Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

29.01.2006 அன்று சிங்கள பேரினவாத அரசால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29.01.2006 அன்று சிங்கள பேரினவாத அரசால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் .

spacer.png
தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் கடத்தல்.

 

2006 ஜனவரி 29 ஆம்,30ஆம் நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலநறுவ மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.அவ்வேளையில் அவர்கள் மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு சில நாட்களின் பின்னர் இரு பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இன்னொரு பெண்ணான எஸ் டோசினி என்பவரும் கடத்தல் காரர்களால் விடுதலை செய்யப்பட்டார். ஏனைய ஏழு பணியாளர்களும் இற்றைவரை காணாமலே போயுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யுமாறு 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சர்வதேச மன்னிப்புச் சபை ஓர் அவசர வேண்டுகோளை விடுவித்திருந்தது.இந்தப் படுகொலையானது இந்தியாவினுடைய நீதிபதி ஒருவர் தலைமை தாங்கிய சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டுமென சிறிலங்கா அரசாங்கத்தால் செய்யப்பட்ட பல படுகொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்த நிபுணத்துவக் குழுவானது 2008 ஆம் ஆண்டு இந்த படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளில் அதிருப்தி அடைந்தவர்களாக இக்குழுவை விட்டு முற்றாகவே வெளியேறியுள்ளனர்.

காணாமல் போயுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள்.


spacer.png

 

https://www.thaarakam.com/news/e9e202ed-29d2-42fc-ba98-6107d24b8bc0

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கங்கையில் கழுவினாலும் அப்படியே இருக்கும் கறை !

F4A81ABB-1055-4B49-A1D7-560C85330F17.jpeஅன்பன்

குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் – இது டார்வினின் கண்டுபிடிப்பு, அறிவிப்பு. இதன் அர்த்தம் மீண்டும் மனிதன் குரங்காக மாறுவதற்கல்ல.
எவன் காலிலும் தமிழன் விழக்கூடாது என்பது தமிழனின் தனித்துவம் என்பதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய உணர்வு ஊட்டப்பட்டது. முதலில் அகிம்சை வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வழிமுறையிலும் இந்த உணர்வு ஊட்டப்பட்டது. துரதிஷ்ட வசமாக இன்றுசிலரிடம் தமிழ்த் தேசியம் என்பது கிழக்கு தேசியவாதமாகி விட்டது. அடுத்தகட்டம் காலில் விழும் கலாச்சாரமாகிவிட்டது.
தந்தை செல்வா காலத்துக்கு முன்னர் ஜி.ஜி .பொன்னம்பலம் காலத்தில் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற கோசமே ஒலித்தது. தந்தை செல்வா காலத்தில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்தபோதும், மலையகத் தமிழரின் வாக்குரிமைபறித்து நாடற்றவர்களாக்கும் சட்டமூலத்துக்கு எதிராகவும் ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் நின்றது.மலையகம், கொழும்பு,வடக்கு ,கிழக்கு என தமிழர்கள் ஒன்று பட்டனர்.அந்தக் காலத்திலும் சரி பின்னர் ஆயுதப் போராட்ட காலத்திலும் குறிப்பாக ஒரு நிழல் அரசை நடத்திக்கொண்டிருந்த காலத்திலும் யாரையும் காலில் விழ அனுமதித்ததில்லை. இன்று ஏன் இப்படி? பிள்ளையானின் காலில் விழுவது யாராக இருக்கக்கூடும்? பின்புறம் பார்த்தால் திரு. தனுஷ்கோடி போல் உள்ளது.
இன்று நினைவேந்தல் உரிமை சிங்களவருக்கு மட்டுமே உள்ளது. ஜே.வி.பி தலைவரைப்பற்றிய திரைப் படம் எடுக்கலாம், ஜெயவர்தனாபுர பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு நினைவுச்ச்சின்னம் எழுப்பலாம்; ஏன் 1989 ல் இரண்டாவது தடவையாகவும் அந்த ஆயுதப்போராட்டம் முடிந்துவைக்கப்பட்டபின் 1999ல் தொடங்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழகத்தில் கூட ஜே .வி.பி யினரைக் கூட்டாக நினைவேந்தல் செய்ய நினைவுச் சின்னம் உண்டு. ஆனால் தமிழரின் நிலை தெரியும் தானே. கடந்த மாவீரர் நாள் அன்று நினைவேந்தல் செய்ய முற்றுமுழுதாக தடைவிதிக்கப்பட்டது. எனினும் சாத்தியமான இடங்களில் சுடர் ஏற்றத்தான் செய்தனர் தமிழர்கள். வீட்டிலும், கடவுள் சிலைகளுக்கு முன்னதாகவும் சுடர் ஏற்ற முடிந்தது.
மே 18 அன்றும் நவம்பர் 27 நாளிலும் தமது பிள்ளைகளைப் புதைத்த இடத்துக்கு செல்லக் கிடைக்காவிட்டாலும் அவர்கள் மரணித்த இடத்தில் சுடர் ஏற்றினர் உறவுகள். அந்த வகையில் வட்டக்கச்சியைச் சேர்ந்த பிறேமினியின் தந்தை தனுஷ்கோடி தனது மகள் மரணித்த இடம் எங்கே என்று தேடுவார் ? துண்டு துண்டுதாக வெட்டி பல்வேறு இடங்களில் உடலின் பாகங்களை வீசியுள்ளார்கள். அதில் எதாவது ஒரு இடத்தைக் காட்டுங்கள் அதில் எனது மகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு போகிறேன் என்று கேட்பதற்காகத்தான் தனுஷ்கோடி பிள்ளையானின் காலில் விழுந்தாரோ? (முகம் தெரியவில்லை)
***
D4A1F363-9F77-4AD3-8FDD-E0CCC917C0F5.jpeஅன்றைய அந்த கொடூரமான சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்துவோம். தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறுவனத்தைச் சேர்ந்தோர் (ஐந்து பேர் ) ஒரு வாகனத்தில் 29.01.2006 அன்று மாலை 5.30 மணிக்கு கிளிநொச்சிக்குப் புறப்பட்டனர். இவர்கள் சென்ற வாகனம் இரவு 8.00 மணியளவில் வெலிக்கந்தையில் வைத்து பின் தொடர்ந்து வந்த வாகனத்தால் வழிமறிக்கப்பட்டது. அதிலிருந்த ஐந்து பேரும் வேறொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு திருக்கோணமடு வீதி ஊடாக தீவுச்சேனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் தமிழர் புனர்வாழ்வுக்கழக வடகிழக்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் கே. கணேசலிங்கமும் அவரது சாரதியும் முழு இரவும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன் பள்ளிகளின் பிரதேச இணைப்பாளர் செல்வி டோசினி ஏனையவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். இவரை அடுத்தநாள் இரவு 9. 00 மணிக்கு பிரதான வீதிக்கு கொண்டு சென்று அங்கு நடந்த சம்பவங்களை யாருக்கும் சொல்லக்கூடாதென எச்சரித்து பேரூந்தில் ஏற்றி அனுப்பினர்.
30.01.2006 அன்று பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து 15 பேருடன் இன்னுமொரு வாகனம் புறப்பட்டது. இதுவும் முன்னைய வாகனம் கடத்தப்பட்ட பாணியிலேயே கொண்டு செல்லப்பட்டது.
அதில் சென்ற 15 பேரில் தருமராஜா வசந்தராஜன்,சண்முகராஜன் சுரேந்திரன், கைலாசபிள்ளை ரவீந்திரன்,அருள்தவராஜா சதீஸ்வரன்,தங்கராஜா கதிர்காமர்,ஆகியோருடன் தனுஷ்கோடி பிறேமினியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
1981ம் ஆண்டு பிறந்த பிறேமினி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவி. தனது கல்வியைத் தொடரும் அதேவேளை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றி வந்தார்.
தீவுச்சேனையில் நடந்த விடயங்கள் பற்றி அந்த ஆயுதக்குழுவில் அந்தக் காலத்தில் அங்கம் வகித்த உறுப்பினர் ஒருவர் பிரபல ஊடகவியலாளர் டி. பி . எஸ் ஜெயராஜிக்கு பலவிடயங்களை பின் நாளில் தெருவித்திருந்தார். 2007 பெப் 4ல் வெளியான sunday Leader பத்திரிகையில் இந்த விடயங்கள் வெளியாகின.
அங்கு பிறேமினியை முதலில் சிந்துசனும்(பிரதீபன்), தொடர்ந்து பலரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர்
ஆரம்பத்தில் பெரிதாக சத்தமிட்டு கதறிய அந்தப்பெண் கடைசியில் எந்தவித சத்தமும் எழுப்பமுடிய வில்லை. வெறுமனே துடித்தாள்; முனுகினாள்.
அங்கிருந்த பல பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு இந்தச் செயலில் உடன்பாடு இல்லாதிருந்த போதிலும் தடுத்து நிறுத்த முடியாமல் மௌனமாக இருந்தார்கள். அவர்களின் முகாமுக்கு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு பிறேமினியை அவர்கள் கொண்டு சென்றார்கள். ஒரு நடைப்பிணம் போல் எந்தவித சலனமுமற்றுச் சென்ற அந்தப் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொன்று காடுகளுக்குள்பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார்கள்.
„***
இப் பாதகத்தை புரிந்தோராக சிந்துயன் (பிரதீபன்) , சித்தா (பிரதீப்),சசி, ஜீவா,,ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன்,சச்சி (சாந்தன்), ஜீவா (திலகன்) ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்கள் பற்றிய பதிவினை அமெரிக்காவின் Assistant Secretary of state கிறிஸ்டினா ரொக்கா மேற் கொண்டார்.
ஜெயராஜின் கட்டுரை Sunday Leader இல் வெளியானதைத் தொடர்ந்து இச் சம்பவம் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது. Amnestry internetional நிறுவனம் இக் கடத்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தது.
விடுவிக்கப்பட்ட தாண்டியடியைச்சேர்ந்த டோசினி பிள்ளையான் குழு உறுப்பினரான பிரதீப் மாஸ்டரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி உள்ளார்
இதில் குறிப்பிடப்பட்ட சிந்துயன். மட்டுநகர் புளியந்தீவில் வைத்து கருணா – பிள்ளையான் குழுக்களிடையே நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார். இக் காலப்பகுதியில் கருணா சிங்களவர் ஒருவரின் பெயரில் பெறப்பட்ட கடவுச் சீட்டு மூலம் லண்டனுக்கு பயணமாகி அங்கு தலைமறைவாகி இருந்தார்.
தற்போது காராக்கிரகத்தில் (சிறை) யில் பணியாற்றும் ஒருவர் பிறேமினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கமாட்டார் என வக்காலத்து வாங்குகிறார். வித்தியா கொலைவழக்கில் முக்கிய தடயம் DNA பரிசோதனை மூலம் தெரியவந்தது. அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்தக்காலத்திலேயே துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி எறிந்தனர. தனது வாழ்நாளில் ஒரு தசாப்தத்துக்கு மேலான காலப்பகுதியை குற்றவாளிகளுடனே கழித்ததால் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு அந்த அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இன்றும் கூட அருண் தம்பிமுத்து வடக்கின் வம்சாவளி என்று நிறுவ முயன்று பிள்ளையான் குற்றத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டம் உள்ளது. TRO உடன் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் வடக்கின் மீதான வெறுப்பின் உச்சமாகவே பழிவாங்கப்பட்டனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவரின் கொலைக்கும் இதுவே காரணம் .தங்கள் குடும்பத்தில் இவ்வாறான நிலை ஏற்படாதவரை எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும்.
ஆயுதம் ஏந்தியோரால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் சம்பவங்களை சாதாரணமாகப் பார்க்கமுடியாது. டெலோவால் விஜி(ஆரையம்பதி),ஈ.பி.ஆர்.எல்.எப் வால் ரிபாயா(காத்தான்குடி) பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் கொலை செய்யப்பட்டனர். தாங்கள் இதை விட உச்சம் எனக்காட்டவே பிறேமினியை துண்டு துண்டாக வெட்டி வீசினர். எதைத்தான் நியாயப்படுத்துவது என்றில்லாமல் போயிற்று. வீட்டில் அக்கா,தங்கை, மகள்,மருமகள் போன்ற உறவுகளைக் கொண்டவர்கள் பிறேமினியின் படுகொலையை எந்தக் காலத்திலும் நியாயப்படுத்த மாட்டார்கள்.

2009 பின் சொல்லத்துணிந்தவர்களும் , காலக்கண்ணாடியை அணிந்தவர்களும் இச் சம்பவங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அரங்கத்துக்கு வராத விடயங்கள் இவை .


https://www.meenagam.com/எந்தக்-கங்கையில்-கழுவினா/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் தனியாளல்ல அவர் தடத்தைப் பின்பற்றி வாழ்வதற்கு 38 ஆயிரம் மக்கள் தயாராகி உள்ளனர். அவர் விடுதலையான போது யாழ் களத்திலும் சில வெடிகள் வானுயரச் சென்று வெடித்தன.😲

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.