Jump to content

முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்

உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது.

'ஏய் சொட்டை, ஹெல்மெட் மண்டை, வழுக்கப்போது பாத்து!' - தலைமுடி கொட்ட ஆரம்பித்தவுடன் நண்பர்கள் இப்படியெல்லாம் கேலி செய்யும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் அந்த நொடி ரொம்ப கேஷுவலாக அதை எடுத்துக்கொள்ளலாம், ஏன் அவரே அதுகுறித்து சிரிக்கவும் செய்யலாம். 'வயசு ஆயிருச்சுப்பா, முடி கொட்டுவது சகஜம்' என்று அவர்கள் அதைக் கடந்து செல்வதுபோல் தெரிந்தாலும், பெரும்பாலானோர் உள்ளூர வேதனைப்படுவது உண்மை.

பள்ளி/கல்லூரி நாட்களில் காற்றில் ஆடும் தலைமுடியோடு ஸ்டைலாகத் திரிந்தவர்கள், தங்களின் 30-களில் (இப்போதெல்லாம் 20-களிலேயே) முன் மண்டையிலோ நடு மண்டையிலோ முடியை இழக்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையையே உலுக்கிவிடுகிறது.

நம் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறியீடு நம் தலைமுடி. முடி கொட்ட ஆரம்பித்தால், உடலில் ஏதோவொரு உபாதையின் அறிகுறியாக அது இருக்கலாம், நுண்சத்துக் குறைபாடு, தூக்கமின்மை, மன அழுத்தம், சீரற்ற வாழ்வியல், மரபியல், குடும்ப ரீதியாக, நோய்தொற்று என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலில் இவற்றில் எந்தக் காரணத்தினால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதைச் சரி செய்தால், ஆரம்பத்திலேயே தலைமுடி உதிர்தலுக்கு ரெட் சிக்னல் போட்டுவிடலாம். ஆனால்...

தடுக்கமுடியாத தலைமுடி உதிர்வு...

ஆன்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (Androgenetic Alopecia) எனப்படும் முடி உதிர்தல் ஆண்களில் மிக அதிகமாக ஏற்படக்கூடியது. முன்தலையின் பக்கவாட்டுகளில் முடி உதிர்வது தொடங்கி, நடுப்பகுதியில் முடி குறைந்து பின்னர் மேல் மண்டை முழுவதும் முடி கொட்டும். மேல் மண்டை எனப்படும் கிரௌன் (Crown) பகுதியில் உள்ள தலை முடி ஹார்மோன்களுடன் தொடர்புடையது. ஆண்களின் முக்கிய ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன், இந்த ஹார்மோனில் ஒரு சிறு பகுதி 'டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் (DHT)' எனும் ஹார்மோனாக மாறுதல் அடையும். இந்த DHT உடலுக்குத் தேவை என்றாலும், தலை முடி உதிர்வதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கிறது.

பெண்களுக்குப் பொதுவாக வகுட்டில் முடி குறைந்து பின்னர் மேல் மண்டையில் அடர்த்தி குறையும், ஆண்கள் போல மொத்தமாக முடி உதிர்வது மிக மிகக் குறைவுதான். எனவே பெண்கள் கொஞ்சம் நிம்மதிப் பட்டுக்கொள்ளலாம்! ஆன்ட்ரோஜெனிடிக் அலோபீசியாவுக்குக் காரணம் மரபியல் என்பதால் அதைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது.

அனாஜென் - வளரும் பருவம், கெட்டாஜென் - வளர்ச்சி நிற்கும் பருவம், டீலோஜென் - வளர்ச்சி மொத்தமும் நின்று, உதிர இருக்கும் பருவம் என்று 3 பருவங்கள் முடி வளர்தலில் உண்டு. பொதுவாக 80-85% பேருக்கு அனாஜென் பருவத்தில்தான் முடி இருக்கும், வயது ஆக ஆக அல்லது ஆன்ட்ரோஜெனிட்டிக் அலோபீசியா தொடங்கியபிறகு, மூன்றாம் பருவமான டீலோஜென் விரைவாக வந்து தலைமுடி உதிர்கிறது. அப்போது ஃபாலிக்கிள் (Follicle) எனப்படும் தலைமுடியின் வேர் அல்லது வித்து மட்டும் தலைக்குள்ளேயே இருக்கும்.

டாக்டர் S. செல்வ சீத்தாராமன்
 
டாக்டர் S. செல்வ சீத்தாராமன்
 

ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எனும் தீர்வு!

பின்னந் தலையிலிருந்து முடியை எடுத்து தலைமுடி குறைந்த முன் பகுதியில் நட்டு வைக்கும் முறைதான் 'ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன்'. தலையில் முடியே இல்லாத/மிக மிகக் குறைவாக இருக்கும்பட்சத்தில், உடலின் பிற பகுதிகளில் இருந்தும் முடியை எடுத்து தலையில் வைக்கலாம். Follicular Unit Transplantation (FUT) மற்றும் Follicular Unit Extraction (FUE) என இரண்டு வகையான சிகிச்சைகள் இதில் உண்டு. FUE-ல் தழும்புகள் ஏற்படுவது மிக மிகக் குறைவு என்பதால், இம்முறையே இப்போது பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

PRP (Platelet Rich Plasma) எனப்படும் சிகிச்சையில், நம் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் தட்டணுக்களை மண்டைக்குள் ஊசி மூலம் ஏற்றி, ஃபாலிக்கிள் பகுதியைத் தூண்டி அதற்கு ஊட்டமளித்து முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. FUE உடன் சேர்த்து PRP கொடுப்பதால் மிகச்சிறந்த பலன்களைப் பெறலாம்!

குளோபல் மருத்துவமனையில் ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்.

உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். தகுந்த படிப்பும் பயிற்சியும் பெற்றவர்களை அணுகினால் தவறல்ல, ஆனால்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது அதைத் தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது. குளோபல் மருத்துவமனையில் 24x7 செயல்படும் அனைத்து மருத்துவ குழுக்களும் இருப்பதால், ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் உள்ளிட்ட எல்லா சிகிச்சைகளையும் எந்தவொரு பாதிப்புமின்றி எடுத்துக்கொள்ள முடியும். இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமையாகும்.

FUE முறையில் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி, அவற்றைக் குளிர் நிலையில் பதப்படுத்தி, ஊசி போன்ற கருவி மூலம் ஒவ்வொன்றாக நடுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்பு இதில் மிக மிக அதிகம். கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் சுகாதாரமான முறையில், ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து நிபுணரின் உதவியுடன் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதால் எந்தவொரு தவற்றுக்கும் இடமில்லை!

சிகிச்சை முடிந்தபிறகு...

கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகும் இந்தச் சிகிச்சை ஒரே நாளில் செய்து முடிக்கப்படுகிறது. இதில் 85-95% வெற்றி கிடைக்கிறது. 2-3 நாட்களில் தலைப்பகுதி காயங்கள் சரியானவுடன் மெல்லென குளிக்கலாம். அதன்பிறகு 3 மாதங்களில் நம்பமுடியாத வகையில் தலையில் சுத்தமாக முடி இல்லாதவர்களுக்கும்கூட முடி முளைக்க ஆரம்பிக்கும்.

அதிகரிக்கும் தன்னம்பிக்கை!

அவர் திருமண வயதில் உள்ள இளம் பெண். ரோட் ஆக்ஸிடென்டில் தலையின் ஒரு பகுதியில் உள்ள முடியுடன் கூடிய தோல் பகுதி சிராய்ந்து போனது. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த அந்தப் பெண்ணுக்கு ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்தோம். இப்போது அவருக்குத் திருமணமாகிவிட்டது. தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்!

சமுதாய, உளவியல் ரீதியான, தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட, ஏன் பல சமயங்களில் மன அழுத்தத்தைத் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது தலைமுடி உதிர்வு. எனவேதான் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சையை அழகு சிகிச்சையாக மட்டும் பார்க்காமல், உளவியல் ரீதியான சிகிச்சையாக பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!

 

https://www.vikatan.com/news/miscellaneous/hair-transplantation-at-gleneagles-global-health-city

 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.