விடயமாக, ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாத  ஒன்றாக காணப்பட்டது என  ஆர்வலர்கள் டெய்லி எஃப்டிக்கு ((Daily Ft)) தெரிவித்தனர். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, அவரது வழக்கை ஏற்க ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்களுடன் அவரது குடும்பம் இறுதியாக
தொடர்புகொண்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் கலாநிதி கதிர்காமர், அஹ்னாஃப் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டபோது, மன்னாரில் உள்ள ஒரு நண்பரிடம் கேட்டதை நினைவு கூர்ந்தார்.  சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்று நூல் மற்றும் “முறிந்த பனை” ஆகியன அடங்கலான நூல்களை, முஸ்லீம் இளைஞர்கள் எரித்ததாகவும், அத்தகைய விஷயங்களைப் படித்ததற்காக கைது செய்யப்படலாம் என  அவர்கள் பயந்தார்கள்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 “இளைஞர்கள் புத்தகங்களை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கூட அஞ்சும் இத்தகைய சமுதாயத்தையா நாம் கட்டியெழுப்ப விரும்புகிறோம்? இது கலாச்சார பாசிசத்திற்கான பாதை அல்லவா? ” என்று டாக்டர் கதிர்காமர்  கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? இத்தகைய சமுதாயத்தையா நாம் கட்டியெழுப்ப விரும்புகிறோம்? அஹ்னாஃப் ஜசீமீன் கைது தவறானது – கண்டனங்கள் வலுக்கின்றன –

தமிழில் நடராஜா குருபரன்…

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்! | Athavan News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.